சீடர்களின் அப்போஸ்தலர் பட்டமும் பவுலும்:

இயேசு கிருத்துவின் சீடர்கள் பன்னிருவர். யூதாஸ் காரியோத்து இறந்தமையால், அந்த இடத்திற்கு மத்தியா தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த அப்போஸ்தலர் பட்டம் மற்றவர்களுக்குக் கிடையாது என்றும், இந்த பன்னிருவருக்கு மட்டுமே உரியது என்றும், அவர்கள் நம்பினார்கள் என்பதை அப்போஸ்தலர் முதலாம் அதிகாரம் 21 முதல் 26 வரை நாம் பார்கின்றோம்.

பவுல் போன்றவர்கள் இந்தப் பட்டத்திற்கு உரியவர்கள் அல்லர் என்றும், இதனால் இவர்கள் தங்களை அப்போஸ்தலர் என அழைத்துக் கொள்ளக் கூடாது என்றும் செயல்பட்டனர் என்பது,

"அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; (வெளி. 2:2)

என்னும் வசனத்தால் விளங்குகிறது.

ஆயினும் பவுலைப் பற்றி அனனியாவுக்குக் கூறப்பட்ட செய்தி:

அதற்குக் கர்த்தர்: "நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்." என்றார். (அப். 9:15)

என்பதாகும். ஆகவே, பவுலைப் பன்னிருவருடன் ஒப்பிடுவது பொருத்த மற்ற ஒன்றாகும். அவர் இயேசுவால் சிறப்பாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பதை உள்ளத்தில் வைத்தல் வேண்டும்.

உடனே இரண்டாம் வருகை என நம்பினர்:

இசுரவேலருக்கு இராச்சியத்தைக் கொடுக்கும் இரண்டாம் வருகை, இயேசு கிருத்து உயிர்த்தெழுந்து, பரலோகம் சென்று, சிறிது காலத்திலேயே இருக்கும் என்று சீடர்கள் உறுதியாக நம்பினார்கள். காரணம், இயேசு கிருத்து சிலுவையில் அடிக்கப்படும் முன்பே, இதைப் பற்றித் தெளிவாகக் கூறி இருந்தார். எவ்வாறு?:

"இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." (மத்.16:28, மாற். 9:1)

"அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று." (யோவான் 21:21-23)

இந்த வசனங்களின்படி, அவருடைய சீடர்களில் சிலர் வாழுங்காலத்திலேயே இரண்டாம் வருகை நிகழ்ந்து விடும் என்பது தெளிவாக இயேசு கிருத்துவால் கூறப்பட்டு உள்ளது.

இதனால் தங்கள் வாழ்நாளிலேயே தாங்கள் இரண்டாம் வருகையைப் பார்க்கப் போகின்றோம் என உறுதியாக நம்பினார்கள். பவுல் இதைக் குறித்து

"இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்." - (1 கொரி. 15:51)

"பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்." (1 தெச. 4:17)

என்று எழுதி உள்ளார்.

பவுலுடைய வாழ்நாளிலேயே இரண்டாம் வருகை நடைபெறப் போவதாக அவர் உறுதியாக நம்பினார். இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகை, தாமதமான பொது இன்னமும் நடைபெறவில்லையே, தாமதமாவது ஏன்? என்று கேட்கிறவர்களுக்கு பேதுரு

"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2பேது. 3:9)

என்றும்

"தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்;" (2பேது 3:12)

என்றும் எழுதி உள்ளார்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

1 கருத்துகள்:

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு