கி.பி!!!

கிருத்துவுக்கு முன்…. கிருத்துவுக்குப் பின் என காலம் இரண்டாகப் பிரிந்தக் காலம்.

“செய்தி கேட்டாயா சகோதரா…இறைவனின் மைந்தன் நமக்காக இன்னுயிர் துறந்தாராம்… பின் மீண்டும் உயிர்தெழுந்து விண்ணுலகம் சென்றாராம். கண்டவர்கள் சொல்கின்றனர். மேலும் அவர் கூறியதாக பல அறியக் கருத்துக்களையும் கூறுகின்றனர். கேட்பதற்கே இனிதாக இருக்கின்றது. நீயும் வா…போய் அவர்கள் கூறுவதை முழுவதுமாகக் கேட்போம்” என்று உலகின் மக்கள் தாங்கள் அது வரை தான் கொண்டிருந்த கொள்கைகளில் இருந்து புதுக் கொள்கைகளுக்கு மாற ஆரம்பித்தக் காலம்.

அந்த மாற்றம் இந்தியாவிற்கும் வருகின்றது…. தோமா என்னும் கிருத்துவின் சீடர் வாயிலாக.

 ’தோமா’ என்ற இந்தப் பெயர் நிச்சயம் தமிழர்களுக்கு பழக்கப்பட்ட ஒருப் பெயராக இருக்கும்… அதுவும் குறிப்பாக சென்னையில் வாழ்கின்ற மக்கள் நிச்சயம் இந்தப் பெயரினைக் கேள்விப்பட்டு இருப்பர்.

சாந்தோம்… பரங்கி மலை… போன்ற இடங்கள் இவரின் வரலாறினை இன்றும் சுமந்துக் கொண்டு இருக்கின்றன.

“தோமா இந்தியா வந்தது வரலாறா…??? சுத்த ஏமாற்றுத்தனம்…தோமா என்பது ஒருக் கட்டுக்கதை” என்றுக் கூறுவோரும் உளர்.

தோமாவின் கதை வரலாறா அல்லது கட்டுக்கதையா என்பது நாம் நிச்சயம் காண வேண்டிய ஒன்று. ஆனால் நாம் இப்பொழுது சமசுகிருதத்தை பின் பற்றிச் சென்றுக் கொண்டு இருப்பதனால் தோமாவின் கதையினை நாம் தற்சமயம் ஒதுக்கி வைத்து விட்டு பயணிக்க வேண்டி இருக்கின்றது.

ஏற்கனவே சமணம், புத்தம் போன்ற சமயங்களின் கருத்துக்களை பரப்புவதற்கு ஒரு புது மொழி தேவை என்று அரசர்கள் சிந்தித்து முடிவினை செய்தப் பொழுது கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் தோமாவின் வாயிலாக கிருத்துவின் கருத்துக்களும் இந்தியாவிற்கு வருகின்றன.

“கடவுள் இல்லை என்று சமணமும் கடவுளைப் பற்றியே ஒன்றும் சொல்லாது புத்தமும் இருக்கும் பொழுது, இவர் கடவுள் நமக்காக அவரின் புதல்வனை பலி கொடுத்தார் என்று சொல்கின்றாரே…மேலும் பல நல்லக் கருத்துக்களை கூறுகின்றாரே…இவரின் கருத்துகளையும் நாம் இந்த தேசம் முழுவதும் பரப்ப வேண்டும்.” என்று எண்ணிக் கொண்டு தோமாவின் கருத்துக்களை பரப்ப மன்னர்கள் ஆரம்பிக்கின்றனர்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இக்காலக் கட்டத்தில் தான் கடவுளைப் பற்றி எதுவுமே பேசாத புத்த மதத்தில் கிருத்துவின் கொள்கையான ‘மூஒருமைக் கோட்பாட்டினை’ ஏற்றுக் கொண்டு ‘மகாயானம்’ என்னும் ஒரு பிரிவு தோன்றுகின்றது. கடவுள் மனிதராக வந்தார் என்னும் அவதாரக் கோட்பாடும் தோன்றுகின்றது. தமிழில் திருக்குறளும் தோன்றுகின்றது. நிற்க!!!

சமசுகிருதம் உருவாக்கப்பட்டதற்கு முழுமுதற் காரணம் அப்பொழுது இந்தியாவில் வந்து தங்கி இருந்த யவனர்கள் மற்றும் மற்ற மொழி பேசும் மக்களிடம் அந்த ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்புவதற்கே.

“சரி மொழியினை உருவாக்கியாயிற்று…நல்லது…!!!ஆனால் இந்தக் கருத்துக்களை அதில் எப்படிப் பரப்புவது…???
ம்ம்ம்… சிறப்பு பள்ளிகள் அமைக்கலாம்…அந்தப் பள்ளிகளில் யவனர்களின் (இங்கே யவனர்கள் என்பது ஆரியர்களையும் குறிக்கின்றது) பழைய பாடல்கள்… வரலாறு…பழக்க வழக்கங்கள் முதலியவையை முதலில் சமசுகிருதத்தில் தொகுக்கலாம்… பின்னர் அவற்றில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அதன் திருத்தங்களை தொகுக்கலாம்… அவர்களின் கதைகளை ஒட்டியக் கதைகளை உருவாக்கலாம்… அதில் இந்தச் சமயக் கருத்துக்களைப் புகுத்தி அவர்களைத் தெளிவு நிலைக்கு கொண்டு வரலாம்… ஆம் அது தான் சரியானதாக இருக்கும்.” என்று எண்ணி சமசுகிருதத்தில் நூல்களை உருவாக்கவும் தொகுக்கவும் பள்ளிகள் நிறுவப்படுகின்றன.

அப்பள்ளிகளில் தான் யவனர்களின் பாடல்களான வேதங்கள் தொகுக்கப்படுகின்றன. அவற்றின் திருத்தங்களாக உபநிடங்களும் உருவாக்கப்படுகின்றன.
மகாபாரதமும் தோன்றுகின்றது. அவற்றினைத் தொகுத்த வியாசர் என்னும் தமிழர் வேதவியாசர் எனப்படுகின்றார் (வியாசர் என்பது தனி மனிதனைக் குறித்தச் சொல் இல்லை என்றும் அந்தப் பள்ளிகளில் தொகுக்கும் பணியினைச் செய்த அனைவரையும் குறித்தச் சொல் என்றும் கருத்துக்கள் உண்டு. இவற்றினைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றது).

இவ்வாறே காலங்கள் நகர்ந்துக் கொண்டு இருக்க தமிழகத்தின் இருண்டக் காலமும் வருகின்றது. சோழனும் பாண்டியனும் செல்வாக்கினை இழக்க தமிழகம் களப்பிரர்கள் வசம் போகின்றது. அத்துடன் கடைச் சங்கக் காலமும் முடிவிற்கு வருகின்றது. இது நடந்தது கி.பி மூன்றாம் நூற்றாண்டில்.

மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சியினைப் பிடித்த களப்பிரர்கள் கிட்டத்தட்ட கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஆட்சியில் வீற்று இருந்தார்கள். அவர்கள் யார்? தமிழர்களா?… எவ்வாறு ஆட்சியினைப் பிடித்தார்கள்….??? அவர்கள் காலத்தில் தமிழகத்தில் நடந்தது என்ன? - தெரியவில்லை. இன்னும் யாரும் அதிகமாகப் படிக்காத பக்கங்களாகவே அந்தக் காலங்கள் இருந்துக் கொண்டு இருக்கின்றன. படிப்பதற்கும் தெளிவான விடயங்கள் இதுவரையும் கிட்டவில்லை.

இப்படிப்பட்ட களப்பிரர்களின் வரலாறு கி.பி நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களின் எழுச்சியோடு முடிந்துப்போகின்றது. காஞ்சியினை தலைநகராகக் கொண்ட பல்லவப் பேரரசு தமிழகத்தினை ஆளத் தொடங்குகின்றது…. பிராகிருதத்தையும் சமசுகிருதத்தையும் ஆட்சிமொழியாக வைத்துக் கொண்டு. சமசுகிருதப் பள்ளிகள் பல காஞ்சி மாநகரத்தில் வளரத் தொடங்குகின்றன. கூடவே பல புத்த மடங்களும் தான். காஞ்சி மாநகரம் புத்தத்தையும் சமசுகிருதத்தையும் நன்கு வளர்க்கின்றது. (புத்தத்தினை வளர்க்க ஆறாம் நூற்றாண்டில் சீனா சென்ற போதிதர்மன் இங்கே உங்கள் நினைவிற்கு வரலாம்).

கி.பி ஆறாம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் பல்லவர்கள் சிறப்புற்று இருக்கின்றார்கள்… புத்தமும் சமசுகிருதமும் அவர்களால் போற்றப்பட்டு இருக்கின்றன. நிற்க…. இப்பொழுது நாம் சற்று வட இந்தியாவினைக் கண்டு வந்து விட வேண்டிய அவசியம் இருக்கின்றது.

தென் இந்தியாவினைப் போலவே கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதல் கிட்டதட்ட வட இந்தியாவின் வரலாறும் ஒருக் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. சீனாவில் இருந்து புறப்பட்ட ஒரு நாடோடிக் குழுவினரான குசானர்கள் வட மேற்கு இந்தியாவினை கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஆண்டுக் கொண்டு வருகின்றனர். இந்தியர்கள் அல்லாத அவர்களின் ஆட்சி பின்னர் குப்த பேரரசின் எழுச்சியினால் கி.பி நான்காம் நூற்றாண்டில் ஒரு முடிவிற்கு வருகின்றது. ஆனால் குப்த பேரரசும் நீண்டக் காலம் நிலைத்து நிற்கவில்லை. கி.பி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் அப்பேரரசு ஒரு முடிவிற்கு வருகின்றது.

அதன் இறுதி மன்னர்… வட இந்தியாவின் இறுதி திராவிட பேரரசின் மன்னர் அரச வரதன் (Harshavardhan ) கொலை செய்யப்படுகின்றான். அவனின் குடும்பமும் கொலை செய்யப்படுகின்றது. அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல விடயங்களைப் போலவே இச்செயல்களும் மர்மமாகவே உள்ளன. அரச வரதன் கொலை செய்யப்படும் காலமும் வட இந்தியாவில் அன்நேர்கள் (Huns ) படையெடுத்து வரும் காலமும் ஒன்றாக இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

அக்காலத்தில்,
குப்த பேரரசு வீழ்கின்றது.
வட இந்தியாவின் மீது அன்நேர்கள் படை எடுக்கின்றனர்.
வட இந்தியா பல சிறு பகுதிகளாக சிதறுகின்றது.

இதேக் காலத்தில் தான் வட இந்தியாவில் ‘ஆரியவர்தமும்’ ஆரம்பமாகின்றது. இந்தியாவின் மீது பல காலங்களில் படையெடுத்து வந்த பாரசீகர்கள்,கிரேக்கர்கள்,குசானர்கள்,அன்நேர்கள் மற்றும் வணிகத்திற்காக வந்த ரோமர்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஆரம்பித்ததே ‘ஆரிய வர்த்தம்’ என்றே அறிஞர்கள் கருதுகின்றனர். நிறத்தால் ஒன்றுப்பட்டு ’ஆரியவர்தத்தினை’ ஆரம்பித்த அவர்கள் தான் நாம் இன்றுக் கூறும் ஆரியர்கள் என்றும் கூறுகின்றனர் அவர்கள்.

அக்காலத்தில் தான் ஆரியர்கள் தங்களை நெறிப்படுத்திக் கொண்டு ஒரு பேரரசாக மாற சில பிரிவுகளையும் சட்டங்களையும் உருவாக்குகின்றனர். அந்தப் பிரிவுகளே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகும்.

பிற நாடுகளில் சென்று ஆன்மீகப் பொறுப்புகளை கவனிப்பவன் - பிராமணன்.
பிற நாடுகளுடன் போரிடச் செல்பவன் - சத்திரியன்.
பிற நாடுகளில் வணிகத்தினை மட்டும் பார்ப்பவன் - வைசியன்.
இவை எதையுமே செய்யாதவன் - சூத்திரன்.

இவர்களை எதிர்க்கும் எதிரிகள் அனைவரும் - பஞ்சமன்(திராவிடர்கள்).

இவர்களுக்காக எழுதிய அந்தச் சட்டமே மனு நீதி நூல் ஆகும்!!! இந்த நூல் பின்னர் பல மாற்றங்களைக் கண்டது மேலே உள்ளப் பிரிவுகளைப் போலவே!!!

தென் இந்தியாவிலும் சமசுகிருதம் இருக்கின்றது. வடக்கேயும் இருக்கின்றது. ஆரியர்கள் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பினை வடக்கே அடைந்து இருக்கின்றனர். திராவிடர்கள் தெற்கில் இருக்கின்றனர். புத்தம் இந்தியா முழுவதும் இருக்கின்றது. இக்காலத்திலே தான் பக்தி இயக்கமும் ஆரம்பம் ஆகின்றது. இந்நிலையில் என்ன நடந்தது வரலாற்றில்….

காண்போம்… வரலாற்று ஆராய்ச்சி முயற்சி தொடரும்…!!!

பி.கு:

கி.பி முதல் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வரலாறு இன்னும் புதிராகவே இருக்கின்றது… அது வட இந்தியாவின் வரலாறாக இருக்கட்டும்… அல்லது தென் இந்தியாவின் வரலாறாக இருக்கட்டும். வட இந்தியாவின் மேல் பல படையெடுப்புகள் நிகழ்ந்த அதேக் காலக்கட்டத்தில் தென் இந்தியாவிலும் ஆட்சிகள் மாறி உள்ளன. சமசுகிருதம் வளர்ந்த இக்காலக் கட்டம் தெளிவில்லாத சூழல்களால் சூழப்பட்டு உள்ளது. இக்காலத்தின் வரலாற்றினைப் பற்றிய ஆய்வுகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13

14 கருத்துகள்:

இதற்காகவே 2 வாரங்கள் காத்து இருந்தேன் நன்றி நண்பரே !!!!!!!!

Please post the next one, I can't wait. You can publish it as a book also. I am ready to buy any such book. Please consider my request. Thanks, Senthil, Bangalore

இது போன்ற ஆய்வுகளை நம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டமாக கொண்டுவர நாம் முயற்சி செய்தல் வேண்டும் என் நண்பரே..

@ செந்தில்...

நண்பரே... தாமதத்திற்கு மன்னியுங்கள்!!!... ஒரு சில விடயங்கள் காரணமாக (பணிப்பளு... கணினி இல்லாமை) என்னால் விரைவாக பதிவுகளை இட முடியவில்லை... என்னால் இயன்ற அளவு விரைவாக பதிவுகளை இட முயல்கின்றேன்... உங்கள் வருகைக்கும் ஊக்குவிக்கும் கருத்திற்கும் நன்றி.

@ ராபின்,

உண்மை தான் நண்பரே... ஆனால் பள்ளிகளில் பாடங்களைத் தேர்வு செய்வோர் இந்தக் கருத்துக்களை விரும்ப மாட்டார்களே... :)

@நாகராசன்...

நன்றி நண்பரே!!!

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

நான் எதிர்பார்த்துக் காத்திருந்தபடி 10 - 14 பகுதிகளைப் படித்துமுடித்துவிட்டேன். ஹர்ஷவர்தன் என்கிறவன் அரச வர்த்தன் என்கிற தமிழ் வழித் தோன்றல் என்பது அதிக வியப்பைத் தந்தது. இதுவரை யாரும் அளித்திடாத செய்தி இது.
தொடருங்கள்! வாழ்க வளமுடன்.

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

நான் வெகுநாட்களாக தேடிக் கொண்டிருந்த வரலாற்ரு ஆய்வு கட்டுரைகளை இந்த வழிப்போக்கனது உலகம் மூலம் பெட்றதில் பெரு மகிழ்ச்சி... நன்றி ... வாழ்த்துக்கள் தொடரட்டும் வரலாற்ரு ஆய்வு கட்டுரைகள் ...

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

நண்பரே , குப்த்ர்களின் காலத்தில் “இந்தியா” என்னும் சொல் எப்படி வந்தது?, சிந்து என்ற சொல்லின் மருவல் தானே “இந்து” ? .

@selvasrhythm,

ஆம் நண்பரே...சிந்து என்றச் சொல் தான் மருவி இந்து இந்தியா என்றாகி உள்ளது. குப்தர்களின் காலத்தில் இந்தியா என்ற சொல் கிடையாது. ஆனால் மக்களுக்கு புரிந்துக் கொள்ள எளிதாக இருக்கும் என்று தான் இங்கே இந்தியா என்றச் சொல்லினை நான் பயன் படுத்தி உள்ளேன்.


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு