கிருத்துவம்...!!!

ஆசிய கண்டத்திலே தோன்றிய மற்றுமொரு சமயம். இயேசு கிருத்துவினால் தோற்றுவிக்கப்பட்டு அவர்தம் பன்னிரு சீடர்களால் உலகெங்கும் கொண்டு செல்லப்பட்ட ஒரு சமயம். இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் ஏசுவும் சரி அவர்தம் பன்னிரு சீடர்களும் சரி ஆசியாவினைச் சார்ந்தவர்கள். ஆனால் அவ்வாறு ஆசியர்களால் ஆசியாவினில் தோற்றுவிக்கப்பட்ட அந்தச் சமயம் இன்று ஐரோப்பியர்களின் பிடியின் கீழ் உள்ளது. காரணம் எளிது ...அரசியல்!!!

ஆனால் அந்தக் கதைக்குள் நாம் இப்பொழுது செல்லப் போவதில்லை. இப்பொழுது நம்முடைய பயணம் கிருத்துவ சமயத்திற்கும் தமிழுக்கும் தொடர்புண்டா என்ற கேள்விக்கு விடையினைத் தேடியே. ஆனால் அதற்கு முன்னர் நண்பர் ஒருவர் கேட்டு இருந்த கேள்விக்கு பதில் கூற வேண்டி இருக்கின்றது.

"'எல் சடை (EL Shaddai)' என்ற சொல்லுக்கு மலையில் வாழும் கடவுள் என்பது தானே பொருள்... எல் சடை அல்லது யாகோவா (Jehovah) என்னும் அந்தக் கடவுளை யாருமே கண்டதில்லையே பின் எவ்வாறு சடை என்பதற்கு முடி என்றும் அக்கடவுள் சிவன் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள்" என்பதே அந்தக் கேள்வி.

இப்பொழுது அந்தக் கேள்விகளுக்கு விடையினைத் தேடுவோம்...!!! முதலில் 'எல் சடை' என்னும் பெயரில் இருந்தே தொடங்குவோம்.

'எல் சடை' என்பவர் மலையில் வாழும் கடவுள் என்ற அர்த்தமும் உண்டு. மேலும் எல்லா கதைகளிலும் இறைவன் மலையில் இருந்தே மக்களிடம் பேசியதாகவுமே வருகின்றது. ஏன் அவ்வாறு இருக்கின்றது?... உலகினை கடவுள் படைத்தான் என்றால் அனைத்திலும் அவன் சிறப்பாக இருக்க வேண்டும் அல்லவா... மாறாக அவனை ஏன் பெரும்பாலும் மலையில் இருப்பவனாகவே சித்தரித்து இருக்கின்றனர் என்று எண்ணுகின்றீர்களா? அதற்குரிய விடை தமிழில் இருக்கின்றது.

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி" என்னும் வாக்கியத்தில் இருக்கின்றது.

"அட அது எப்படிங்க மண்ணும் கல்லும் தோன்றுவதற்கு முன் ஒரு இனம் தோன்றி இருக்கும்... இது தமிழன் சும்மா அவன் சுய பெருமைய போற்றுவதற்காக சொன்ன ஒரு கூற்றுங்க அவ்வளவு தான்" என்று பெரும்பாலும் இந்த வாக்கியத்தின் அர்த்தம் தவறாகவே எடுக்கப்பட்டு உள்ளது. இதன் உண்மையான அர்த்தம் தமிழர்களின் வாழ்வின் படிநிலைகளை விளக்குவதாக உள்ளது.

தமிழர்கள் நிலத்தினை ஐந்து வகையாக பிரித்து வைத்து இருக்கின்றனர்.

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்.
முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை - குறிஞ்சி நிலத்துக்கும் முல்லை நிலத்துக்கும் இடையில் தோன்றும் இடம்.

மேலே உள்ள இந்த நில அமைப்புகள் மனிதர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டனர் என்பதனை விளக்கிக் கொண்டு இருக்கின்றது. முதலில் கற்கள் சூழ்ந்த மலையினில் வாழத் தொடங்கிய மனிதன் பின்னர் காடுகளுக்குள் குடியேறி பின்னர் வயல்வெளிகள், கடற்கரை ஓரங்கள் என்று படிப்படியாக தங்களது வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டனர். மேலும் மனிதன் எவ்வாறு வயல்வெளிகளுக்கும் கடலோரங்களுக்கும் வந்து நகரங்களை அமைத்து வாழ ஆரம்பித்தானோ அன்று தான் பல நாகரீகங்களும் வளரத் தொடங்கின. இதைத் தான் தமிழர்கள் மேலே உள்ள அந்த வாக்கியத்தின் மூலம் விளக்குகின்றனர்.

அதாவது, மற்ற நாகரீகங்கள் வயல்வெளிகளிலும் நகரங்களிலும் மனிதன் வாழக் கற்றுக் கொண்டப் பின்பு தான் தோன்றின ஆனால் தமிழ் நாகரீகமோ, மண் பிரதேசங்களில் அந்த நாகரீகங்கள் தோன்றும் முன்னரே, மனிதன் முதன் முதலில் தோன்றிய மலைகளிலேயே தோன்றி விட்டது. இதைத் தான் 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி' என்ற வாக்கியம் விளக்குகின்றது.
 
சரி...இப்பொழுது 'எல் சடை' என்ற பெயரில் சடை என்னும் சொல் எவ்வாறு முடியினைக் குறித்தது என்றுப் பார்ப்போம்.

சடை என்ற சொல் சல் + தை எனும் சொற்களின் தொகுப்பே ஆகும். அதாவது நீண்ட பகுதிகளை சேர்த்து தைப்பது என்னும் அர்த்தத்தில் நீண்டுக் கொண்டே செல்வது என்பதுப் பொருள். இதன் மூலம் இறைவன் முடிவற்றவன் என்பதனை விளக்கவே அவன் சடையன் என்றும் வழங்கப்பெற்றான்.

எனவே அச்சொல்லினைத் தான் சுமேரியாவிலும் மக்கள் பயன் படுத்தி இருக்கின்றார்கள் என்று நாம் கருத முடிகின்றது. ஆனால் சடை எனும் சொல்லுக்கு எபிரேயத்தில் நீண்டு கொண்டு இருக்கும் மலைத் தொடர் என்ற அர்த்தமும் வருகின்றது. எனவே தான் அதனை ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் மலை மேல் உள்ளக் கடவுள் என்று விளக்கம் தருகின்றனர். சரி இப்பொழுது நாம் யூதர்கள் எல் சடை என்னும் கடவுளுக்கு வழங்கிய மற்றுமொரு பெயரினைப் பற்றிப் பார்ப்போம்.

'செகொவா (Jehovah)' என்று இன்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர் தான் அது. இசுரேலியர்கள் தங்களின் கடவுளுக்கு 'யாகோவா (yaahowah)' என்று இட்டப் பெயர் தான் 'செகொவா(Jehovah)' என்று ஆங்கிலத்தில் மருவி நிற்கின்றது. இப்பொழுது நாம் அந்தப் பெயர் எவ்வாறு தமிழ் பெயராக இருக்கின்றது என்பதனைக் காண்போம்.

'யாகோவா' என்றச் சொல்லினை 'யா-கோ-ஆ' என்றும் கொள்ளலாம்.

யா என்றால் தமிழில் நீண்ட நாள் வாழ்கின்ற என்றப் பொருளும் இருக்கின்றது.
கோ - அரசன்
ஆ - தொடக்கம்.

எனவே 'யாகோவா' என்றச் சொல் 'யா-கோ-ஆ' என்றப் பெயரின் திரிபே என்றும் அதன் அர்த்தம் 'தொடக்கத்தில் இருந்தே ஆண்டுக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் அல்லது 'தொடக்கத்தில் இருந்தே வாழ்ந்துக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் கொள்ளலாம்.

மேலும் இந்த பெயர் தோன்றிய வரலாறும் மேலே நாம் கண்டுள்ள பொருளினை மெய்ப்பிப்பது போலவே உள்ளது.

விவிலியத்தில் இறைவனுக்கு யார் 'யாகோவா' என்று பெயர் இட்டது என்பது தெரியவில்லை. அநேகமாக மோசே இப்பெயரினை இட்டு இருக்கலாம் என்றே கருதப் படுகின்றது. விவிலியத்தின் படி மோசே என்பவன் இறைவனுடன் உரையாடும் பொழுது 'இசுரவேல் மக்கள் உங்களின் பெயர் என்னவென்று கேட்டால் நான் என்ன சொல்வது' என்று வினவுகின்றான். அதற்கு இறைவன் 'நானே உனது முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோபு வழிப்பட்டக் கடவுள்' என்றும் 'நானே இருக்கின்றவன்' என்றும் கூறியதாக இருக்கின்றது.

எனவே மோசே, தன் மூதாதையர்கள் காலத்திலும் சரி தன் காலத்திலும் சரி இருப்பது ஒரே கடவுளே என்ற அர்த்தத்திலும் தொடக்கத்தில் இருந்து அவரே இருக்கின்றார் என்ற அர்த்தத்திலும் அவரை 'யா-கோ-ஆ' என்று பெயர் இட்டு அழைத்தான் என்று நாம் கருத முடிகின்றது.

எனவே விவிலியத்தில் வழங்கப்பெறும் இறைவனின் பெயர்களான எல் சடையும் சரி யாகோவா வும் சரி தமிழ் பெயர்களாகவே அமைந்து இருப்பது நமக்கு புலப்படுகின்றது.

சரி...விவிலியத்தில் கூறப்பட்டு உள்ள மக்கள் தமிழர்கள் என்றால் தமிழர்களின் வழிப்பாட்டு முறையான கல் வழிபாடு விவிலியத்தில் இருக்க வேண்டுமே?... இருக்கின்றதா என்கின்றீர்களா....!!!

ஆம்...விவிலியத்தில் கல் வழிபாடு/சிவலிங்க வழிபாடு இருக்கவே செய்கின்றது....அதை பற்றி நாம் அடுத்தப் பதிவில் காண்போம்.

தொடரும்....!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19

பி.கு:

ஒவ்வொரு சமயத்தினரும் அவர்கள் வழிபடும் இறைவன் தான் உலகின் முதல் கடவுள் அல்லது ஒரே கடவுள் என்றே கருதுவர். அந்நிலையிலேயே தான் நாம் யாகோவா என்றப் பெயரினைக் காண வேண்டி இருக்கின்றது. அப்பெயர் தமிழ் சொல்லில் இருந்தே வந்து இருக்கின்றது என்பதனைக் காணவே நாம் அதனை இங்கே கண்டு இருக்கின்றோம். அதைத் தவிர்த்து முழு முதற் கடவுளான உலகைப் படைத்த இறைவனுக்கும் யாகோவாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அக்காலத்தில் குல தெய்வ வழிபாட்டு முறையே இருந்ததே அன்றி முழுமுதற் கடவுட் கொள்கை இருக்கவில்லை. யாகோவா என்பது யூதர்களின் குல தெய்வமே அன்றி முழு முதற் கடவுள் அல்ல. இயேசுவிற்கும் யாகோவாவிற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.

8 கருத்துகள்:

interesting....... keep going

we are following...

adutha padhivu yepozhuthu varum nanbarae? aarvathudan kaathirukiroam.

//யா என்றால் தமிழில் நீண்ட நாள் வாழ்கின்ற என்றப் பொருளும் இருக்கின்றது.
கோ - அரசன்
ஆ - தொடக்கம்.

எனவே 'யாகோவா' என்றச் சொல் 'யா-கோ-ஆ' என்றப் பெயரின் திரிபே என்றும் அதன் அர்த்தம் 'தொடக்கத்தில் இருந்தே ஆண்டுக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் அல்லது 'தொடக்கத்தில் இருந்தே வாழ்ந்துக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் கொள்ளலாம்.//

கோ - என்றால் அரசனா? இல்லை இறைவனா?
கோ - என்றால் அரசன். எனவே தொடக்கத்தில் இருந்தே ஆண்டுக் கொண்டு இருக்கும் அரசன் என்று கூட தமிழில் பொருள் கொள்ளலாமே!!

கோ என்றால் அரசன் என்றும் பொருள் கொள்ளலாம். அந்தக் காலத்தில் அரசர்களை வழிபடும் பழக்கமும் இருந்து இருக்கின்றது. தமிழ் திணைகளில் மருத நிலத்தின் கடவுளாக வேந்தனே அறியப்படுகின்றான். இந்திரன் என்றால் தலைவன் என்றே பொருள்.

நமக்கு அங்கே முக்கியம் என்னவென்றால் அச்சொற்கள் தமிழ் சொற்களாகவே இருக்கின்றன. தற்போதைக்கு அவ்வளவே!!!

//நமக்கு அங்கே முக்கியம் என்னவென்றால் அச்சொற்கள் தமிழ் சொற்களாகவே இருக்கின்றன. தற்போதைக்கு அவ்வளவே!!! //

தமிழ் சொற்களாகவே கூட இருக்கட்டும், ஆனால் யகோவா என்பது பைபிளில் அரசனை குறிக்கவில்லை மாறாக இறைவனையே குறிக்கிறது என்பதை ஏன் மறைக்கிறீர்...

//தமிழ் திணைகளில் மருத நிலத்தின் கடவுளாக வேந்தனே அறியப்படுகின்றான். இந்திரன் என்றால் தலைவன் என்றே பொருள்.//

கொஞ்சம் சிந்தியுங்கள் பைபிளில் நிலத்திற்கோ, மரத்திற்கோ தனித்தனியாக இறைவன் கிடையாது மாறாக ஒரே இறைவன் அது யகோவா மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்...

யெகோவா வையே மக்கள் சிவனாக கண்டனர் ஆனால் சிவன் கடவுளாக முடியாது சகோ

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு