நாத்திகவாதிகள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.”கடவுள் இல்லை!!!”இதற்கு மாற்றுக் கருத்தே அவர்களிடம் கிடையாது. ஆனால் ஆத்திகவாதிகள் தான் குழப்புகின்றார்கள்.
“கடவுள் இருக்கின்றார்… ஆனால் என் கடவுள் மட்டுமே இருக்கின்றார்… அடுத்தவன் கூறும் கடவுள் வெறும் பொய், பித்தலாட்டம்!!!” என்னும் இதேக் கருத்தைத் தான் அனைத்து மதத்தினரும் சுருதி மாறாமல் கூறுகின்றனர்.

மேலும் ஒரு சிலர் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றக் கோட்பாட்டினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

இன்னும் சிலர் இதற்கு எல்லாம் ஒருப் படி மேலே போய் ‘நான் கடவுள்’ என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.

இப்படி கடவுள் இருக்கின்றார் என்றுக் கூறும் நபர்கள் வெவ்வேறு கருத்துக்கள் கூறுவதினால் ‘கடவுள் இருக்கின்றாரா?” என்றக் கேள்வி மெய்யாகவே நம்முள் எழுகின்றது.

கடவுள் இருக்கின்றாரா?

அப்படி இருந்தால் அவர் எந்த மதத்தினைச் சார்ந்தவர்?

மனிதன் என்பவன் யார்?

அவன் படைக்கப்பட்டானா அல்லது ஒரு விபத்தினால் உருவானானா?
போன்றக் கேள்விகளுக்கு விடையினைத் தேடும் ஒரு வரலாற்றுத் தேடல் முயற்சியே இந்தப் தொடர் பதிவு!!! எனவே உங்களது விமர்சனங்களும் விவாதங்களும் வரவேற்க்கப்படுகின்றன.
*********************************************************************************************************
உங்களுக்குத் தெரியுமா???

உலகில் உள்ள மதங்கள் யாவும் ஆசிய கண்டத்திலேயே தங்களது பிறப்பினைக் கொண்டு இருக்கின்றன. அவை கிருத்துவம், இசுலாம், சைவம், வைணவம், சமணம் மற்றும் பௌத்தம்.

இதில் சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவை நாத்திக மதங்கள். அவை கடவுள் இல்லை என்றக் கொள்கையினை உடையவை.

மற்ற சமயங்கள் முழுவதும் ஆத்திக சமயங்கள்.

இதில் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியத் தகவல் என்னவென்றால் உலகில் நாத்திக சமயங்கள் இந்தியாவினால் மட்டுமே தோன்றி இருக்கின்றன.

புத்தரால் தோற்றுவிக்கப் பட்டதும் அசோகரால் நாடு முழுக்கப் பரப்பப் பட்ட புத்த மதம், இலங்கையில் இருக்கின்றது… சீனத்தில் இருக்கின்றது… சப்பானில் இருக்கின்றது…. ஆனால் அது பிறந்த இடமான இந்தியாவில் இன்று அது பெரிய அளவில் இல்லை.

இதே நிலை தான் சமணத்திற்கும்…!!!

ஏன்?

இன்று இந்தியா என்றால் அது இந்து நாடு என்கின்றார்களே பெரும்பான்மையினர்… அந்த நிலை எதனால் வந்தது?

வட நாட்டில் தோன்றிய பௌத்த மற்றும் சமண மதங்கள் தமிழகத்தில் கூட வேருன்றி இருந்த சூழ்நிலையில் எவ்வாறு தங்கள் செல்வாக்கினை இழந்தன?.
இந்து மதம் என்றால் என்ன?… இது தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்கின்றார்களே… உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலினைக் காண நாம் முதலில்
இந்து மதத்தினை சற்று வரலாற்று சம்பவங்களை வைத்துப் பார்ப்போம்.!!!

1794 …

கொல்கத்தா - பிரிட்டுசு இந்தியாவின் அன்றைய தலைநகரம்…!!!

தங்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவின் மக்களை அவர்களின் மதங்களுக்கு உரிய சட்டங்களை வைத்துப் பிரித்து அவர்களுக்கு சட்டங்களை இயற்ற அப்போதைய பிரிட்டுசு உச்ச நீதி மன்றத்தின் நீதிபதி சர் வில்லியம் சோன்ஸ் (sir William Jones)  முயன்றுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்னே ஒரு சோதனை.

கிருத்துவத்தை பின்பற்றுபவர்கள் கிருத்துவர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் விவிலியம்.

இசுலாம் மதத்தினை பின்பற்றுபவர்கள் இசுலாமியர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் திருக்குரான்.

ஆனால் மற்ற மக்களை என்ன செய்வது… அவர்களுக்குரிய நீதிநூல் என்ன? - இந்தக் கேள்விக்குத் தான் அவர் விடைத் தேடிக் கொண்டு இருந்தார்.
இந்த மக்களை எவ்வாறு அழைப்பது???

“சரி… இந்த மக்கள் அனைவரும் சிந்து சமவெளி நாகரீகத்தில் தோன்றியவர்கள் எனவே அவர்களை சிந்து மக்கள் என்று அழைக்கலாம்…” என்று அவர் ஒரு வழியாக முடிவு செய்தாலும் இன்னும் அந்த நீதி நூலுக்கு அவருக்கு விடைக் கிடைத்தப்பாடில்லை.

அந்த நிலையில் தான் சில இந்தியர்கள் (ஆரியர்கள் - இவர்களைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்) தங்கள் மதத்தின் நீதி நூல் என மனு தர்ம சாசுதிரத்தை எடுத்து அவரிடம் தருகின்றனர்.

“ஆ!!! விடை கிடைத்தாயிற்று!!!” என்று அவரும் பெருமூச்சினை விட்டவாறே ”இந்த இந்து மக்களுக்கு (சிந்து என்பதை ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாமல் இந்து என்று அவர் பெயர் இட்டு விட்டார்) உரிய நீதி நூல் மனு தர்ம சாசுதிரம்” என்றுக் கூறி சட்டத்தை இயற்றி விட்டார்.

இந்த நிகழ்வுக்கு முன்னர் வரையிலும் இந்து என்ற சொல் எந்த இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ இடம் பெற்றதுக் கிடையாது.!!! 1794 ஆம் வருடத்தில் தான் இந்து என்றச் சொல் பிறப்பெடுக்கின்றது.

“சரி… அதனால் என்ன கெட்டு போய் விட்டது” என்கின்றீர்களா… நிச்சயம் ஒன்றுமில்லை… ஆனால் வரலாறு முக்கியம் அமைச்சரே!!!
சரி … இப்பொழுது ஒரு கேள்வி…!!!

இந்து மதம் எங்கே தோன்றியது…???

“வட நாட்டில்… இமாலயத்தில்” என்கின்றீர்களா!!!

“இல்லை!!!” என்கின்றேன் நான்.

என்னுடைய கூற்றிற்கு நான் ஆதாரங்களைக் கூறும் முன் நாம் சற்று இந்து மதத்தை விரிவாகப் பார்ப்போம்!!!

பயணிப்போம் வரலாற்றினுள்…!!!


பி.கு :
மதம்… இறைவன்… ஆகிய இரண்டும் உணர்ச்சிமிகு தலைப்புகள். இதை நான் யார் மனதையும் புண்ணாக்கும் எண்ணத்திலோ அல்லது யார் நம்பிக்கையினையும் குலைக்கும் எண்ணத்திலோ எழுத வில்லை. நான் அறிந்த கருத்துக்களை சரி பார்க்கவும்,
நான் கூறுவன உண்மையாய் இருக்கும் பட்சத்தில்,
அதை மற்ற நண்பர்களும் அறிய உதவும் வண்ணம் என்னால் முடிந்த கடமையாக இருக்கட்டுமே என்று தான் எழுதுகிறேன்.
தவறு என்று நினைத்தால் கூறுங்கள்… விவாதிப்போம்… நான் தவறென்றால் நிச்சயம் மாற்றிக் கொள்வேன்!!!

இந்தச் செய்திகளை நான் மா.சோ.விக்டர் அவர்கள் எழுதிய ’குமரிக்கண்டம்’ மற்றும் ’தமிழர் சமயம்’
என்ற நூல்களில் இருந்தும்,
தெய்வநாயகம் அய்யா அவர்களின் ஆராய்ச்சியில் இருந்தும் அறிந்துக் கொண்டவையே.

அந்தச்செய்திகளை என்னுடைய நடையில் என்னுடைய பார்வையினையும் சேர்த்து
தொகுத்து எழுதுவதே இந்தப் பதிவு.

நன்றி!!!

22 கருத்துகள்:

http://suddhasanmargham.blogspot.com/2011/09/blog-post_14.html

வேதம் ஆகமம் ,புராணம் இதிகாசம் சாத்திரம் போன்ற கட்டுக் கதைகளை கட்டி ,மக்களிடம் பரப்பி .மக்களை அறியாமையில் வைத்து ஏமாற்றி விட்டார்கள் .கடவுள்,-- வேதத்தில் ,ஆகமத்தில் புராணத்தில் சாத்திரத்தில் சொல்லியுள்ளார் என்று மக்களை இதுநாள் வரை ஏமாற்றி வருகிறார்கள் .இதற்கு என்று ஒரு கூட்டம் இந்தியாவில் நிறைந்து உள்ளது.

அறிய தகவல்கள்.. தொடருங்கள்.

வாழ்த்துக்கள்...

ஸலாம் சகோ.வழிப்போக்கன்...

பதிவில் நிறைய தவறுகள், வரலாற்றுத்திரிபுகள், மொக்கை வாதங்கள் உள்ளன...

அவற்றில் சில...

//நாத்திகவாதிகள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.//---அதாவது ஒரு விஷயத்தில் தெளிவு இல்லையெனில்... அப்படி ஒரு விஷயமே இல்லை என்று முடிவு செய்வது அறிவுடைமையா..? அதுவே தெளிவு என்றாகிடுமா..? இது சொதப்பல் இல்லையா..!?

//ஆனால் ஆத்திகவாதிகள் தான் குழப்புகின்றார்கள்.//---இதுவும் சொதப்பல்தான். ஏன் இப்படி ஆத்திகர்கள் என்று பொதுப்படுத்துகிறீர்கள்..? இவர்களில் யார் சொல்வது சரி என்று ஆராயுங்கள்..!

//என் கடவுள் மட்டுமே இருக்கின்றார்…//---ஒரே கடவுள்தான் என்போர்... இப்படி சொன்னால்தான் சரி..! மாறாக அனைத்து கடவுள்களையும் ஒத்துக்கொண்டால்... அது உர் கடவுள் கொள்கைக்கு முரண்..!

///மேலும் ஒரு சிலர் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றக் கோட்பாட்டினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.///---இது இஸ்லாமிய கோட்பாடு.

//‘நான் கடவுள்’//---இது மெண்டல் கேஸ்... இப்படி சொன்னவர் எவரும் பிறக்காமல் இருந்தது இல்லை... சொன்ன பின்னர் இறக்காமல் இருந்தது இல்லை.

பிறப்பும் இறப்பும் இருந்தால்.. அது 'கடவுள்தன்மை' இல்லை..!

///இப்படி கடவுள் இருக்கின்றார் என்றுக் கூறும் நபர்கள் வெவ்வேறு கருத்துக்கள் கூறுவதினால் ‘கடவுள் இருக்கின்றாரா?” என்றக் கேள்வி மெய்யாகவே நம்முள் எழுகின்றது///---மிகச்சரியான சூப்பர் வரி..!

//அப்படி இருந்தால் அவர் எந்த மதத்தினைச் சார்ந்தவர்?//---சொதப்பல்...!

"எந்த மதம் வரையறுக்குக்கும் கடவுள்... சரி..?"--இப்படி இருந்திருக்க வேண்டும் கேள்வி.


//தேடல் முயற்சியே இந்தப் தொடர் பதிவு!!! //---விடையினை தேடிவிட்டு அதை உண்மை என மனதார நம்பிவிட்டு சந்தேகம் இல்லாமல் தெளிவாக இருந்தால் பதிவு போடுங்கள். பிறருக்கு சொல்லுங்கள்.

'ஹிந்து' என்றால்... ஹிந்துகுஷ் மலைத்தொடருக்கு அப்பால் உள்ளவர்கள் என்று மேல்நாட்டு வரலாற்று ஆசிரியர்களால் செல்லப்பட்டனர் என்று சரித்திர பாடத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்து இருக்கிறேன். அப்போது என் ஆசிரியர்... 'இந்நாட்டில் உள்ள எல்லா மதத்தினரும் ஹிந்துக்கள்'தான் என்றார்.

நம் அரசியல் சாசன சட்டப்படி... "இந்து மதத்தினர்" என்றால்... முஸ்லிம், கிருத்துவர், சீக்கியர், புத்த-ஜைன-யூத மதங்கள் அல்லாதவர் அனைவரும் இந்துக்கள் எனப்படுவர். இதன்படி நாத்திகரும் சட்டப்படி இந்துக்கள்தான்.

அனைத்து மதங்களையும் நன்கு படித்து அறிந்துவிட்டு பதிவை சற்று சீரியஸாக எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கடைசியாக இஸ்லாமிய கடவுட்கொள்கையை மட்டும் சுருக்கமாக சொல்கிறேன்...

"மனிதர்களின் வணக்கத்திற்குரிய கடவுள் அல்லாஹ்" என்று இஸ்லாம் சொல்லவில்லை.

மாறாக,

"மனிதர்களின் வணக்கத்திற்குரிய கடவுள் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை" என்றுதான் இஸ்லாம் கூறுகிறது.

இந்த கடவுள் பிறக்கவும் இல்லை... யாரையும் பெக்கவும் இல்லை. மனைவியோ, குடும்பமோ.. உறவினரோ இல்லை.

சுவாசித்தல், உணவு உண்ணல், வேலை செய்து பிழைத்தல், ஆசாபாசம்... என எவ்வித தேவையும் கடவுளுக்கு இல்லை.

பசி, தூக்கம், களைப்பு, சோர்வு, மடத்தனம், தவறு செய்தல், பொய் சொல்தல்... என்று எதுவும் இல்லை.

இந்த கடவுளுக்கு இறப்பு இல்லை. இந்த பூமி, அது இருக்கும் சூரிய குடும்பம், அது இருக்கும் பால்வீதி மண்டலம், அது இருக்கும் பிரபஞ்சம், அதற்கு அப்பால் மனிதன் கண்டுபிடிக்காதவை என அனைத்தையும் படைத்து சரியாக இயக்கிக்கொண்டு இருப்பதும் அதே கடவுள்தான்.

கடவுளுக்கு முக்காலமும் தெரியும். மனிதன் வாழ்வதற்காகவே இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. 'அவன் எப்படி வாழ வேண்டும்' என்று ஒரு அறிவுரையாக... வழிகாட்டுதலாக... வந்தவையே 'வேதங்கள் எனப்படும் இறைவார்த்தைகள்'..! இது முதல் மனிதருக்கும் வழங்கப்பட்டது.

மக்கள் அவ்வப்போது இவற்றை மறக்கும் போது, இறைவார்த்தைகள் என்ற அப்படி ஒன்றே மக்கள் வாழ்வினில் இல்லாமல் போய் விடும்போது மீண்டும் மற்றொரு இறைத்தூதர் மற்றொரு வேதம் மூலம் இறைவாக்கு இறைவழிகாட்டல் எல்லாம் வந்தது.

இப்படி முதல் மனிதர் ஆதம் முதல் ஆரம்பித்த இறைத்தூதர் நியமித்து மனிதர்களுக்கு வழிகாட்டுதல் என்பது...

நூஹ்(நோவா), இப்ராஹீம்(ஆபிரஹாம்), தாவூது (டேவிட்), மூஸா(மோசஸ்), ஈசா(ஜீசஸ்)....என்று பல இறைத்தூதர்கள் வழியாக வந்து இறுதியாக இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) வரை தொடர்ந்து முடிந்து போனது.

'மனிதரில் யார் தம் செயலால் நல்லவர்கள்; யார் தீயவர்கள்' என்று அவர்களுக்கு உணரவைக்கவே... அவர்களே அறிந்து கொள்ளவே... அவர்களுக்கு சுயசிந்தனை தந்து கடவுளை சுயமாக ஆய்ந்து உணர்ந்து சுயமாக சிந்தித்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

யார் இறைவாக்குப்படி வாழ்ந்து இறைவன் தந்த வழிகாட்டுதல் படி இவ்வுலகில் பிற வாழ்கிறார்களோ அவர்களே வெற்றியாளர். தம் மனோ இச்சைப்படி இறைக்கடடளையை மதியாது வாழ்கிறாரோ அவரே தோல்வியாளர்.

அதன் அடிப்படையில், இனி விரைவில் வரப்போகும் இந்த உலகத்தின் இறுதி நாளுக்கு (இந்த நாள் இறைவனுக்கு மட்டுமே தெரியும்) அப்புறம் அதுவரை உலகில் வாழ்ந்த முதல் மனிதன் முதல் அப்போது பிறந்த கடைசி மனிதன் வரை தத்தம் செயல்களுக்கு விசாரணை செய்து அதன் அடிப்படையில் சுவர்க்கம்/நரகம் போன்ற தண்டனைகள் தரப்படும்.

அந்த இன்னொரு 'மறுமை வாழ்க்கை' நிரந்தரமானது. அதற்காக இறைவார்த்தைகளின் படி இறைத்தூதர் வழிகாட்டல் படி தம் வாழ்க்கையை இவ்வுலகில் அமைத்துக்கொண்டவர் வெற்றி பெறுவார் என்பது இஸ்லாமிய கடவுள் தத்துவம்.

இஸ்லாத்தில் மதம் வேறு வாழ்க்கை வேறு அல்ல. மனித வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு செயலும் இறைக்கட்டளைக்கு மாறு செய்யாமல் இருக்க வேண்டும். மிக மிக சுருக்கமாக... இவ்வளவுதான் சகோ.வழிப்போக்கன்.

தங்கள் தேடல் முன்முடிவுகள் அற்ற சரியான பாதையில் செல்ல விரும்புகிறேன்.

வணக்கம் சகோதரர் ஆசிக் அவர்களே... உங்களுடைய பின்னூட்டத்தை கண்டதில் மிக்க மகிழ்ச்சி...

முதலில் நான் கடவுள் இல்லை என்று சொல்ல வர வில்லை. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதே என்பதே எனது கோட்பாடு.

//நாத்திகவாதிகள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.// - தெளிவாக இருக்கின்றார்கள் என்று சொன்னேன். சரியாக இருப்பதாக சொல்லவில்லை.

//ஆனால் ஆத்திகவாதிகள் தான் குழப்புகின்றார்கள்.// - ஆம், மதத்தினால் இறைவனைப் பிரித்து என் கடவுள் உன் கடவுள் என்று சண்டையிடுவதினால் குழப்பத்தானே செய்கின்றார்கள்.

//அப்படி இருந்தால் அவர் எந்த மதத்தினைச் சார்ந்தவர்?// - இந்தக் கேள்வி படிப்பவர்களுக்காக. கடவுள் மதத்தினைக் கடந்தவர் என்று நான் அறிவேன் நண்பரே.

"//தேடல் முயற்சியே இந்தப் தொடர் பதிவு!!! //---விடையினை தேடிவிட்டு அதை உண்மை என மனதார நம்பிவிட்டு சந்தேகம் இல்லாமல் தெளிவாக இருந்தால் பதிவு போடுங்கள். பிறருக்கு சொல்லுங்கள்."

நான் ஒரு விடையினைத் தேடி வைத்து இருக்கின்றேன் தோழரே. அதை உண்மை என்று என் உள்ளம் நம்புகின்றது. ஆனால் நான் நம்புவதையே மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று நான் கருத முடியாதல்லவா... அவர்களும் சிலக் கருத்துக்கள் வைத்து இருக்கலாம். அந்தக் கருத்துகளையும் அறிந்துக் கொள்ளவே இதை ஒரு முயற்சிப் பதிவாக இடுகின்றேன்.

மேலும் இசுலாமில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி நண்பரே... முதல் பதிவினை வைத்து மட்டுமே தயைக் கூர்ந்து இப்பதிவு இப்படித் தான் என்று முடிவு செய்து விடாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்திற்கு முரணாக பட்டதெனில் கூறுங்கள். விவாதிப்போம்...

தங்கள் பின்னோடதிற்கு நன்றி நண்பரே!!! :)

நன்றி சகா...

நல்ல முயற்சி!

தொடர்ந்து எழுதுங்கள்.

சகோ.வழிப்போக்கன்,

///முதல் பதிவினை வைத்து மட்டுமே தயைக் கூர்ந்து இப்பதிவு இப்படித் தான் என்று முடிவு செய்து விடாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்திற்கு முரணாக பட்டதெனில் கூறுங்கள். விவாதிப்போம்...///---நியாயமான வாதம்..! அப்படியே, ஏற்றுக்கொள்கிறேன்.

///நான் ஒரு விடையினைத் தேடி வைத்து இருக்கின்றேன் தோழரே. அதை உண்மை என்று என் உள்ளம் நம்புகின்றது.///---மிக்க மகிழ்ச்சி சகோ.வழிப்போக்கன்.

///ஆனால் நான் நம்புவதையே மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று நான் கருத முடியாதல்லவா.../// ---நீங்கள் வைக்கும் வாதங்கள் லாஜிக்கலாக சரியானதாக, அறிவுக்கு ஏற்கும்படி உண்மையானதாக இருப்பின் தயங்காமல் தங்கள் பதியுங்கள். அவ்வாறிருப்பின்... படிக்கும் பலரும் ஏற்பர். முதலில் நான் ஏற்றுக்கொள்ளத்தயார்.

பதிவுத்தொடரை இறுதியை அறிய ஆவலுடன் தொடருகிறேன்.

பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ.வழிப்போக்கன்.

நல்ல பதிவு

ஏக்க அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக

முஸ்லிமாக்கள் குரானை எட்டி எட்டி உதைக்கிறார்கள் என்று நமது ஆண் முஸ்லீம்கள் இணையத்தில் பல வீடியோக்களில் ஆவணப்படுத்தியிருப்பது நாம் அறிந்த விஷயம்தான்.

முஸ்லிமாக்கள் ஏன் குரானை எட்டி உதைக்கிறார்கள்? என்று தெரியவில்லை என்பதை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

ஏன் முஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

ய்ய்யாஆஆஆஅல்லாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!

இப்னு சகீருக்கு நீங்கள் ஒரு கறுப்பாடு என்பது எங்களுக்கு தெரியும் இங்கே நல்ல முறைகள் விவாதம் நடக்கிறது தயவு சித்து இந்த பக்கம் நீங்கள் வராமல் இருந்தால் நல்லது

இப்னு சகீருக்கு நீங்கள் ஒரு கறுப்பாடு என்பது எங்களுக்கு தெரியும் இங்கே நல்ல முறைகள் விவாதம் நடக்கிறது தயவு சித்து இந்த பக்கம் நீங்கள் வராமல் இருந்தால் நல்லது

அட கடவுளே சகோ இஸ்லாமிய மன்னர்கள் ஆங்கிலேயருக்கு முன்னரே இந்தியாவை இந்துஸ்தான் என்றார்களே அப்படியென்றால் அவர்கள் தான் இந்து என்பதை அறிமுகப்படுத்தி இருப்பார்கள் என நினைக்கிறன் ...

அட கடவுளே சகோ இஸ்லாமிய மன்னர்கள் ஆங்கிலேயருக்கு முன்னரே இந்தியாவை இந்துஸ்தான் என்றார்களே அப்படியென்றால் அவர்கள் தான் இந்து என்பதை அறிமுகப்படுத்தி இருப்பார்கள் என நினைக்கிறன் ...

//இந்த நிகழ்வுக்கு முன்னர் வரையிலும் இந்து என்ற சொல் எந்த இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ இடம் பெற்றதுக் கிடையாது.!!! 1794 ஆம் வருடத்தில் தான் இந்து என்றச் சொல் பிறப்பெடுக்கின்றது.//
வணக்கம் ஐயா!!! இந்து தேசம் என்ற சொல் நீங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் விவிலியத்தில் உள்ளதை தாங்கள் படிக்கவில்லையா...? சரி நான் சொல்கிறேன் விவிலியத்தில் எஸ்தர் புத்தகத்தில் முதல் அதிகாரத்தில் முதல் வசனத்தை கொஞ்சம் படித்து பாருங்கள் புரியும்...

முஹம்மத் ஆஷிக்_citizen of world~....கடவுள் அறிவு தந்தது..... நல்ல படிய யோசிகத்தான்... உங்கள் அறிவு கண்களை திறந்து விட்டது யார் சொல்லுங்கள்?????

@venkat Raja,

//வணக்கம் ஐயா!!! இந்து தேசம் என்ற சொல் நீங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் விவிலியத்தில் உள்ளதை தாங்கள் படிக்கவில்லையா...? சரி நான் சொல்கிறேன் விவிலியத்தில் எஸ்தர் புத்தகத்தில் முதல் அதிகாரத்தில் முதல் வசனத்தை கொஞ்சம் படித்து பாருங்கள் புரியும்...//

வணக்கம் அய்யா...!!! தமிழ் மொழிபெயர்ப்பில் இந்து தேசம் என்று மொழிபெயர்த்து இருக்கின்றார்கள். அது சரியான மொழிபெயர்ப்பாக இருக்கும் என்றால் ஆங்கில பதிப்புகளிலும், ஆங்கிலத்திற்கு முந்தைய இலத்தின் பதிப்புகளிலும், அதற்கும் முந்தைய மூல பதிப்பான எபிரேயத்திலும் அவ்வாறே குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஆனால் நான் அறிந்த வரை தமிழ் மொழிபெயர்ப்பில் மட்டுமே அவ்வார்த்தை வருகின்றது. மேலும் அது தாங்கள் கூறுவது போன்று இந்து சமயத்தினைக் குறிக்கின்றதா என்ற கேள்விக்கு விடையினை உங்களிடமே விட்டு விடுகின்றேன்.

பதிவுகளில் ஆரம்பத்திலோ கடைசியிலோ மற்றைய தொடர்புடைய பதிவுகளின் தொடுப்புகளைக் கொடுத்தால் பின் தொடர வசதியாக இருக்குமே!

@ தருமி,

வணக்கங்கள் ஐயா... நிச்சயம் அவ்வாறு இணைப்பினைக் கொடுக்க முயல்கின்றேன்.

மேலும் இத்தொடர் தொடர்பான அனைத்துப் பகுதிகளையும் சேர்த்து ஒரு முகப்புப் பக்கம் உருவாக்கி இருக்கின்றேன். அது தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்...

http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/blog-post.html

நன்றி...!!!

//தமிழ் மொழிபெயர்ப்பில் இந்து தேசம் என்று மொழிபெயர்த்து இருக்கின்றார்கள். அது சரியான மொழிபெயர்ப்பாக இருக்கும் என்றால் ஆங்கில பதிப்புகளிலும், ஆங்கிலத்திற்கு முந்தைய இலத்தின் பதிப்புகளிலும், அதற்கும் முந்தைய மூல பதிப்பான எபிரேயத்திலும் அவ்வாறே குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஆனால் நான் அறிந்த வரை தமிழ் மொழிபெயர்ப்பில் மட்டுமே அவ்வார்த்தை வருகின்றது. மேலும் அது தாங்கள் கூறுவது போன்று இந்து சமயத்தினைக் குறிக்கின்றதா என்ற கேள்விக்கு விடையினை உங்களிடமே விட்டு விடுகின்றேன்.//

மொழிபெயர்ப்பில் தவறு என்றால் தமிழ் பைபிளில் நிறைய தவறுகள் உள்ளன என்பதை தாங்கள் அறிவீர்களா... தமிழ் பைபிள் எந்த மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது? எபிரேயமா? கிரேக்கமா? லத்தினா? இல்லை ஆங்கிலமா? ஆங்கில பதிப்புகள் அனைத்திலும் இந்தியா என்றே குறிப்பிட்டு உள்ளது. அதுமட்டுமல்ல தெலுங்கு, கன்னட பைபிள்களில் கூட இந்து தேசம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நான் இங்கு இந்து சமயத்தை குறித்து கூற வரவில்லை. பைபிளில் உள்ள இந்து தேசம் என்ற சொல்லுக்கும் இந்து சமயத்திருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் எனக்கு தெரியாது. நீங்கள் கூறியுள்ள "இந்த நிகழ்வுக்கு முன்னர் வரையிலும் இந்து என்ற சொல் எந்த இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ இடம் பெற்றதுக் கிடையாது.!!!" என்ற கூற்று தவறு என கூறவே வந்தேன்... நன்றி!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி