கடிதம் 5
மே 8, 1910

திரு.காந்தி அவர்களுக்கு,

இப்பொழுது தான் உங்களது கடிதத்தினையும் உங்களது 'இந்திய சுயராஜ்யம்' என்கின்ற நூலினையும் நான் பெற்று இருக்கின்றேன்.

உங்களது அந்த நூலினை நான் மிகுந்த ஆர்வத்துடனே படித்தேன். ஏனென்றால் அதில் விவாதிக்கப்பட்டு இருக்கின்ற 'சாத்வீக எதிர்ப்பு' என்கின்ற முறையினை நான் மிகவும் முக்கியமானதொன்றாக காணுகின்றேன். இந்தியர்களுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த மனித இனத்திற்கே முக்கியமானதொன்றாக நான் அதனைக் காணுகின்றேன்.

உங்களுடைய முதல் கடிதத்தினை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதனைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது திரு.டோகே (Doke) அவர்கள் எழுதிய உங்களது சரிதையினை நான் காண நேர்ந்தது. அந்த நூல் என்னை மிகவும் கவர்ந்ததோடு நில்லாமல் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் உதவியது.

என்னுடைய உடல்நிலையானது தற்சமயம் சரியான நிலையில் இல்லை. ஆகையால் உங்களுடைய நூலினைப் பற்றியும், நான் பெரிதாக மதிக்கின்ற உங்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் என்னுடைய இதயத்தில் இருக்கின்ற எண்ணங்கள் அனைத்தையும் எழுதாது தவிர்த்து இருக்கின்றேன். ஆனால் என்னுடைய உடல்நிலையானது சற்று நலமடைந்த பின்னர் நிச்சயமாக நான் என்னுடைய கருத்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்.

உங்களுடைய தோழனும் சகோதரனுமான
                                                                                                                  லியோ டால்ஸ்டாய்

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு