கடிதம் 4
ஜோகன்னஸ்பர்க்,
ஏப்ரல் 4,1910
டால்ஸ்டாய் பிரபு அவர்களுக்கு,
நான் கடந்த முறை இலண்டனின் வழியாக பயணித்துக்
கொண்டிருக்கும் பொழுது தான் உங்களுக்குச் கடைசியாகக் கடிதம் எழுதினேன் என்பதனை
நீங்கள் நினைவில் வைத்து இருப்பீர்கள். உங்களைப் பின்பற்றுகின்ற விசுவாசிகளில்
ஒருவனாக இருக்கின்ற நான், இந்தக் கடிதத்துடன் நான் எழுதியிருக்கும் ஒரு நூலினையும்
அனுப்பி வைத்திருக்கின்றேன். குஜராத்தி மொழியினில் நான் எழுதிய விடயங்களின்
மொழிபெயர்ப்பாகவே அந்த நூல் இருக்கின்றது. நான் எழுதிய மூல நூலினை இந்திய
அரசாங்கமானது பறிமுதல் செய்துக் கொண்டு விட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அவர்கள் அவ்வாறு செய்தமையினாலேயே தான் நான் இந்த மொழியாக்க நூலினை விரைவாக வெளியிட
நேர்ந்தது. உங்களை நான் தொந்தரவு செய்கின்றேனோ என்றே நான் அஞ்சுகின்றேன்.
இருந்தும், இந்த நூலினைப் பார்பதற்கு உங்களுக்கு நேரம் கிடைத்து அதனை உங்களது உடல்
நலமும் அனுமதிக்குமேயானால், அந்த நூலினைக் குறித்த உங்களது கருத்துக்களை எனக்குத்
தெரிவிக்க முடியுமா? உங்களது கருத்துக்களை நான் எந்தளவு மதிக்கின்றேன் என்பதனை
நான் உங்களுக்குச் சொல்லத் தேவை இல்லை தானே. அதே நேரத்தில் இந்த கடிதத்துடன் நான்
உங்களுக்கு 'இந்துக்கு ஒரு கடிதத்'தின் நான்கு பிரதிகளையும் அனுப்பி வைத்து
இருக்கின்றேன். அதனை உங்களது சம்மதத்தின் பெயரில் நாங்கள் வெளியிட்டு
இருக்கின்றோம். அது இந்திய மொழி ஒன்றினில் மொழிபெயர்க்கப்பட்டும் இருக்கின்றது.
உங்களது விசுவாசமுள்ள சேவகன்
மோ.க.காந்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக