கடவுளின் மகனால் கற்றுக் கொடுக்கப்பட்ட பரலோக இராஜ்ஜியம்:

இயேசு கிருத்துவின் முன்னோடியாக விளங்கிய யோவான் ஸ்நானகன்,

"மனந்திரும்புங்கள், பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கம் பண்ணினார் (மத்.3 : 2).

இயேசு கிருத்து தம்முடைய பன்னிரு சீடர்களையும்

"பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கியுங்கள் (மத்.10:7) என்று சொல்லி அனுப்பினார்.

'பரலோக இராஜ்யம்' என்னும் பெயர், இயேசு கிருத்து பேசிய அவருடைய சொந்த மொழியான அரமேயத்தில் முதலில் எழுதப்பட்ட மத்தேயு நற்செய்தி நூலில் மட்டுமே காணப்படுகிறது.

கிரேக்க மொழியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் புதிய ஏற்பாட்டின் மற்ற நூல்களில் காணப்படவில்லை. மற்ற நூல்களில் "பரலோக இராஜ்யம்" என்பதற்குப் பதிலாக தேவனுடைய இராஜ்யம் என்னும் பெயர் காணப்படுகிறது.

'பரலோக இராஜ்யம் என்பது வேறு:
'தேவனுடைய இராஜ்யம்' என்பது வேறு.

இரண்டும் ஒன்று ஆக மாட்டாது.

"பரலோக இராஜ்யம்" என்பது இயேசு கற்றுக் கொடுத்த இராஜ்யம்.

"என்னுடைய இராஜ்யம் இந்த உலகத்திற்குரியது அன்று" என்று இயேசு கிருத்து பிலாத்துவினிடம் கூறினார். (யோ. 18 :36)

பிலாத்துவின் இராஜ்யம் இந்த உலகத்திற்குரிய இராஜ்யம். யூதர்கள் எதிர்பார்த்த இசுரவேலர் இராஜ்யமும் இவ்வுலகத்திற்குரிய இராஜ்யம்.

ஆனால் இயேசு கிருத்து கற்றுக் கொடுத்த பரலோக இராஜ்யம் அவர் உயிர்த்தெழுந்த பின்னர் இந்த உலகில் வர இருக்கும் இராஜ்யம். அதற்கு ஆயுத்தமாகுமாறு யோவான் ஸ்நானகனும் இயேசு கிருத்துவும் கற்றுக் கொடுத்தார்கள்.

1. யோவான் ஸ்நானகன்
 
மனந்திரும்புங்கள் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான் (மத்.3:2)
 
2. இயேசு கிருத்து பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள் என்றார். (மத். 10:7)

"இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (மத்.16:28).


இந்த வசனங்களின்படி, மனுஷ குமாரனின் இரண்டாம் வருகை விரைவில் இருப்பதாகவும், அந்த வருகையில் அவருடைய இராஜ்யமாகிய பரலோக இராஜ்யம் பூலோகத்தில் நிலை நிறுத்தப்படும் எனக் கூறப்படுவதும் ஆழ்ந்து நோக்கத்தக்கது.

அதாவது, இரண்டாம் வருகை சீடர்களில் சிலர் உயிரோடு இருக்கும் பொழுதே நடக்கும் என்பதும், அந்த இரண்டாம் வருகையில் பரலோக இராஜ்யம் இப்பூலோகத்தில் நிலை நிறுத்தப்படும் என்பதும் தெளிவாகக் கூறப்பட்டு உள்ளது.

இரண்டு நிலைகள்:

இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியாதவர்களால், பூலோக இராஜ்யமாகிய இசுரவேலர் இராஜ்யம் இரண்டாம் வருகையில் நிலை நிறுத்தப்படும் என்று இன்று வரை தவறாக எதிர்பார்க்கப்படுகிறது.

இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை உணர்ந்தவர்களால், பரலோக இராஜ்யம் சீடர்கள் சிலர் உயிரோடு இருக்கும் பொழுதே நிலை நிறுத்தப்பட்டு விட்டது என்று புரிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.

ஆகவே,

1. இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியாதவர்களால் இரண்டாம் வருகையில் எதிர்பார்க்கப்படுவது பூலோக இராஜ்யமாகிய இசுரவேல் இராஜ்யம்.

2. இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறிந்தவர்களால் இரண்டாம் வருகையில் புரிந்துக் கொள்ளப்பட்டது பரலோக இராஜ்யமாகிய இயேசு கிருத்துவின் இராஜ்யம்.

ஆகிய இரு நிலைகள் இருக்கின்றன என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

ஆகவே, இயேசு கிருத்து கன்னிப்பிறப்பை உடையவர் என்றும், கடவுளின் மகன் என்றும் புரிந்துக் கொண்டவர்கள் இரண்டாம் வருகை

நிறைவேறிவிட்டது என்றும், பரலோக இராஜ்யம் வந்து விட்டது என்றும் புரிந்து கொள்ளுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு