விவிலியத்தில் ஒட்டல் - 7 வசனங்கள்

இயேசு கிருத்து முதல், திருச்சபைத் தலைவர்களை, கி.பி 312 வரை கொலை செய்த ரோம ஆட்சியாளர், புதிய ஏற்பாட்டை உருவாக்கும் பொழுது, திருச்சபையில் இருந்து ரோம ஆட்சியாளருக்கு எதிர்ப்புணர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுவது இயல்பு.

இந்த இயல்பின்படி கடவுளின் ஊழியக்காரர்களாக திருச்சபைத் தலைவர்களை மட்டுமே கிருத்துவப் பொது மக்கள் நினைப்பதை மாற்றி, அரசாங்கத்தின் பணியாட்களும், கடவுளின் ஊழியக்காரர்களே என மூளைச் சலவை செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்.

இந்த முறையில் திருச்சபை மக்களை மூளைச்சலவை செய்யும் பகுதி புதிய ஏற்பாட்டில் ஒட்டப்பட்டு உள்ளது. அவ்வாறு ஒட்டப்பட்ட ரோமர் 13 ஆம் அதிகாரத்தின் 1 முதல் 7 வசனங்களில் நாம் பார்க்கலாம்.

"ஆட்சியாளர்களின் பணியாட்கள் அனைவரும் கடவுளின் ஊழியக்காரர்களே" என்று கூறும் இப்பகுதியின் நோக்கம், இயேசு கிருத்து முதல், திருச்சபைத் தலைவர்கள் வரை கொலை செய்யப்படக் காரணம், அவர்கள் ஆட்சியாளர்களாகிய கடவுளின் ஊழியக்காரர்களுக்கு விருப்பமில்லாத காரியங்களைப் பேசியதும் செயல்பட்டதுமேயாகும் என்று பொது மக்கள் நம்ப வேண்டும் என்பது தானே! இந்த எதிர்பார்ப்பை இன்று வரை ஐரோப்பிய ஆட்சியாளர்களின் தலைமையிலுள்ள திருச்சபைகள் நிறைவேற்றி வருகின்றன என்பதைப் பார்க்கின்றோம்.

அவ்வாறு ஒட்டப்பட்ட 7 வசனங்கள், (ரோமர்-13 1:7)

1. எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

2. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்

3. மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.

4. உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.

5. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.

6. இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.

7. ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

1 கருத்துகள்:

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு