இன்றைக்கு ஈழத்திற்காக மாபெரும் எழுச்சி தமிழர்களின் மத்தியில் எழுந்துள்ளது...'ஈழத்தில் உள்ள தமிழர்கள் காக்கப்பட வேண்டும்...அவர்கள் உரிமையோடும் சுதந்திரத்தோடும் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும்...அதற்கு அவர்களுக்கென்று தனி நாடு வேண்டும்...அதில் சிறிதளவும் மாற்றுக் கருத்துக்கள் எங்களிடம் இல்லை...கூடுதலாக தமிழர்களின் மேல் கொடூரமான இனப்படுகொலையினை ஏவி விட்ட அனைத்து நபர்களின் மேலும் நேர்மையான விசாரணையும் அதற்கேற்ற தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.' இதுவே தான் அனைத்து தமிழர்களின் குரலாக இன்று தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இக்குரல்களுக்கு எதிராக ஒலிக்கும் சில குரல்களையும் இந்நேரத்தில் நாம் இனம் காண வேண்டி இருக்கின்றது.

"இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது. அங்கு நடந்தது இனப்படுகொலை அல்ல..." என்று காங்கிரஸ் தரப்புக் கூறுகின்றது.

"இலங்கையை போர் குற்றவாளியாக அறிவிக்க முடியாது..." இது பா.ஜ.க கட்சியினரின் கூற்று.

"இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்..." இது RSS இன் கூற்று.

போராடும் தமிழ் இளைஞர்களை 'தமிழ் பொறுக்கிகள்' என்று சு. சுவாமி வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்.


இப்பொழுது நாம் காண வேண்டியது அரசியல் அளவில் அவர்களுள் பலவிதமான வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் விடயத்தில் மட்டும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்புவது ஏன்?

இக்கட்சிகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்பட்ட பொழுதும் ஒற்றுமையாக மௌனம் காப்பது ஏன்?

ஏன் தமிழர்களின் மீது மட்டும் இத்தனை வன்மம்?

இந்தக் கேள்வியினை நண்பர் ஒருவருடன் விவாதித்தப் பொழுது அவர் கூறிய விடை,

'ஆமாம்...அந்தக் கட்சிகளினால் தமிழகத்துல ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாது...அதுனால தான் அவன் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் அப்படின்னு விட்டுட்டு அவன் எந்த இடத்துல ஜெயிக்க முடியுமோ அந்த இடத்தை மட்டும் பார்த்துக்கிறான்..."

ஆனால் இவ்விடையினை ஏனோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம்,

1) எந்த கட்சியானாலும் சரி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களிலும் இருந்து குறிப்பிட்ட அளவு தொகுதிகளை வென்று இருக்க வேண்டும். அந்நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்றால் செல்வாக்கினைப் பெறவே கட்சிகள் முயற்சி செய்யுமே அன்றி, அவர்களே அவர்களின் செல்வாக்கினைக் குறைத்துக் கொள்ளும் வண்ணம் செயலாற்ற மாட்டார்கள்.அவ்வாறே அவர்கள் செயலாற்ற ஆரம்பித்தனர் என்றால் விரைவில் அவர்களின் கட்சி அழிந்து விடும்.

2) அந்நிலையில் தமிழகத்தில் மட்டும் அக்கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லாமல் போனதற்கும் அவர்கள் இழந்த செல்வாக்கினை மீண்டும் பெறுவதற்கு முடியாமல் இருப்பதற்கும் அடிப்படையானக் காரணம் ஏதேனும் நிச்சயம் இருக்க வேண்டும். எனவே மேலே உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு என்ன காரணம் என்று நாம் காண வேண்டும் என்றால் நாம் தமிழகத்திலே அக்கட்சிகள் கால் ஊன்றாதிருப்பதற்கு என்ன காரணம் என்றே காண வேண்டி இருக்கின்றது.

அப்படி அந்த காரணத்தினை நாம் தேடினோம் என்றால் அதற்கு விடையாய் கிடைப்பது திராவிடர் இயக்கங்கள். அந்த இயக்கங்கள் இங்கே எழுந்தக் காரணத்தினாலேயே காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகளால் இங்கே வேரூன்ற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

அதாவது பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த இயக்கத்தின் காரணமாக பிராமணர்களின் கட்டுப்பாட்டினில் இருக்கும் கட்சிகள் தமிழகத்திலே வேரூன்ற முடியாத நிலை இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விடயம் திராவிடர் என்றச் சொல் 'தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள்' போன்றோரையும் தமிழரையும் குறிக்கும் ஒரு சொல் என்றே இன்றைக்கு திராவிடம் பேசுவோர் கூறுகின்றனர்.

ஆனால் அதனை தெலுங்கர்களோ, கன்னடியர்களோ அல்லது மலையாளிகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கே திராவிடர் என்றச் சொல்லோ அல்லது திராவிடர் இயக்கங்களோ பரவவும் இல்லை. இந்நிலையில் திராவிடர் என்றச் சொல் தமிழர்களை மட்டுமே குறிக்கக் கூடியச் சொல்லாக அமைந்து இருக்கின்றது. இதனை அம்பேத்கர் அவர்களும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களுமே கூறி இருக்கின்றனர்.

அப்படி இருக்க தமிழகத்தினில் தமிழர்களுக்கு மத்தியில் தோன்றிய தமிழர் இயக்கங்களின் வாயிலாக ஆரியர்கள்/பிராமணர்களின் இயக்கங்களும் கொள்கைகளும் தமிழகத்திலே பின்னடைவு அடைகின்றன. மீண்டும் அக்கொள்கைகளோ அந்த இயக்கங்களோ தமிழகத்திலே மலரப் போவதே இல்லை.

இந்த நிலை தமிழகத்தில் மட்டுமே நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ஆரியர்கள் பயப்படுகின்றனர். ஒருவேளை இந்தத் தெளிவு மற்ற மாநிலங்களுக்கும் பரவி விட்டால், அங்கும் நமது செல்வாக்கு மலிந்து விட்டால்... நாம் என்ன செய்வோம்? நாம் எங்குப் போவோம்?

அவர்களின் பயத்திற்கும் காரணமின்றி இல்லை.

இந்திய சனத்தொகையினில் அவர்களின் எண்ணிக்கை வெறும் 10% மட்டுமே... அதிலும் பிராமணர்கள் எண்ணிக்கை வெறும் 3% மட்டுமே. அந்நிலையில் மற்ற மாநிலங்களிலும் அவர்களின் செல்வாக்கு சரிந்து விட்டால், அவர்களின் வேடம் கலைந்து விட்டால்...அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் போக்கிடம் தான் என்ன?

அதனால் தான் பிரச்சனைக்குரிய மூலத்தினை அழித்துக்கட்ட அவர்கள் உறுதியாக முயல்கின்றனர்...அரசாட்சிக் காலத்தில் அரசனைக் கைக்குள் போட்டுவிட்டு எளிதாக மக்களை தாழ்த்தியதினைப் போன்ற வசதிகளை சனநாயகம் அவர்களுக்கு வழங்கவில்லை. அதனால் தான் அவர்கள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

ஆரியர் - திராவிடர் என்ற பிரிவுகள் புரட்டு என்று கதைகளைக் கட்டி விடுவது, தங்களால் இயன்ற அளவு வரலாற்றினை மறைக்க/திரிக்க முயல்வது, பெருன்பான்மையான திராவிட மக்கள் ஒற்றுமையாக இருக்காத வண்ணம் அவர்களின் நடுவே சாதி/ மதச் சண்டைகளை ஏற்படுத்திவிட்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற இவை அனைத்தையும் தாங்கள் அடிமையாக்கி வைத்துள்ள சைவ வைணவ சமயங்கள் மூலமாகவும், சூழ்ச்சியினால் பிடித்த அரசியல் உரிமையினாலும் செம்மையாகச் செய்துக் கொண்டு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முயன்றுக் கொண்டு இருக்கின்றனர்.


ஆனால் தமிழும் சரி தமிழர்களும் சரி அவர்களுக்கு மிகப் பெரிய இடையூறாகத் தான் இருக்கின்றனர். பிராமணர்கள், சைவ வைணவ சமயத்தினை அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர் என்பதனை தமிழ் இலக்கியங்கள் பறைசாட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழர்களோ தங்களின் மண்ணில் பிராமண செல்வாக்கு உள்ள இயக்கங்களை துரத்தி அடித்து விட்டு இருக்கின்றனர்.

இது தான் ஆரியர்களுக்கு கவலையையும் கோபத்தினையும் வர வைக்கின்றது. சைவ வைணவ சமயங்களை அவர்கள் அடிமையாக்கி வைத்து இருப்பது அனைத்து மக்களுக்கும் தெரிந்து விட்டால் அச் சமயங்களின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடி போய் விடும். பின்னர் எவ்வாறு அவர்கள் தாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றுக் கூறிக் கொண்டு வாழ்வை வாழ்வது?

மேலும் தமிழர்களைப் போன்றே அனைத்து மக்களும் ஆரியச் சதியினை அறிந்துக் கொண்டு தெளிவடைந்து விட்டனர் என்றால் ஆரியர்கள் எங்கே செல்வார்கள்? அவர்களுடைய செல்வாக்கு வேறு எங்கே செல்லுபடியாகும்? வேறு எங்கும் செல்லுபடியாகாதல்லவா....அதனால் தான் இங்கே தமிழ் மொழியும் தமிழர்கள் அழிவதையும் மகிழ்ச்சியாக ஆரியன் கண்டுக் கொண்டு நிற்கின்றான். பிரச்சனைக்குரியவர்கள் ஒழிந்துவிட்டால் பின்னர் அவன் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா...!!!

அதனால் தான் தனி ஈழம் அமைவதை அவன் தடுக்கின்றான். ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் ஒன்றும் செய்யாது நிற்கின்றான். தன்னை இந்து மதத்தின் தலைவன் என்றுக் (பொய்) கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களையும் இந்துக்களான தமிழர்களையும் கொன்றுக் குவித்த இராசபக்சேவினை மகிழ்ச்சியாய் திருப்பதிக் கோவிலில் வரவேற்கின்றான் (சிங்களர்கள் தங்களை ஆரியர்கள் என்றுக் கூறிக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது). அவர்களுக்குத் தேவை தமிழ் அழிய வேண்டும்... தமிழர்கள் அழிய வேண்டும்...ஏன் என்றால் அவைகள் அழிந்தால் தான் அவன் நிம்மதியாக மக்களை ஏமாற்றி வாழ முடியும்....!!!

இதனால் தான் திருமூலர் அன்றே பாடிச் சென்று விட்டார்...

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே - திருமந்திரம்

இன்று ஈழத்தில் நிகழ்வதும்...இந்தியாவில் நிகழ்ந்துக் கொண்டு இருப்பதும் ஆரியத் திராவிடப் போரின் ஒருக் கட்டமே அன்றி வேறல்ல...!!!

இவை அனைத்தையும் விரிவாகக் காண முயற்சிப்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

8 கருத்துகள்:

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

ஆரியர் திராவிடர் என்பது கட்டுக் கதை தான்.ஆங்கிலெயர்களின் திட்டமட்ட சதியே என்பதை டாக்டர். அம்பேத்கர் அவர்கள் ஆணித்தரமாக தன் பேச்சும் எழத்தும் .தொகுதி 13 ல் எழுதியிருக்கிறார்.கன்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

//பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த இயக்கத்தின் காரணமாக பிராமணர்களின் கட்டுப்பாட்டினில் இருக்கும் கட்சிகள் தமிழகத்திலே வேரூன்ற முடியாத நிலை இருக்கின்றது. நிற்க.//

சரிதாங்க, இதுக்கு மேல படிக்க முடியாம அப்படியே நின்னுட்டேன். அதிமுகவும் நான் பாப்பாத்திதான் என சட்டசபையில் பகீரங்கமாக அறிவித்த ஜெயலலிதாவும் நினைவிற்கு வந்து தொலைக்கிறார்கள்!

@Sinthippavan

//ஆரியர் திராவிடர் என்பது கட்டுக் கதை தான்.ஆங்கிலெயர்களின் திட்டமட்ட சதியே என்பதை டாக்டர். அம்பேத்கர் அவர்கள் ஆணித்தரமாக தன் பேச்சும் எழத்தும் .தொகுதி 13 ல் எழுதியிருக்கிறார்.கன்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.//

நன்றி நண்பரே.. நிச்சயமாகப் படிக்கின்றேன் :)

ஆனால் அதற்கு முன் நாம் காண வேண்டிய விடயங்கள் சில உள்ளன அவை என்னவென்றால்...
1) ஆரியர் திராவிடர் என்பதே புரட்டு என்கின்றனர்...ஆனால் அதே சமயம் 'ஆரிய சமாஜம், ஆரிய பவன், ஆரிய நிவாஸ், சர்வதேச ஆரியர்களின் சங்கம்' என்ற அமைப்புகளை அவர்களின் நலனுக்காக வைத்து இருக்கின்றனர்.

2) திராவிடர் என்றுக் கூறுவதே பெரும் புரட்டு என்றுக் கூறுகின்றனர் ஆனால் அவ்வாறுக் கூறும் சங்கர மடமே 'ஆதி திராவிடர் நலச் சங்கம்', 'திராவிடர் நலச் சங்கம்' என்பன போன்ற அமைப்புகளை நடத்தி வரும்.

3) மேலும் அவர்கள் நீதி நூலாக மதிக்கும் மனு தர்மத்தில் 'திராவிட தேசத்தினை சூத்திரர்கள் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர்' என்ற செய்தியும் இருக்கும்.
ஆரியர் -திராவிடர் என்ற பிரிவுகள் புரட்டு என்றால் எதற்காக ஆரிய சமாஜம், சர்வதேச ஆரியர்களின் சங்கம் என்று 'ஆரிய' மயமான இயக்கங்கள் இருக்க வேண்டும்? எதற்காக சங்கராச்சாரியர்கள் 'திராவிடர்களுக்கு' உதவ என்று அமைப்புக்களை வைத்து இருக்க வேண்டும்? எதற்காக மனு நூலில் திராவிடர் என்ற குறிப்புக்கள் காணப்பட வேண்டும்? எதற்காக மனு நூலினில் திராவிடர்கள் எதிரிகளாக சித்தரிக்கப்பட வேண்டும்?

இவைகளையும் நாம் காண வேண்டி இருக்கின்றது. நிச்சயம் நாம் இதனைப் பின்வரும் பதிவுகளில் காண முயற்சிப்போம் தோழரே!!!

@நந்தவனத்தான்

//இதுக்கு மேல படிக்க முடியாம அப்படியே நின்னுட்டேன். அதிமுகவும் நான் பாப்பாத்திதான் என சட்டசபையில் பகீரங்கமாக அறிவித்த ஜெயலலிதாவும் நினைவிற்கு வந்து தொலைக்கிறார்கள்!//

அருமைங்க...!!!

பிராமணர்களை எதிர்த்து ஆரம்பித்த கழகத்தில் இன்று ஒரு பிராமணப் பெண்மணியே தலைமை வகிக்கின்றார். இது எப்படி வந்தது அப்படினும் நாம யோசிக்க வேண்டித் தான் இருக்கு...!!!

அதுக்கு திராவிடர் கழகம் 'திராவிடர் முன்னேற்றக் கழகமா' மாறாம ஏன் 'திராவிட முன்னேற்றக் கழகமா' மாறுச்சி அப்படின்னு பார்க்கணும் (திராவிடர் - இனம்... திராவிடம் - இடம்)...பதிவுகளில் அதனைக் காண முயற்சிக்கலாம் நண்பரே.

வணக்கம் ஐயா!!! பிராமிணர்களை எதிர்த்து பிராமணரல்லாதவர்களால் முதன் முதலில் தொடங்கப்பட்ட கட்சி நீதிகட்சி. இது 1917ம் ஆண்டு டாக்டர் டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. இவர்கள் இருவரும் தமிழர்கள் அல்ல. பின்னர் இக்கட்சியையும் இக்கட்சியின் மூலம் பிரிந்த கட்சிகளையும் வழிநடத்தியவர்கள் தமிழர்கள் அல்ல(இன்று வரை). திராவிடம் என்ற சொல் மற்ற மாநிலங்களில் பரவாமல் போனதற்கு காரணம் ஒன்றுபட்ட சென்னை மாகாணம் பிரிந்ததே. சென்னை மாகாணம் பிரிந்த பிறகு திராவிடர் கழகங்களும், திராவிடர் கட்சிகளையும் ஆரம்பித்தவர்கள் அதை நிறுவிய இடமான சென்னையிலே தங்கிவிட்டனர். ஆரம்ப காலங்களில் சென்னை மாகாணம்(ஆந்திரா, கர்னாடக,கேரளா) முழுவதும் பிராமிணர்களை எதிர்த்து மாநாடுகள் நடத்திய போதிலும் சென்னை மாகாணம் பிரிந்த பிறகு பிற மாநிலங்களில் அதற்கு சரியான தலைமை அமையவில்லை. அதனாலேயே திராவிடம் என்ற சொல் மற்ற மாநிலங்களில்(ஆந்திரா, கர்னாடக,கேரளா) பெயரளவிலேயே இன்றுவரை இருக்கின்றது. என்னுடைய கருத்தில் எதாவது தவறு இருந்தால் சுட்டி கட்டவும். நன்றி!!!

"""""""இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விடயம் திராவிடர் என்றச் சொல் 'தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள்' போன்றோரையும் தமிழரையும் குறிக்கும் ஒரு சொல் என்றே இன்றைக்கு திராவிடம் பேசுவோர் கூறுகின்றனர்.

ஆனால் அதனை தெலுங்கர்களோ, கன்னடியர்களோ அல்லது மலையாளிகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கே திராவிடர் என்றச் சொல்லோ அல்லது திராவிடர் இயக்கங்களோ பரவவும் இல்லை. இந்நிலையில் திராவிடர் என்றச் சொல் தமிழர்களை மட்டுமே குறிக்கக் கூடியச் சொல்லாக அமைந்து இருக்கின்றது"""""........அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் திராவிடர்கள் இல்லை என்று ஆகிவிடுமா, அப்படி ஆகிவிட்டால் அவர்கள் யார்????? ஆரியர்களா என்ன???? இல்லை வேற எதாவது மக்களா என்ன???? அப்படி என்றால் தமிழன் மட்டும் எப்படி திராவிடன் அவான்????

//அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் திராவிடர்கள் இல்லை என்று ஆகிவிடுமா, அப்படி ஆகிவிட்டால் அவர்கள் யார்????? //

அவர்களும் திராவிடர்கள் தான் நண்பரே... அதில் நமக்கு சந்தேகங்களே வேண்டாம்...இந்தியாவில் 90% மக்கள் திராவிடர்களே...!!!

நான் அவ்வாறுக் கூறியமைக்கு காரணம் அவர்கள் திராவிடர்களாக இருக்கின்றப் பொழுதும் அதனை அவர்கள் அறியாதும் எற்காதும் இருக்கின்றனர். இதனைப் பற்றி அடுத்தப் பகுதிகளில் விரிவாக நிச்சயம் பார்ப்போம் நண்பரே!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு