நாடார்களின் வரலாறு சற்று விசித்திரமானது...!!!

கிட்டத்தட்ட 120 வருடங்களுக்கு முன்பாக கோவில்களுக்குள் நுழைய அனுமதியற்றவர்களாய், பார்க்கத்தகாதவர்களாய் கருதப்பட்டிருந்த அம்மக்கள், இன்று சமூகத்தில் ஒரு நல்ல இடத்தில் வீற்று இருக்கின்றனர். இன்றைக்கு எந்த கோவில்களுக்குள்ளும் நுழைவதற்கு அவர்களுக்குத் தடையேதும் இல்லை. மேலும் சொல்ல போனால், RSS, VHP, பிஜேபி என்று இருக்கக்கூடிய இந்துத்துவ அமைப்புகளுக்கு தமிழகத்தில் மிக்க ஆதரவளித்து கொண்டிருக்கக்கூடிய ஒரு சமூகமாக அவர்கள் இருக்கின்றனர்.

அதாவது எந்த கொள்கை அவர்களைப் 'பார்க்கத்தகாதவர்கள்' என்று முத்திரையிட்டு அவர்களை கோவில்களுக்குள் அனுமதிக்க மறுத்ததோ, அதே கொள்கையை கொண்டிருக்கக்கூடிய அமைப்புகளை அவர்கள் இன்று ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், எந்த கொள்கை அவர்களை ஒடுக்கியதோ, அதே கொள்கை இன்று அவர்களை கோவில்களுக்குள் அனுமதித்துக் கொண்டிருக்கின்றது.

விசித்திரமான நிகழ்வுதான் இல்லையா....!!!

அந்த நிகழ்வின் வரலாற்றைத்தான் ஒரு அருமையான நூலாக நூலாசிரியர் தொகுத்து இருக்கின்றார். இன்றைக்கு இருக்கின்ற நாடார் சமூதாய மக்கள் தாங்கள் ஒடுக்கப்பட்ட வரலாற்றினையே அறியாதவர்களாக இருக்கின்றார்கள். உண்மைதான், இன்றைக்கு ஆங்கிலேயர்கள் நம்மை அடக்கி ஆண்டார்கள் என்கின்ற வரலாற்றினை பாடப் புத்தகங்களில் இருந்து நாம் நீக்கி விட்டாமே என்றால், ஆங்கிலேயர்கள் நம்மை அடக்கி ஆண்ட வரலாறு இன்றைய இளைய தலைமுறையினருக்கு புலனாக வாய்ப்புகள் பெரிதாக இருக்காது. தாங்கள் ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்தோம் என்கின்ற உண்மை அவர்களுக்குத் தெரியாமலேயே போய் விடும். எனவேதான் வரலாற்று பாடங்களில் நம்முடைய சுதந்திரப் போராட்டங்களைப் பற்றிய வரலாற்றினை நாம் இன்றளவும் மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றோம்.

அதனைப் போன்றே, நாடார்கள் ஒடுக்கப்பட்டிருந்த வரலாற்றினை இளம் தலைமுறையினரிடம் கொண்டு போய் சேர்க்கக் கூடிய ஒரு அருமையான நூலாகவே இந்த நூல் இருக்கின்றது. அதுவும் இன்றைய சூழலில் ஹிந்துத்துவக் கொள்கைக்கு நாடார் சமூகம் தன்னை மீண்டும் கொண்டு போய் அடகு வைத்துக் கொண்டிருக்கக்கூடிய காலத்தில் இத்தகைய வரலாற்று நூல்களுக்கு நாம் முக்கியத்துவம் தந்தாகத்தான் வேண்டியிருக்கிறது.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு