நீண்டப் பிரிவினை
ஒரு இரவு வாழ்த்துகள் குறுஞ்செய்தியின்
வாயிலாக முடித்து வைக்கிறாய்….!!!
*
முறைத்துக் கொண்டே இரவு வெளியேற
சிரித்துக் கொண்டே மீண்டும் பூக்கின்றது
ஒரு காதல் காலம்…!!!
*
ஆம்…சில இரவு வாழ்த்துகள்
இரவுக்கான வாழ்த்துகள் அல்ல தான்..!!!
 **************************
அத்தனைக்கும் ஆசைப்பட்டவாறே
உலகைப் பயணித்தவனுக்கு
அத்தனையுமான உலகாய் நீ மாறிப்போனதில்
நிச்சயம் காதல் எங்கோ ஒளிந்துக் கொண்டு தான் இருக்கின்றது…!!!
 *******************************
காதல் என்றால்
ஆண் பெண் வேதியல் மாற்றம்
என்று வெற்று அறிவியல் பேசிக்கொண்டிருந்தவனை
நான் நீ என்பதை விடுத்து
நாமாக்கி புன்னகைக்க வைத்த தருணத்தில்
காதல் அவனை தத்து எடுக்கத்தான் செய்து இருந்தது…!!!
*
தொலைவில் திருமூலர் இசைத்துக் கொண்டிருந்தார்…
மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை…!!!
*
மெய் தான்…
காதலை மறைத்தது நான் என்ற ஒன்று
காதலில் மறைந்தது நான் என்ற ஒன்று…!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி