பிள்ளையார்...!!!

சிவன் பார்வதியின் மூத்தப் பிள்ளை. இறைவனின் பிள்ளை ஆன இவர் தமிழால் மரியாதைக்குரிய 'ஆர்' விகுதிப் பெற்று பிள்ளையார் ஆகின்றார்.

அதாவது தமிழில் எவ்வாறு 'ன்' என்பது ஆணைக் குறிக்கும் விகுதியாக இருக்கின்றதோ அதே போல் 'ஆர்' விகுதி என்பது ஒருவரை மரியாதையாக குறிக்க பயன்படுகின்றது...

தந்தை + ஆர் - தந்தையார்.
தாய் + ஆர் - தாயார்.

அதேப்போல் இறைவனின் பிள்ளை என்ற சிறப்பு காரணத்தால் அந்தப் பிள்ளைக்கு 'ஆர்' விகுதி வழங்கப்பட்டு அவர் பிள்ளையார் ஆகின்றார்.

பிள்ளை + ஆர் - பிள்ளையார்.

சரி இலக்கணம் போதும். இனி நாம் விநாயகரின் கதைக்கு வருவோம்.

புராணங்களின்படி விநாயகர் பார்வதியால் அவர் உடலில் இருந்த அழுக்கினைக் கொண்டு மனித உருவில் உருவாக்கப்படுகின்றார். பின்னர் ஒரு கட்டத்தில் சிவனை இவர் பார்வதியின் பொருட்டு எதிர்க்க வேண்டி வர சிவனால் தலை வெட்டப்பட்டு வீழ்கின்றார். அதனைக் கண்டு வருந்திய பார்வதி கடுஞ் சினம் கொண்டு தேவர்களுக்கு எதிராக எழ, பார்வதியின் சினத்தினை நீக்க ஒரு யானையின் தலையை விநாயகரின் உடலில் பொருத்தி அவருக்கு மீண்டும் சிவன் உயிர் தருகின்றார். மேலும் இனி என்னை நோக்கி வருபவர் யாராக இருந்தாலும் உன்னைக் கண்ட பின் தான் என்னைக் காண முடியும் என்ற வரமும் விநாயகருக்கு சிவன் வழங்குவதாக புராணம் நீள்கின்றது.நிற்க.

மேலே உள்ள கதையின் படி தனது தந்தையின் கையாலேயே மரணமுற்று பின் மீண்டும் தன் தந்தையாலேயே உயிர் பெறுகின்றார் பிள்ளையார். அதாவது அவரின் மரணமும் உயிர்த்தெழுதலும் அவரின் தந்தையினாலேயே நிகழ்கின்றது. இப்பொழுது நாம் இதைப் போன்ற கதைகள் அதாவது ஒரு கடவுள் இறந்து மீண்டும் உயிர்தெழுந்த கதை உலகில் வேறு எங்காவாது இருக்கின்றதா என்று நோக்கினால், ஆம் இருக்கின்றது என்பதே பதிலாக வருகின்றது.

அந்தக் கதையின் நாயகர் - இயேசு கிருத்து. இவரும் இவரின் தந்தையின் ஆணைப்படியே பலியாகி பின் மீண்டும் தன் தந்தையின் அருளாலேயே உயிர் பெற்று எழுவதாக இவரின் கதை நீள்கின்றது.

அதாவது இரண்டு பேருமே கடவுளின் பிள்ளைகள். இருவருமே தங்களது தந்தையால் மரணத்தை தழுவுகிறார்கள். பின்னர் மீண்டும் தங்கள் தந்தையின் அருளாலே உயிர்த்து எழுகின்றார்கள்.

ம்ம்ம்...ஆச்சர்யமான ஒற்றுமை தான். ஆனால் இருவரும் ஒருவர் தான் என்று நாம் கருத இந்த ஒரு ஒற்றுமை நிச்சயம் பற்றாது. எனவே வேறு ஏதாவது ஆதாரங்கள்...ஒற்றுமைகள் இருக்கின்றனவா என்று நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. இந்நிலையில் தான் அவ்வை பாட்டியார் நம்முடைய துணைக்கு வருகின்றார் அவரின் விநாயகர் அகவல் நூலினை ஏந்திக் கொண்டு.

இதோ அவரின் நூலில் உள்ள ஒரு பாடல்.

"குருவடி வாகிக் குவலயந் தன்னில்
  திருவடி வைத்துத் திறமிது பொருளென
  வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
  கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே"


இந்தப் பாடல் மூலம் அவ்வையார் விநாயகரை 'குருவாக இந்த உலகில் பிறந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களின் பாவத்தினை கோடு ஆயுதத்தால் நீக்கினார்' என்று கூறுகின்றார். ஆச்சர்யமாக இதுவும் இயேசு கிருத்துவின் கதையோடு பொருந்துகின்றது.

இயேசுவின் கதைப்படி அவர் மக்களின் பாவத்தினைப் போக்க இவ்வுலகில் பிறந்து பின்னர் அவர்களுக்காக உயிர் துறந்து மக்களின் பாவத்தினை களைந்தார். மேலே அவ்வையாரும் இதைப் போன்ற ஒரு விடயத்தையே கூறுகின்றார். அதுவும் கோடு ஆயுதத்தின் மூலம் மக்களின் பாவத்தினை போக்கினார் என்றும் கூறி இருக்கின்றார். அது என்ன கோடு ஆயுதம்... ஆய்வாளர்களின் கூற்றினைக் காண்போம்.


சிலுவையில் அறைந்து மக்களைக் கொள்வது என்பது ரோமர்களின் பழக்கம். இப்பழக்கம் இந்தியாவில் கிடையாது.
சிலுவைகளில் மக்களைப் பலியிடும் பழக்கம் இந்தியாவில் என்றுமே இருந்தது கிடையாது. எனவே சிலுவையைப் பற்றி இங்கே மக்கள் அதிகம் அறிந்து இருக்க வாய்ப்பு கிடையாது. எனவே தான் சிலுவையை (அது கோடுகளின் வடிவமாகத் தானே இருக்கின்றது) கோடு ஆயுதம் என்றே அவ்வை குறித்து இருக்கின்றார் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே இயேசு மக்களின் பாவம் நீக்க சிலுவையில் பலியானதையே விநாயகர் அகவலில் அவ்வையார் அவ்வாறு விநாயகரை வைத்து குறிப்பிட்டு இருக்கின்றார் என்று நாம் கருத முடிகின்றது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

ம்ம்ம்... இரண்டு கதைகளும் ஒத்து தான் போகின்றன. ஆனால் இதோடு நாம் நின்று விடாத படி மேலும் சில விடயங்களும் இருக்கத் தான் செய்கின்றன.

உதாரணத்துக்கு விநாயகரின் புராணக் கதையிலே அவர் பார்வதியின் உடலில் இருக்கும் அழுக்கினை வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது. உலகினையே படைத்த அன்னையானவள் அவளின் அன்புப் புதல்வனை அவள் உடலின் அழுக்கினைக் கொண்டா உருவாக்குவாள்? வேறு வழியே பார்வதி தேவிக்கு இருந்து இருக்காதா என்ன என்ற கேள்வி இயல்பாக எழும் தானே. ஆச்சர்யமாக இந்தக் கேள்விக்கு பதில் விவிலியத்தில் இருந்து வருகின்றது.

"நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்." - II கொரியந்தியர் (5 : 21)


மேலே உள்ள வரியின்படி இறைவன் மனிதர்கள் யாவரும் நேர்மையுள்ளவர்களாக மாற ஒரு பாவமும் அறியாத அவரின் பிள்ளையை மனிதர்களுக்காக பாவம் ஆக்கினார் என்று இருக்கின்றது. அதாவது மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் அவர்களுக்காக இறைவனின் மகன் சுமப்பதாக விவிலியம் விவரிக்கின்றது. இதையே தான் நம்முடைய புராணக் கதையும் மறைமுகமாக பிள்ளையார் பார்வதியால் அழுக்கினை வைத்து உருவாக்கப்பட்டதாக கூறுகின்றது.

மேலும் விவிலியத்தில் 'என் வழியாகவே இறைவனை அடையலாம்' என்று இயேசு கூறுவதாக வருகின்றது. இங்கு நம் புராணங்களிலும் விநாயகரை வழிப்பட்ட பின்பு தான் தன்னிடம் வர முடியும் என்று சிவன் கூறியதாக இருக்கின்றது.

இவ்வளவு ஒற்றுமைகள் எதேச்சையாக தோன்றி இருக்குமா? அல்லது உண்மையிலையே நம்முடைய புராணக் கதைகளுக்கு உள் அர்த்தங்கள் வேறு இருக்கின்றனவா... நாம் சிந்திக்கத் தான் வேண்டி இருக்கின்றது.

சரி...விநாயகர் தான் இயேசு என்றால் பின்னர் எதற்காக யானைத் தலையுடன் அவர் காட்சி அளிக்கின்றார் என்ற கேள்வியும் இங்கே எழும்பலாம். இந்தக் கேள்விக்கான விடைக்கும் நாம் மீண்டும் இயேசுவை காண வேண்டி இருக்கின்றது.

இயேசு உயிர் துறக்கும் வரை இருந்த நிலை வேறு. சாதாரண மனிதனாக அவர் இருந்தார்.
உயிர் பெற்று எழுந்தப் பின்பு இருந்த நிலை வேறு. தெய்வத் தன்மையுடன் அவர் திகழ்கின்றார். இந்த இரண்டுத் தன்மைகளுக்கும் வேற்றுமைகள் உண்டு.

அந்த வேற்றுமைகளை வெளிப்படுத்தவே,

உயிருடன் இருந்த விநாயகர் - மனித வடிவாகவும்
இறந்து உயிர்தெழுந்த பின் - யானைத் தலையுடனும் இருக்கின்றார்.

அதாவது இறக்கும் முன் அவர் இருந்த நிலை வேறு...இறந்து மீண்டும் உயிர் பெற்ற பின்பு அவர் இருந்த நிலை வேறு. இதனையே புராணக் கதைகள் மூலம் நம் முன்னோர்கள் விலகிச் சென்று உள்ளனர். ஆனால் காலப்போக்கில் அந்தப் புராணக் கதைகளுக்கு வேறு அர்த்தங்கள் கற்ப்பிக்கப்பட்டு அவை நிலை தாழ்த்தப்பட்டன என்பது சோகமான வரலாறு.

சரி அந்த கதை இப்பொழுது நமக்குத் தேவை இல்லை. இப்பொழுது நாம் இயேசுவே விநாயகராக நம்முடைய மண்ணில் குறிக்கப்பட்டு இருக்கலாம் என்று பார்த்தோம். இறைவனின் ஒரு பிள்ளையை பார்த்தாயிற்று. இன்னும் மூன்று பேர் மீதம் உள்ளனர். காண்போம்.

முருகா... குமரா ... வேலவா !!!!

தொடரும்...!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |

பி.கு:

விநாயகரைக் குறித்த தகவல்கள் எந்த சங்க இலக்கியங்களிலும் சரி இயேசுவுக்கு முந்தைய கால நூல்களிலும் சரி கிடைக்கப் படவில்லை என்பதே உண்மையான நிலையாக இருக்கின்றது. மேலும் இதுவரை கி.பி 5 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் விநாயகரின் சிலைகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

12 கருத்துகள்:

பிள்ளையார் - இயேசு கிறிஸ்து இருவருக்குமுள்ள தொடர்புகளை சுவராஸ்யமாக சொன்னீர்கள். ஆயினும் வைணவத்தில் கிரிஷ்ணனுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பு மிக ஆழமானதாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிறிஸ்து-கிருஷ்ணன் பிறக்கப்போகும் செய்தி மக்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது;இருவருமே கடவுளின் அவதாரமாகக் கருதப்படுபவர்கள். கிறிஸ்து-கிரிஷ்ணனைக் கொல்ல அப்போதிருக்கும் அரசர்கள் பல குழந்தைகளைக் கொன்று குவிக்கிறார்கள். கிறிஸ்து - கிருஷ்ணன் பெயர் ஒற்றுமைகளையும் காண்க. நீங்கள் என்ன சொல்கிறிர்கள்?

தோழர் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் இந்து மத சாக்கடையை சுத்தம் செய்ய முடியாது, பிள்ளையாரை ஏசுவுக்கு சமன் செய்வது பெரிய வரலாற்று பிழை, சாதாரணமாக எல்லா இந்து கடவுள்களுமே கேவலமான, இயற்கைக்கு புறம்பான பிறப்பை உடையவர்கள் என்றாலும் பிள்ளையார் பிறப்பு இன்னும் கேவலம் அனால் நீங்களோ சிலவற்றை வெட்டி ஒட்டி ஏசு என்கீர்கள்..
//பின்னர் ஒரு கட்டத்தில் சிவனை இவர் பார்வதியின் பொருட்டு எதிர்க்க வேண்டி வர சிவனால் தலை வெட்டப்பட்டு வீழ்கின்றா// இதை விவரித்தி இருக்கலாமே தோழர்
முடியாது கரணம் உங்களுக்கே திரியும் அது ஆபாசம் ஆணாதிக்கம் என்று இதோ நீங்கள் சொல்லாமல் விட்டது //சிவமகாபுராணத்தில், பார்வதியார் குளிக்கப்போனபோது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையைப் (அழுக்கு) பிராண்டி அதற்கு உயிர் கொடுத்து, அதைக் காவல் வைத்துவிட்டுச் சென்றார். சிவபெருமான் வந்து உள்ளேபோக முற்பட்டபோது சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் மோதல் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது.

இங்கு தெய்வமான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்குத் துணிவுள்ளவர்கள் யார்? இது ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது.

எனவே, கடவுள்கள் ஆணாதிக்கம் கொண்டவை என்பதையும், பெண் தெய்வங்கள் பாதுகாப்பற்ற எல்லையில் வாழ்ந்ததையும் காட்டுகின்றது.

பெண்கள் தமது கற்புரிமையைப் பாதுகாக்க ஆண் கடவுள்களுடன் போராட வேண்டியிருந்ததை அம்பலப்படுத்துவதுடன், கடவுளின் பொய்மை, நீதி அம்பலமாகின்றது.

இந்த ஆணாதிக்க ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி வழிபடும் பெண்கள் எப்படிப் பாதுகாப்பைப் பெறமுடியும். ஏனெனில் அந்தத் தெய்வங்களே பல வக்கிரங்களில் பிறந்ததுடன், கற்பழிப்புகளும் கூடிய வன்முறைகளில் ஈடுபட்டவர்கள்.

பெண்கள் தமது உடுப்பை மாற்றும் அறையில் வைத்திருக்கும் ஆண் தெய்வங்களும் சரி, தூண்துரும்பில் இருக்கும் தெய்வங்களும் சரி, பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க இரசனையில் இரசிக்கின்றன அல்லவா?

இதைத்தான் பிள்ளையார் கதை தெளிவாக்குகின்றது//

இப்படி ஒரு கேடுகெட்ட புளுகை எப்படி சரி செய்கீர்கள்...

இதுமட்டும் அல்ல நீங்கள் வியந்து ஓதும் திருஞானசம்பந்தர் தேவாரம் சொல்லும் பிள்ளையார் பிறப்பு
''பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"36

- சிவன் ஆண் யானையாகவும், உமாதேவியார் பெண் யானையாகவும் மாறி புணர்ந்து உருவானவரே பிள்ளையார் என்று பிள்ளையார் பிறப்பை விளக்குகின்றது.

இதையே சுப்ரபேத ஆகமம் என்ற நூலும் கூறுகின்றது.

அருவருக்கத்தக்க புணர்ச்சி வக்கிரத்தில் தெய்வங்கள் திரிந்தன என்பதைக் கூறும்போது, இந்த மாதிரி கற்பனைகளை உருவாக்கிய நபர்களின் பிம்பம் பிரதிபலிக்கின்றது.

மிருகங்களின் புணர்ச்சிகளை இரசிக்கும் மனிதப் பண்புகள் மிருகத்தைவிட இழிவானவை.

இதில் இருந்துதான் வக்கிரமான நீலப்படங்கள் (புள+பிலிம்) மனிதப் புணர்ச்சியையும் மிருகத்துடன் மனிதன் கலந்த புணர்ச்சியையும் சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஜனநாயகச் சந்தையில் மூலதனமாக்கிக் கொடிகட்டி பறகின்றது.

MR.தோழன் மோகன்
//எல்லா இந்து கடவுள்களுமே கேவலமான,
இயற்கைக்கு புறம்பான பிறப்பை உடையவர்கள்
என்றாலும் பிள்ளையார் பிறப்பு இன்னும்
கேவலம் அனால்
நீங்களோ சிலவற்றை வெட்டி ஒட்டி ஏசு என்கீர்க
ள்..//
appadi yeanral christ enna iyarakiku purambha pirakalayaa
kanipenuku mahana piranthara athumattun illa thaanai petsa thaiye 'pennae yaar nenu keataru' athu thapu illayaa
ithu mattum illa inum niraya iruku
appadi irukum poothu christva vinayakaroda compare pannathila enna thapu

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

வழிப்போக்கனது உலகம்... இந்த வலைபூவில் இருந்து நான் அறிந்து கொண்ட வரலாற்று செய்திகள் மிக ஏராளம். வரலாற்று செய்திகள் பல இந்த வலைபூவில் வந்தாலும், இடையிடையே பல இந்து கடவுள்களைப் பற்றிய செய்திகளையும் ஆசிரியர் அவ்வப்போது தந்துவருகிறார். அது ஏன் என்று தெரியவில்லை? இந்து மதத்தின் மேல் உள்ள பக்தியின் விளைவாக பல காரணங்களைக் கூறி இந்து மதக்கடவுள்களை பற்றிய செய்திகளைத் தருகிறார். இந்த கருத்துகள் வலைபூவில் வந்துள்ள பல வரலாற்று கருத்துகளையும் உண்மைதானா அல்லது ஆசிரியரின் திரிபுகளா என நினைக்கவைக்கிறது.

@தமிழ்த்தென்றல்

தங்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே.

ஆம்...கிருசுனருக்கும் கிருத்துவுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளையும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவற்றைப் பற்றி பின் வரும் பதிவுகளில் காண்போம்.

நன்றி நண்பரே!!!

@Krishna,

//வழிப்போக்கனது உலகம்... இந்த வலைபூவில் இருந்து நான் அறிந்து கொண்ட வரலாற்று செய்திகள் மிக ஏராளம்.//

நன்றி நண்பரே!!! :)

//வரலாற்று செய்திகள் பல இந்த வலைபூவில் வந்தாலும், இடையிடையே பல இந்து கடவுள்களைப் பற்றிய செய்திகளையும் ஆசிரியர் அவ்வப்போது தந்துவருகிறார். அது ஏன் என்று தெரியவில்லை?//

ம்ம்ம்...!!! இன்றைய நிலையில் ஒருவன் மதங்களைப் பற்றியும் சரி கடவுளைப் பற்றியும் பேசினாலே இத்தகைய சந்தேகங்கள் வருவது இயல்பாகி விட்டது. தவறுகள் சந்தேகப்படுபவர்களின் மீது அல்ல.. மதங்களின் மீதே இருக்கின்றது. மததிற்கோர் கடவுள்..அதற்கோர் இனம்..அவற்றிடையே கலவரங்கள் என்று உலகத்தினை மதங்கள் இவ்வாறு பிரித்து வைத்து இருக்கும் பொழுது இத்தகைய சந்தேகங்கள் வருவது நியாயமே. ஆனால் நண்பரே என்னுடைய இந்தப் பதிவுகள் எந்த ஒரு சமயத்தினைப் பற்றிய தனிப் பதிவுகள் அல்ல. மாறாக எவ்வாறு அனைத்து மதங்களும் ஒரு கொள்கையையே பல்வேறு நிலையில் விளக்குகின்றன என்றும் அந்த சமயங்கள் எவ்வாறு இன்று ஒரு சிலரால் அடிமைப் படுத்தப் பட்டு இருக்கின்றன என்பதனைப் பற்றியும் தான். இந்நிலையில் இந்து கடவுள்களைப் பற்றி கூறாது இருப்பது இயலாத ஒன்றாகும். ஏனெனில் உலக சமயங்கள் அனைத்தையும் காணும் பொழுது நம் மண்ணில் வளர்ந்த சமயங்கள் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

மேலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று மதத்தினால் மக்கள் பலர் ஒடுக்கப்பட்டு இருக்கும் பொழுது அம்மதத்தினைப் பற்றியும் அதன் வரலாற்றினைப் பற்றியும் நாம் கண்டு தானே ஆக வேண்டி இருக்கின்றது.

தொடர்ந்து படியுங்கள்... அப்படியே தங்களின் கருத்துகளையும் தெரிவியுங்கள் நண்பரே!!!

veena pona mohan mattrum raja neengal pirantha murai arinthirunthal indha vazhkkai ungalukku yetharku, theivaththai ninthithal un mudivu nerunkivittathu enruthan artham

@VP
//veena pona mohan mattrum raja neengal pirantha murai arinthirunthal indha vazhkkai ungalukku yetharku, theivaththai ninthithal un mudivu nerunkivittathu enruthan artham//

nanbare... neengal irai nambikkai udaiyavar endre ennukindren. avvaaru irukka iraivanin padaippai veena pona endruk kooruthal thagumo. anaivarum iraivanin kuzhanthaikal.. anaivaraiyum mathippom.

21. குருவடி வாகிக் குவலயம் தன்னில்
22. திருவடி வைத்துத் திறமிது பொருளென
23. வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
24. கோடா யுதத்தால் கொடுவினை களைந்து
25. உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

பதவுரை:
குவலயம் தன்னில் - நிலவுலகில்,
குருவடிவு ஆகி - (திருவருள்) குரவனாகத் திருமேனி தாங்கி,
திருவடி வைத்து - (என் தலைமேல்) திருவடியை ஏற்றி,
திறம் - (இது) நிலை பேறானது,
இது பொருள் என - இது ஒன்றுதான் மெய்ப்பொருள் என்று,
வாடா வகை - (அடியேன்) வாட்டம் கொள்ளாதபடி,
தான் - அப்பெருமான்,
மகிழ்ந்து எனக்கருளி - இன்ப வடிவனாக இருந்து எளியேனுக்குத் திருவருள் பாலித்து,
கோடு ஆயுதத்தால் - (திருக்கரத்தில் ஏந்திய) தந்தம் ஆகிய மெய்ஞ்ஞானக் கருவியினால்,
கொடுவினை களைந்து - (எனது முன்னைய) நேர்மையில்லாத செயல்களை அடியொடு நீக்கி,
என் செவியில்,
உவட்டா உபதேசம் புகட்டி - தெவிட்டாதபடி உபதேசத்தை (இனிது) உபதேசித்து (என்றவாறு).

this is what i got from

http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0231.html

கோடு ஆயுதம் என ஔவையார் சொன்னது விநாயகர் கையில் உள்ள முறிந்த யானை தந்தம், அதை எப்படி நீங்கள் சிலுவையுடன் இணைத்தீர்கள் என புரியவில்லை.
கொஞ்சம் விளக்கவும்.

@பாலா,

//கோடு ஆயுதம் என ஔவையார் சொன்னது விநாயகர் கையில் உள்ள முறிந்த யானை தந்தம், அதை எப்படி நீங்கள் சிலுவையுடன் இணைத்தீர்கள் என புரியவில்லை.
கொஞ்சம் விளக்கவும்.//

நண்பருக்கு வணக்கங்கள்...!!!

முதலில் நாம் விநாயகரைப் பற்றி சில விடயங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

- அவர் வினை தீர்பவராக அறியப் பெறுகின்றார்.
- இறந்து உயிர் பெற்று எழுந்த இறைவனாக அறியப் பெறுகின்றார்.
- இறைவனின் மகனாக அறியப் பெறுகின்றார்.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்னவென்றால்,

- இக்கதைகள் எல்லாம் கி.பி காலத்திலேயே கிடைக்கப் பெறுகின்றன.
- விநாயகன்/பிள்ளையார் என்ற ஒருவர் இருந்ததாக சான்றுகள் கி.மு காலத்தில் இல்லவே இல்லை.
- பிள்ளையாரின் தோற்றம் பற்றி பல கருத்துக்கள் நிலவிக் கொண்டு இருக்கின்றன. பிள்ளையார் இவ்வாறு தான் தோன்றினார் என்று உறுதியாகக் கூறும் செய்தி ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு புராணக் கதையை கூறிக் கொண்டு இருக்கின்றனர். (http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/02/blog-post_4645.html)

மக்களின் வினைப் போக்க இறந்து உயிர்த்து எழுந்த இறைவனின் மகனைப் பற்றிய விடயத்தை புராணங்களின் மூலமாக விளக்க சான்றோர்கள் எடுத்த முயற்சி காலப்போக்கில் பல்வேறு புராணங்களாக திரிந்து இருப்பதையே நமக்கு இது உணர்த்துகின்றது.

அதனால் தான் விநாயகர் வினைத் தீர்ப்பார் என்பதனை ஏற்றுக் கொள்ளும் நாம் அவர் என்று முதல் வினை தீர்க்க ஆரம்பித்தார் என்றும் அவர் எப்படி வினை தீர்ப்பார் என்றும் அறியாது இருக்கின்றோம்.

முறிந்த தந்தத்தால் வினைத் தீர்த்தார் என்றால், கி.பி காலத்திலேயா அவ்வாறு தீர்த்தார் என்றும் எவ்வாறு முறிந்த தந்தத்தைக் கொண்டு அவர் தீர்த்தார் என்றும் எழும் கேள்விக்கும் சரியான கேள்விகள் கிட்டப் பெறாது.

அந்நிலையில் விநாயகரை அறியாமல் கொடுத்த விளக்கம் தான் மேலே நீங்கள் இணையத்தில் பார்த்துள்ள விளக்கம் நண்பரே.

கோடாயுதத்தால் கொடு வினை களைந்தார் என்பது - சிலுவையில் பலியாகி வினைத் தீர்த்த இறைவனின் மகனைக் குறிக்குமா அல்லது உடைந்த தந்தத்தால் வினை தீர்த்தவர் என்று குறிக்குமா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன் நண்பரே :).

மேலும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்...!!!

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/06/31.html


கேள்விக்கு நன்றி...!!!

நாம் எல்லோரும் நாட்ற்றத்தில் இருந்து தானே பிறந்தோம், அம்மா மாதம் தோறும் வெளியே தள்ள வேண்டிய கழிவு அதாவது தீட்டு அது உள்ளேயே பிறப்பவன் மனிதன். அப்போ நம் தலை ஆகாத தலை. அதை ஆனா (யானை) தலை ஆக்க சிவன் வரவேண்டுமோ. அவருக்கு காது பெரியது வயிறு பெரியது. நிறைய கேட்க வேண்டும். வயிறு நிரம்பவேண்டும் ஒ அவர் தான் தொந்திக்கனபதியோ. அறிந்தால் சிவன் அறியாவிட்டால் எமன்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு