முந்தையப் பதிவு

சென்ற பதிவினில் ஆறாவது அறிவிற்கு காரணமாக ஆன்மா விளங்கலாம் என்றே கண்டு இருந்தோம். இப்பொழுது அக்கூற்று சரியான ஒன்றா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு ஆன்மா என்றால் என்ன என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நமக்கு துணையாய் மெய்கண்டாரின் சிவஞானபோதம் என்ற நூல் நிற்கின்றது. அதன் வழியே கண்டோம் என்றால்,

1) ஆன்மாவானது உடலினுள் இருக்கின்றது
  • "மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா"  - சிவஞானபோதம் 3
2) ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு இருக்கின்றது
  • "ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்" - சிவஞானபோதம் 3
  • "ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" - சிவஞானபோதம் 8
3) தன்னை அறியாத நிலையில் அது இருக்கின்றது
  •  "....ஆன்மா சகசமலத் துணராது" - சிவஞானபோதம் 4
4) இறைவன் உணர்த்தினால் இறைவனை உணரும் தன்மைக் கொண்டு இருக்கின்றது
  • "....உணர்த்த உணர்தலின்" -சிவஞானபோதம் 3
என்றே நாம் ஆன்மாவைப் பற்றி அறிய முடிகின்றது. இப்பொழுது இதை நாம் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

ஆன்மா என்பது ஐம்புலன்களை கட்டுப்படுத்தும் வல்லமைப் பெற்றது என்றே நாம் அறியப்பெறுகின்றோம். ஐம்புலன்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்றால் முதலில் ஐம்புலன்கள் இருக்க வேண்டும். சரி தானே. அப்படிப்பார்த்தால்,

ஓரறிவு முதல் நான்கறிவு படைத்த உயிரினங்கள் அனைத்தும் அடிப்பட்டு போய்விடுகின்றன. அவற்றிற்கு ஆன்மா கிடையாது. சரி இப்பொழுது மீதம் இருப்பது ஐந்தறிவு உயிரினங்களும் மனிதர்களும் தான். இவைகளுள் நாம் கண்டோம் என்றால் ஐந்தறிவினைக் கட்டுப்படுத்தும் தன்மை மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது என்பது தெள்ளத்தெளிவான ஒரு விடயம். மேலும் மனிதன் விலங்குகளை விட சிறந்தவனாகவும், ஆறாவது அறிவினை உடையவனாகவும் அறியப்பட்டு இருக்கின்றான். அனைத்து உயிரினங்களையும் கண்டு அவற்றை ஆளும் வல்லமையையும் அவன் பெற்று இருக்கின்றான். அவன் மாறிக் கொண்டே இருக்கின்றான். ஆனால் வெறும் ஐந்தறிவுப் படைத்த மிருகங்களோ அவை தொடக்கத்தில் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறு தான் இன்றும் தொடர்ந்து இருந்துக் கொண்டு வந்து இருக்கின்றன.

இதனை நாம் காணும் பொழுது ஐந்தறிவினைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதன் ஒருவனுக்கே உள்ளது என்றே அறிந்துக் கொள்ளுகின்றோம். அதாவது ஆன்மா என்பது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு விடயம். மற்ற உயிரினங்களுக்கு ஆன்மா கிடையாது.

அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருக்கின்றது...ஆனால் ஆன்மா மனிதனுக்கு மட்டுமே இருக்கின்றது என்றும் அதுவே மனிதனின் மேலாண்மைக்கு வழி வகுக்கின்றது என்றுமே நாம் அறிந்துக் கொள்கின்றோம்.

சரி ஆன்மா உடலினுள் இருக்கின்றது சரி...ஆனால் ஆன்மா செய்யும் செயல் என்ன என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஐம்புலன்களைப் பற்றி நாம் விவரிக்கத் தேவை இல்லை. ஒவ்வொருப் புலனும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றது. கண் காட்ட உதவுகின்றது. மூக்கு நுகர உதவுகின்றது...இதனைப் போல ஒவ்வொரு புலன்களுக்கும் ஒவ்வொரு செயல்கள் இருக்கின்றன. அவ்வொவ்வொரு செயல்களும் ஒரு அறிவிற்கு காரணமாக இருக்கின்றன.

அவ்வாறு பார்த்தோம் என்றால் ஆறாம் அறிவு என்று ஒன்று இருந்தால் அந்த அறிவிற்கான உறுப்பும் நிச்சயமாக இருக்க வேண்டும் அல்லவா. அந்த உறுப்பினைத் தான் ஆன்மா என்கின்றனர் ஆன்மீகவாதிகள். சரி ஆறாவது அறிவிற்கான உறுப்பு ஆன்மா என்றே இருக்கட்டும், ஆனால் அந்த உறுப்பினால் பெறப்படும் ஆறாவது அறிவு என்பது என்ன என்ற கேள்விக்கு அவர்கள் விடையாய் தருவது,

ஆறாவது அறிவு என்பது இறைவனை உணரும் அறிவு என்பதே ஆகும். அவ்வாறு இறைவனை உணர உதவும் கருவியே ஆன்மா ஆகும் என்பதே அவர்களின் கூற்று.

அதாவது மனிதனின் ஆறாவது அறிவுக்கு காரணமான ஆன்மாவினால் மட்டுமே இறைவனை அறிந்துக் கொள்ளும் ஞானத்தை ஒருவன் பெற்றுக் கொள்ள முடியும்.

சரி...மனிதர்களுக்கு மட்டுமே ஆன்மா இருக்கின்றது, அதனால் தான் அவர்கள் உயர்திணை என்று தமிழால் உயர்த்தப்பட்டு இருக்கின்றனர் என்றும் ஆன்மாவின் வாயிலாக இறைவனை அறிந்துக் கொள்ளலாம் என்றுமே வைத்துக் கொள்வோம்...அப்படி இருக்கையில் மனிதர்களை ஐந்தறிவுப் படைத்த விலங்குகளோடும் தமிழ் அறிவியலில் வைத்து இருக்கின்றனரே...அது ஏன் என்றே கேள்வியை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஒருவருக்கு கண் இருக்கின்றது. ஆனால் கண் செயல்படாமல் இருக்கின்றது. இந்நிலையில் அவர் ஐந்தாவது அறிவிற்கான உறுப்பினைப் பெற்று இருந்தும் அதன் வழியாகப் பெறக் கூடிய அறிவினைப் பெற இயலாத நிலையில் இருக்கின்றார்.

அதனைப் போன்று தான் மனிதர்களும் ஆன்மாவினைப் பெற்று இருந்தும் அதனை அறியாத நிலையில் ஆறாவது அறிவான இறைவனை உணரும் ஞானத்தை அடையாது விலங்குகளைப் போல் ஐந்தறிவினை வைத்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் அம்மக்களை மாக்கள் என்று தமிழ் அறிவியல் அழைக்கின்றது.

அதாவது அம்மக்களுக்கு ஆறாம் அறிவுக்குரிய ஆன்மா இருக்கின்றது, இருந்தும் அந்த ஆன்மாவானது தன்னை அறிந்துக் கொள்ளாமல் ஐம்புலன்களின் வழியே செயல் ஆற்றிக் கொண்டே இருக்கின்றது. அதனால் இறைவனை அறிந்துக் கொள்ள இயலாத அந்நிலையில் அம்மக்களை மாக்கள் என்ற நிலையில் தமிழ் வைத்து இருக்கின்றது.

ஆறாவது அறிவான இறைவனை உணரும் ஞானத்தை பெற்றவர்களையே மக்கள் என்று தமிழ் வழங்குகின்றது.

கண் இருந்ததும் கண் தெரியவில்லை என்றால் அது ஏதாவது நோயாக இருக்கலாம்...இல்லை கண் குறைபாடு உடையதாக இருக்கலாம். ஆனால் ஆன்மா சரியாக வேலை செய்ய வில்லை அதனால் இறைவனை அறிய இயலவில்லை என்றுக் கூறுவது எங்கனம்? ஆன்மா குறை உடையதாக இருக்குமா என்ற கேள்வி இங்கே எழலாம்.

அதற்கு விடையாக ஆன்மீகவாதிகள் கூறுவது என்னவென்றால் ஆன்மாவானது மாயையினால் சூழப் பட்டு இருக்கின்றது (சகசமலம்), அதனாலேயே தான் அது தன்னையும் சரி இறைவனையும் சரி அறியாத நிலையில் இருக்கின்றது.

ஆனால் எப்பொழுது இறைவன் ஆன்மாவிற்கு தன்னை உணர்த்துகின்றானோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணர்ந்து அவனின் அடிப்பற்றி செல்ல ஆரம்பிக்கும் என்பதே ஆகும். அந்நிலையில் ஆன்மா என்பது மனிதர்களுள் இறைவன் குடி கொண்டு இருக்கும் கோவிலாக மாறும் என்றுமே ஆன்மிகம் பேசுவோர் கூறி இருக்கின்றனர்.

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் - இது திருமூலரின் கூற்று.


இதனைப் பற்றி விரிவாக காண நாம் சிவஞானபோதத்தைக் காண வேண்டி இருக்கின்றது. அதனைப் பின்னர் காணலாம்.

இப்பொழுது,

ஆன்மாவானது மனிதர்களிடம் மட்டுமே இருக்கின்றது என்றும் அதுவே அவர்களின் ஆளுமைக்கும் ஆறாம் அறிவிற்கும் காரணம் என்றும் ஆன்மாவின் வாயிலாகவே இறைவனை உணர முடியும் என்றுமே அறிந்து இருக்கின்றோம்.

ஆனால் ஆன்மாவானது தன்னையும் இறைவனையும் அறியாத நிலையில் இயல்பாகவே ஆன்மா இல்லை என்றும் இறைவன் இல்லை என்றும் கருத்துக்கள் உலகில் எழுந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் எப்பொழுது ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் மாயையினை இறைவன் அகற்றுகின்றாரோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணர்ந்துக் கொண்டு மெய்யுணர்வுப் பெறும் என்பதே தமிழ் கூறும் ஆன்மவியலின் கருத்து.

இதையேத் தான் மெய்கண்டார்

"ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி" - சிவஞானபோதம் 9


ஐம்புலன்களில் ஒன்றான கண்ணினைக் கொண்டு காண இயலாத இறைவனை ஞானக் கண் கொண்டு காணலாம் என்றும்,

திருவள்ளுவர்,

"ஐயுணர்வு எய்திய கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு" - குறள் 354

என்றும்

"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு" குறள் 352

கூறிச் சென்று உள்ளனர்.

மேலும் சிலர் உயிரும் ஆன்மாவும் ஒன்று என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அக்கூற்று தவறென்று தமிழ் அறிவியல் தெளிவாக விளக்கிக் கொண்டு இருக்கின்றது.

உயிர் என்பது வேறு ஆன்மா என்பது வேறு.

இந்த விடயத்தைத் தான் தமிழ் அறிவியல் மிகவும் தெளிவாகக் கூறிக் கொண்டு இருக்கின்றது. அதனை அறிந்துக் கொள்ளாது உயிரினையும் சரி உடலினையும் சரி ஆன்மாவினையும் சரி தெளிவாக நம்மால் அறிந்துக் கொள்ள இயலாது.

உயிர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய ஒன்றாக இருக்கின்றது. ஆன்மா இருக்கும் காரணத்தினால் தான் மனிதனால் மற்ற உயிரினங்களை ஆட்சிப் புரிய முடிகின்றது. ஆன்மா இருப்பதினால் தான் அவனால் மாற்றங்களைப் புரிய முடிகின்றது. ஆன்மா அவனுக்கு சுயமாக முடிவு செய்யும் தன்மையை வழங்குகின்றது. ஆனால் ஆன்மாவையும் இறைவனையும் உணராத நிலையில் மனிதன் தவறுகளை செய்ய எத்தனிக்கின்றான்...எப்பொழுது இறைவன் அவனுக்கு உணர்த்துகின்றாரோ அப்பொழுது அவனது ஆன்மா விழிப்படைந்து அவன் ஞானம் பெறுகின்றான். இறைவனை அடைகின்றான்.

இது தான் தமிழக ஆன்மீகமும் அறிவியலும் கூறும் விடயமாகும்.

ஆனால் இதனை அறியாது வெறும் உடலினை வைத்து மட்டுமே ஆராய்ந்துக் கொண்டு இருக்கும் ஐரோப்பிய அறிவியல் மனிதன் ஒரு மிருகம் என்றும் அவன் மிருகத்தில் இருந்து பரிணாம மாற்றத்தால் உருவானான் என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றது.

உயிரையும் சரி ஆன்மாவையும் சரி ஐரோப்பிய அறிவியல் இன்னும் ஆராயத் துவங்கவே இல்லை. ஆனால் தமிழிலோ, உயிரைப் பற்றிய ஆராய்ச்சிகள் முற்றுப் பெற்று ஆன்மீகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும் வளர்ந்துக் கிடக்கின்றன. ஆனால் தமிழும் தமிழனும் அடிமைப்பட்டுக் கிடப்பதால் இந்த விடயங்கள் வெளிவராமலே இருக்கின்றன.

ஆன்மாவினைப் பற்றிய அறிவியலான ஆன்மவியல் தமிழிலே மட்டுமே வளர்ந்து இருக்கின்றது. இதனை அறியாது தான் ஐரோப்பிய அறிவியல் இன்னும் உடலினை வைத்துக் கொண்டு குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றுக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

தமிழ் அறிவியல் வெளிவரும் வரை அந்நிலையும் சரி அக்கூற்றும் சரி தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருக்கும்.

அதனை வெளிக்கொணர வேண்டியக் கடமை நமக்கு இருக்கின்றது. முயல்வோம்...!!!

இத்துடன் இத்தொடர் முடிவு பெறுகின்றது. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி நண்பர்களே...!!!உங்களின் கேள்விகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

முற்றும்.

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

3) சிவஞானபோதத்தின் கருத்துக்களை அறிந்துக் கொள்ள,

16 கருத்துகள்:

Hi Good post,


But i don't agree with

////
ஓரறிவு முதல் நான்கறிவு படைத்த உயிரினங்கள் அனைத்தும் அடிப்பட்டு போய்விடுகின்றன. அவற்றிற்கு ஆன்மா கிடையாது//

//அதாவது ஆன்மா என்பது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு விடயம். மற்ற உயிரினங்களுக்கு ஆன்மா கிடையாது.
////

can you give me some proof to say that

//
// உயிர் என்பது வேறு ஆன்மா என்பது வேறு.////

this article did not provide much agreeable proof or tamil saints thoughts.

thanks

FYI

உயிர் வேறு ஆன்மா வேறா?

http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/08/blog-post_4.html

Sir,
Neengal solvathu pol 5-mpulangalukku uruppu irukirathu, aanaal 6-aam arivana aanmavirku udaiya uruppu ethu? antha uruppu nam udalil engu ullathu endru solla mudiuma please.

ஆன்மா வ சும்மா காமெடி பணதிங்க சரியா, ஆன்மாவும் இல்லை ஒரு மண்ணைகடியும் இல்லை....... மிருங்களுக்கு செய்திக்கும் திறன் இல்லை என்று யார் சொன்னது, மிருகங்கள் பேசும் மொழிகள் உங்களுக்கு தெரியுமா????, அது சரி எத்தனை மனிதர்கள் மிருகங்களாக இருக்கிறார்கள் தெரியுமா??? சும்மா சப்பை கட்டு கட்ட வேண்டாம், முதலில் இந்த எரிமலையாக இருந்த பூமில் எப்படி உயிர்கள் உருவாக துடங்கின என்று பாருங்கள் புரியும்...
நம் பால்வழி விண்மீன் திரளில் (milkyway galaxy) கிட்ட தட்ட 200 பில்லியன் சூரியன்கள் (20,000 கோடிகள்), அதற்கு கிட்ட தட்ட 400 பில்லியன் கோள்கள் (40,000 கோடிகள்) உள்ளன..இது நம் பால்வழி மண்டலத்தில்(milkyway galaxy) மட்டும் தான் அனால்,.....
இதுவரை மொத்தம் 3000 பில்லியன்( 3,00,000 கோடிகள்) விண்மீன் திரள்கள் galaxies இருபதாக கண்டு பிடிதுளர்கள்,...
இதுதான் உண்மையான அறிவியல், இது இன்னும் தொடரும்,

இல்லாத ஆன்மா வை தேட வேண்டாம் இருகிறார உயிர்கள் இடத்தில அன்பாக இருக்கலாம்...

http://imagine.gsfc.nasa.gov/docs/ask_astro/answers/021127a.html

http://www.universetoday.com/30305/how-many-galaxies-in-the-universe/

/////நண்பர்களே...!!!உங்களின் கேள்விகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.////

ஐயா, நீங்கள் இப்படி போட்டு பதிவை முடித்துள்ளீர்கள் எனது ஐயத்தை கேட்டேன் பதில் எதுவும் தரவில்லையே.

////Sir, Neengal solvathu pol 5-mpulangalukku uruppu irukirathu, aanaal 6-aam arivana aanmavirku udaiya uruppu ethu? antha uruppu nam udalil engu ullathu endru solla mudiuma please/////

தயைகூர்ந்து உங்களுக்கு நேரம் இருக்கும் போது பதிவில் எனது கேள்விக்கு பதில் கூறுங்களேன் ப்ளீஸ். தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக தான் கேட்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

@ Mani,

Nanbare... sorry for the delay...But actually i've limited amount of access to the net during weekdays and hence will not be active during that time...

yes i've read ur post and will surely answer ur question...It will take some time though...!!!

Thanks for coming and sharing ur views/Questions....And sorry for the delay!!!

You are trying others to accept your point of view. You explained it as you know well about Athma. But it shows you believe GOD more than science.

கடவுள் என்று ஒருத்தன் ஒருந்தால், கண்டிப்பாக பேய் என்ற ஓன்று இருக்க வேண்டும்... இதுதான் எதார்த்த உண்மை... கடவுள் விடுங்கள்... சாத்தான், பேய் இவைகளை இதுவரை அறிவியல் மூலமாகவும் சரி, மற்ற வழிகள் மூலமாகவும் நிருபிக்க படவில்லை..... ஆன்மா என்ற ஒன்றும் இல்லை.... உயிர்கள் பரிணாம வளர்சிமுலமாக தான் அறிவுல சிந்திக்கும் மனிதனாக மாறினான்... முதல் மனிதர்கள், அவுளவு போகவேண்டாம் சில நுற்றண்டுகளுக்கு முன் சென்ட்ரல் கூட தெரியும்... மனிதன் மனிதனை அடிமை படுத்தி வைத்து இருபது..... இந்த அடிமை சங்கிலிகளை அடித்து உடைத்து, உங்க்கள் ஆன்ம வும் இல்லை... உங்கள் கடவுளும் இல்லை.... சாதாரன நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் தான்... வரலாறை எடுத்து பார்த்தல் சரியாக தெரியும்... கடவுள் பெயர் சொல்லி தான் மனிதனை அடிமை படுத்தி வைத்தார்கள்..... உண்மையான அறிவியல் என்ன என்றால் இந்த பறந்து விரிந்த பிரஞ்சதில் உயிர்கள் எங்கு எங்கு உள்ளன என்று தேடுவதுதான்...

எதேட்சையாக உங்கள் தளத்திற்கு வந்தேன். படித்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. மீண்டும் முழுவதும் படித்து விட்டு பதிவிடுகிறேன்

//ஆனால் எப்பொழுது ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் மாயையினை இறைவன் அகற்றுகின்றாரோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணர்ந்துக் கொண்டு மெய்யுணர்வுப் பெறும் என்பதே தமிழ் கூறும் ஆன்மவியலின் கருத்து//

//எப்பொழுது இறைவன் அவனுக்கு உணர்த்துகின்றாரோ அப்பொழுது அவனது ஆன்மா விழிப்படைந்து அவன் ஞானம் பெறுகின்றான். இறைவனை அடைகின்றான்.//

வணக்கம் ஐயா!!! மேலே உள்ள உங்கள் வரிகளின்படி "மனிதன் ஆறாவது அறிவான ஆன்மாவை அறியாமல் அல்லது உணராமல் இருப்பதற்கும் தவறுகள் செய்வதற்கும் இறைவன் தான் காரணம் என்று கூறுகிறீர்களா?"

ஆன்மா என்பது எல்லா உயிர்களுக்கும் உள்ளது. ஆனால் அதனை அறிந்துகொள்ளும் திறன் ஆறாவது அறிவுள்ள மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அந்த ஆன்மாவே மூளையின் மூலமாக உடலை ஆள்கிறது. ஆன்மா எப்போதும் சந்தோசமாக இருக்கவே விரும்புகிறது. அதற்காக ஐம்புலன்களையும் பயன்படுத்திக்கொள்கிறது. உடலில் வலி ஏற்படுவதை நாம் உணர்கிறோம். எந்த பகுதி அந்த வலியை உணர்கிறது. மூளையா? அப்படியானால் மூளையில் அடிபட்டால் வலிக்காதாமே. அப்படியென்றால்..... ஆம் அந்த ஆன்மாவே அந்த வலியை உணர்கிறது. உடலில் ஆன்மா இருக்கமுடியாத அளவிற்கு வலி எற்படும் போது அந்த ஆன்மா (உயிர் என்ற இயக்கம்) உடலை விட்டு சென்று விடுகிறது. ஆம் உயிர் என்ற அந்த இயக்கம் தான் ஆன்மா. நம் உடல் இயக்கத்தை பொருத்தமட்டில் கொள்கை முடிவு எடுப்பது ஆன்மா, அதனை செயல்படுத்துவது மூளை. நம் உடலை அழித்தேனும் தான் சந்தோகமாக இருக்க முற்படுவது ஆன்மா. உதாரணமாக புகை பிடிப்பதினால் உடலுக்கு கேடு என்பது மூளைக்கு தெரியும். ஆனால் புகை பிடிப்பதால் உடலின் மூலம் சந்தோசம் அனுபவித்த ஆன்மா, புகைப்பதை நிறுத்தவிடாமலிக்க தேவையான சமாதானங்களை முளையிடம் சொல்லி தொடர்ந்து புகை பிடிக்க மூளையிடம் கொள்கை முடிவாக மூளைக்கு அறிவிக்கிறது. மூளை புகைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துகிறது. வெளியில் நாம் என்ன சொல்கிறோம். "புகைப்பதை நிறுத்த நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை". ஆம்.... நம் உடலை அழித்தேனும் தான் சந்தோகமாக இருக்க முற்படுவது ஆன்மா. எனவே ஆத்மாவை மகாத்மாவாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும். பின்னர் பார்க்கலாம்..........................

@ Ramachandran,

//ஆறாவது அறிவுள்ள மனிதனுக்கு மட்டுமே உள்ளது//

What is that Sixth sense? And why are atheists Denying it.

"வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதிசெவி அறிவோ டையறி வுயிரே" - நன்னூல் 449

//ஆன்மா என்பது எல்லா உயிர்களுக்கும் உள்ளது//

Then why has Sivagnanapotham Specifically mentioned that Aanma is present only in humans

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" சிவஞானபோதம் 8

//ஆம் உயிர் என்ற அந்த இயக்கம் தான் ஆன்மா//

Is this what is mentioned in the Vedanthas and saiva Siddhanthas.

Please Read the Post clearly my friend and there are questions there for which u have to answer :)

thanks for ur comments!!!

உயிர் வேறு ஆன்மா வேறு என்று சிவஞானபோதம் கூறுகிறதா?
விளக்கம் தரமுடியுமா நண்பரே.
எந்த ஒரு சித்தர் நூலும் உயிர் வேறு ஆன்மா வேறு என்று கூறியதாக தெரியவில்லை
ஆன்மா என்பது உயிரையே குறிக்கிறது.

@R.Puratchimani,

I was of the thought that u had read this post...

http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/10/blog-post.html

//உயிர் வேறு ஆன்மா வேறு என்று சிவஞானபோதம் கூறுகிறதா?
விளக்கம் தரமுடியுமா நண்பரே.//

I hope that is wat i have explained in this post thozhare!!! Please Read the posts carefully and completly thozhare!!!

Nandrikal!!!

யாமறிந்த மட்டில் தமிழில் ஒரே பொருள் தரக்கூடிய இரு வேறு வார்தைகள் கிடையவே கிடையாது.அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.இன்னொரு வார்தை வருகிறது என்றாலே முந்தய வார்தைக்கான அர்தத்தை வேறுபடுத்தவே என்பது தெளிவு.
ஆன்மாவும் உயிரும் வெவ்வேறே.

ஆனால் நான் இங்கு உடன்பட மறுக்கும் கருத்து யாதெனில், இறைவனை உணரும் உயிர்கே ஆன்மா உண்டு என்றும் அது மனிதன் மட்டுமே என்பதுதான்.

யானை, சிலந்தி, பாம்பு, முதலை, தேரை,கழுகு முதிலிய பிற உயிர்களும் இறைவனை உணர்ந்து பக்தி செலுத்திய வரலாறு உண்டே, இவற்றிற்கெல்லாம் ஆன்மா இல்லாமலா இறைவனை உணர்ந்தன..?

மேலும், மனிதன் பிற பிறவிகளில் பிற ஊயிரினமாக பிறக்கும்போது அவனது ஆன்மா என்னவாகிறது..?

யாமறிந்த மட்டில் தமிழில் ஒரே பொருள் தரக்கூடிய இரு வேறு வார்தைகள் கிடையவே கிடையாது.அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.இன்னொரு வார்தை வருகிறது என்றாலே முந்தய வார்தைக்கான அர்தத்தை வேறுபடுத்தவே என்பது தெளிவு.
ஆன்மாவும் உயிரும் வெவ்வேறே.

ஆனால் நான் இங்கு உடன்பட மறுக்கும் கருத்து யாதெனில், இறைவனை உணரும் உயிர்கே ஆன்மா உண்டு என்றும் அது மனிதன் மட்டுமே என்பதுதான்.

யானை, சிலந்தி, பாம்பு, முதலை, தேரை,கழுகு முதிலிய பிற உயிர்களும் இறைவனை உணர்ந்து பக்தி செலுத்திய வரலாறு உண்டே, இவற்றிற்கெல்லாம் ஆன்மா இல்லாமலா இறைவனை உணர்ந்தன..?

மேலும், மனிதன் பிற பிறவிகளில் பிற ஊயிரினமாக பிறக்கும்போது அவனது ஆன்மா என்னவாகிறது..?

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு