பூலோக இராஜ்யத்தின் பிடியில் பரலோக இராஜ்யம்

இயேசு கிருத்து கூறிய

"என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல"

என்பது என்ன ஆயிற்று? ரோம ஆட்சியாளர்களின் பூலோக இராஜ்யத்தின் பிடியில் பரலோக இராஜ்யம் மறைக்கப்பட்டு மறைந்து கிடக்கிறது.

இந்த நிலைக்கு ஏற்ப புதிய ஏற்பாட்டின் 27 நூல்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுக்கப்பட்டு, ஒழுங்கு செய்யப்பட்டு, ரோமர்களின் பூலோக இராஜ்யத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப 27 புத்தகங்களுக்கும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

பூலோக இராஜ்யத்தின் தலைவர்களால், அவர்களால் உருவாக்கப்பட்ட பைபிளுக்கு அவர்களுடைய பூலோக இராஜ்யத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப விளக்கம் கொடுக்கப்படுவது இயல்பான ஒன்றேயாகும்.

இதனால் பூலோக இராஜ்யத்தைக் கொடுக்கும் இரண்டாம் வருகை இன்னமும் நடைபெறவில்லை என்றும், அந்தப் பூலோக இராஜ்யத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்றும், பூலோக ஆட்சியாளர்களின் கையில் இருக்கும் திருச்சபைகளில் போதிக்கப்பட்டு வருகிறது.

வரலாற்றுப் பின்னணி

1. இயேசு கிருத்து ஆசியாவில் பிறந்த ஓர் ஆசியாக்காரர்.

2. இயேசு கிருத்துவின் சீடர்கள் அனைவரும் ஆசியாக்காரர்கள்.

3. இயேசு கிருத்து பேசிய அரமேய மொழி ஓர் ஆசிய மொழி.

4. கிருத்துவம் உருவான இடம் ஆசியா. இதனால், கிருத்துவம் ஓர் ஆசிய இயக்கம்.

5. கிருத்துவ வேதமாகக் கூறப்படும் பைபிளில் உள்ள நூல்கள் அனைத்தையும் எழுதிய அனைவரும் ஆசியாக்காரர்கள்.

6. கிருத்துவம் உட்பட உலகிலுள்ள அனைத்து மதங்களும் தோன்றிய இடம் ஆசியா.

ஆனால், ஆசியாவில் பிறந்த இயேசு கிருத்துவுக்கும், ஆசியாவில் தோன்றிய கிருத்துவ இயக்கத்திற்கும் எதிராகச் செயல்பட்டவர்கள் ஐரோப்பிய ஆட்சியாளர்கள். எவ்வாறு?

1. இயேசு கிருத்துவைக் கொலை செய்தவர் ரோம அரசனாகிய ஐரோப்பியர்.

2. கிருத்துவ இயக்கத்தைச் சேர்ந்த இயேசு கிருத்துவின் சீடர்களைக் கொலை செய்தவர்கள் ரோம ஆட்சியாளர்களாகிய ஐரோப்பியர்.

3. பவுல் போன்ற நற்செய்தியாளர்களைக் கொலை செய்தவர்கள் ரோம ஆட்சியாளர்களாகிய ஐரோப்பியர்.

4. கி.பி 312 வரை கிருத்துவ திருச்சபையை வேட்டையாடியவர்கள் ரோம ஆட்சியாளர்களாகிய ஐரோப்பியர்.

5. கி.பி 312 முதல் இன்று வரை கிருத்துவின் மீட்பின் செய்தியை அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்கள் ஐரோப்பியர். இதற்கு அவர்களுக்கு பயன்படும் கருவியாக அவர்களால் தொகுக்கப்பட்ட பைபிளைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆகவே, ஐரோப்பியர் கி.பி 312 வரை கிருத்துவையும், கிருத்துவின் மீட்பின் செய்தியைக் கூறும் கிருத்துவ இயக்கத்தையும் எதிர்த்து அழித்தவர்கள். கி.பி 312 முதல் ரோம ஆட்சியாளருக்கு உதவும் முறையில் திரித்தல், வெட்டல், ஒட்டல், இணைத்தல், மாற்றல், ஏமாற்றல், அழித்தல், மறைத்தல் ஆகிய எட்டு வகைகளில் பைபிளை உருவாக்கி, அதன் வழி கிருத்துவத்தை அரவணைத்து தங்கள் அரசியலுக்கு அடிமைப்படுத்தி வருகிறார்கள் என்பது வரலாறு.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி