சிறுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஏப்ரல், 2010

சிறுமியின் கடிதங்கள் - 2


புரியவில்லை அம்மா உன் அன்பு
    உலகிற்கு வளர்ந்தவளாக தெரியும் நான்
எப்படி உன் கண்களுக்கு மட்டும்
    சிறுமியாகவே தெரிகின்றேன்" என்றேன்
“ஏன் என்றால் நீ இன்னும் சிறுமி தான்" என்றாய் புன்னகைத்துக்   கொண்டே.
“நான் சிறுமி அல்ல! வளர்ந்து விட்டேனாக்கும்” என்றேன்.
“ஆம்! வளர்ந்து விட்டாய்…சிறுமியாகவே!!!” என்றாய்.
உண்மை புரிந்தது அம்மா,
காலங்களில் உன் பாசம் வளரும்
ஆனால்
உன் பார்வையில் நான் வளர்வதில்லை என்று !!!!          
                                                                   இப்படிக்கு,
                                                                                                             - உன் அன்பு மகள்!!!

சனி, 30 ஜனவரி, 2010

சிறுமியின் கடிதங்கள் - 1



உண்மை சொல் அம்மா!!!
நீ நேசித்த தென்றல் மீது கோபம் கொள்கிறாய்
   துவைத்த துணிகளை அவை தெரியாது மண் சேர்த்துவிடும் பொழுது!!
மழையிடமும் கோபம் கொள்கிறாய்
    அவை உலர்ந்த துணிகளை தெரியாது நனைத்திடும் பொழுது!!

நீ நேசிக்கும் அனைத்தின் மேலும்  ஒருகாலம் கோபம் கொள்கிறாய் 
  அவை உன் உழைப்பை வீணாக்கும் பொழுது!
பின் ஏனம்மா என்னை பார்த்து மட்டும் புன்னகைக்கிறாய் 
நீ கஷ்டப்பட்டு துவைத்த துணிகளை
   கஷ்டப்படாது அழுக்காக்கி கொண்டு வந்து நிற்கும் பொழுது!!!"

                                                                                                                                       இப்படிக்கு!!!
                                                                                                                                         - உன் அருமை மகள்

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...