இயேசு கிருத்து நிலைநாட்டிய இராஜ்யம்

இயேசு கிருத்து "என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல" என்றார். (யோ. 18:36)

இதைப் புரிந்து கொள்ள இயலாத, தோமா நீங்கலான மற்ற சீடர்கள், இயேசு கிருத்து இரண்டாம் வருகையில் இந்த உலக இராச்சியமாகிய யூத இராச்சியத்தை ஏற்படுத்த வருவார் என்று போதித்தமை அவர்கள் இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறிய முடியாமல் ஏற்பட்டதன் விளைவைக் காட்டுகிறது என்பதைப் பார்த்தோம்.

திருச்சபை தவறாகப் போதிப்பது ஏன்?

இயேசு கிருத்து நிலைநாட்ட விரும்பியது பூலோக இராஜ்யமா? பரலோக இராஜ்யமா? என்னும் கேள்வி எழுந்தால் அவர் நிலைநாட்ட விரும்பியது பரலோக இராஜ்யம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆனால் அவர் பெயரால் செயல்படும் கிருத்துவத் திருச்சபை இன்று வரை, அவர் நிலைநாட்ட விரும்பியது பூலோக இராஜ்யமாகிய யூத இராஜ்யமாகிய இசுரவேல் இராஜ்யம் என்றும், இரண்டாம் வருகையில் இசுரவேலருக்கு இராஜ்யத்தை மீட்டுக் கொடுப்பார் என்றும் போதித்து வருவது ஏன்? என்னும் கேள்வி எழுகின்றது.

பரலோக இராஜ்யத்தை நிலைநாட்ட விரும்பிய இயேசு கிருத்துவின் செய்தி பூலோக இராஜ்யத்தை ஆளும் ரோம ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டு உள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது.

இயேசு கிருத்துவின் செய்தியை வரலாற்று அடிப்படையில் கூறும் நூல் பைபிள். இந்த பைபிளில் இயேசு கிருத்துவின் செய்தியைக் கூறும் வரலாற்றுப் பகுதி புதிய ஏற்பாடு. புதிய ஏற்பாட்டிலுள்ள 27 நூல்களைத் தொகுத்து, அவற்றை ஒழுங்குப்படுத்தித் திருச்சபைக்குக் கொடுத்து, திருச்சபையை கி.பி 312 முதல் இன்று வரை கடந்த 1700 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறவர்கள் ரோம ஆட்சியாளர்கள்.

இன்றும் திருச்சபையின் உலகத் தலைவராக விளங்கும் போப்பாண்டவர், தன்னுடைய அரசியல் இராஜ்யத்திற்கும் கிருத்துவ மதத்திற்கும் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்றார். அவருடைய அரசியல் தூதர்கள் உலக நாடுகளில் பரவி இருக்கின்றார்கள்.

ஆகவே, கிருத்துவ மதம் ரோமர் ஆட்சிக்கு உட்பட்ட ஓர் அரசியல் மதமாக இன்று விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு