ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 மார்ச், 2014

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - இறுதிப்பகுதி!!!

இந்தியா என்பது என்றுமே ஒரே நாடாக இருந்தது இல்லை என்றும் அதனுள் பல்வேறு இனத்தவர் வசித்து வந்தனர் என்றும் அவர்களின் இடையே பல்வேறு அரசியல்களும் நிலவி வந்தன என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம் ராஜீவ் அவர்களே...!!! அதனை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே எண்ணுகின்றேன்.

அப்பேர்பட்ட ஒரு நாட்டினை ஆள்வது என்பது எளிதான காரியம் கிடையாது என்பதனை நிச்சயம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஒரே இன மக்கள் வசிக்கும் நாட்டினை ஆள்வதற்கே பலர் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கும் பொழுது பல்வேறு இனங்கள் மற்றும் பல்வேறு நம்பிக்கைகள் ஒருங்கே விளங்கிக் கொண்டு இருக்கும் ஒரு நாட்டினை முழுமையாக ஆள்வது என்பது அரசியலில் மிகுந்த அனுபவம் மிகுந்தவர்களுக்கு கூட ஒரு சவாலான காரியம் தான்.

நிலைமை அவ்வாறு இருக்கும் பொழுது தற்செயலாக தங்களின் தாயாரின் மரணத்திற்குப் பின்னர் அரசியலினுள் நுழைந்த உங்களின் கைகளில் இந்தியா போன்றதொரு மாபெரும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பு வந்து சேர்ந்த பொழுது அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள தகுதியானவராக இருந்து இருப்பீர்களா என்றால் இல்லை என்பதே உண்மையான விடையாக இருக்கும்.

நிச்சயமாய் இந்தியா போன்ற ஒரு தேசத்தினை ஆளும் பக்குவம் உங்களுக்கு அன்று இருந்து இருக்காது. இந்திய அரசியல் எவ்வாறு இருக்கின்றது...உங்களது தாயார் விட்டுச் சென்ற பணிகள் யாவை? நமது அயல் உறவுக் கொள்கைகள் என்ன? நாடு சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள் என்ன? என்பதனை எல்லாம் அறிந்துக் கொண்டு சுய முடிவினை எடுக்கும் தன்மை ஒரு மனிதனுக்கு காலத்தினாலும் அனுபவத்தினாலும் மட்டுமே வருமே அன்றி பதவியினை ஏற்ற நொடியிலே வந்து சேராது.

ஆனால்இந்திய நாட்டினை ஆள்வது என்ற மிகப்பெரிய பொறுப்பு உங்களின் கைகளில் வந்துச் சேர்ந்த பொழுது உங்களுக்கு அத்தகைய அனுபவம் வாய்க்கப் பட்டு இருக்கவில்லை என்பதனை நீங்கள் உணர்ந்தே தான் இருப்பீர்கள். அந்நிலையில் நிச்சயமாய் நீங்கள் உங்களைச் சுற்றி இருந்தவர்களின் உதவினை நாடி இருக்கத்தான் செய்வீர்கள். அதுவும் குறிப்பாக உங்களின் தாயின் உடனேயே இருந்தவர்களைத் தான் நீங்கள் நம்பி இருப்பீர்கள். உங்களின் கட்சி ஆட்களை நீங்கள் நம்பி இருப்பீர். அவர்கள் உங்களுக்கு நன்மையைத் தான் செய்வர்...நன்மையானவற்றைத் தான் சொல்வர் என்றே தான் நீங்கள் நம்பி இருப்பீர். அது தானே இயற்கை.

இந்த அடிப்படையிலேயே தான் என்னால் உங்களது ஈழத்தைக் குறித்த நடவடிக்கைகளைக் காண முடிகின்றது.

எந்த ஒரு பெரிய தேசத்திற்கும் ஒரு  நோய் இருக்கின்றது. அவைகள் பெரும்பாலும் மற்ற தேசங்களை அடக்கி ஒடுக்கி வைத்து தான் வல்லரசாக வேண்டும் என்ற கனவுகளையே கொண்டு விளங்குகின்றன...மாறாக நல்லரசாக வேண்டும் என்ற எண்ணம் அவைகளிடையே பெரும்பாலும் எழுவதே இல்லை.

அந்த நோய் இந்தியாவிற்கும் இருந்து இருப்பதில் நமக்கு ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான். நூறு கோடி மக்கள் தொகை...அள்ள அள்ள குறையாத இயற்கை வளம்..போதாதா வல்லரசுக் கனவுக் காண்பதற்கு. எனவே நீங்களும் வல்லரசுக் கனவினைக் கண்டத்தில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான்.

பலம் வாய்ந்த தேசம் இருக்கின்றது. வல்லரசுக் கனவும் இருக்கின்றது. அண்டை நாடுகளுக்கு இடையே பிரச்சனையும் இருக்கின்றது. வல்லரசுக் கனவினை நனவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் கண் முன்னே விரிந்து இருக்கின்றது. இவை போதாதா உங்களைக் கனவுக் காண வைக்க....மனிதனுள் இருக்கும் இயல்பான வல்லரசு நாட்டின் தலைவன் என்ற ஆசையை வளர்க்க...!!!

ஆனால் அந்த ஆசையினைக் கொண்டு தங்களை தவறான வழியில் வழி நடத்தியதினால் தான் ஈழத்தில் உங்களது அமைதி காக்கும் படை புரிந்த படுகொலைகள் நிகழ்ந்தன என்றே நான் கருதுகின்றேன். இதனை மெய்ப்பிக்கும் படியாகவே

"எனக்கு அந்த (ஈழ மக்கள்) போராட்டம் பற்றி சரியாக ஏதும் தெரியவில்லை. திடீர் என்று ஆட்சியில் அமர்ந்த நிலையில் பக்கத்தில் இருந்தவர்களின் ஆலோசனையின் படி அப்படி முடிவு எடுக்க வேண்டியதாக போயிற்று. உங்களின் பிரச்சனை எனக்குத் தெரியவில்லை. அதனால் அங்கு தமிழர்களுக்கு பாதகமான சில முடிவுகளை எடுத்து விட்டேன். இப்பொழுது தான் எனக்கு எல்லாம் புரிகிறது. மீண்டும் நான் பிரதமராக வருவேன்.அப்பொழுது உங்களின் போராட்டத்திற்கு துணையாக உறுதியாக நிற்பேன்" என்று நீங்கள் உங்களை வந்து சந்தித்த ஈழப் பிரதிநிதிகளான கவிஞர் காசி ஆனந்தனிடமும் சச்சிதானத்தினிடமும் நீங்கள் இறப்பதற்கு ஒண்ணரை மாதங்களுக்கு முன்னர் கூறியது இருக்கின்றது. ( பார்க்க : புத்தகம் - ராஜீவ் காந்தி தூக்கு கயிற்றில் நிஜம் பக்கம் 205)

மேலும் இந்து நாளேட்டிலும்

"கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்துவிடுவோம்...நமது உறவில் புதிய அத்தியாயத்தை துவக்குவோம். எங்கள் இயக்கம் இந்தியாவிற்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என்று புலிகள் இராஜிவிடம் கூறினர். அவரும் இதற்கு முழுமையான ஆதரவு தெரிவித்தார். பிரபாகரனுக்குத் தனது வாழ்த்துக்களை கூறுமாறு தெரிவித்த ராஜீவ், போராட்டத்தை தொடர்ந்து நடத்துமாறும் தனது சார்பில் பிரபாகரனிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ராஜீவ் கூறிய கருத்துக்கள் உடனே பிரபாகரனுக்குத் தெரிவிக்கப்பட்டன. பிரபாகரனும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் இராஜீவை விடுதலைப் புலிகள் கொலை செய்து இருப்பார்கள் என்று கூறப்படுவதில் அடிப்படை இல்லை"

என்று 28.05.91 ஆம் தேதி வந்த கட்டுரை புலிகளைக் குறித்த உங்களின் பார்வை காலங்களில் மாற்றம் அடைந்து இருப்பதையும் புலிகள் உங்களுடன் சமாதானம் செய்வதற்கு தயாராக இருந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டிக் கொண்டு தான் இருக்கின்றது. ( பார்க்க : புத்தகம் - ராஜீவ் காந்தி தூக்கு கயிற்றில் நிஜம் பக்கம் 217)

நிலைமைகள் அவ்வாறு இருக்க உங்களை கொல்வதற்கு புலிகளுக்கு யாதொரு தேவையுமே இருந்து இருக்க வாய்ப்பு இல்லையே. அனைத்தும் நன்றாக சென்றுக் கொண்டிருந்த வேளையில் தங்களது இலட்சியத்தினை பின்னடைவிற்கு உள்ளாக்கும் எந்த ஒரு செயலையும் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் அளவிற்கு புலிகள் முட்டாள்கள் அல்ல என்பதனை நீங்கள் அறிந்தே தான் இருப்பீர்கள்.

இருந்தும் உங்களின் மரணத்திற்கு புலிகள் காரணமாக காட்டப்பட்டு உள்ளனர். பழி வாங்கும் நோக்கில் உங்களை புலிகள் கொலை செய்து விட்டனர் என்றே கருத்துக்களும் பரப்பப்பட்டு உள்ளன.

இது நிச்சயம் உங்களைக் குழப்பிக் கொண்டு இருக்கும் பல கேள்விகளுள் சிலவான,

1) ஏன் என்னுடன் வேறு ஒரு காங்கிரஸ் தலைவர் கூட மரணமடைய வில்லை?

2) எப்பொழுதும் என்னுடம் இருக்கும் பாதுகாப்பாளர் ஏன் அன்றைக்கு எனது அருகில் இல்லை?

3) என்னுடைய உயிருக்கு ஆபத்து அந்நிய நாடுகளின் வாயிலாக இருக்கின்றது என்று பாலஸ்தீன போராளி இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்த போதும் ஏன் அதற்கு உகுந்த கவனம் செலுத்தப்படவில்லை...ஏன் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை?

4) ஏன் என்னுடைய கொலை வழக்கை முடக்க எனது கட்சியே முயன்றது. ஏன் என்னுடைய மனைவியே எனது கட்சியின் தலைமையில் இருந்தும் உண்மையான குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க முழுமையாக முயற்சி செய்யாதது ஏன்?

5) அந்நிய நாட்டு உளவு அமைப்புகளுக்கும் சந்திராசாமி மற்றும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று தெரிந்தும் ஏன் விசாரிக்கவில்லை அவர்களை?

என்பனவற்றுடன் நிச்சயமாய் ஏன் விடுதலைப்புலிகளை உங்களின் மரணத்தோடு அனைவரும் தொடர்புபடுத்தினர் என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாக இருக்கும்.

அதுவும் ஏன் புலிகளின் இயக்கத் தலைவரான பிரபாகரன் அவர்கள் உங்களது மரணத்தை குறித்து 'அது ஒரு துன்பவியல் சம்பவம்' என்று மட்டுமே குறிப்பிட்டார் எனபதும் நிச்சயம் ஒரு கேள்வியாகத் தான் இருக்கின்றது. அதாவது உங்களை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்று அனைவருமே கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அவ்வியக்கத்தின் தலைவர் முதலில் 'உங்களின் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் உங்கள் கொலைக்கான விசாரணையில் அனைத்து வித உதவியும் செய்ய தயார்' என்று கூறி விட்டு பின்னர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 'அது ஒரு துன்பவியல் சம்பவம்' என்றுக் கூறி இருப்பது ஏன் என்று நாம் கண்டாகத் தான் இருக்கின்றது.

அதற்கு நாம் ஒரு சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. உங்களின் கொலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலர் ஈடுபட்டு ஆதாயம் அடைந்து இருக்கின்றனர் என்றே நாம் கண்டு வருகின்றோம். இந்நிலையில் உங்களை காங்கிரஸ் கட்சி கொலை செய்து விட்டது என்று ஒட்டு மொத்த பழியையும் காங்கிரசின் மீதும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் மீதும் சுமத்துவது சரியானதொரு செயலாக அமையுமா?

அமையாது தானே. காங்கிரஸ் கட்சியினைப் பிடிக்க அக்கட்சியினுள் உள்ள சிலர் செய்த சதிக்கு அவ்வியக்கத்தினை முழுமையாக குறைக் கூற முடியாது தானே.

இந்த அடிப்படையிலேயே தான் நாம் விடுதலைப்புலிகளின் இயக்கத்தையும் காண வேண்டி இருக்கின்றது. இராஜீவ் அவர்களே. எந்த ஒரு இயக்கத்திலும் பிளவுகளும் துரோகங்களும் இருக்கத் தான் செய்யும்...காரணம் அவை மனிதனுள்ளே இருக்கும் மிருகத்தினாலே தூண்டப்படுபவை. அந்த மிருகம் பெருன்பான்மை மக்களுக்கும் அடங்காது உலாவிக் கொண்டு தான் இருக்கின்றது என்பதனை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர். அந்த மிருகத்திற்கு இயக்கங்கள் தெரியாது...எங்கே பேராசை, பொறாமை, ஆசை, வெறி போன்றவைகளுக்கு இடம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அது சுதந்திரமாக உலாவும். இதனை நாம் வரலாற்றில் தொடர்ந்து கண்டுக் கொண்டு வந்து இருக்கின்றோம். காங்கிரசிலும் கண்டு இருக்கின்றோம். விடுதலைப்புலிகளின் இயக்கத்திலும் கண்டு தான் இருக்கின்றோம். அதைத் தான் நாம் சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.

மாத்தையா...இந்த பெயர் உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்குமா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை...ஆனால் நிச்சயம் இந்திய உளவுத்துறைக்கு அப்பெயர் பரிச்சயமாகத் தான் இருக்கக் கூடும்...காரணம் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த பொழுது புலிகளின் சார்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டு இருந்தது புலிகளின் தலைமையில் இரண்டாம் இடத்தில் இருந்த மாத்தையா தான்.

பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையா, இந்திய உளவுத்துறையோடு இணைந்துக் கொண்டு பிரபாகரனையும், பொட்டு அம்மானையும் கொலை செய்து விட்டு புலிகளின் தலைமையை பிடிக்க சதி செய்ததற்காகவும் கிட்டுவின் மரணத்திற்கும் காரணமாக குற்றம் சாட்டப்பட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் தூக்கிலிடப்பட்ட விடயம் உங்களுக்கு தெரியாமல் தான் இருக்கும். காரணம் இவை அனைத்தும் உங்களின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகும்.

புலிகளின் இயக்கத்தில் பிளவுகள் இருந்து இருக்கின்றது...புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் இந்திய உளவுத்துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்...உங்களின் மரணத்தில் இந்திய உளவுத்துறை ஒழுங்காக செயல்படாமலும் உண்மையை மூடி மறைக்கும் விதமாகவும் செயலாற்றி இருக்கின்றது...உங்களின் மரணத்தில் காரணமாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பொழுது பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவின் பெயர் சேர்க்கப்படாது இருந்து இருக்கின்றது...மேலும் முன்னரே பிரபாகரன் அவர்கள் மாத்தையாவால் கொலை செய்யப்பட்டு விட்டார் என்று இந்திய உளவுத்துறை கிளப்பி விட்ட கதைகள் வேறு வரலாறாய் நின்றுக் கொண்டு தான் இருக்கின்றது.

இதன் அடிப்படையில் கண்டோம் என்றால்...இந்திய உளவுத்துறையையும் மாத்தையாவையும் பயன்படுத்தி உங்களை கொலை செய்து விட்டு பழியை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் மீதும் பிரபாகரனின் மீதும் சுமத்துவது என்பது சாத்தியமானதொன்றாகவே தெரிகின்றது.

அதுவே தான் நடந்தும் இருக்கின்றது என்பதே எனது மனதில் புலப்படும் எண்ணமும் ஆகும் அய்யா...!!! மேலும் வெளிநாடுகளில் ஈழம் குறித்த தமிழ் போராளிகள் என்றாலே புலிகள் என்ற பெயர் தான் அறியப்பட்டு இருக்கின்றது. மாறாக அங்கே பல்வேறு போராளி இயக்கங்கள் இருந்து இருக்கின்றன என்பதனை அவர்கள் அறிய மாட்டார்கள். காரணம் ஒரு சிறு தீவினுள் நிகழும் பிரச்சனைகளும் பெரும்பாலும் பலருக்கு மெய்யான ஆர்வம் இருப்பதில்லை தான். ஆனால் இந்திய உளவுத்துறைக்கு அவ்வாறு இல்லை...தமிழ் போராளி இயக்கங்கள் பல இருக்கின்றன என்பது அதற்குத் தெரியும்...அந்த இயக்கங்களுள் பலவற்றை அது தனக்காக பயன் படுத்தியும் இருக்கின்றது என்பது வரலாறு.

இந்நிலையில் உங்கள் மரணத்தில் ஈழத்தைச் சேர்ந்த தமிழர்களை சூழ்ச்சியினால் பயன்படுத்தி விட்டு பழியினை புலிகளின் மீது சுமத்தி இருக்கின்றனர் என்றே எமக்குத் தோணுகின்றது. உங்களுக்கும் அவ்வாறே தோணும் என்றே நினைக்கின்றேன் அய்யா...காரணம் உங்களின் மரணத்தினால் புலிகள் அடைந்த இலாபம் என்பது ஒன்றும் இல்லை என்றே நாம் வரலாற்றில் கண்டு இருக்கின்றோம்.

உண்மையில் உங்களது மரணத்தினால் ஆதாயம் அடைந்தது இந்தியாவில் உள்ள சிலரும்...உங்களின் கட்சியில் உள்ள சிலரும்....வெளிநாடுகளுமே அன்றி விடுதலைப்புலிகள் அல்லர்.

உங்களின் மரணத்தை சிறிது உன்னிப்பாக அறிவினைக் கொண்டு காண்பவர்களுக்கே இவ்விடயம் புலனாகும் பொழுது இது வரை இந்த விடயத்தினை உங்களின் கட்சியினரே...ஏன் நீங்கள் காதலித்து கைப்பிடித்து இன்று உங்களால் உங்களின் கட்சிக்கு தலைவராக இருக்கும் உங்களின் மனைவியுமே காணாமலும் அதனைக் குறித்து மேலும் ஆராயாமலும் இருப்பது நிச்சயம் உங்களுக்கு புதிராகத் தான் இருக்க கூடும் ராஜீவ் அவர்களே...!!!

மகாபாரதத்தில் ஒரு பகுதி உண்டு...ஊரினைச் சுற்றிப் பார்க்க தர்மனும் துரியோதனனும் செல்வார்களாம்...தர்மன் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு ஊரில் அனைவரும் நல்லவர்களாக இருக்கின்றனர் என்றுக் கூறுவான்...துரியோதனனோ ஊரில் அனைவரும் கள்வர்களாக இருக்கின்றனர் என்றுக் கூறுவான். அக்கதையின் முடிவு மனிதர்கள் நாம் கொண்டு இருக்கும் பார்வையின் படியே இருக்கின்றனர் என்பது ஆகும்.

இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் நான் காதலையும் மணவாழ்வையும் தூய்மையானதொன்றாக கருதுபவன் இராஜீவ் அவர்களே...அதனைக் குறித்து சந்தேகங்கள் எழுவதை கேவலமாக கருதுபவன். எனவே தான் நான் உங்களின் காதலையும் மெய்யானதொன்றாகவே காணுகின்றேன். இருந்தும் "அந்நிய நாட்டின் தலைவரின் வாரிசுகள் எங்களின் நாடுகளுக்கு படிக்க வந்தால்...அவர்களை எங்களின் வலையில் சிக்க வைக்க அனைத்து முறைகளையும் கையாளுவோம்...அதில் பெண்களை விட்டு காதலிக்கச் செய்வதும் உண்டு..." என்று அமெரிக்கா மற்றும் மேற்கு உலகத்தின் முகத்திரையை கிழிக்கும் வேலையைச் செய்து கொண்டு வருபவர்களும் ஒருவரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள் கூறும் பொழுதுசிறிய சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை இராஜீவ் அவர்களே...!!! உங்களின் துணைவியார் இங்கே வந்ததிற்கு பின்னர் தான் உங்களின் தம்பியும் சரி அன்னையும் சரி...நீங்களும் சரி கொலை செய்யப்பட்டு இருக்கின்றீர்...உங்களின் கொலைக்கான உண்மையான குற்றவாளிகளை உங்களின் கட்சியின் தலைமையில் இருந்தும் உங்களின் மனைவி கண்டுப்பிடிக்க முயலாது இருக்கின்றார்...அவரிடம் உண்மைகளைப் பற்றி பலர் கூறியும் அதனைக் காணாது இருக்கின்றார்...இந்நிலையில் அவர் மேல் சிறிது சந்தேகம் வரத்தான் செய்கின்றது இராஜீவ் அவர்களே...!!! அதற்கு மன்னியுங்கள்...ஒருவேளை இந்த கணிப்பு தவறானதொன்றாக இருந்தால் நிச்சயம் என்னை நீங்களும் உங்களின் துணைவியாரும் என்னை மன்னித்தே ஆக வேண்டும்...!!!

எனது இந்த கணிப்பு தவறானதொன்றாக இருக்கும் என்றே நான் வேண்டிக் கொள்கின்றேன். ஏன் தெரியுமா இராஜீவ்...

உங்களின் மேல் நான் பாவப்படுகின்றேன்...ஆயிரமாயிரம் ஈழத் தமிழர்களின் மரணத்திற்காக தமிழகமே உங்களை வெறுக்கும் பொழுது நான் உங்களுக்காக வருந்துகின்றேன்.

தம்பியை இழந்தீர்...!!!
தாயை இழந்தீர்...!!!
உண்மையான நண்பர்கள் யார் என்று அறியாது சதிகாரர்களுடன் சகவாசம் கொண்டீர்...!!!
தவறான வழிகாட்டலால் பாவம் பல பெற்றீர்...!!!
இறுதியில் மரணமும் கொடூரமாக எய்தினீர்...!!!

உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்ற காதல் ஒன்றாவது மெய்யாக இருக்கும் என்றே நம்பி இருப்பீர்...அதற்காகவாவது உங்களின் காதலைக் குறித்த எனது சந்தேகம் பொய்யாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன் அய்யா!!!

நீங்கள் பலியாக்கப்பட்ட ஒரு பலி ஆடு இராஜீவ் அவர்களே...!!!


இதனை...

இந்தியாவில் இருந்து பிரிந்துக் போன ஆரியக் கூட்டத்தில் ஒருவர்களான சிங்களர்கள் இந்திய ஆரியர்களின் மீது சொந்தம் கொண்டாடுவதும்...

""12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும்" - இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம்."

இங்கே இருக்கும் ஆரியர்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுவதில் இருந்தும்...

""இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது. அங்கு நடந்தது இனப்படுகொலை அல்ல..." என்று காங்கிரஸ் தரப்புக் கூறுகின்றது.
"இலங்கையை போர் குற்றவாளியாக அறிவிக்க முடியாது..." இது பா.ஜ.க கட்சியினரின் கூற்று.

"இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்..." இது RSS இன் கூற்று.

போராடும் தமிழ் இளைஞர்களை 'தமிழ் பொறுக்கிகள்' என்று சு. சுவாமி வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்."


என்பனவற்றின் வாயிலாக நீங்கள் அறிந்துக் கொள்ளலாம் இராஜீவ்...!!!

இந்தியாவின் பூர்வீக குடியினரான தமிழருக்கும்...வந்தேறிகளான ஆரியர்களுக்கும் இடையில் நடக்கும் ஒரு யுத்தத்தில் நீங்கள் பலியாக்கப்பட்ட ஒரு பலிகடா இராஜீவ்...அவ்வளவே!!!

வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் எங்கள் உள்ளம்...உண்மையாக உங்களுக்காக வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றது.

இருந்தும் உங்களின் பெயரால் அழிக்கப்பட்ட தமிழ் இனம்...மீண்டும் வளரும் என்பதில் எவ்வித ஐயங்களும் இல்லை அய்யா...உலகின் முதல் இனம் எளிதில் அழியாது...!!!

முற்றும்...!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

2) ஈழத்தின் வரலாற்றினை அறிந்துக் கொள்ள
ஈழம் : முகப்புப் பக்கம்

3)  தொடர்புடைய இடுகைகள்
http://tamilthesiyam.blogspot.in/2011/08/raw-3.html
http://thiruvadiyan.blogspot.in/2006/10/blog-post_05.html
//http://www.outlookindia.com/article.aspx?204614// 
 - ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி

முந்தையப்பதிவுகள்:

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!!
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 2 !!!
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 3 - இந்தியா என்றொரு தேசம...!!!

ஞாயிறு, 2 மார்ச், 2014

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 3 - இந்தியா என்றொரு தேசம்!!!

உங்களது மரணத்தில் உண்மையான ஆதாயத்தினை அடைந்தது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் இங்குள்ள பிராமணர்கள் மற்றும் உயர் சாதியினருமே என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம். இருந்தும் உங்களது மரணத்துக்கான பழி தமிழ் இனத்தின் மீது சுமத்தப்பட்டு இருக்கின்றது. அது ஏன் என்பது உங்களுக்கும் கூட குழப்பமாகத் தான் இருக்கலாம். அக்குழப்பத்திற்கு விடையினைக் காண வேண்டும் என்றால் அதற்கு நாம் இந்தியாவினைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் சிறிது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு கேள்வி

அமெரிக்க கிருத்துவர்கள் இந்தியர்களா?

முட்டாள்தனமான கேள்வியாகத்தானே தெரிகின்றது. உண்மையும் அது தான். அமெரிக்க கிருத்துவர்கள் அமெரிக்கர்கள் ஆவார்களே அன்றி இந்தியர்கள் ஆக மாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் வந்து தங்கினாலும் அவர்கள் இந்தியர்கள் ஆக மாட்டார்கள். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நான் நம்புகின்றேன்.

இதன் அடிப்படையிலேயே நாம் சீரியக் கிருத்துவர்களைக் காண வேண்டி இருக்கின்றது. கி.பி நான்காம் நூற்றாண்டில் இன்றைய கேரளக் கடற்கரைக்கு வந்து சேர்ந்த சீரிய நாட்டினைச் சார்ந்த சீரியக் கிருத்துவர்கள் இன்று இந்தியர்களாக இருக்கின்றனர். அதுவும் உயர் சாதியினராக இருக்கின்றனர். அவர்கள் ஏன் அவ்வாறு இருக்கின்றனர் என்றக் கேள்விக்கு விடைத் தேடத் துவங்குவதில் இன்று இந்தியா சந்தித்துக் கொண்டு இருக்கும் பல பிரச்சனைகளுக்கும் விடைகள் கிட்டும் என்பதே எனது எண்ணம்.

இந்தியா என்பது என்றுமே ஒரே நாடாக இருந்தது இல்லை ராஜீவ் அவர்களே. இதனை நீங்கள் உங்களது தாத்தா எழுதிய கடிதங்கள் மற்றும் நூல்களை படித்து இருந்தீர்கள் என்றாலே சிறிது அறிந்து இருப்பீர்கள். பல்வேறு காலங்களில் பல்வேறு இனக்குழுக்கள் இன்று இந்தியா என்று இருக்கும் நிலப்பரப்பின் மீது போர் தொடுத்தோ அல்லது வணிகம் சார்ந்தோ அல்லது பிழைக்க வழி தேடியோ வந்து அங்கேயே குடி கொண்டே தான் இருந்து இருக்கின்றனர்.

அசோகனின் காலத்தில் அவனது ஆட்சிக்கு உட்பட்ட யவன அரசர்களைப் பற்றியக் குறிப்பு இருக்கின்றது. தெற்கே இன்று கேரளம் என்று வழங்கப்பெறும் கடற்கரையோரம் கிரேக்க குடி இருப்புகள், ரோம குடி இருப்புகள், யூத குடி இருப்புகள் மற்றும் அவர்கள் ஆட்சி புரிய வழங்கப்பட்ட இடங்கள் என்று பல்வேறு இடங்கள் இருந்ததை வரலாற்றில் நாம் அறியத் தான் முடிகின்றது.

மேலும் சத்திரியர்கள் என்று ஆரியப் பிரிவுகளில் ஒன்றாக அறியப்பெறும் பிரிவினைச் சார்ந்தவர்களான ராஜபுத்திரர்கள் என்பவர்களும் இந்தியாவிற்கு வெளியே இருந்து இங்கே வந்த நாடோடி இனத்தினைச் சார்ந்த சகர்கள் மற்றும் சித்தியர்கள் ஆகியோரின் வம்சாவளியினரே என்றே உங்களின் தாத்தா கூறி இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்தியா என்று இன்று வழங்கப்பெறும் நிலப்பரப்பினில் பல்வேறு இன மக்கள் ஆண்டு இருக்கின்றனர்...குடி ஏறி இருக்கின்றனர்...இங்கேயே நிரந்தரமாக தங்கியும் இருந்து இருக்கின்றனர். கிரேக்கர்கள் இருந்து இருக்கின்றனர்...ஈரானியர் இருந்து இருக்கின்றனர்...ரோமர்கள் இருந்து இருக்கின்றனர்...சீரியர்கள் இருந்து இருக்கின்றனர்...யூதர்கள் இருந்து இருக்கின்றனர்....இன்னும் பல்வேறு மக்கள் இருந்து இருக்கின்றனர். ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இவர்கள் அனைவரும் இன்று அவர்களாக இங்கே இல்லை. அதாவது...

இந்திய நிலப்பரப்பினில் வந்துத் தங்கிய யூதன் இன்று யூதனாக இல்லை...!!!
இந்திய நிலப்பரப்பினில் வந்து குடியேறிய கிரேக்கன் இன்று கிரேக்கனாக இல்லை..!!!
இந்திய நிலப்பரப்பினில் குடியேறிய சகர்கள் இன்று சகர்களாக இல்லை...!!!

அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற பெயரிலே ஒன்றாக இருக்கின்றனர். அதுவும் நீங்கள் நன்றாக அறிந்த வர்ணாசிரமத்தின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் பெரும்பாலும் உயர் சாதியினராக இருக்கின்றனர். அதே நேரம் இந்திய நிலப்பரப்பின் பூர்வீக குடியினரான பெரும்பான்மையினரான மக்கள் தாழ்த்தப்பட்டு சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றுமே வைக்கப்பட்டு இருக்கின்றனர். வியப்பாக இருக்கின்றது தானே.

இந்த சூழ்நிலையைப் பற்றி நீங்கள் மேலும் விரிவாக அறிந்துக் கொள்ள அமெரிக்காவின் வரலாறு உங்களுக்கு உதவக் கூடும்.

உண்மையில் அமெரிக்கா என்று ஒரு நாடோ அல்லது அமெரிக்கர்கள் என்ற ஒரு இனமோ கிடையாது என்பதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள் என்றே நம்புகின்றேன். அமெரிக்கா என்று இன்று வழங்கப்படும் நிலப்பரப்பினில் வாழ்ந்துக் கொண்டு இருந்த பூர்வீக மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களைக் கொன்று ஒடுக்கியப் பின்னர் அங்கு சென்று இடத்தினைப் பிடித்த ஐரோப்பிய மக்களே இன்று அமெரிக்கர்கள் என்று வழங்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் பிடித்த இடமே அமெரிக்கா என்றும் நீங்கள் அறிவீர்கள். இடத்தினைப் பிடித்த அந்நியர்களும் வந்தேறிகளும் அங்கே ஆட்சியினைப் பிடித்துக் கொண்டு இருக்கும் பொழுது மண்ணின் மைந்தர்களான மக்களின் நிலை என்னவென்று யாரும் அறியாத நிலை தான் அங்கே இருக்கின்றது.

அதே வரலாற்று நிகழ்வு தான் இங்கேயும் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இங்கே உள்ள மண்ணின் மைந்தர்களை செவ்விந்தியர்களைக் கொன்றது போல் யுத்தத்தினால் வெல்ல முடியாத நிலையில் சூழ்ச்சிகள் பல கையாளப்பட்டு வந்தேறிகளும் அந்நியர்களும் உயர் சாதியினராய் இருக்க மண்ணின் மைந்தர்களோ சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் வைக்கப்பட்டு அறியாமையில் இருக்கின்றனர்.

இந்த வரலாற்றினை நீங்கள் அறிந்தால் தான் ஏன் உங்களின் மரணத்தினையும் உங்களையும் சாக்காக வைத்து மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் தாழ்த்தப்பட்டும் அழிக்கப்பட்டும் கொண்டு இருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிய முடியும்.

தமிழர்கள் சிறப்பானவர்கள் ஐயா...!!!

உலகின் முதல் இனம் என்று இன்று பெரும்பாலும் உலகம் ஏற்றுக் கொள்ளும் ஒரு இனம் தமிழ் இனம். ஒரு காலத்தில் இந்திய நிலப்பரப்பு முழுமையுமே தமிழர்களே இருந்து வந்தனர் என்று அம்பேத்கர் அவர்கள் கூறியது வெறும் மிகையல்ல. அதற்கு சான்றாக இன்று சிந்து சமவெளி நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்று பல ஆராய்ச்சிகள் கூறுவதும் அங்கே தமிழர்களின் புகழ் பெற்ற ஊர்ப் பெயர்களான மதுரை, வஞ்சி, தொண்டி போன்றவை காணப்படுவதும் தமிழர்களின் பெருமைக்கும் அவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதற்கும் சான்றுகளாகும். ஏன் இந்திய நிலப்பரப்பு முழுவதையும் கிட்டத்தட்ட பிடித்த அசோகனின் காலத்திலும் தெற்கே பாண்டியர்களும் சோழர்களும் சுதந்திரமாய் ஆட்சி புரிந்துக் கொண்டு தானே இருந்தனர்.

அப்பேர்பட்ட தமிழர்கள் தாம் இன்று உங்களது பெயரினால் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவ்வாறு முக்கியமாக தமிழர்களை அழிக்கும் பணியை முன் இருந்து செய்பவர்கள் பிராமணர்கள் மற்றும் மலையாளிகள் என்பதையும் நீங்கள் அறிந்து இருக்கக் கூடும். காரணம் உங்களைச் சுற்றி பெரும்பாலும் அவர்கள் தானே இருந்து இருப்பர். அதனால் அவர்களை நீங்கள் அறிந்து இருக்கக் கூடும்.

அவர்கள் அவ்வாறு அழிக்க முயல வேண்டியக் காரணம் என்ன? தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதனாலா? தமிழர்கள் இருக்கும் வரை அவர்களால் அவிழ்த்து விடப்பட்டு இருக்கும் பொய்களும் புரட்டுகளும் சூழ்ச்சிகளும் என்றாவது உடைந்து அவர்களின் மேலாதிக்கம் உடைந்து விடும் என்ற அச்சத்தினாலா?

என்ற கேள்விகளுக்கு நாம் நிச்சயம் பதில் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது ராஜீவ் அவர்களே.

அதுவும் குறிப்பாக பிராமணர்கள் என்பவர்கள் வந்தேறிகள் என்று தமிழ் இனம் முழங்கிக் கொண்டு இருக்கும் பொழுது,

மலையாளிகள் என்று இன்று அழைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அந்நிய நாட்டினைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் (மேற்கு கடற்கரையோரப் பகுதியில் நிகழ்ந்த யூத குடியேற்றங்கள், கிரேக்க மற்றும் ரோம குடியேற்றங்கள், சீரியக் குடியேற்றங்கள் போன்ற அன்னியர்கள் இன்று கேரளா எனப்படும் பகுதியில் ஆட்சிகள் புரிந்ததை வரலாறு கூறிக் கொண்டு இருக்கும் பொழுது)

அன்னியர்கள் என்று வழங்கப்படும் அவர்கள் மண்ணின் மைந்தர்களாக அறியப்படும் தமிழர்களை அழிக்க முயல்வது எதனால் என்றக் கேள்வி உங்களுக்கு முக்கியமாக படுகின்றதோ இல்லையோ தமிழர்களுக்கு நிச்சயமாய் முக்கியமான ஒரு கேள்வியாகத் தான் இருக்கின்றது.

மேலும் பிராமணர்கள் தமிழ் இனத்தின் தலைவரான திரு.காமராஜர் அவர்களையும் கொல்ல முயற்சித்து இருக்கின்றார்கள் என்ற வரலாற்றையும் இங்கே உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

மேலும் ஆச்சர்யமாகத் தான் இருக்கின்றது...ஒரு மலையாளி எங்கே சென்றாலும் மற்றொரு மலையாளியை அழைத்துக் கொண்டு விடுவான் என்று மலையாளிகளின் ஒற்றுமையை பெருமையாக யூதர்களின் ஒற்றுமையைப் போல் பேசும் மக்கள் காலங்களில் தமிழகத்தின் மேற்கு கடற்கரையில் வந்து குடி அமர்ந்த யூதர்களையும் இன்றைய மலையாளிகளையும் ஏன் ஒற்றுமைப்படுத்தி பார்க்கவில்லை என்பது நிச்சயம் ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது.

சரி இருக்கட்டும். நீண்ட நெடிய வரலாற்றினை சுருக்கமாகப் பார்ப்பது என்பது கடினமான ஒரு செயல் தான் இருந்தும் தமிழர்களான நாங்கள் எதனால் உங்களின் மரணத்திற்கு காரணமாக காட்டப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம் என்பதனை அறிய இந்த வரலாறு தேவைப்படத் தான் செய்கின்றது.

இப்பொழுது எப்படி உங்களின் மரணத்திற்கு பழியினை தமிழ் இனம் சுமக்க நேர்ந்தது என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது....!!!

கடிதம் தொடரும்....!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ஈழம் : முகப்புப் பக்கம்

நண்பர்களுக்கு வணக்கங்கள்...!!!

ஈழத்தைப் பற்றிய வரலாற்றினைக் குறித்து இந்த வலைப்பூவினில் தொடர் ஒன்று எழுதி வந்தேன். இந்நிலையில் புதிதாக படிக்க ஆரம்பிக்கும் நண்பர்களுக்கு அப்பதிவுகள் அனைத்தினையும் வரிசைப்படுத்திப் படிப்பது என்பது கடினமான ஒரு விடயமாக இருக்கக் கூடும். அதற்காக ஒரு முகப்புப் பக்கத்தினை உருவாக்கி விட்டால் படிக்கும் நண்பர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும் என்று எண்ணியே இந்தப் பதிவு.

இத்தொடரினை எழுதத் துவங்கும் முன்னர் என் மனதில் இருந்த இலக்கு ஈழத்தில் நிகழ்ந்த போர்களைப் பற்றியோ அல்லது இன்று நிலவும் சூழலினைக் குறித்து எழுத வேண்டும் என்பதோ அல்ல...மாறாக ஈழத்தின் வரலாறு துவங்கி ராஜீவ் காந்தியின் மரணம் வரை நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி  வண்ணம் மக்களிடம் பகிர வேண்டும் என்பதே. எனவே ராஜீவ் காந்தியின் மரணத்தைப் பற்றிப் பார்ப்பதோடு இத்தொடர் முடிவு பெறும் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.

இதோ நாம் இது வரைக் கண்ட பகுதிகள்!!!

ஈழம்: ஒரு பார்வை-1!!!
ஈழம்: ஒரு பார்வை-2!!!
ஈழம்: ஒரு பார்வை-3!!!
ஈழம்: ஒரு பார்வை-4!!!
ஈழம்: ஒரு பார்வை-5!!!
ஈழம்: ஒரு பார்வை-6: இலங்கையின் விடுதலை !!!
ஈழம்: ஒரு பார்வை-7 : பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம்
ஈழம்: ஒரு பார்வை-8 : ஒப்பந்தங்கள்...பிரபாகரன்
ஈழம்: அறிந்துக் கொள்ள சில விடயங்கள்
ஈழம்: ஒரு பார்வை-9 : இந்திராவும் இலங்கையும்
ஈழம்: ஒரு பார்வை-10 : இந்தியாவும் இலங்கையும்
ஈழம்: ஒரு பார்வை-11 : இந்திய அமைதிக் காக்கும் படை
ஈழம்: ஒரு பார்வை-12 : பிரேமதாசா - புலிகள்
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!!
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 2 !!!

வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 2 !!!

அமெரிக்காவினை நீங்கள் எதிர்த்து இருக்கின்றீர்கள். அதே நேரம் உங்களின் மரணத்திற்குப் பின்னர் அமெரிக்காவிற்கு உங்களது கட்சியினாலேயே சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. உங்களது மரணத்தை அடிப்படையாக வைத்து ஆட்சியினைப் பிடித்த உங்களது கட்சியே உங்களது கொள்கையினை காற்றில் பறக்க வைத்து உள்ளது. ஏன் இந்த முரண்பாடு என்று சிந்திக்கவோ அல்லது விவாதிக்கவோ நமது நாட்டினில் ஊடகங்கள் ஏனோ தயாராக இல்லை. அவை ஏன் தயாராக இல்லை என்பதை நாம் முக்கியமாக கண்டாக வேண்டி இருந்தாலும் இப்பொழுது அதனை விட முக்கியமான விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது என்றே எண்ணுகின்றேன். அதுவும் குறிப்பாக நீங்கள் கொலையுண்ட காலப் பின்னணியை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றே எண்ணுகின்றேன்.

அது ஒரு தேர்தல் காலம். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 1991 ஆம் ஆண்டு. அந்த தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு நீங்கள் வரும் பொழுது தான் கொல்லப்பட்டு இருக்கின்றீர்கள். இங்கே என்னுள் எழும் கேள்வி என்னவென்றால் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கப் பெரும் பாராளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 1994 ஆம் ஆண்டில் தான் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் இரு வருடங்களிலேயே பாராளுமன்றத் தேர்தல் மீண்டும் வந்து இருக்கின்றது. அதுவும் அந்த இருவருடங்களில் இரண்டு பிரதமர்களை நமது நாடு சந்தித்து இருக்கின்றது.

சுருக்கமாக சொல்வதென்றால் நமது நாடு அந்த ஆண்டுகளில் ஏதோ மறைமுகப் பிரச்சனைகளைக் கண்டு வந்துக் கொண்டு இருந்து இருக்கின்றது என்றே என்னால் அறிந்துக் கொள்ள முடிகின்றது. நிச்சயம் அதனை நீங்களும் அறிந்து இருப்பீர்கள் என்றே எண்ணுகின்றேன்.

1989 ஆம் ஆண்டில் பிரதமராக பதவி ஏற்ற வி.பி.சிங் அவர்களை நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஈழத்தில் நீங்கள் அனுப்பிய அமைதிக் காக்கும் படையினை திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரு உன்னதமான மனிதர். இன்று வரை தமிழர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் ஒரு பிரதமர் என்றால் அது திரு.வி.பி.சிங் அவர்கள் தான் என்பதனை தமிழகம் நீங்கள் வந்து இருந்தால் நிச்சயம் அறிந்து இருப்பீர்.

ஆனால் வி.பி.சிங் அவர்கள் அமைதிப் படையினை திரும்பப் பெற்றதோடு மட்டும் நிற்க வில்லை...நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இட ஒதுக்கீடுக்கான மண்டல் கமிசனின் பரிந்துரைகளை சட்டமாக்கியவரும் அவரே. "ஆட்சிப் போனாலும் கவலை இல்லை...மக்களுக்கு உரிய இந்த இட ஒதுக்கீட்டினை நான் சட்டமாக்கியே தீருவேன்" என்று கூறி பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீட்டினை பெற்றுத் தந்த ஒரு மாபெரும் தலைவர் அவர்.

இட ஒதுக்கீட்டை அவர் கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக அவர் பதவி விலக வேண்டி இருந்தது என்பதையும், அவருக்கு பின்னர் சந்திரசேகரன் என்பவர் பதவி ஏற்றார் என்பதையும் நீங்கள் நன்றாக அறிவீர்.

இந்த சந்திரசேகரன் என்பவர் தான் அமெரிக்க விமானங்களுக்கு இந்தியாவில் எரிவாயு நிரப்ப அனுமதி தந்தவர் என்பதையும் அதனை பாராளுமன்றத்தில் நீங்கள் வன்மையாக கண்டித்தீர்கள் என்பதையும் வரலாற்றை சற்று கவனித்து இருப்பவர்கள் நிச்சயம் அறிந்துத் தான் இருப்பர். மேலும் இவரும் ஒரு வருடத்திற்கு மேலாக ஆட்சியில் இல்லாமல் ஆட்சி கவிழ மீண்டுமொரு பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்தியா தயாரானது என்பதையும் நீங்கள் அறிவீர். இதனால் தான் 1991 ஆம் ஆண்டில் நீங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராக வேண்டி இருந்தது.

இங்கே பலரும் 1991 ஆம் ஆண்டை மட்டுமே கண்டுக் கொண்டு இருக்கும் பொழுது ஏனோ தெரியவில்லை எனது கவனம் 1989 ஆம் ஆண்டில் திரு.வி.பி.சிங் அவர்களால் கொண்டு வரவேற்றப்பட்ட இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மீதே செல்லுகின்றது. காரணம் மீண்டும் தேர்தல் வருவதற்கு அடிப்படைக் காரணியாகவே அச்சட்டம் விளங்குகின்றது.

அச்சட்டத்தின் வாயிலாக அனைத்து அரசு பணிகளிலும் அனைத்து வகையான மக்களுக்கும் உரிய உரிமைகள் கிட்டப்பெறும். ஆனால் அதே சமயம் இந்தியாவில் பிராமணர்களும் உயர் சாதியினரும் கொண்டு இருந்த ஆதிக்கம் படிப்படியாக குறைந்து இருக்கும். இதனை நிச்சயம் அவர்கள் விரும்பி இருக்க மாட்டார்கள். ஆண்டாண்டுக் காலமாக அநியாயமாக அனுபவித்து வந்த சுகங்களை அவர்கள் இழக்க எவ்வாறு விரும்புவார்கள்?

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் பெரும்பான்மையானோர் பிராமணர்கள்.
பா.ஜ.க வைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
பொதுஉடைமை கட்சி என்றுக் கூறிக் கொள்ளும் கட்சியின் தலைமையிலும் பிராமணர்களும் மலையாளிகளுமே நிறைந்து உள்ளனர்.

இவ்வாறு இந்திய அரசியலில் முக்கியமான இடங்களை எல்லாம் கைப்பற்றிக் கொண்டு இருக்கும் பிராமணர்களும் உயர் சாதியினரும் எவ்வாறு அவர்களது ஆதிக்கத்திற்கு எதிராக வரும் சட்டத்தை ஏற்றுக் கொள்வர். மாட்டார்கள் தானே. எதிர்க்கத் தானே செய்வார்கள். அவர்களின் எதிர்ப்பினால் தானே திரு.வி.பி.சிங் அவர்கள் பதவி விலக வேண்டி இருந்தது. இதனை நீங்களும் தானே அறிவீர்கள்.

இந்த நிலைமையிலேயே தான் நாம் உங்களின் மரணத்திற்கு பின்னர் உங்களது கட்சி கொண்டு வந்த 'தனியார் மயக் கொள்கையினைப்' பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

வி.பி.சிங் சட்டத்தினைக் கொண்டு வந்து விட்டார். இனி அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கும் இருக்கும். படிப்படியாக பிராமணர்கள் மற்றும் இதர உயர் சாதியினரின் செல்வாக்கு குறையும். அதாவது அரசு வேலைகள் என்ற ஒன்று இருந்தால் பிராமணர்களின் செல்வாக்கு குறையும். அரசு வேலைகள் என்று ஒன்று இல்லாது போனால் இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாது போகும். இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாது போனால் பிராமணர்கள் மற்றும் உயர் சாதியினரின் செல்வாக்கு குறையாது. இதில் உள்ள உண்மையை நீங்கள் அறிவீர்கள் தானே...!!!

இதனை அடிப்படையாகக் கொண்டுப் பார்த்தால் 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசு அதனுடைய பணிகளை பெரும்பாலும் தனியார் வசம் விட்டு இருப்பதன் காரணத்தை நாம் அறிய முடிகின்றது தானே.

'பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமாவதும்...அச்சட்டத்தை காரணமாகக் கொண்டு ஒரு அரசைக் கலைத்து அதற்குப் பின்னர் தனியார் மயமாக்கும் வேலையை ஆரம்பிப்பதும்' நிச்சயம் தொடர்புடையவைகளே என்பதனை நீங்கள் இங்கே இருந்து இருந்தால் நிச்சயம் அறிந்தே இருப்பீர்கள்.

இதோ இன்று நமது நாட்டினைப் பாருங்கள்...பெரும்பாலும் அனைத்தும் தனியார் மயமாக்கப் பட்டுக் கொண்டே வந்துக் கொண்டு இருக்கின்றது. அனைத்து தனியார் நிறுவனங்களிலும் மேல் இடங்களில் பிராமணர்களும் உயர் சாதியினருமே நிறைந்து இருக்கின்றனர்.

இதோ 2010 இல் எடுத்த ஒரு ஆய்வு...தலைசிறந்த தனியார் நிறுவனங்களில் மேலான பதவிகளை வகிப்பவர்களில் 93% சதவீதம் பேர் உயர் சாதியினரே என்பதனை அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது (இவர்கள் இந்திய சனத்தொகையில் வெறும் 10% அவ்வளவே).

இதன் மூலமாக உங்களின் மரணத்தில் ஆதாயம் அடைந்து இருப்பது வெறும் அமெரிக்க நாட்டவர்கள் மட்டும் அல்ல இங்கே இருக்கும் உயர் சாதியினரும் பிராமணர்களும் தான் என்பது உங்களுக்கு புலனாகும் என்றே நம்புகின்றேன்.  இந்தக் கூற்றுக்கு சான்றாக உங்களின் மரணத்திற்கு வழிவகுத்த ஒருவராக அறியப்படும் சுப்பிரமணிய சாமி ஒரு பிராமணராக இருப்பதை எடுத்துக் கொள்ளலாம் தானே.

சுப்பிரமணிய சுவாமியை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். நீங்கள் இறந்து விட்ட செய்தியை அவ்விடத்தில் உள்ளவர்களே அறியாத நிலையிலேயே எங்கோ இருந்துக் கொண்டு இராஜீவ் காந்தி இறந்து விட்டார்...விடுதலைப் புலிகள் அவரைக் கொன்று விட்டார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்த ஒருவர் அவர். நிச்சயம் அவரை நீங்கள் அறிந்து இருப்பீர். இல்லை அறியவில்லை என்றாலும் அறிந்துக் கொள்ள முயற்சியாவது செய்யுங்கள் காரணம் உங்களின் மரணத்தில் சுப்பிரமணிய சாமியை விசாரிக்க விசாரணை கமிசன் பரிந்துரைத்தும் இன்னும் விசாரிக்கப்படாமலே நாட்டினுள் உலா வந்து கொண்டு இருக்கும் ஒரு மாபெரும் தலைவர் அவர்.

மேலும் நீங்கள் மரணித்த ஒரு மாதத்திற்குப் பின்னர் காஞ்சிபுரத்தில் பிரம்மஹத்தி தோஷ யாகம் நடத்தியவர் அவர். பிரம்மஹத்தி தோஷ யாகம் என்றால் என்னவென்று சாமானியனான எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். ஒரு பிராமணனைக் கொன்றால் அதை விட பெரிய பாவம் இல்லை என்றும் அப்பாவத்தை தீர்க்க யாகம் செய்ய வேண்டும் என்றும் அதுவே பிரம்மஹத்தி யாகம் என்பதும் நிச்சயம் உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஏன் என்றால் நீங்களும் ஒரு பிராமணர் தானே. உங்கள் ஆட்கள் தானே இந்த கதைகளை எல்லாம் நாட்டினுள் கட்டி வைத்து இருக்கின்றனர். ;ஆகையால் நிச்சயம் உங்களுக்கு அந்த யாகத்தைப் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.

பண்டிட் ஜவர்ஹலால் நேரு...உங்களின் தாத்தாவின் பெயர். இதில் பண்டிட் எனப்படுவது அவர் படித்து வாங்கியப் பட்டம் இல்லை...அது காஷ்மீரத்து பிராமணர் என்பதைக் குறிக்கும் சொல். அதாவது நீங்கள் காஷ்மீரத்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

நீங்கள் ஒரு பிராமணர். நீங்கள் மரணித்து இருக்கின்றீர். இல்லை கொலை செய்யப்பட்டு இருக்கின்றீர். அக்கொலையினில் சந்தேகத்துக்கு உரிய ஒருவர் பிராமணரை கொன்றால் செய்ய வேண்டிய யாகத்தை செய்கின்றார். அதுவும் நீங்கள் இறந்த ஒரு மாத காலத்திற்குள். இந்நிலையில் அவர் யாரைக் கொலை செய்தார்...எந்த பிராமணனைக் கொலை செய்தார்...என்ற கேள்விகள் சாதாரண மனிதனின் மனதிலேயே எழக்கூடும் தான் அல்லவா....ஆனால் ஏன் இந்தக் கேள்விகள் விசாரணை அதிகாரிகளின் மனதிலும் ஊடகங்களின் மனதிலும் எழவே இல்லை?

ஏன் சுப்பிரமணிய சாமி விசாரிக்கப்படவே இல்லை?

அவர் பிராமணர் என்பதாலா? இல்லை ஊடகங்கள் அனைத்தும் பிராமணர்களின் கையிலேயே இருக்கின்றன என்பதாலா...அல்லது இந்திய அரசியல் இன்றும் பிராமணர்களின் கைகளிலேயே தான் மறைமுகமாக இருக்கின்றது என்றக் காரணத்தினாலா?

இடஒதுக்கீடு வந்து இருக்கின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி கலைக்கப்படுகின்றது. பின்னர் உங்களை கொலை செய்வதன் வாயிலாக அமெரிக்கா உள்ளே அழைத்து வரப்படுகின்றது...தனியார்மயம் அமெரிக்காவின் துணையுடன் ஊட்டி வளர்க்கப்படுகின்றது...அரசு இயந்திரம் பழுதடைய செய்யப்படுகின்றது.

இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை என்றே எனக்குத் தோன்றுகின்றது. நிச்சயம் உங்களுக்கும் அவ்வாறே தோன்ற வேண்டும் என்றே நான் கருதுகின்றேன்...இல்லையெனில் உங்களின் மரணத்தை காரணமாக வைத்து ஆட்சியைப் பிடித்த உங்களின் கட்சியே உங்களின் மரணத்தைக் குறித்து உண்மையான அக்கறைக் காட்டாமலும் அதனைக் குறித்த விசாரணையை மழுங்கடிக்கச் செய்ததும் உங்களின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டதும் ஏன் என்ற கேள்விகளுக்கு உங்களால் விடை அளிக்க முடியுமா ஐயா?

மேலும் தங்களுக்கு சாதகம் என்றால் எதையும் பிராமணர்கள் செய்வர் என்பது நாம் அறிந்த ஒன்று தானே...ஆங்கிலேயன் இங்கே முதலில் வந்த பொழுது அவனுக்கு வால் பிடித்தது யார்? அவர்கள் தானே. காரணம் அவர்களும் அன்னியர்கள் தானே. சரி இருக்கட்டும் வரலாறு பெரியது. உங்களுக்கு அவ்வளவு பெரிய வரலாறு தெரிந்து இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே...இருந்தும் அவற்றை நாம் பார்க்க வேண்டிய நேரத்தில் பார்க்க முயலலாம்.

இப்பொழுது உங்களின் மரணத்தினால் ஆதாயம் அடைந்தவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் இந்தியாவில் வாழும் பிராமணர்களும் உயர் சாதியினருமே ஆவர் என்றே நாம் கண்டு  இருக்கின்றோம். இதனை குறித்து எந்த ஒரு ஊடகமும் பேசாது இருப்பதற்கு காரணம் ஊடகங்கள் அனைத்தும் ஒன்று அமெரிக்கா சார்ந்து இருக்கின்றன அல்லது பிராமணர்கள் சார்ந்து இருக்கின்றன என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது மேலும் சில விடயங்களைக் குறித்து நான் உங்களிடம் பேச வேண்டி இருக்கின்றது.

உங்களின் மரணத்திற்கு காரணமாக தமிழர்கள் அடையாளப்படுத்தப் பட்டு உள்ளனர். அது உண்மையா...உண்மை இல்லாவிடில் ஏன் தமிழர்கள் குறி வைத்து பழி வாங்கப்பட்டனர் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

கடிதம் தொடரும்....!!!

பி.கு:
1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!
2) தொடர்புடைய புத்தகங்கள்/பதிவுகள் சில
 - ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி
 - http://greatgameindia.wordpress.com/2013/03/07/subramanian-swamy-the-mossad-stooge-the-assassination-of-rajiv-gandhi/
 - http://realkillersofrajiv.blogspot.in/
- http://www.outlookindia.com/article.aspx?205868
- http://www.nytimes.com/1991/01/30/world/india-in-an-uproar-over-refueling-of-us-aircraft.html

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!!

அன்புள்ள ராஜீவ் காந்தி அவர்களுக்கு,

நிச்சயம் இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் கடிதம் எழுதியாக வேண்டிய சூழ்நிலை இருப்பதினால் எழுதித் தான் ஆக வேண்டி இருக்கின்றது. இன்று மீண்டும் உங்களது கொலை வழக்கைப் பற்றிய விவாதங்களும் அநியாயமாய் தண்டனைப் பெறப்பெற்ற அப்பாவிகளின் விடுதலையைக் குறித்த குரல்களும் எழத் துவங்கி உள்ளன. இந்நிலையில் என் மனதில் இருக்கும் எண்ணங்களையும் கேள்விகளையும் உங்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்றே தோணுகின்றது.

உங்களுக்குத் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை இருந்தும் இன்றைக்கு உங்களின் கொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள் தான் என்ற எண்ணம் இந்திய மக்களின் இடையே வெகுவாக பரப்பப்பட்டு உள்ளது. ஈழத்தில் நீங்கள் தமிழர்களைக் கொன்றீர்கள் அதனால் பழிக்கு பழியாக உங்களை விடுதலைப் புலிகள் கொன்று விட்டனர் என்றே மக்கள் நம்ப வைக்கப்பட்டு உள்ளனர். "பழிக்கு பழி...இரத்தத்திற்கு இரத்தம்" என்ற வகையிலான திரைப்படங்களை மட்டுமே கண்டு வளர்ந்த ஒரு சமூகத்திடம் அக்கருத்து விரைவாக சென்று அடைந்ததில் நமக்கு வியப்பு ஒன்றும் இல்லை தான்.

இராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்...!!!
யாரால்?
விடுதலைப்புலிகளால்...!!!
ஏன்?
ஈழத்தில் அவர் தமிழர்களைக் கொன்றார் அதனால்...!!!
ஆ...சரிதான்...அப்படித்தான் இருக்க வேண்டும்...!!!

என்றவாறே தான் இன்றைய மக்களுள் கருத்துக்கள் நிலவிக் கொண்டிருக்கின்றன. பிழை அவர்களின் மேல் இல்லை...காரணம் அவர்களை அந்த அளவு அரசியல் தெளிவோடு தான் இன்றைய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வைத்து இருக்கின்றன. நாட்டின் நிலைமை அவ்வாறு தான் இருக்கின்றது.

ஆனால் நிச்சயம் உண்மையை நீங்கள் அறிந்து இருப்பீர்...ஒரு விடுதலைப் போராட்டத்தில் பழி வாங்கும் எண்ணம் சிறிதும் உதவாது என்பதனை. விடுதலையை நோக்கிப் போராடும் ஒவ்வொரு போராளியின் இலக்கும் விடுதலையாகவே இருக்குமே அன்றி, தனி மனித விருப்பங்களோ அல்லது வெறுப்புகளோ முக்கியமாக இருக்காது. ஆயிரம் இழப்புகளைச் சந்தித்தாலும் இலக்கு விடுதலையாகவே இருக்கும். அதற்கு பங்கம் விளைவிக்கும் யாதொரு செயலையும் எந்த ஒரு விடுதலைப் போராளியும் எப்பொழுதும் செய்ய மாட்டான். இதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள்...விடுதலைப் புலிகளும் அறிந்து தான் இருப்பர்.

அந்நிலையில் அவர்கள் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உங்களைக் கொன்றால், அண்டை நாடான இந்தியாவின் ஆதரவினை நிரந்திரமாக இழக்க வேண்டி வரும் என்பதையும்...தாய் தமிழகத்தின் ஆதரவையும் இழக்க நேரிடும் என்பதையும் அறிந்தே தான் இருப்பர். அதனை விட பெரிய இழப்பு அவர்களுக்கு நிச்சயம் கிடையாது. உங்களின் மரணத்தினால் புலிகளுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக கிட்டி இருக்கும்...மேலும் அவர்களின் விடுதலை போராட்டமும் ஒரு பின்னடைவை சந்தித்து இருக்கும்.

நிலைமை இவ்வாறு இருக்கையில் நிச்சயம் அவர்கள் உங்களைக் கொலை செய்ய எந்த ஒரு காரணமும் இல்லை என்றே தோணுகின்றது. காரணம் அதில் அவர்களுக்கு எந்த ஒரு ஆதாயமும் இல்லை.

இங்கே ஒரு புத்தகம் எனக்கு நியாபகம் வருகின்றது 'தி கவுன்ட்ஆப் மோன்டே கிறிஸ்டோ' என்றொரு புத்தகம் அது. அதில் ஒரு அப்பாவி இளைஞன் எந்த ஒரு தவறுமே செய்யாது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பான். ஏன் தான் சிறையில் இருக்கின்றோம் என்றே அவன் குழம்பிக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு பெரியவர் "ஏன் காரணமே அறியாது துன்பத்தை அனுபவிக்கின்றோம் என்று எண்ணுகின்றாயா...உன்னுடைய துன்பத்தினால் யார் யார் எல்லாம் இன்பமும் பலனும் அடைந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பார்...அப்பொழுது உன்னுடைய துன்பத்திற்கான காரணத்தை நீ கண்டு அறிவாய்" என்றே கூறிச் செல்வார்.

அதையேதான் நாமும் இங்கே முயன்றுப் பார்க்க வேண்டி இருக்கின்றது. உங்களின் மரணத்தினால் நிச்சயம் விடுதலைப்புலிகளுக்கு யாதொரு நன்மையையும் இல்லாத நிலையில்...உங்களின் மரணத்தினால் யாரெல்லாம் ஆதாயம் அடைந்து இருப்பார்கள் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் உங்களின் வாழ்க்கையை சற்று திரும்பித் தான் பார்க்க வேண்டி இருக்கின்றது.

பிறப்பும் இறப்பும் நமது கைகளில் இல்லை. நீங்கள் பிறக்கும் பொழுதே நூறு கோடி மக்களை ஆளும் வாய்ப்பினைப் பெற்ற குடும்பத்தில் பிறந்தீர்கள். இருந்தும் ஆட்சியில் உங்களுக்கு ஆர்வம் இருந்ததா என்பது தெரியவில்லை. காரணம் உங்களின் அண்ணன் சஞ்சய் காந்தி அப்பொறுப்புகளில் ஆர்வம் கொண்டு இருந்தமையால் நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து இருக்க சாத்தியக் கூறுகள் அதிகமாகத் தான் இருக்கின்றது.

ஒருவேளை உங்களது அண்ணனும் மர்மமாக இறக்காமல் உங்களது தாயும் கொலை செய்யப்படாமல் இருந்து இருந்தால் நீங்கள் அரசியலுக்கு வராமலே போயிருந்து இருக்கலாம். எனக்கும் இந்த கடிதத்தை எழுத வேண்டிய தேவை இல்லாது போயிருக்கும். ஆனால் அவை அனைத்தும் நிகழ்ந்து விட்டன. எனவே நாமும் அவற்றைக் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

நீங்கள் ஒரு அரசியல்வாதி அல்ல ராஜீவ் அவர்களே...அண்ணன் எப்பொழுது செல்வான் திண்ணை எப்பொழுது காலி ஆகும் என்று அரசியலையே கண்ணாக வைத்து கொண்டு இருந்தவராக எனக்குத் தெரியவில்லை...உங்களின் அண்ணனின் மறைவிற்குப் பின்னர் தான் நீங்கள் களம் இறக்கப்படுகின்றீர்கள். சந்தர்ப்பம் உங்களை அரசியலுக்கு இழுத்து வருகின்றது.

அப்பொழுது கூட நீங்கள் பிரதமராக ஆவீர்கள் என்று எண்ணினீர்களா இல்லையா என்றுத் தெரியவில்லை...காரணம் நாட்டினை ஆண்டுக் கொண்டு இருக்கும் நமது அம்மா மரணம் அடைவார்கள் என்று எந்த பிள்ளையுமே எண்ணி இருக்க மாட்டான் தான். ஆனால் உங்களின் தாயார் கொலை செய்யப்பட நாட்டின் தலைமைப் பொறுப்பு உங்களின் வசம் வருகின்றது. இங்கே தான் சில கேள்விகள் கிளம்புகின்றன...

1) உங்களின் தலைமைப் பொறுப்பை அதாவது நீங்கள் பிரதமர் ஆவதை உங்களின் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்களா?

2) பிரதமராவதற்கு உரிய பக்குவம் உங்களுக்கு இருந்து இருக்குமா?

இவ்விரண்டுக் கேள்விகளுக்குமே விடைகள் இல்லை என்றே வருகின்றது.

நிச்சயமாய் இந்திரா காந்தி அவர்கள் இருந்து இருக்கக் கூடிய கால கட்டம் வரைக்கும் அவரைத் தவிர வேறு யாரும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரதம மந்திரி ஆகி இருக்க முடியாது. அந்நிலையில் அவருக்கு அடுத்து சஞ்சய் காந்தி என்று ஒருவர் வரிசையில் இருந்தாலும் சிலருக்கு பிரச்சனைகள் தான். அந்நிலையில் அவ்விருவரின் மரணத்தையும் சிலர்....உங்கள் கட்சிக்காரர்களே கொண்டாடி இருப்பர். அவர்களுக்கு நிச்சயமாய் நீங்கள் அரசியலுள் நுழைந்தது கசப்பாகத் தான் இருந்து இருக்கும். எப்பொழுது நீங்கள் இறப்பீர்கள் எப்பொழுது அவர்கள் பிரதமர் ஆகலாம் என்றே அவர்களின் சிந்தனை இருக்கும் தானே.

அதன் அடிப்படையில் பார்த்தால் இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக பிரதமர் ஆகி இருக்க வேண்டிய திரு. நரசிம்ம ராவ் அவர்கள் உங்களால் அந்த வாய்ப்பினை இழந்து விட்டார். நீங்கள் பிரதமராக ஆக்கப்பட்டு விட்டீர்கள். இனி நீங்கள் இருக்கும் வரை அப்பதவி அவருக்கு கிடையாது.

இந்நிலையில் உங்களின் மரணத்திற்கு பின்னர் திரு.நரசிம்ம ராவ் அவர்களே பிரதமர் ஆகி இருப்பதும், உங்களுடைய மரணத்திற்கான சதியின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் சந்திராசாமியும் நரசிம்ம ராவும் தோழர்கள் என்பதும் இங்கே நாம் சிந்தித்துப் பார்த்தாக வேண்டிய விடயங்களாக இருக்கின்றன.

மேலும் நீங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுதே உங்களை சதியால் அகற்ற நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி, சந்திராசாமி போன்றவர்கள் முயன்றார்கள் என்பதையும் நீங்கள் அறிந்தே இருந்தீர்கள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

அதாவது நீங்கள் பிரதமர் ஆனதில் உங்கள் கட்சிக்கு உள்ளேயே புகைச்சல் இருந்து இருப்பது புலனாகின்றது. சரி இது இருக்கட்டும்...!!!

உங்களின் தாயார் தீவிர சோவியத் ஆதரவாளர். சோவியத் ஆதரவாளர் என்றால் அமெரிக்க எதிர்ப்பாளர் என்பது மறைமுகப் பொருள் தானே. இது நிச்சயமாய் அமெரிக்காவிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விடயமாக இருந்து இருக்காது என்பது தெளிவு.

நூறு கோடி மக்கள் தொகையினைக் கொண்ட நாட்டினை இழக்க நிச்சயம் அமெரிக்கா தயாராக இருக்காது. இந்தியாவின் கொள்கைகள் அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தால் அமெரிக்கா பெறப் போகும் இலாபங்கள் கணக்கில் அடங்காதவை என்பதை அமெரிக்கா அறிந்தே தான் இருக்கும். அதற்குத் தேவை எல்லாம் அதனை நாட்டிற்குள் அனுமதிற்கும் ஒரு தலைவர். அமெரிக்காவின் அடிமையாக இருக்க காத்து இருக்கும் ஒரு தலைவர். ஆனால் அந்த தலைவர் தான் அதற்கு கிட்டவில்லை.இந்திரா காந்தி சோவியத் ஆதரவாளராக இருந்தார்.

இந்நிலையில் வந்தால் நூறு கோடி மக்கள் இருக்கும் ஒரு மாபெரும் சந்தை...அள்ள அள்ள குறையாத இயற்கை வளங்களைக் கொண்டுள்ள ஒரு பூமி...அதற்கு வேண்டியது ஒரு தலைவரின் மரணம்...ஒரே ஒரு தலைவரின் மரணம்..என்ற நிலையில்...அமெரிக்கா என்ன செய்து இருக்கும். வரலாற்றில் அது என்ன செய்து இருக்கின்றதோ அதையே தான் செய்து இருக்கும். அந்த தலைவரைக் கொலை செய்ய முயற்சி செய்து இருக்கும். இந்திரா காந்தியின் மரணத்திலும் சந்திராசாமியின் பெயர் அடிபடுவதுடன் அவரின் மரணத்திலும் மர்மம் நிலவுதும் அமெரிக்காவின் தலை ஈட்டினை நிச்சயமாய் உறுதி செய்கின்றன.

இந்திரா காந்தியின் மரணத்துடன் சந்திராசாமியின் தோழரான நரசிம்ம ராவ் பிரதமராகி இருந்தால் அன்றே அமெரிக்கா இந்தியாவினுள் நுழைந்து இருக்கும். ஆனால் எதிர்பாராவிதமாய் நீங்கள் உள்ளே புகுந்து இருக்கின்றீர்கள். யாரும் இதனை எதிர் பார்த்து இருக்க முடியாது. அமெரிக்காவும் தான். கூடுதலாக நீங்களும் சோவியத் ஆதரவாளர். அமெரிக்காவின் நிச்சயமாய் தீர்க்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உங்களின் பெயரைச் சேர்க்க அந்த ஒரு காரணம் போதாதா.

போதாகுறைக்கு வளைகுடா போரில் நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராக பேசியதும்...'என்றுமே இந்தியா அமெரிக்காவிற்கு வால் பிடிக்காது...நாங்கள் முன்னேற்றத்திற்காக ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளை நாடுவோம்...' என்று அமெரிக்காவை எதிர்த்ததும் நிச்சயமாய் அமெரிக்காவிற்கு இனித்து இருக்காது.

இந்நிலையில் உங்களை நீக்கவே அமெரிக்கா முயன்று இருக்கும். உங்களை நீக்கி விட்டு அதன் கொள்கைகளுக்கு கதவினை திறந்து விடும் ஒரு அடிமைத் தலைவனைத் தான் அமெரிக்கா இந்தியாவின் பிரதமராக அமைக்கப் பார்க்கும்.

இதன் அடிப்படையில் பார்த்தோம் என்றால்...

அமெரிக்காவினை எதிர்த்த தலைவரான உங்களின் மரணத்திற்கு பின்னர், உங்களின் மரணத்தைக் காரணமாக வைத்தே ஆட்சியில் அமர்ந்த உங்களது கட்சியானது செய்த முதல் வேலை உங்களின் கொலைக்கான வழக்கை முடக்க முயன்றதும்...அமெரிக்காவினை இந்தியாவினுள்...'தாராளமயமாக்கம்...தனியார்மயமாக்கம்...உலகமயமாக்கம்...' என்ற கொள்கையின் வாயிலாக அனுமதித்ததுமே ஆகும்.

இதனை இன்று வரை எந்த ஒரு ஊடகமுமே கேள்விக்கு உட்படுத்தாமல் இருப்பது நிச்சயமாய் ஆச்சரியப்படத் தான் வைக்கின்றது.

கடிதம் தொடரும்...!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

2) தொடர்புடைய புத்தகங்கள்/பதிவுகள் சில
 - ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி
 - http://greatgameindia.wordpress.com/2013/03/07/subramanian-swamy-the-mossad-stooge-the-assassination-of-rajiv-gandhi/
 - http://realkillersofrajiv.blogspot.in/
- http://www.outlookindia.com/article.aspx?205868
- http://www.nytimes.com/1991/01/30/world/india-in-an-uproar-over-refueling-of-us-aircraft.html

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஈழம்: ஒரு பார்வை-12 : பிரேமதாசா - புலிகள் - இந்தியா

1988...!!!

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிக் காக்கும் படைக்கும் இடையே யுத்தம் மிகவும் தீவிரமாக நடந்துக் கொண்டு வருகின்றது. அட என்னடா இது...பிரச்சனை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் தானே...அப்படி இருக்கும் பொழுது அமைதியினை நிலைநாட்டச் சென்ற இந்தியப் படை எதற்காக தமிழர்களுக்கு எதிராக
சண்டையிட வேண்டும் என்றக் கேள்வி இங்கே பலருக்கும் இயல்பாக எழும் (வரலாற்றில் இப்படிப்பட்ட குழப்படிகள் தான் அதிகமாக இருக்கின்றன)...அக்கேள்விக்குரிய விடையினை கணித்துக் கொள்ள உதவுகின்ற சில விடயங்களை நாம் ஏற்கனவே சென்ற பதிவினில் கண்டு இருக்கின்றோம்.

சரி அது இருக்கட்டும்...இப்பொழுது நாம் 1989 ஆம் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டி இருக்கின்றது...அந்த ஆண்டில் தான் ஜெயவர்தனேவை ஓரம் கட்டி விட்டுவிட்டு பிரேமதாசா இலங்கையின் சனாதிபதியாக ஆட்சியில் அமர்கின்றார். ஒரு இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டிருந்த இலங்கை பிரேமதாசாவினைப் பார்கின்றது. பிரேமதாசா இலங்கையைப் பார்க்கின்றார்.

தெற்கே 'எதற்காக இந்திய வீரர்களை இலங்கையினுள் அனுமதித்தாய்...இலங்கையில் இந்தியாவிற்கு என்ன வேலை..திரும்பிப் போகச் சொல் அவர்களை' என்றவாறே சிங்கள போராளி அமைப்புக்கள் போராடிக் கொண்டு இருந்தன. வடக்கேயோ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே பலத்த சண்டை ஓடிக் கொண்டிருக்கின்றது. இலங்கை முழுவதுமே ஒரு குழப்பமான நிலை நிலவிக் கொண்டிருந்தது. ஒரு சனாதிபதியாய் அவரிடம் இருந்து அந்நாடு நிறைய எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தது.

தொடக்கத்தில் இருந்தே இலங்கையில் இந்தியா தலையிடுவதினை அவர் விரும்பி இருக்கவில்லை...அதுவும் குறிப்பாக இந்திய இராணுவத்தினர் இலங்கையில் இருப்பதினை அவர் சிறிதும் விரும்பவில்லை...பின்னே யார் தான் மற்றொரு நாட்டின் இராணுவம் தமது நாட்டினில் இருப்பதனை விரும்புவார்?

சிந்தித்தார் பிரேமதாசா. 'தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி இங்கேயே இருப்பவர்கள்...இங்கேயே தான் இருக்கவும் போகின்றோம்...சில பிரச்சனைகள் இருக்கின்றன, ஆனால் அவைகளை நாங்களே பார்த்துக் கொள்ள முடியும்...இந்நிலையில் எதற்காக தமிழர்களும் சிங்களவர்களுக்கும் இடையில் மற்றொரு நாட்டின் தலையீடு? இந்தியா இலங்கையில் இருப்பது சிங்களர்களுக்கும் சரி தமிழர்களுக்கும் சரி நன்மையான ஒரு விடயம் அல்ல...பின்னர் எதற்காக அவர்கள் இங்கே இருக்க வேண்டும்...அவர்கள் செய்த செயல்களுக்கெல்லாம் நன்றி என்று கூறி வழி அனுப்பி விடலாம் தானே' என்று எண்ணி அவ்வாறே செய்யவும் செய்தார்.

"அன்புள்ள இந்தியாவிற்கு... உங்களின் உதவிக்கு மிக்க நன்றிகள்...இங்கே அனைவரும் நலமாக இருக்கின்றோம்...அமைதி தழைத்தோங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே தங்களின் அமைதிக் காக்கும் படையினை சற்று திரும்பப் பெற்றுக் கொள்கின்றீர்களா...நன்றி...!!!' என்றுக் கூறி போர் நிறுத்தத்தினை அறிவிக்கின்றார்.

பிரேமதாசா அறிவித்த போர் நிறுத்தத்தினை முதலில் சந்தேகத்துடன் பார்த்து அதனை ஏற்காத புலிகளும் சில நாட்களில் போர் நிறுத்தத்தினை அறிவிக்கின்றனர். இலங்கை அதிகாரிகளுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தைகளும் நிகழத் தொடங்குகின்றன.

பிரேமதாசாவின் அந்த அறிவிப்பினைக் கேட்ட இந்திய இராணுவம் அதிர்கின்றது...இந்தியாவும் தான்..."என்ன இராணுவம் திரும்ப வேண்டுமா...என்ன சொல்லுகின்றீர்...உங்களுக்கு புலிகளைப் பற்றித் தெரியவில்லை...அவர்கள் இன்னும் பலம் பொருந்தியவர்களாகத் தான் இருக்கின்றனர்...இந்நிலையில் நாங்கள் இல்லை என்றால் இலங்கைக்கு அது மாபெரும் ஆபத்தாக முடியும்" என்று இந்திய இராணுவம் இலங்கையிடம் கூற சிரித்துக் கொண்டே மறுக்கின்றார் பிரேமதாசா.

"இல்லை இருக்கட்டும்...புலிகளைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்...தெரியவில்லை என்றாலும் இதோ பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன, அதன் மூலம் தெரிந்துக் கொண்டு விட்டால் போயிற்று அவ்வளவு தானே...இதில் உங்களுக்கு என்ன கவலை...உங்களுக்கு இரு மாதங்கள் அவகாசம் தருகின்றேன்...29 யூலை 1989 க்குள் பத்திரமாக உங்களின் தேசத்திற்கு திரும்பி விடுங்கள்...நன்றி" என்றே ஒரு கெடு நாளினையும் விதிக்கின்றார். புலிகளும் இலங்கை அரசும் போர் நிறுத்தம் அறிவித்து பேச்சு வார்த்தைகளை மேற்கொள்கின்றன. நிற்க...!!!

இங்கே நாம் காண வேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது... அதே 1989 ஆம் ஆண்டிலேயே தான் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியாவின் மேற்பார்வையில் நடந்திருந்த தேர்தலில் வெற்றிப் பெற்று வரதராஜ பெருமாள் என்பவர் முதலமைச்சராக பதவி ஏற்று இருந்தார். அத்தேர்தலை பல அமைப்புகள் புறக்கணித்து இருந்தன...விடுதலைப் புலிகளும் தான். தேர்தலைப் புறக்கணித்த விடுதலைப் புலிகள் புதிய முதலமைச்சரையும் புறக்கணிக்கத் தான் செய்தனர்...காரணம் அவர்களின் பார்வையில் வரதராஜ பெருமாள் இந்தியாவின் ஒரு கை பொம்மை... அவ்வளவே. கிட்டத்தட்ட அதே கண்ணோட்டத்தினை பிரேமதாசாவும் கொண்டிருந்தார். அவர்கள் அப்பார்வையினைக் கொண்டமைக்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.

வரதராஜ பெருமாளினை மற்றொரு ஆயுதப் போராளி இயக்கமான ஈ.பி.ஆர்.எல்.எப் (E.P.R.L.F) அமைப்பு ஆதரித்துக் கொண்டிருந்தது...ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கு இந்திய அமைதிக் காக்கும் படை தனது ஆதரவினை வழங்கிக் கொண்டிருந்தது. கூடுதலாக அந்த அமைப்பு தமிழ் இளைஞர்களையும் சிறுவர்களையும் வலுக்கட்டாயமாக சேர்த்து ஒரு படையினை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டு இருந்தனர்...தமிழ் தேசிய இராணுவம் (Tamil National Army T.N.A) என்று அவர்களுக்கென்று ஒரு படையினையும் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

இவை அனைத்தும் தான் விடுதலைப் புலிகளையும் சரி பிரேமதாசாவினையும் சரி இந்தியா அதன் நலன்களுக்காக வடக்கிழக்கில் ஒரு பொம்மை ஆட்சியினை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது...அது நமக்கு நல்லதல்ல என்ற முடிவிற்கு வர வைத்தது. இந்த அடிப்படையிலும் தான் விடுதலைப் புலிகளும் பிரேமதாசாவும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருகின்றனர்...பிரேமதாசா இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேற ஒரு கெடுவும் விதிக்கின்றார்.

சரி..தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் பிரச்சனை, அதை நாம் தீர்த்து வைப்போம் என்றே களம் இறங்கிய இந்தியா நியாயப்படிஇப்பொழுது இலங்கை விதித்துள்ள கெடுவினை மதித்து இலங்கையில் இருந்து கிளம்பி இருக்க வேண்டுமா கூடாதா... கிளம்பி இருக்க வேண்டும் தானே...ஆனால் அது தான் நடக்கவில்லை.

"உங்களுக்கு விவரம் போதவில்லை பிரேமதாசா அவர்களே...புலிகள் ஆபத்தானவர்கள்...எனவே நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி உங்களைக் காக்க வேண்டியது எங்களது கடமை..." என்றுக் கூறியே இலங்கையில் தொடர்ந்து இருக்க ஆரம்பிக்கின்றது இந்தியா. அவர்களின் கூற்றினை மெய்ப்பிப்பதினைப் போலவே சில கொலைகள் மற்றும் சம்பவங்கள் இலங்கையில் நடக்கின்றன.

தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன், புளோட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் ஆகியோர் கொல்லப்படுகின்றனர். பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவினால் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்திகளும் வெளி வருகின்றன. அந்த அனைத்துக் கொலைகளுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கமே காரணமாக கூறப்படுகின்றது. விடுதலைப்புலிகள் மறுக்கின்றனர்...'நாங்கள் இந்தக் கொலைகளை செய்யவில்லை. இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்றே அவர்கள் கூறுகின்றனர்.

அதையே தான் சிங்கள அரசாங்கமும் கூறியது....“அமிர்தலிங்கம் கொலையை நடத்தியதே விடுதலைப் புலிகள்தான் என்று தவறாக, புலிகள் மீது பழிபோடும் முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய முயற்சிகள் பற்றி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்” - இதுதான் இலங்கை அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான டெய்லி நியூஸ் வெளியிட்ட செய்தி. அவர்கள் அவ்வாறு வெளியிட்டதற்கு காரணமும் இருக்கின்றது.

அந்த கொலைகள் நிகழ்ந்த காலம், இலங்கையும் விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்தக் காலம்...மேலும் முக்கியமாக இந்திய அமைதிப் படை இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல விதிக்கப்பட்டு இருந்த கெடுக் காலம். யூலை 29 1989 குள் இந்தியா இலங்கையினை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று பிரேமதாசா கூறி இருந்தார்...அதே நேரத்தில் ஆச்சர்யவசமாக அந்த அனைத்துக் கொலைகளும் யூலை மாதம் 1989 ஆம் ஆண்டிலேயே நிகழப் பெற்று இருந்தன.

இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்பதே முக்கியமான இலக்காக விடுதலைப் புலிகளுக்கும் சரி இலங்கைக்கும் சரி இருந்து வந்த காலத்தில் அதனை கெடுக்கும் வண்ணம் இந்தக் கொலைகளை அப்பொழுது விடுதலைப்புலிகள் செய்வார்களா...மேலும் அதனைச் செய்வதனால் அவர்களுக்கு எந்தொரு நலனும் இல்லையே என்பதனை பிரேமதாசா அறிந்து இருந்தார். அதனால் தான் புலிகள் மீது பிறர் வீண் பழியினைப் சுமத்துகின்றனர் என்று இலங்கை அறிவித்தது.

பிரேமதாசா அறிவித்த கெடுக் காலம் முடிவடைந்த போதும், இந்தியப் படைகள் திரும்பிச் செல்லவில்லை...வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு வன்முறைகளை ஏவிக் கொண்டிருந்தது. கூடுதலாக புதிதாக ஒரு படை வேறு அங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

பிரேமதாசா பார்த்தார்...நிலைமை சரியில்லை. விடுதலைப்புலிகளை அழைத்தார்..."வடக்கே நிலைமை சரியில்லை...நமக்கு எதிராக அங்கே ஏதோ நடந்துக் கொண்டு இருக்கின்றது...அதை நாம் கட்டுக்குள் வைத்தே ஆக வேண்டும்...அதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்" என்றார்.

"ஆயுதங்கள்..." என்றனர் புலிகள்.

"சரி...!!!" என்றுக் கூறி புலிகளுக்கு ஆயுதங்களை அளித்தார் பிரேமதாசா. வடக்கே மீண்டும் மோதல் தீவிரமடைந்தது. இந்தியப் படைகளுடன் சேர்த்து மற்ற போராளி அமைப்புக்களையும் எதிர்க்க ஆரம்பித்ததனர் புலிகள். சிங்களர்களை நாங்கள் பின்னர் கண்டுக் கொள்கின்றோம்...ஆனால் அதற்கு முன்னர் துரோகிகளை களைய வேண்டி இருக்கின்றது என்றே மற்ற போராளிக் குழுவினரை தாக்க ஆரம்பிக்கின்றனர்.

யுத்தம் சூடு பிடிக்கத் தொடங்குகின்றது. அதே நேரத்தில் தான் இந்தியாவிலும் தேர்தல் களம் சூடாகின்றது. இராசீவ் காந்திக்கு பின்னர் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்கின்றார் திரு.வி.பி.சிங்.(என்னைப் பொருத்தவரை இந்தியா இது வரை கண்ட பிரதம மந்திரிகளிலேயே மிகவும் சிறந்த பிரதம மந்திரி இவர் தான் - ஆனால் நல்லவர்கள் ஆண்டார்கள் என்றாலே நம் நாட்டிற்கு ஆகாதே...எண்ணி ஒரே வருடம் இவரின் பிரதமர் பதவிக்கு ஒரு முடிவு விழாவினை கொண்டாடி விட்டார்கள் நம் நாட்டிலே...சரி அது வேறு கதை இப்பொழுது இலங்கைக்கு வருவோம்.)

இந்தியாவின் ஏழாவது பிரதம மந்திரியாக பதவி ஏற்கின்றார் திரு வி.பி.சிங் அவர்கள். இலங்கையைக் காணுகின்றார்...அமைதியினை நிலை நிறுத்தச் சென்று இருந்த படை அங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்தது...மேலும் படையினை திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொல்லி இலங்கை அரசாங்கமும் கூறி இருந்தது...இந்தியாவிலும் அக்குரல்கள் கேட்கத் தொடங்கி இருந்தன. சிறிதும் யோசிக்கவில்லை சிங்...அவரின் முடிவில் அவர் தெளிவாக இருந்தார்.

"இந்தியப் படைகளை நாம் திரும்பிப் பெற்றுக் கொள்ளத் தான் வேண்டும்..." என்றார். சிலர் மறுத்தனர்..."அவ்வாறு நாம் செய்தோம் என்றால் அது நமக்கு பெரிய அவமானமாக போய் விடும்" என்றனர். முற்றிலுமாக அதனை மறுத்தார் சிங்.

"அடுத்த நாட்டிலே புகுந்து இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருப்பது தான் அவமானம்...எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன...வேறு பேச்சே இல்லை...இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து திரும்ப வேண்டும்...இது எனது உத்தரவு" என்றார்.

இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து கிளம்ப ஆரம்பித்தன. முதன் முதலில் அப்படைகள் இலங்கையில் கால் வைத்தப் பொழுது ஆரவாரத்தோடு அவர்களை தமிழ் மக்கள் வரவேற்று இருந்தனர். ஆனால் வழி அனுப்புவதற்கு ஒருவர் கூட இல்லாத நிலையில் இந்திய வீரர்கள் இந்தியா திரும்பினர்.

ஆதரிக்க இந்தியப்படைகள் இல்லாத நிலையில் மற்ற போராளி அமைப்புக்களால் விடுதலைப் புலிகளை சமாளிக்க முடியவில்லை. வரதராஜ பெருமாள் சிறிது தாக்குப் பிடிக்கப் பார்த்தார்...ஆனால் அவர்கள் உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் புலிகளின் முன்னால் நிற்க முடியாது வீழ, வரதராஜ பெருமாள் இந்தியாவினுள் அடைக்கலம் புகுந்தார்.

ஒரு வழியாக இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து வெளியேறி விட்டு இருந்தன...ஆனால் அரசியல் வெளி ஏறவில்லை...!!!

தொடரும்...!!!

பின் குறிப்பு:

1) தொடர்புடைய இடுகைகள்...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15623:-5&catid=1342:2011&Itemid=589
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15961:1988-90-8&catid=1355:2011&Itemid=602
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15505:-4&catid=1342:2011&Itemid=589
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=72476
http://expressindia.indianexpress.com/news/ie/daily/19980418/10850534.html
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=72857

ஞாயிறு, 31 மார்ச், 2013

ஈழம்: ஒரு பார்வை-11 : இந்திய அமைதிக் காக்கும் படை

சென்ற பதிவில் இந்தியா இலங்கையினுள் நுழைந்ததற்கு அதனுடைய அரசியல் நோக்கே காரணமாக இருக்கலாம் என்றுக் கண்டோம். அதற்காகத் தான் அதனுடைய படைப்பிரிவு ஒன்றினை இலங்கைக்கு அமைதியினைக் காக்கும் வண்ணம் அனுப்பியும் வைத்தது என்றும் கண்டோம்.

ஆனால் இது நம்புவதற்கு எளிதான ஒன்று அல்ல. ஒரு வேளை இந்தியா தமிழர்களின் நலன்களுக்காகவே தனது இராணுவத்தினை அனுப்பி இருக்கலாம். எனவே சான்றுகள் இன்றி இந்தியாவினைக் குறைக் கூறுவது சரியானதொரு செயலாக அமையாது. எனவே இந்நிலையில் என்ன நடந்தது என்பதனை சான்றுகளுடன் கண்டால் மட்டுமே நம்மால் எதையும் உறுதியாகக் கூறவோ அல்லது கருதவோ முடியும்.

சரி...இந்திய அரசு இட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்கள் தங்களது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்து விட்டன. அதன் முடிவின் படியே அந்த இயக்கங்களும் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்கவும் செய்கின்றன.

"சிறிது சிறிதாக ஆரம்பித்த ஆயுதங்களை ஒப்படைக்கும் பணி விரைவில் துரிதமாக நடைப்பெற ஆரம்பித்தது. மற்ற ஆயுத போராளி இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் தனித் தனியாக ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டு இருந்தப் பொழுது, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மிகுந்த கட்டுப்பாடுடன் ஒற்றுமையாக ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டு இருந்தனர். எங்களுக்கு இந்த இடத்தில் இந்த நேரத்தில் ஆயுதங்களைத் தாங்கிய வண்டி வந்துச் சேரும் என்றத் தகவல் வரும்...அதே நேரத்தில் ஆயுதங்களுடன் வண்டியும் வந்துச் சேரும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலி காவலர்களுடன். அவ்வாறு வந்த ஆயுதங்களைப் பார்க்கும் பொழுது சில புதிய ரக ஏவுகணை செலுத்திகளைப் பார்த்தேன். விடுதலைப் புலிகளே அவற்றைத் தயாரித்து இருந்தனர். அதன் செயலாற்றலைக் கண்ட பொழுது இந்தியா விரும்பினால் அவர்கள் இந்தியாவிற்கும் சேர்த்தே அதனை தயாரித்துக் கொடுத்து இருப்பர் என்று ஆயுதங்களை வழங்க வந்த போராளி என்னிடம் தெரிவித்தார்" என்று இந்திய அமைதிக் காக்கும் படையின் தலைமை அதிகாரியான தீபிந்தர் சிங் அவரது 'இலங்கையில் இந்திய அமைதிக் காக்கும் படை' என்ற நூலினில் கூறுகின்றார்.

இதன் மூலம் ஆயுதங்களை ஒப்படைக்கும் பணிகள் நல்ல விதமாக நடைப்பெற்றுக் கொண்டு இருந்தன என்றும், இருந்த ஆயுதம் தாங்கிய அமைப்புகளில் விடுதலைப் புலிகள் பலம் பொருந்தியதாகவும் கட்டுப்பாடுடன் கூடிய ஒரு இயக்கமாக இருந்தது என்பதும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் நோக்கம் உண்மையிலேயே அமைதியினை நிலை நாட்டுவதாக இருந்திருந்தால் அது கொடுத்த வாக்கு உறுதிகள் அனைத்தினையும் நிச்சயம் நிறைவேற்றி இருக்கும். ஆனால் நடந்ததோ வேறுவிதமாக இருக்கின்றது.

“விடுதலைப் புலிகள் வாகனங்கள் அணிவகுத்து வந்து தங்களின் வெடிமருந்துகள், துப்பாக்கிகளை ஒப்படைத்தன. பிறகு, அவர்களே தொல்லைக்கு உள்ளானார்கள். காரணம், உளவு நிறுவனமான ‘ரா’, ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ என்ற குழுவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. இதைச் செய்தது இந்திய உளவு நிறுவனமான ‘ரா’. இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் இது தெரியும். தீட்சத்துக்கும் (இலங்கைக்கான இந்திய தூதர்) இது தெரியும். ஆனால் அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆகஸ்ட் 21 ஆம் தேதியோடு ஆயுத ஒப்படைப்பு (புலிகளால்) நிறுத்தப்பட்டது. எல்லாம் மோசமான நிலைக்கு திரும்பியது. ‘அமைதிப்படைக்கு’ எதிராக அவர்கள் (புலிகள்) ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர்” என்று தனது புத்தகமான 'இலங்கையில் இந்தியத் தலையீடு' இல் எழுதுகிறார் ஹர்சிரத் சிங் - இவர் இந்திய அமைதிப் படைக்கு தலைமை தாங்கச் சென்ற தளபதி.

மேலும் "தீட்சத்தின் எண்ணத்தின் படி இந்திய அமைதிக் காக்கும் படையின் முக்கிய பணியே தமிழக மக்களின் பார்வையில் விடுதலைப் புலிகளை மட்டமானவர்களாக ஆக்க வேண்டும் என்பதே" என்றும் அவர் கூறி இருக்கின்றார்.

மேலும் இந்திய உளவுத்துறை மற்ற ஆயுதப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றது என்று பிரபாகரன் தன்னிடம் கூறியிருப்பதாக ஹர்சிரத் சிங்கும் சரி...தீபிந்தர் சிங்கும் சரி அவர்களது நூல்களில் கூறி இருக்கின்றனர்.


மேலும் இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் என்ன என்றால் போர் நிறுத்தக் காலத்தில் இந்தியப் படையினருடன் சமாதானமாக பேச வந்த பிரபாகரனை சுட்டுக் கொன்று விடுமாறு இராசீவ் காந்தி ஆணையிட்டதாக ஹர்சரத் சிங் கூறுகின்றார்.

“1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்” என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள்ளோம் என்று கூறினோம். அதற்கு தீட்சத், “எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்” - என்று ஹர்சிரத்சிங் தனது “Intenvention in Srilanka” நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.

ஏன் அவர்கள் அவ்வாறுக் கூற வேண்டும்? தமிழர்களின் நலனுக்காக போன இந்தியப்படைகள் எதற்காக விடுதலைப்புலிகளை குறிப்பாக எதிர்க்க வேண்டும்? ஏன் பிரபாகரனை குறி வைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகளின் பதிலில் தான் இந்திய உளவுத்துறை ஒளிந்திருக்கின்றது என்று பலர் கருதுகின்றனர்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்...ஈழத்தில் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் ஆயுதமேந்தி போராடிக் கொண்டு இருந்தன என்று. அவற்றுள் விடுதலைப் புலிகள் இயக்கம் சிறந்த ஒன்றாக மக்களின் மத்தியில் செல்வாக்குடன் இருந்து வந்தது. இந்நிலையில் தான் இந்தியா அவ்வமைப்புகளைப் பார்க்கின்றது. இந்தியாவிற்குத் தேவை இந்தியாவிற்கு கட்டுப்பட்ட ஒரு இயக்கம்...அவ்வாறு இருந்தால் தான் இந்தியாவின் கை அங்கே ஓங்கி இருக்கும்( அனைத்து வல்லரசு நாடுகளும் இதைத் தானே செய்கின்றன... தான் செல்லும் இடங்களில் அவைகளுக்கு வேண்டியது அவைகளின் சொல்லிற்கு தலை ஆட்டும் ஒரு பொம்மை அரசு அவ்வளவே). அதற்காகத் தான் இந்தியா அதன் காய்களை நகர்த்துகின்றது. ஆனால் அங்கே தான் ஒரு சிக்கல் இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் - பிரபாகரன். அவர்கள் முன்னின்றது மக்களின் உரிமைக்காக. இந்நிலையில் அவர்களை ஒன்றும் செய்யாமல் இந்தியாவினால் அதன் செல்வாக்கினை அப்பகுதிகளில் வளர்த்துக் கொள்ள முடியாது. அதனால் தான் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை குறைத்த அதே சமயம் மற்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை தாரளமாக வழங்கியது இந்தியா...அதனால் தான் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் செல்வாக்கினைக் குறைக்கவும் அதன் தலைவரான பிரபாகரனை கொல்வதற்கும் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு அமைப்புகளுக்கு உள்ளே பிரச்சனைகளை கிளப்பி விட்டும், ஆட்களை தன் வசப்படுத்திக் கொண்டு பிரிவினைகளைத் தோற்றுவித்தும் இந்தியா அதன் செல்வாக்கினை அங்கே வளர்த்துக் கொள்ள முயன்றது.

ஆனால் விதி வேறு விதமாக செயல்பட்டது.

திலீபனின் மரணம் (இந்தியா தனது கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தார்) மற்றும் போர் நிறுத்தம் அமுலில் இருந்தும் ஒப்பந்தத்திற்கு மாறாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 17 பேர் இந்திய இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு (அவர்கள் அனைவரும் பின்னர் சயனைட் அருந்தி உயிர் இழந்தனர்) போன்ற நிகழ்வுகள் விடுதலைப் புலிகளை மீண்டும் ஆயுதம் ஏந்தச் செய்தன.

இம்முறை எதிரிகளாக சிங்களர்களுடன் சேர்ந்துக் கொண்டது இந்திய இராணுவமும் தான். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் சண்டை ஆரம்பமாயிற்று. இன்று சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு என்ன கொடுமைகளை எல்லாம் செய்து இருக்கின்றதோ அவை அனைத்தும் அன்றே இந்திய இராணுவம் செய்து இருந்தக் கொடுமைகளே.

1987 இல் ஆரம்பித்த அந்தச் சண்டை 1990 இல் ஒரு முடிவிற்கு வந்தது. அதற்கு காரணம் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி... அப்பொழுது ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன.

தொடரும்...!!!

பின் குறிப்பு:

1) தொடர்புடைய இடுகைகள்...
http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vidhuthalairajendran.php
http://www.keetru.com/history/tamilnadu/rajiv_gandhi.php
http://www.atimes.com/ind-pak/DD13Df02.html

2) இந்திய இராணுவத்தின் போர் குற்றங்கள்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16991:-2&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17147:-3&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16348&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17181&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17147:-3&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17590&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17739&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17939&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16462:-11&catid=1367:2011&Itemid=615

3) இந்திய உளவுத் துறையின் செயல்பாடு
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15961:1988-90-8&catid=1355:2011&Itemid=602
http://www.frontlineonnet.com/fl2418/stories/20070921505807900.htm

ஈழம்: ஒரு பார்வை-10 : இந்தியாவும் இலங்கையும்

"12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும்" - இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம்.

சரினே...இங்கிருந்து அங்க போனவங்க தான நீங்க...அப்புறம் எதுக்கு போன இடத்துல ஒழுங்கா அமைதியா வாழாம நீங்க தனி நாடு கேட்குறீங்க...அதுவும் அந்த நாட்டுல உங்க மொழியே ஆட்சி மொழியாவும் வேணுமாம்...ஏன் தேவை இல்லாம இப்படி அழிச்சாட்டியம் பண்றீங்க...பேசாம இந்தியாவுக்கே வந்துருங்க...நீங்க இருந்த வட நாட்டிலேயே நீங்க உங்க உரிமையோட வாழ நிச்சயம் மத்திய அரசு வழி செய்யும்...அத விட்டுபுட்டு அங்கே இருக்கிற பூர்வக் குடியான தமிழன அடிக்கிறது எந்த விதத்துல நியாயம்...!!!

இது முகநூலில் நான் ரசித்த ஒரு கருத்து. சரி இருக்கட்டும் இப்பொழுது நமது கதைக்கு வருவோம்.

இந்தியாவில் இந்திரா கொலை செய்யப்பட்டு இருக்கின்றார். அவருக்கு பின்னர் ராசீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டு இருக்கின்றார். காலம் 1984 ஆம் ஆண்டு. ஈழத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே இருந்தப் போராட்டம் மிகவும் தீவிரமானதொன்றாக மாறத் தொடங்கி இருந்தக் காலக்கட்டம்.

இலங்கையின் பிரதம மந்திரியாக ஜெயவர்தனே இருக்கின்றார். தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்களுள் விடுதலைப் புலிகள் முக்கியமானதொரு அமைப்பாக உருவாகி இருக்கின்றனர்.

யாழ்ப்பாண நூலக எரிப்பு (கிட்டத்தட்ட 90000 விலைப் மதிக்கப் பட முடியாத தமிழ் நூல்கள், ஏடுகள், சுவடிகள் போன்றவைகள் ஒரே இரவில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன), 1983 தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் (கருப்பு யூலை... கிட்டத்தட்ட 3000 தமிழர்கள் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்டனர்) போன்றவைகள் சிங்களர்களால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருந்தன. பல்லுக்கு பல் இரத்தத்திற்கு இரத்தம் என்று அங்கங்கு தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் மோதல்கள் நிகழ்ந்த வண்ணமே இருந்துக் கொண்டு இருந்தன.

இக்காலத்தில் தான் இராசீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக வருகின்றார். இள வயது...இந்தியாவினை ஆசியாவில் வல்லரசான நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவு...வல்லரசென்றால் நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகள் அனைத்தும் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்...நாம் அவை அனைத்திற்கும் 'பெரிய அண்ணனாக' இருக்க வேண்டும்...சரி தானே..அந்த கண்ணோட்டத்துடன் தான் இலங்கையை அவர் பார்கின்றார்.

ஒரு சிறியத் தீவான இலங்கையில் பிரச்சனைகள் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் வல்லரசுக் கனவினைக் கொண்ட ஒரு பெரிய நாடு என்ன செய்ய வேண்டும்...சிறிய நாட்டின் பிரச்சனையினுள் தலையிட்டு அதனைத் தீர்த்து வைக்க வேண்டும்...அப்படிச் செய்தால் தானே அது வல்லரசான ஒரு நாடு என்றுப் பொருள் படும். அதையேத் தான் இராசீவும் செய்ய எண்ணுகின்றார்.

"என்னயா நடக்கின்றது அங்கே இலங்கையில்... தமிழர்கள் தனி நாடு கேட்கின்றார்களே...நாம் என்ன செய்வது" என்றவாறே அவர் சிந்திக்க அவரைச் சுற்றி இருந்தவர்கள் "சிங்களர்களை நம்ப முடியாது...ஆனால் அதே நேரம் தமிழர்களுக்கும் தனி நாடு கொடுக்கக் கூடாது...பின்னர் இந்தியாவிலும் அக்குரல்கள் எழும்பக் கூடும்....இரண்டுமே இந்திய நலன்களுக்கு மாறானவை...நாம் செய்ய வேண்டியது நிலைமையை பயன்படுத்திக் கொண்டு நமக்கு சாதகமான அரசினை, சூழலை இலங்கையில் இந்நேரத்தில் உருவாக்கிக் கொள்வதனை மட்டுமே..." என்றுக் கூற வல்லரசுக் கனவிலிருந்த இராசீவும் அவர்களின் கூற்றினை ஏற்றுக் கொண்டார். இலங்கையைக் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு மாற ஆரம்பித்தது....மறைமுகமாக. மறைமுகமாக என்றால் அங்கே இந்திய உளவுத் துறை இல்லாமலா?

இலங்கை அரசியலுள் தனது மூக்கினை நுழைக்க ஆரம்பித்தது இந்திய உளவு அமைப்பான 'ரா (RAW)'. இன்றைக்கு இலங்கையில் உள்ள பிரச்சனைகள் பலவற்றுக்கும் இதுவே அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்பதனை வரலாறு நமக்கு காண்பிக்கின்றது.

சரி இருக்கட்டும்...இலங்கையின் மேல் இந்தியாவின் ஆதிக்கத்தை நிறுவுவதே இலக்கு என்று முடிவு செய்யப்பட்டதின் பின்னர் எவ்வாறு அதனை நடைமுறைப்படுத்துவது என்று பார்க்க வேண்டாமா...அதில் தான் இந்தியா முழு மூச்சாக ஈடுப்பட ஆரம்பித்தது.

'இரண்டுத் தரப்பினருக்குள்ளும் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ளச் செய்யலாம்...ஆனால் அமைதி என்பது வெளிப்புற அமைதியாகவே இருக்க வேண்டும்...அதே நேரம் இலங்கையில் உள்ள பல்வேறு ஆயுதப் போராளிக் குழுக்களில் நம்முடைய எண்ணத்திற்கு யார் சரிப்பட்டு வருவார்களோ அவர்களுக்கு மறைமுகமாக ஆயுத உதவி செய்து அவர்களை வலுப்படுத்திக்கொள்ளலாம்...பின்னர் என்றாவது தேவை என்றால் அவர்களை நாம் நம்முடைய வசதிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்...இதன் மூலம் இலங்கையில் நம்முடைய பிடியை வலுவாகவே வைத்துக் கொள்ளலாம். மேலும் நம்முடைய இராணுவத்தின் ஒரு பகுதி இங்கே இருந்தால் நமக்கும் நலமாக இருக்கும். ஆம்...அவ்வாறே செய்யலாம்' என்று முடிவினை எடுத்துக் கொண்டு இலங்கையினை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது இந்தியா.

1987 ஆம் ஆண்டு இராசீவிற்கும் ஜெயவர்தனேவிற்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. (அந்த ஒப்பந்தத்தினைப் பற்றிப் பார்க்க இந்த இணைப்பினை சொடுக்கவும்)

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக தமிழர்களுக்கு எதிரான சிங்கள இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும். தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்கள் தங்களது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். தமிழர்களுக்கென்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அங்கே தேர்தலின் வாயிலாக ஒரு அரசு அமைக்கப்படும். மேலும் அனைத்தும் நன்றாக நடக்கின்றனவா என்பதனை சரி பார்க்க இந்தியாவில் இருந்து ஒரு அமைதிப்படை அங்கே அனுப்பி வைக்கப்படும்.

தமிழர்களின் உரிமைக்காகவென்று போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் தமிழர்கள் சார்பாக யாருமே சேர்க்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

பிரபாகரன் இந்தியாவினை சந்தேகக் கண்ணோடு பார்த்தார். ஒப்பந்தத்தினை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை நேரும் என்ற நம்பிக்கை அவருக்கு வரவில்லை. இருந்தும் இராசீவ் காந்தி பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நம்பி, என்ன தான் நடக்கின்றது என்றுக் காண தயாரானார். அதனைப் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் யாழ்பாணத்தில் நிகழ்ந்த பொதுக் கூட்டத்தில் பிரபாகரன் பேசியதாவது...

"எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும், அதற்கான உத்திரவாதங்கள் பற்றியும் அவரிடம் (ராஜீவ் காந்தியிடம்) பேசினேன். பாரதப் பிரதமர், எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கைகளில் இறங்க இந்தியா அனுமதிக்கக் கூடாது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் சமாதானப் படையிடம் (இந்திய ராணுவம்) ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து (நேரத்திலிருந்து) எமது மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்” - என்று அறிவித்தார்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் ஆயினர்.

ஆனால் உண்மையில் இந்தியாவின் அந்த ஒப்பந்தத்தை பலர் அன்று சந்தேகக் கண்ணோடு தான் கண்டுக் கொண்டு இருந்தனர். பலருக்கு அது பிடிக்கவில்லை... தமிழர்களுக்கும் சரி...சிங்களர்களுக்கும் சரி. அதன் விளைவு தான் ராசீவ் இலங்கையில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடித்த நாளான 30 யூலை 1987 ஆம் ஆண்டு தெரிந்தது.

இராசீவை வரவேற்ற இலங்கை இராணுவ வீரர்களில் ஒருவன் தனது துப்பாக்கியினால் இராசீவை தாக்க முயன்றான். மயிரிழையில் உயிர் தப்பினார் இராசீவ். நல்லவேளை அணிவகுப்பில் கலந்துக் கொண்ட வீரர்களின் துப்பாக்கியில் குண்டுகள் போட்டிருக்கப்படவில்லை. மாறி போடப்பட்டு இருந்தாலோ அன்றே இராசீவ் கொல்லப்பட்டு இருக்கக் கூடும்.

ஆனால் ஏனோ தெரியவில்லை அந்த நிகழ்வினைப் பற்றி இன்று எந்தக் காங்கிரசுக்காரர்களும் பேசுவதில்லை....சிங்களர்களை அவர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

சரி இருக்கட்டும்...இந்தியாவில் இருந்து அமைதியினை காக்க படை வீரர்கள் இலங்கையில் இறங்கத் துவங்கி விட்டனர்...தமிழ் ஆயுதப் போராளிகள் தங்களின் ஆயுதங்களை ஒப்படைக்க துவங்கி விட்டனர்... அடுத்து என்ன நடந்தது/நடந்து இருக்கலாம்...காணலாம்...!!!

தொடரும்....!!!

பி.கு:

1) இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) தொடர்புடைய இடுகைகள்...
http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vidhuthalairajendran.php
http://www.keetru.com/history/tamilnadu/rajiv_gandhi.php
http://en.wikipedia.org/wiki/Vijitha_Rohana

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...