'நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்.'

வள்ளுவனின் அருமையானதொருக் கூற்று. ஒரு பிரச்சனையின் தோற்றத்தை முழுமையாக ஆராய்ந்துப் பார்த்தப் பின்னரே அப்பிரச்சனைக்குரிய தீர்வினை நாம் செயல்படுத்த வேண்டும். பிரச்சனையின் உண்மையான காரணத்தினை அறியாது நாம் மேற்கொள்ளும் யாதொரு செயலும் தக்க தீர்வாக அமையாது. இதுவே அக்குறளின் மையக்கருத்து. அதன் அடிப்படையிலேயே தான் நாம் இப்பொழுது ஈழத்தினைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

ஈழம் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? தமிழர்கள் அங்கே தனி நாடு கேட்கின்றார்களே அது சரியா? என்ன தான் நடக்கின்றது/நடந்தது அங்கே? போன்ற கேள்விகள் அனைத்திற்கும் நாம் விடையினைத் தேடத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் ஒரு கற்பனை சம்பவத்தினை நாம் கண்டு விடுவது நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

வேற்றுக் கிரகவாசிகள் பூமியின் மீது படையெடுத்து சீனம் மற்றும் இந்தியத் தேசங்களைக் கைப்பற்றி விட்டனர். இந்தியாவும் சீனாவும் முழுமையாக வேற்றுக் கிரகவாசிகளின் ஆளுமைக்கு உட்பட்டு விட்டன. வேற்றுக் கிரகவாசிகளுக்கு மாபெரும் வெற்றி தான். ஆனால் அந்த வெற்றியோடு சேர்த்து ஒரு கேள்வியும் புதிதாய் எழுந்து தான் நிற்கின்றது.

கைப்பற்றிய இந்தத் தேசங்களை எவ்வாறு ஆளுவது? இரு தேசங்களாகவே வைத்திருப்போமா அல்லது இரண்டையும் ஒன்றிணைத்து நாம் ஆள்வதற்குத் தோதாக ஒரே தேசமாக மாற்றிவிடலாமா?

இது தான் அந்தக் கேள்வி. இக்கேள்விக்கு விடையாய் வேற்றுக் கிரகவாசிகள் இரண்டு தேசங்களையும் இணைத்து ஒரே தேசமாக மாற்றி ஆள்வதையே தேர்ந்து எடுத்துக் கொள்கின்றனர். அதன் விளைவாக இந்தியா, சீனா என்று இரு தேசங்களாக இருந்த நிலப்பரப்பு ஒரே தேசமாக மாறுகின்றது. அவர்களிடையே எவ்வளவு பகைகள், வித்தியாசங்கள் இருப்பீனும் அந்தத் தேசங்களின் மக்கள் ஒரே தேசத்து மக்களாக ஆக்கப் படுகின்றனர்.

அதாவது இரண்டு தேசங்களாக இருந்த நிலை மாறி இப்பொழுது அங்கே ஒரே தேசம் மட்டுமே இருக்கின்றது...பகை நாடுகள் இரண்டையும் சேர்த்து ஒரு புதிய தேசம் உருவாகி இருக்கின்றது. அவ்வாறே காலங்கள் பல கடக்கின்றன. இந்நிலையில் சில நூற்றாண்டுகள் கழித்து வேற்றுக் கிரகவாசிகள் அந்தப் புதிய தேசத்திற்குச் சுதந்திரம் கொடுத்து விட்டுச் செல்ல எண்ணி, அவ்வண்ணமே செய்கின்றனர்....ஆட்சிப் பொறுப்பினை சீனர்களிடத்துக் கொடுத்து விட்டு. இந்நிலையைத் தான் நாம் சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கின்றது.

இரண்டு தேசங்கள் ஒரே தேசமாக ஆக்கப்பட்டு இருக்கின்றன. அந்த நாடுகள்/மக்கள் ஆகியோரின் இடையில் பல்வேறு பகை உணர்ச்சிகள் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இருப்பீனும் அவை எல்லாம் புறக்கணிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் ஒரே தேசத்து மக்களாக மாற்றப்பட்டு இருக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்குத் தான் இன்று சுதந்திரம் கிட்டி இருக்கின்றது.

நீண்டக் காலமாக இருந்துக் கொண்டிருந்த அடிமைத்தனத்தில் இருந்து மக்கள் அனைவரும் விடுதலைப் பெற்று விட்டனர். அனைவரும் கொண்டாட வேண்டியத் தருணம் தான்...ஆனால் அந்தத் தருணத்தில் தான் பழையப் பகை உணர்ச்சிகள் மேலோங்க பழையப் பிரச்சனைகள் மீண்டும் எழத் தொடங்குகின்றன.

புதிய தேசத்தில் பெருவாரியாக இருந்த சீனர்களிடம் ஆட்சிப் பொறுப்பினை தந்து விட்டு வேற்றுக் கிரகவாசிகள் வெளியேறி விட்டனர். ஆட்சிப் பொறுப்பினைப் பெற்ற சீனர்களோ புதிதாய் தோன்றி இருக்கின்ற அந்த தேசத்தில் அனைத்தையும் சீன மயமாக்க முயல்கின்றனர்...சீனக் கலாச்சாரமே அந்தப் புதிய தேசத்தின் கலாச்சாரமாக இருக்க வேண்டும்...சீன மொழியே அந்தத் தேசத்து மொழியாக இருக்க வேண்டும்...சீனர்களே ஆள வேண்டும்...!!!

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் அந்தப் புதிய தேசம் பழையச் சீனாவாகவே இருக்க வேண்டும். அங்கே இந்தியர்களோ அவர்களது கலாச்சாரமோ தேவை இல்லை...அவற்றிற்க்கு மதிப்பும் இல்லை.

இந்நிலையில் இந்தியர்கள் அந்நிலையினை எதிர்த்துக் குரல் கொடுப்பார்களா அல்லது மாட்டார்களா? அவர்களது உரிமைகளுக்காக போராடுவார்களா மாட்டார்களா?

போராடத்தானே செய்வார்கள்...அதையேத் தான் செய்கின்றார்கள். முதலில் அமைதியாகப் போராடுகின்றனர்...அவர்களின் போராட்டத்தினை வன்முறையால் அடக்குகின்றது சீன அரசு. தொடர்ந்துப் பல ஆண்டுகள் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெறுகின்றன...அவை அனைத்தும் வன்முறையால் நசுக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் கொல்லப்படுகின்றனர். இந்திய மக்கள் அவர்களது கலாச்சாரச் சின்னங்களாக கருதியவைகள் அழிக்கப்படுகின்றன. இந்திய மக்களின் அமைதியான குரல்கள் சீனர்களின் காதினில் நுழைய மறுக்கின்றன.

இந்நிலையில் இந்தப் பிரச்சனைக்கு உங்களுடைய தீர்வு என்னவாக இருக்கும்? நீங்கள் என்ன செய்வீர்கள்?

'சீன நண்பர்களே...நம்முடைய வரலாறு பெரியது...நம் இருவருக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன...நாம் ஒன்றிணைந்து வாழ இனியும் இயலும் என்றுத் தோன்றவில்லை... போதும்...நடந்தவை அனைத்தும் போதும். நாம் அடிமைப்படுவதற்கு முன்னர் எவ்வாறு இருந்தோமோ அவ்வாறே இருந்து விடுவோம்... சீனாவாக இருந்த இடத்தினை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்...இந்தியாவாக இருந்த இடத்தினை நாங்கள் வைத்துக் கொண்டு எங்கள் மக்களைப் பார்த்து கொள்கின்றோம்...நீங்களும் நன்றாக இருங்கள்...நாங்களும் நன்றாக இருக்கின்றோம்..."


மேலே உள்ளத் தீர்வே உங்களுடையத் தீர்வாக இருக்கும் என்றால் உங்களின் குரல் தான் ஈழத்தின் குரல்.

ஈழத்தின் வரலாறு தொடரும்....

6 கருத்துகள்:

சரியான ஒரு எடுத்துகாட்டு இதை ஆங்கிலத்தில் ஒரு பதிவு பண்ணி தன்தால் மிகவும் அருமையாக இருக்கும்..ஆனால் இந்திய அரசு ஈழத்தை அதறிகவே இல்லை ... இந்தியாவில் இருந்து ஒரு கட்சியும் ஆதரிக்கவில்லை..இதற்கு எனத்தான் தீர்வு?????????????

As Tamil Poet Valluvan mentioned without understanding the problem completely
we cannot find a complete,meaningful solution.

The following questions might have araised in most of our mind
1. What is Elam?
2. What is the history of Elam?
3. What happened in Elam?
4. What is happening in Elam?

Before going to analyse we will consider the following fact
Before british,french,dutch colonical rule in India
India was not united country and the different parts are ruled by different kings with different borders.
Once british occupied most of the parts the have formed the new borders for reigions introduced a system which help them to rule the country easily.
After freedom fighting India was again splitted by british to create India and Pakistan.

@ Karai...

Are you Trying to translate the post in english my friend :) if yes u r most welcome :)

இந்தியா சீனா என்ற மிக பிமாண்டமான தேசங்களை வேற்றுக் கிரகவாசிகள் ஒன்றாக்கியதை இலங்கையில் வாழும் இலங்கை என்ற சிறிய நாட்டில் வாழும் தமிழர்கள் சிங்களவர்கள் என்ற பெருமளவு ஒற்றுமை கொண்ட இனங்களோடு ஒப்பிடுவதை வியப்புடன் பார்க்கிறேன். தாங்கள் கூறியபடி நடப்பதானால் இன்று உலகில் பல ஆயிரம் தேசங்கள் உருவாகியிருக்கும். தமிழர்கள் சிங்களவர்களுக்கிடையே உள்ள சகோதர பிரச்சனைகளுக்கு தமிழ்நாட்டின் இனவாத கண்டோட்டம் உதவபோவதில்லை என்பதை இலங்கையர்களாகிய நாம் உணர்ந்தே இருக்கிறோம்.

Baleno'உண்மையில் நீங்கள் ஓரு தமிழனா முதலில் ஈழத்தின் வரலாற்றை படியுங்கள்

Beleno உண்மையில் நீங்கள் ஒரு தமிழனா முதலில் ஈழ வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள் .வழ்போகன் உங்களை வரவேற்கின்றேன்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு