இரண்டாம் வருகையில் யூதரல்லாத மற்ற புறஜாதியார்களின் நிலை என்ன?
யூதரல்லாத புறஜாதியாருக்கு நற்செய்தி அறிவிக்கும்படி பேதுருவுக்குக் காட்சியளித்து, ஆவியானவராலும் அறிவுறுத்தப்பட்டு, கொர்நெலியு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அங்கு பேதுரு பேசிய பொழுது புறஜாதியார் பரிசுத்த ஆவியைப் பெற்றதைக் கண்டு பேதுருவுடன் சென்ற யூதர்கள் பிரமித்தார்கள் என்பது அப்போஸ்தலர் 10 ஆம் அதிகாரத்தில் விளக்கப்படுகிறது.
"பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது,
பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப்
பிரமித்தார்கள்." - (அப்.10 : 46)
இயேசு கிருத்து யூதருக்கு இராச்சியத்தைக் கொடுக்கும் பொழுது "புறஜாதியாரின் நிலை என்ன?" என்னும் கேள்வி இப்பொழுது எழுகின்றது.
இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையில் புரஜாதியினர் யூதருக்குச் சமமானவர்களாக இருக்க இயலாது. யூதர்கள் மோசேயின் நியாயப் பிரமாணத்தைப் பின்பற்றுகிறவர்கள்.
புறஜாதியாருக்கு அந்த நிலை கிடையாது. அவர்கள் யூதர்களின் ஆட்சியின் கீழ் வாழ வேண்டியவர்கள். அதனால் அவர்கள் யூதரைப் போன்று மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றவோ, விருத்தசேதனம் பெறவோ வேண்டியதில்லை என்றும், பொதுவான சில கட்டளைகளைப் பின்பற்றினால் போதும் என்றும் முடிவெடுத்ததை அப்போஸ்தலர் 15 ஆம் அதிகாரத்தில் பார்க்கின்றோம்.
இதனால் 1,44,000 பேர் இசுரவேலரில் ஆட்டுக் குட்டியானவருக்கு ஊழியக்காரராக முத்திரையிடப்பட்ட பொழுது, புறஜாதியார் யாருக்கும் ஊழியக்காரர்களாக முத்திரை போடப்படவில்லை. ஆனால்,
"சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து
வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை
அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து,
சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும்
நிற்கக்கண்டேன்." - (வெளி. 7:9)
என்று கூறப்படுவதில், இரண்டாம் வருகையில் புறஜாதிகளுக்குப் பங்கு உண்டு; ஆனால் அது இரண்டாந்தரக் குடிமக்களுக்குண்டான உரிமை என்று விளக்கப்படுகிறது.
இதையே பவுல்,
"இசுரவேலரை நல்ல ஒலிவ மரத்தின் சுபாவக்கிளை" என்றும், "புறஜாதியாரை, காட்டு ஒலிவ மரக்கிளை" என்றும் வேறு பிரித்து விளக்குகின்றார். (ரோ. 11 : 13-24)
பிலதெல்பியா சபைக்கு யோவான் எழுதும் பொழுது
"யூதரில்லாதிருந்தும், தங்களை யூதரென்று பொய் சொல்லுகிற சாத்தானுடைய கூட்டம்" (வெளி. 3:9)
என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்தில் அச்சபையில் யூதர்கள் உயர்ந்தவர்கள் என்றும், புறஜாதியார் யூதர்களுக்குச் சமமானவர்கள் அல்லர் என்னும் கருத்தும் வெளிப்படுகிறது.
"இதோயூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்" (வெளி. 5:5)
என்று இயேசு கிருத்து யூதா கோத்திரத்தைச் சேர்ந்த யோசேப்பிற்குப் பிறந்தவர் என்று கூறப்படுகிறது.
ஆகவே, இரண்டாம் வருகையை எதிர்பார்த்தவர்கள் யூதர்கள். இயேசு கிருத்து யூத இனத்தில் பிறந்தவர் என்று நம்பப்பட்டமையால், யூத இராச்சியத்தில் புறஜாதியார்களாகிய கிருத்துவர்கள் யூத கிருத்துவர்களால் அரவணைக்கப்படக் கூடிய இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படத்தக்கவர்களே தவிர, யூதர்களுக்குச் சமமாக நடத்தப்படும் உரிமையுடையவர்கள் அல்லர் என்னும் கருத்து அவர்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்தது.
தொடரும்...!!!
பி.கு:
1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842
1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842
2 கருத்துகள்:
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
மத்தேயு - 15
24.காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி வேறல்ல வென்றார்.
25. அவள் வந்து ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவரை பணிந்து கொண்டாள்.
26.அவர் அவளை நோக்கி பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்குட்டிகளுக்கு போடுகிறது நல்லதல்ல என்றார்.
மேற்கண்ட விபரங்கள் கிறிஸ்துவே புற ஜாதியாரான கானான் தேசத்து ஸ்திரியிடம் சொன்னதாக உள்ளது.
வள்ளுவராஜ்
கருத்துரையிடுக