உலகம் எவ்வாறு தோன்றிற்று…
அதில் மனிதன் எவ்வாறு தோன்றினான்?

இந்தக் கேள்விக்கு வெவ்வேறு வண்ணம் பதில்களும் காலந்தோறும் வந்துக் கொண்டே இருக்கின்றன. ஆயினும் இது தான் விடை என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எவராலும் இன்னும் உறுதிப்பட கூறப்படவில்லை.

சரி இப்பொழுது அந்தப் பதில்களைப் பற்றிப் பார்க்கலாம்!!! பொதுவாக இந்தக் கேள்விக்குரிய பதில்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்..

உலகத்தினை கடவுள் படைத்தார். மனிதனையும் அவரே படைத்தார். - இது இறை நம்பிக்கையாளர்களின் கூற்று.

உலகம் ஒரு விபத்தினால் உருவானது. அதில் தற்செயலாய் உயிர் உருவானது. அந்த உயிரின் பரிணாம வளர்ச்சியினால் மனிதன் உருவானான். - இது அறிவியல் நம்பிக்கையாளர்களின் கருத்து.

உலகத்தினையும் மனிதனையும் கடவுள் படைத்தார்… ஆனால் மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியினால் வந்தான். பரிணாம வளர்ச்சி இறைவனின் செயல் - இது இறைவனையும் விட முடியாமல் அறிவியலையும் விட முடியாமல் இருப்பவர்களின் கருத்து. (இன்றைய காலத்தில் இந்தக் கருத்தினை உடையவர்களே அதிகமாக இருக்கின்றனர்)

சரி… இப்பொழுது உலகத்தின் தோற்றம் பற்றி பல காலமாக கூறிக் கொண்டு இருக்கும் நூல்களையும் கதைகளையும் அறிவியலையும் பற்றிப் பார்ப்போம்.

முதலில் வட நாட்டுக் கதை.

வடநாட்டுக் கதை கூறும் உலகின் தோற்றம்:

வடநாட்டுக் கதை என்பது ஆரியர்களின் கதை.

இக்கதையின் படி, சிவனும் பார்வதியும் ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்து இருந்ததினால் உலகம் தோன்றிற்று. அப்படிப்பட்ட உலகத்தினில் பிரம்மன் மனிதர்களை நான்கு விதமாய் பிரித்துப் படைத்தான்.

பிராமணர்கள் - பிரமனின் தலையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சத்திரியர்கள் - பிரமனின் நெஞ்சில் இருந்துத் தோன்றியவர்களாம்.

வைசியர்கள் - பிரமனின் தொடையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சூத்திரர்கள் - பிரமனின் பாதத்தில் இருந்துத் தோன்றியவர்களாம்.

மேலும் இந்தக் கதையின் படி இறைவனிடம் இருந்து பிறக்காதவர்களும் இருக்கின்றனர். அவர்கள் பஞ்சமர்களாம். நிற்க.

இந்தக் கதையினில் அறிவியலினை நாம் எங்காவது காண முடிகின்றதா… இல்லை ஆன்மீகத்தினையாவது காண முடிகின்றதா?

கதையினை நாம் மீண்டும் படித்துப் பார்த்தால், இல்லை என்பதே நமது பதிலாக இருக்க முடியும். அதுவும் கடவுள் தான் மனிதனைப்  படைத்தார் என்றக் கொள்கையினை இந்தக் கதையே மறுத்துக் கொண்டு இருக்கின்றது (பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் மக்களை கடவுள் படைக்கவில்லை என்றால் அவர்கள் தோன்றியது எப்படி?).

அறிவியலும் இல்லை, ஆன்மீகமும் இல்லை, வரலாற்றுச் சான்றுகளும் இல்லை… அனைத்துக்கும் மேலாக தெளிவான படைப்பின் விளக்கமும் இல்லை. எனவே இந்தக் கதை வரலாற்று உண்மை அல்ல… வெறும் கதை என்றே நாம் முடிவிற்கு வர வேண்டி இருக்கின்றது.

இப்பொழுது நாம் அறிவியல் கூறும் கூற்றினைக் காண்போம்:

உலகம், விண்வெளியில் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடி விபத்தினால் (Big Bang Theory) தற்செயலாய் தோன்றியது. முதலில் மிகவும் சூடாக இருந்த உலகம் சுழற்சியினால் குளிரக் குளிர உயிர் தோன்றும் வாய்ப்புகள் பெருகின.
அப்படி பட்ட ஒரு காலத்தில், உயிர் தோன்றுவதற்கு ஏதோ ஒரு சூழ்நிலை ஏதுவாக அமைந்ததினால் உயிர் தோன்றிற்று.

ஒரு செல் உயிரியாய்!!!.

அந்த ஒரு செல் உயிரி காலத்தின் போக்கில் பல்வேறு உயிரினமாய் பரிணாம வளர்ச்சியினை அடைந்து இறுதியில் மனிதனாய் ஆகி உள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சி அனைத்து உயிரினங்களின் உடல்களைப் ஆராய்ந்துப் பார்த்தால்
நமக்கு புலனாகும். பாருங்கள் குரங்கின் உடம்பும் மனிதனின் உடம்பும் ஒன்றுப் போலவே அமைந்து இருக்கின்றன. எனவே மனிதன் குரங்கினில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும்.

இதுவே அறிவியலின் கூற்று… மன்னிக்கவும்… ஐரோப்பிய அறிவியலின் கூற்று!!!

ஐரோப்பிய அறிவியலா… இது என்ன புது கதை என்கின்றீர்களா? இந்தக் கதையையும் தான் பார்த்து விடுவோமே!!!

ஐரோப்பிய அறிவியல் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு உடலினை மட்டுமே ஆராய்ச்சி செய்யும் ஒன்றாக உள்ளது. உயிரினைப் பற்றிய ஆராய்ச்சி ஐரோப்பிய அறிவியலில் இல்லை.
ஐரோப்பிய அறிவியல் உலகின் பொருட்களை இரண்டு விதமாக பிரித்து உள்ளது.

உயிருள்ள பொருட்கள் - மனிதன், விலங்குகள் (Living Things ) (இங்கே அறிவியல் மனிதனை ஒரு பொருளாகப் பார்க்கும் தன்மையையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.)

உயிரற்றப் பொருட்கள் - கல், மரம் (Non - Living things )

அந்த அறிவியலில் வேறு விதமான பிரிவுகள் இல்லை. எனவே வெறும் உடலினை வைத்து மட்டுமே ஆராயும் இந்த அறிவியலினை நாம் ஏற்றுக் கொள்ளலாமா என்றக் கேள்வி வருகின்றது.

கூடவே இந்த அறிவியல் உயிரினைப் பற்றி ஆராயவில்லை என்றால் உயிரினைப் பற்றி ஆராயும் அறிவியல் இருக்கின்றதா என்றக் கேள்வியும் வருகின்றது. அந்தக் கேள்விக்கு பதில்… ஆம்! உயிரினைப் பற்றி அறிந்த அறிவியல் இருக்கின்றது. நீண்ட காலமாக நம்முடனே இருக்கும் தமிழ் அறிவியல் தான் அது.

ஐரோப்பிய அறிவியல் பொருட்களைப் உயிரின் அடிப்படையில் பிரிக்கின்றது என்றுக் கண்டோம். வேறு பிரிவுகள் அதில் கிடையாது.

ஆனால் தமிழ் உயிரினங்களையே அறிவின் வழி பிரித்து இருக்கின்றது.
ஓரறிவு உயிரினங்கள் முதல் ஆறறிவு உயிரினங்கள் வரை என்று அந்தப் பிரிவுகள் நீள்கின்றன.

மேலும் தமிழ் தன் திணை இலக்கணத்தின் மூலம் மனிதர்களுக்கு உயர்திணை (அவர்கள் மற்ற உயிர்களில் இருந்து சிறந்தவர்கள் என்ற எண்ணத்தில்) என்றச் சிறப்பினையும் கொடுத்து இருக்கின்றது.

இத்தகைய பிரிவுகளை அறியாத தொடக்க நிலையிலேயே ஐரோப்பிய அறிவியல் நிற்கின்ற காரணத்தினால் உயிரின் தோற்றம் பற்றிய ஐரோப்பிய அறிவியலின் கூற்றினை நாம் ஏற்க முடியாது.

ஐரோப்பியர்களின் அறிவியல் உலகம் தட்டையானது என்று கூறிக் கொண்டு இருந்தக் காலத்தில், உலகை கப்பலில் சுற்றிய அறிவியல் நம்முடையது. எனவே நாம் அவர்கள் கூற்றினை ஆராயாது ஏற்றுக் கொண்டால் தட்டையான உலகத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.
எனவே,
  1. ஐரோப்பிய அறிவியல் உயிரினை அறியாத நிலையினாலும்,
  2. டார்வினின் கருத்து வெறும் கருத்தே அன்றி அறிவியல் கிடையாது என்ற நிலையினாலும்,
  3. குரங்கில் இருந்து எந்த ஒரு மனிதனையும் உருவாக்கிக் காட்டாமையினாலும்,
  4. வெற்று இடத்தில் இருந்து உயிரினை உருவாக்கிக் காட்டாமையினாலும்,

ஐரோப்பிய அறிவியலின் உயிரின் தோற்றம் பற்றியக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வட நாட்டுக் கதையும் விளக்கம் தரவில்லை… ஐரோப்பிய அறிவியலும் தெளிவானக் கருத்தினைத் தரவில்லை.  எனவே இப்பொழுது நாம் இரு வேறு கதைகளைக் காண வேண்டி இருக்கின்றது.

ஒன்று பரிபாடல் - தமிழ் சங்க இலக்கியம்.

இரண்டு விவிலியம் (பைபிள்)

இந்த இரண்டுக் கதைகளிலும் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை இருக்கின்றது. இரண்டுமே உலகம் ஆறு ஊழிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றே கூறுகின்றன.

‘பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட’ - என்னும் பரிப்பாடல் பாட்டின் மூலம்,
கடவுள் முதலில் ஆகாயத்தினை படைத்ததாகவும், பின்னர் காற்று, செந்தீ, மழை, நிலம் ஆகியவற்றை படைத்து முடித்து பின்னர் இறுதியாக மனிதனைப் படைத்ததாகவும் அறிய வருகின்றோம்.

கிட்டத்தட்ட இதேக் கருத்து விவிலியத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது.
விவிலியத்தின்படி இறைவன் ஐந்து ஊழிக் காலத்தில் உலகினைப் படைத்து முடித்து இறுதியாக ஆறாவது ஊழிக் காலத்தில் மனிதனைப் படைத்தார்.
சிறிது நிறுத்துங்கள்…!!!

நீங்கள் பாட்டுக்கு ஊழிக் காலங்கள் என்று சொல்லுகின்றீர்கள்… கடவுள் 6 ஊழிக் காலங்களில் அல்ல, ஆறு நாட்களில் உலகினைப் படைத்து உள்ளார்… என்கின்றீர்களா?

அப்படி என்றால் உங்கள் கவனத்திற்கு…
விவிலியம் என்பது ஒரு தொகுக்கப் பட்ட நூலே ஆகும்.
விவிலியத்தின் மூல மொழி எபிரேயம். அந்த மொழியில் இருந்தே எல்லா மொழிகளுக்கும் அது மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பில் சில கருத்துக்கள் மாறுப்பட்டு வந்து இருக்கலாம். ஆங்கிலத்தில் ஊழி என்ற சொல்லுக்கு தகுந்த வார்த்தை இல்லாதக் காரணத்தினால், ஆறு ஊழிக் காலங்கள் என்ற கால அளவு ஆறு நாட்களாக மாறிப் போய் உள்ளது. உதாரணத்திற்கு தூத்துக்குடி டுடிகொரின் (Tutikorin ) ஆக மாறியது உங்களுக்குத் தெரியுமல்லவா!!! அதுப் போலத் தான்!!!

சரி… எங்கேயோ எழுதப்பட்ட தமிழ் சங்க நூலுக்கும் விவிலியத்திற்கும் ஒற்றுமை இருக்கின்றது என்பதினைப் பார்த்தோம். ஆனால் அந்த செய்திகள் உண்மையினைச் சொல்லுகின்றனவா? விவிலியத்தில் உண்மை இருக்கின்றதா? … என்பதனை ‘ஆதாம் என்ற தமிழன்’ என்ற அடுத்த பதிவில் பார்ப்போம்.

விவிலியம் அழைக்கின்றது!!!

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5

பி.கு:
தமிழில் எழுதப்பட்ட பரிபாடல் கருத்துக்கும் விவிலியக் கதைக்கும் ஏன் இந்த ஒற்றுமை என்று எண்ணுகின்றீர்களா?

உலகின் முதல் மனிதன் தமிழன் என்னும் கூற்றின் படி. உலகம் முழுவதும் பரந்து சென்று பரவிய தமிழன் தன் கதைகளையும் தன்னுடன் சுமந்துச் சென்றுள்ளான். அந்தக் கதையே தமிழகத்தில் பரிபாடலாவும், எபிரேயத்தில் ஆதியாகமக் கதைகளாகவும் தொகுக்கப் பட்டு உள்ளன என்பது அறிஞர்கள் கருத்து!!!

17 கருத்துகள்:

i am new to your blog...strange style of writing..i am reading all your post for last two days..and it continues...please go ahead...

nandri nanbare!!!

Nanbare,
Migayum siRantha padaipugaL. Oru pathivaith thodarthu matRRa pathivugaLaip padippathu avvaLavu thirupthiyaik kodukkinRathu. Vaazhthugal.

Nanbare,
Migayum siRantha padaipugaL. Oru pathivaith thodarthu matRRa pathivugaLaip padippathu avvaLavu thirupthiyaik kodukkinRathu. Vaazhthugal.

I am amazed

ஐயா அருமையான முயற்சி, தமிழர்களைக் கேவலப்படுத்த, தமிழர்களை அவர்களின் வேரிலிருந்து பிரிக்க. சண்டாளர்களைப் பற்றி எழுதியது பித்தலாட்டமல்லவா. தமிழன் பித்தலாட்டம் செய்வானா.
தமிழர்கள் போற்றும், நீர் ஆரிய நூலென்று முத்திரை குத்தும் வேதத்தில் பரிபாடல் கூறியது அச்சு மாறாமல் அப்படியே உள்ளது தெரியுமா. தெரியாமல் உளறலாமா. பைபிளில் அப்படிக் கூறப்படவில்லையே. பஞ்சபூதங்களின் தோற்றம். அந்த முட்டாள் சூரியனைப் படைக்கும்முன் இரவும் பகலும் ஆகி நாள்கள் ஆவது போல் பைத்தியக்காரத்தனம் உண்டா. சூரியன் தோன்றுமுன் தாவரங்கள் தோன்றிய அதிசயம் நிகழ்த்த உங்கள் கடவுளாலே அன்றி தமிழ்க் கடவுளால் முடியாது. நீர் உமது உளறல் மதத்தை உயர்த்திக்கொள்ளும். அது உமது உரிமை. ஆனால் தமிழரைக் கேவலப்படுத்த வேண்டாம்.

@well wisher

//ஐயா அருமையான முயற்சி, தமிழர்களைக் கேவலப்படுத்த, தமிழர்களை அவர்களின் வேரிலிருந்து பிரிக்க. சண்டாளர்களைப் பற்றி எழுதியது பித்தலாட்டமல்லவா. தமிழன் பித்தலாட்டம் செய்வானா.//

ஐயா வணக்கங்கள்...

முதலில் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 'பஞ்சமர்கள்' என்றுக் குறிப்பதற்கு மாறாக சண்டாளர்கள் என்று குறித்து விட்டேன். சில இடங்களில் இவ்வாறு சில தவறுகளை என்னை அறியாமலேயே செய்து விடுகின்றேன். திருத்திக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டு இருக்கின்றேன். எனவே இந்தத் தவறினை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றிகள். என்னுடைய பதிவிலும் அப்பிழையினை சரி செய்து விட்டேன். இது அறியாமல் செய்த ஒன்றே தவிர உள்நோக்கம் எதுவும் கொண்ட ஒன்று கிடையாது. சரி இருக்கட்டும். பெயர் மாற்றதினைத் தவிர பொருளில் அர்த்தங்கள் மாற வில்லையே.

பஞ்சமர்கள் என்பவர் யார் என்றும் அவர்கள் எவ்வாறு தோன்றினர் என்றும் தாங்கள் கூறினீர்கள் என்றால் நலமாக இருக்கும். மேலும் திருவள்ளுவர், திருவியலூர் உய்ய வந்த தேவர் போன்றோரை பஞ்சம சாதியினர் என்று வைத்ததன் காரணம் என்ன என்று தாங்கள் விளக்கினீர்கள் என்றாலும் நலமாக இருக்கும்.

//நீர் ஆரிய நூலென்று முத்திரை குத்தும் வேதத்தில்//

நண்பரே இது ஒரு தொடர் பதிவு...இப்பதிவினில் வேதங்களைப் பற்றியும் இன்ன பிற பல விடயங்களைப் பற்றியும் நான் அறிந்தவனவற்றையும், அறிந்துக் கொண்டு இருப்பனவை பற்றியும் அவற்றுடன் எனது சந்தேகங்களையும் சேர்த்தே எழுதி விடையினைத் தேட முயன்றுக் கொண்டு இருக்கின்றேன். உங்களின் கேள்விகளுக்கு விடை மற்ற பதிவுகளில் இருக்கின்றது. மேலும் மற்ற பதிவுகளில் உள்ள கேள்விகளுக்கு உங்களின் விடை அல்லது கருத்தினைத் தெரிவித்தீர்கள் என்றால் மிக்க நலமாக இருக்கும்.

நன்றி!!!

//உயிரற்றப் பொருட்கள் - கல், மரம்//

உயிர் இல்லையென்றால் பிறகு எப்படி அவை வளருகின்றன?

//‘பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட’ - என்னும் பரிப்பாடல் பாட்டின் மூலம்,
கடவுள் முதலில் ஆகாயத்தினை படைத்ததாகவும், பின்னர் காற்று, செந்தீ, மழை, நிலம் ஆகியவற்றை படைத்து முடித்து பின்னர் இறுதியாக மனிதனைப் படைத்ததாகவும் அறிய வருகின்றோம்.

கிட்டத்தட்ட இதேக் கருத்து விவிலியத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது//

சரி அதே பரிபாடலில் முருகனை பற்றியும், திருமாலை பற்றியும், காளி அதாவது கொற்றவை பற்றியும் பாடல்கள் உள்ளனவே அவை ஏன் விவிலியத்தில் வரவில்லை...

தமிழனாகிய யூதன்(மோசே) அதை மட்டும் வேண்டாமென்று ஒதுக்கிவிட்டாரா?

http://aatralarasau.blogspot.in/2012/04/blog-post_04.html

//உயிர் இல்லையென்றால் பிறகு எப்படி அவை வளருகின்றன?//

நண்பருக்கு வணக்கங்கள்...

கல், மரம் ஆகியவைகளுக்கு உயிர் இல்லை என்று ஐரோப்பிய அறிவியல் கருதுகின்றது என்றே நான் குறிப்பிட்டு இருந்தேன். மரத்திற்கு உயிர் இருக்கின்றது என்று சமீப காலத்தில் ஐரோப்பிய அறிவியல் கருதத் தொடங்கி இருக்கின்றது என்றே நான் எண்ணுகின்றேன்.

ஐரோப்பிய அறிவியல் வேறு... தமிழ் கூறும் அறிவியல் வேறு... தமிழ் அறிவியலில்,

கல் உயிரற்ற பொருள்...!!!

மரம் என்பது ஓரறிவு உயிரினம்... அதற்குத் தொடு உணர்வு உண்டு!!!

//சரி அதே பரிபாடலில் முருகனை பற்றியும், திருமாலை பற்றியும், காளி அதாவது கொற்றவை பற்றியும் பாடல்கள் உள்ளனவே அவை ஏன் விவிலியத்தில் வரவில்லை...

தமிழனாகிய யூதன்(மோசே) அதை மட்டும் வேண்டாமென்று ஒதுக்கிவிட்டாரா?//

மோசேவின் காலத்தையும் பரிபாடலின் காலத்தையும் தாங்கள் கணக்கில் எடுக்க தவறி விட்டீர்களே நண்பரே... பரிபாடல் கிபி ஐந்தாம் நூற்றாண்டு அல்லது ஏழாம் நூற்றாண்டினைச் சார்ந்தது. மோசேயோ அதற்கு மிகவும் முந்திய காலத்தினைச் சார்ந்தவர்.

எனவே கேள்வி எவ்வாறு இருந்து இருக்க வேண்டும் என்றால் உலகின் படைப்பினைப் பற்றி இரு நூல்களும் கிட்டத்தட்ட ஒன்றினைப் போலவே சொல்லும் பொழுது, மோசேவின் காலத்தில் இல்லாத கடவுளர் ஏன் பரிபாடலில் புதிதாக தோன்றி இருக்கின்றனர் என்றல்லவா இருக்க வேண்டும்? நிற்க.

இங்கே நண்பருக்கு ஒன்றினைத் தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். இன்று நம்மிடையே இருந்த கடவுளர் கி.மு வில் இதே மாதிரி இருந்ததற்கோ அல்லது சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்ததற்கோ சான்றுகள் துளியும் இல்லை. அன்று இருந்த வழிபாட்டு முறை முற்றிலும் வேறு.

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/07/blog-post_15.html

கண்ணுக்கு தெரிகிற (பூமி, வானம், சந்திரன், நட்சத்திரங்கள்) அனைத்தும் படைக்கப்பட்டன என எழுதுவது பெரிய விசயமில்லை, நம் கண்ணுக்கு புலப்படாத மற்ற கிரகங்களின் படைப்பு பற்றி எழுதுவது என்பதே அறிவாளித்தனம்...

சரி சிவன் கோயில்களில் நவகிரக வழிபாட்டு முறை யார் கொண்டு வந்தது? ஒன்பது கிரகங்கள் தான் இருப்பதென்பது அந்த காலத்தில் கோயிலை கட்டியவர்களுக்கு எப்படி தெரியும்? அந்த கிரகங்கள் எந்த வண்ணத்தில் இருக்கிறதென்று எப்படி தெரியும்? இதை யார் இந்தியாவிற்கு கொண்டு வந்தது? தோமாவா?

Venkat Raja:-அந்த அமைப்பே தவறு.சூரியன் கோள் சந்திரன் கோள் என்று சொன்னது மோசடி இல்லையா?ராகு,கேது என்பது சாயா கிரகம்(shadow planets)..ஒன்பதுல 4 போச்சு..கருத்தை பதிவு செய்வதற்கு முன் ஆராயவும்

http://anubavajothidam.blogspot.in/2013/03/blog-post.html

உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் பதிவிடக்கூடாது. சரியானதைத்தான் பதிவிட வேண்டும். அதுதான் அழகு. ஏசுவுக்கும் பெருமை.

வணக்கம் ... இந்த வழிப் போக்கனது உலகம் நூல் வடிவில் எனக்கு கிடைக்கப்பெறுமா? Cell no.9443279894

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு