மூவொரு கடவுள் கோட்பாடு...!!!

கிருத்துவ சமயத்தின் அடிப்படை தத்துவம். இதன்படி ஒரே கடவுள் மூன்று விதமான தன்மைகளில் தோன்றுகின்றார் என்று கிருத்துவம் கூறுகின்றது. இதனை சற்று விரிவாக பார்க்கலாம்.

கிருத்துவத்தின் படி ஒரே கடவுள் மூன்று வகையான நிலையில் இருக்கின்றார். அதாவது...

தந்தை நிலை - பரம பிதா.
பரிசுத்த ஆவி நிலை.
மகன் நிலை - இயேசு.

இதுவே கிருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம்.

மேலும் இறைவன் மனித வடிவில் மனிதர்களுக்காக வந்தார் என்ற அவதாரக் கோட்பாடும், பாவ மன்னிப்பு கோட்பாடும் கிருத்துவத்தின் மற்ற முக்கிய தத்துவங்களாகும். நிற்க.

இப்பொழுது நாம் கிருத்துவின் கருத்துக்கள் தான் சைவ வைணவ சமயங்களாக மாறி இருக்கின்றன என்று கூறினால் அச்சமயங்களில் கிருத்துவத்தின் அடிப்படை தத்துவங்களான மூவொருக் கடவுள் கோட்பாடும் மற்ற கோட்பாடுகளும் காணப்பட வேண்டும். அவ்வாறு காணப்பட வில்லை என்றால் சைவ வைணவ சமயங்கள் கிருத்துவ கருத்துக்களின் அடிப்படையில் எழுந்தவை என்ற கருத்து பொய்த்து விடும். எனவே இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களின் கோட்பாடுகளை கண்டு விட வேண்டிய தேவை இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களில் மூவொரு கடவுள் கோட்பாடும் மற்ற கோட்பாடுகளும் இருக்கின்றனவா...காண்போம்!!!

சைவ வைணவ சமயங்களைப் பற்றி நாம் அறிந்துக் கொள்வதற்கு முன்னர் ஒரு முக்கியமான விடயத்தை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் சைவம் மற்றும் வைணவம் என்ற மதங்கள் இரண்டாக பிரிந்து இருக்கவில்லை. இரண்டும் இணைந்து சைவம் என்றே இருந்தன. பிற்காலத்தில் தான் வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்து செல்கின்றது. இது வரலாறு.

சரி இப்பொழுது அந்த சமயங்களைப் பற்றி நாம் காண்போம்.

சைவம் - சிவனை முழுமுதல் கடவுளாக கொண்டது.
வைணவம் - பெருமாளை முழுமுதல் கடவுளாக கொண்டது.

இவ்விரு சமயங்களிலும் அவதாரக் கோட்பாடுகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

வைணவத்தில் பெருமாளின் அவதாரங்களாக பத்து அவதாரங்கள் குறிக்கப்பட்டு உள்ளன. அதிலும் மனித உரு எடுத்து வந்த அவதாரங்களும் இருக்கின்றன.

அதே போல் சைவத்திலும் முருகன் மனித உரு எடுத்து உலகிற்கு வந்ததாக அவதாரக் கதைகளும் உள்ளன.

ஆனால் மீண்டும் இந்த அவதாரக் கதைகளுக்கான சான்றுகள் வேதங்களிலோ அல்லது கிருத்துக்கு முற்பட்ட கால இலக்கியங்களிலோ காணப்படவில்லை. சில கதைகள் உதாரணமாக இராமாயணக் கதைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக கூறப்பட்டாலும் அதற்குரிய சான்றுகள் இது வரை கிருத்துக்கு முற்பட்ட காலத்தில் காணப்படவில்லை என்பதே உண்மையான நிலையாக இருக்கின்றது. இதனைப் பற்றி நாம் பின்னர் தனி ஒரு பதிவில் காண்போம்.நிற்க.

இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களில் மூவொருமை கடவுள் கோட்பாடு இருக்கின்றதா என்று நாம் காண்போம்.

நாம் ஏற்கனவே மேலே கண்டுள்ளோம் சைவம் என்பது சிவனை முழுமுதற் கடவுளாக கொண்டது என்றும் வைணவம் என்பது திருமாலை முழுமுதற் கடவுளாக கொண்டது என்றும். ஆனால் அந்த சமயங்கள் அவர்கள் இருவரை மட்டும் வணங்குவதோடு நிற்கவில்லை. அந்த சமயங்கள் அவர்களின் குடும்பத்தினை வழிபடுவதாகவும் இருக்கின்றன.
சைவ மதம் சிவனை வழிபடுவதோடு நில்லாமல் அம்மனையும் முருகன்/விநாயகரையும் சேர்த்து வழிபடும் ஒரு மதமாக இருக்கின்றது.

அதாவது,

தந்தை - சிவன்
தாய் - அம்மன்
பிள்ளை - முருகன்/பிள்ளையார்.

அதேப்போல் வைணவமும் பெருமாளின் குடும்பத்தினை வழிபடும் ஒரு சமயமாக இருக்கின்றது. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சிவன் வைணவத்திலும் வணங்கப்படுகின்றார்.

அதாவது வைணவத்தின் படி வணங்கப்படும் கடவுள்கள்,

சிவன்
திருமால்
பிரமன்.

இவர்களைத் தான் நாம் மும்மூர்த்திகள் என்று வழங்குகின்றோம். அதாவது சிவன் - அழிக்கும் கடவுள்.
திருமால் - காக்கும் கடவுள்.
பிரமன் - படைப்புக் கடவுள் என்றே நாம் அறிந்து இருக்கின்றோம்.

ஆனால் நம்மில் பெரும்பாலோர் அறியாத ஒரு விடயம் என்னவென்றால் படைப்புக் கடவுளாக கூறப்படும் பிரமன் - திருமாலின் மகனாக கூறப்பட்டுள்ளார்.

திருமால் கனவு காண்பதாகவும் அதிலிருந்து பிரமன் தோன்றியதாகவும் நமது புராணக் கதைகள் நீள்கின்றன. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு தொப்புள் கொடி உறவாக குறிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக தொப்புள் கொடி உறவு என்பது ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையில் உள்ள உறவு தான். அவ்வாறு இருக்க ஆணான பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு ஏன் தொப்புள் கொடி உறவாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.

மேலும் புராணக் கதைகளில் விஷ்ணு பல இடங்களில் பெண் உருவம் எடுப்பதாக கதைகள் வருகின்றன. மேலும் சிவனும் பெருமாளும் இணைந்து ஐயப்பன் தோன்றுவதாகவும் நமது கதைகள் இருக்கின்றன. அதாவது

தந்தை - சிவன்
தாய் - பெருமாள்
பிள்ளை - ஐயப்பன்.

ஆனால் இந்தக் கதைகள் அனைத்திலும் சிவன் ஆணாகவே குறிக்கப்பட்டு உள்ளார். பெருமாள் ஆணாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளார் பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் ஏன் இந்த வேறுபாடு என்றும் இந்தக் கதைகளுக்கு வேறு அர்த்தம் ஏதாவது இருக்குமோ என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

மேலும் நாம் இதுவரை கண்ட விடயங்கள் அனைத்திலும் தந்தை தாய் மகன் ஆகிய மூன்று கடவுள்களை வழிபடும் பழக்கம் இருப்பதை கண்டு இருக்கின்றோம். இந்த பழக்கங்கள் கிருத்துவம் கூறும் மூவொருக் கடவுள் கோட்பாட்டினை ஒத்து இருப்பதையும் நாம் காணுகின்றோம். இந்நிலையில் கிருத்துவம் கூறும் கோட்பாடும் சைவ வைணவ சமயங்களில் காணப்படும் கோட்பாடுகளும் ஒன்றா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு நாம் முதலில் அம்மனையும் பெருமாளையும் பற்றி காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...புராணங்கள் அழைக்கின்றன.

தொடரும்....!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |  

பி.கு:

இவை ஆராய்ச்சி முயற்சியே. சில புத்தகங்களில் நான் படித்த தகவல்களை வைத்தே எழுதப்படும் ஒரு தொடர் முயற்சியாகும். எனவே ஏதாவது தகவல்களில் தவறு இருக்கின்றது என்று தாங்கள் கருதினாலும் சரி மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் சரி தயைக் கூர்ந்து தெரிவியுங்கள். உங்களின் கருத்துக்கள் என்றும் வரவேற்கப்படுகின்றன.

3 கருத்துகள்:

//தந்தை - சிவன்
தாய் - அம்மன்
பிள்ளை - முருகன்/பிள்ளையார்.// கிறிஸ்துவ மதத்தில் ஏசுவுக்கு தம்பியோ அண்ணனோ இருக்கிறார்களா?

நண்பருக்கு வணக்கங்கள்...

பிள்ளையார் என்ற கடவுள் இருந்தமைக்கு சான்றுகள் எக்காலத்தில் இருந்து கிடைக்கின்றன என்று தாங்கள் கூற முடியுமா? முருகனுக்கு மிக பிந்திய காலத்தில் இருந்தே பிள்ளையாருக்கு சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன. அவ்வாறு இருக்க எவ்வாறு பிள்ளையார் அண்ணன் ஆனார் என்றும் முருகன் எவ்வாறு தம்பி ஆனார் என்றும் தாங்கள் கூற முடியுமா?

மேலும் சில சைவர்களே சக்தி/அம்மன் என்பது சிவனின் ஆற்றலின் உருவகமே என்றுக் கூறுகின்றனர். அவ்வாறு இருக்க பிள்ளைகள் என்று தாங்கள் கூறுவது எவரை என்றும் தாங்கள் விளக்க முடியுமா?

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/10/blog-post_7.html

மேலும் பிள்ளையார் என்பவர் யார்?... அவரின் வரலாறு என்ன என்றும் தாங்கள் கூறினால் மிக்க நலமாக இருக்கும் நண்பரே... ஏனெனில் பலர் பல கதைகள் கூறுகின்றனர்?


jaihind.anburaj@gmail.com என்ற முகவாிக்கு தங்கள் பதிவுகளை எனக்கு அனுப்புங்கள்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு