சென்ற பதிவின் முடிவில் நாம் இந்தியா முழுவதும் அசோகர் புத்த மதத்தினை பரப்புவதைக் கண்டோம்.

"பலி வேண்டாம்... எல்லா உயிர்களும் ஒன்றே.." என்ற புத்த மதத்தின் கோட்பாட்டின் காரணமாக வேள்வி மற்றும் பலிகளை நம்பியே வாழ்ந்து வந்த ஆரியர்கள் திகைக்கின்றனர். அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கின்றனர்.

அவர்கள் என்ன செய்தனர் என்பதனை நாம் காணும் முன் அக்காலம் ... அதாவது கிமு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியா எவ்வாறு இருந்தது என்பதினை நாம் கண்டுவிடலாம்.

மௌரிய பேரரசு கிட்டத்தட்ட இந்தியா முழுவதுமே பரவி இருந்தது. சந்திர குப்த மௌரியன் தொடங்கி வைத்த அந்த பேரரசு அசோகரின் கீழ் அதன் உச்ச நிலையினை அடைந்து இருந்தது. ஆரியர்களின் செல்வாக்கு வடக்கே மிகுந்து இருந்தது (சந்திர குப்தனின் ஆசிரியராகவும் பின்னர் அமைச்சராகவும் சாணக்கியன் என்ற ஆரியன் இருந்ததினை நோக்குக).

இந்த நிலையில் தான் கலிங்க யுத்தத்திற்கு பின்னர் அசோகனின் மனம் மாறுகின்றது. அசோகன் போரில் இருந்த நாட்டத்தினை மறந்து புத்தத்தின் பால் நாட்டம் கொள்கின்றான். பலிகள் கூடாது என்று புத்தம் சொல்கின்றது. எனவே அசோகனும் பலிகள் கூடாது என்கின்றான். அரசன் கட்டளையினை இட்டப் பின்பு மக்கள் கேட்காமலா இருப்பார்கள். மக்களும் பலிகள் வேண்டாம் என்கின்றார்கள். மௌரியப் பேரரசு முழுவதுமே புத்தம் பரவுகின்றது. நிற்க. இது வட இந்தியாவின் அன்றைய நிலை.

இப்பொழுது அக்காலத்தில் தென் இந்தியா எவ்வாறு இருந்தது என்பதினை நாம் சற்றுக் காண்போம்.

வடக்கே என்னத்தான் மௌரிய பேரரசு இணையின்றி விளங்கிக் கொண்டு இருந்தாலும் அதற்கு கட்டுப்படாமல் சுதந்திரமாக தெனிந்தியாவில் இரண்டு பேரரசுகள் இயங்கிக் கொண்டு தான் இருந்தன. ஒன்று சோழப் பேரரசு... இன்னொன்று பாண்டியப் பேரரசு. அப்பேரரசுகள் மௌரிய பேரரசிடம் வணிகத் தொடர்பினை மட்டுமே வைத்து இருந்தன. தெற்கில் இருந்து வணிகர்கள் வடக்கே செல்வதும் வடக்கே இருந்து தெற்க்கே வருவதுமாக இப்பேரரசுகளிடையே வணிகம் நன்றாக நடைப் பெற்றுக் கொண்டு இருந்ததாக அசோகனின் கல்வெட்டுகளும் பல இதர சான்றுகளும் நமக்குத் தெரிவிக்கின்றன.

எனக்கு ஒன்று பிடிப்படவில்லை, ஏன் வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் வரலாற்றின் மீது அதிகமாக அக்கறை காட்ட மறுக்கின்றார்கள்?. அசோகனின் வரலாற்றையும் சந்திர குப்தனின் வரலாற்றையும் ஆராயும் அவர்கள், அப்பேரரசர்களின் காலத்திலையே அவர்களுக்கு கட்டுப்படாமல் இயங்கி வந்த தமிழ் அரசர்களைப் பற்றி ஏன் ஆராய மறுக்கின்றார்கள். வட இந்தியா முழுவதையுமே வென்ற அந்தப் பேரரசர்கள் ஏன் தெற்கில் அவர்களது செல்வாக்கினை காட்டவில்லை என்றக் கேள்வி அந்த வரலாற்று ஆசிரியர்களின் மனதினில் எழாமலா இருந்து இருக்கும்?. அதுவும் ஆங்கிலேயர்களுக்கு முன்னால் வரை எந்த இனமும் எந்த பேரரசும்... அது அசோகனாக இருக்கட்டும், முகலாயர்களாக இருக்கட்டும், தேவராயராக இருக்கட்டும், தென் இந்தியாவினை முழுமையாக போரிட்டு வெல்ல முடியவில்லையே. அது ஏன் என்றக் கேள்விக்கு அவர்கள் ஏன் விடையினைத் தேடவில்லை என்பது தான் எனக்கு பிடிப்படவில்லை. சரி அது இருக்கட்டும். நம் வரலாற்றுக்கு நாம் மீண்டும் வருவோம்.

மௌரிய பேரரசிற்கு கட்டுப்படாமல் சோழனும் பாண்டியனும் தெற்க்கே ஆண்டு வருகின்றார்கள். நாம் முந்தைய பதிவுகளில் பார்த்தது போல் அவர்கள் நாகரீகத்திலும் கலைகளிலும் சரி சிறந்து விளங்குகின்றனர். அறிஞர்களின் கணிப்புப்படி அக்காலத்தில் கடைச் சங்கம் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றது. தமிழ் மேலும் வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது.

மக்களுள் தொழில் அடிப்படையில் சாதிகள் இருக்கின்றன. அந்தப் பிரிவுகள் கலை முன்னேற்றதிற்க்காகவும் தொழில் முன்னேற்றதிற்க்காகவுமே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அதாவது, இன்று எப்படி மருத்துவம் பயின்றவர்கள் மருத்துவன் என்று ஒரு பிரிவாகவும், விஞ்ஞானம் பயின்றவர்கள் விஞ்ஞானிகள் என்று ஒரு பிரிவாகவும், பொறியியல் படித்தவர்கள் பொறியாளர்கள் என்றும், பயிற்றுவிப்பவர்கள் ஆசிரியர்கள் என்றும் பலப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனரோ அதேப் போல் அன்று,

பள்ளமான விவசாய நிலங்களில் நன்றாக வேலை செய்து விவசாயத்தினை வளர்த்தவர்களை 'பள்ளர்கள்' என்றும்,

பறை அறைந்து மக்களுக்கு செய்திகளை தெரிவித்த செய்தி தொடர்பாளர்களை பறையர்கள் என்றும்

இசைக் கருவிகளான பாணங்களை இசைத்து இசைத் தமிழ் வளர்த்த தமிழர்களை பாணர்கள் என்றும்

அது போன்று மேலும் பல சிறப்பு மிகுந்த தொழில்களைச் செய்த மக்களுக்கு அவர்களின் தொழில் அடிப்படையில் துறைகளை ஒதுக்கி மேலாண்மைத் துறையில் சிகரங்களைக் கண்டார்கள் தமிழர்கள். இந்தப் பிரிவுகள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தனவே அன்றி பிறப்பின் அடிப்படையில் அல்ல.

அவர்கள் அனைவரும் எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி தமிழகத்தில் வாழ்ந்து வந்து கொண்டு இருக்கின்றனர்.

இக்காலத்தில் தான் வடக்கே அசோகன் புத்தத்திற்கு மாறுகின்றான். ஆரியர்கள் என்ன செய்வது என்று யோசிக்கின்றனர்.

இப்பொழுது ஒருக் கேள்வி,

நீங்கள் ஒருத் தொழிலினை செய்துக் கொண்டு வருகின்றீர். அந்தத் தொழிலுக்கு உங்கள் நாட்டில் திடீர் என்று தடை விதிக்கின்றார்கள். ஆனால் பக்கத்துக்கு நாட்டில் அதற்குத் தடை இல்லை. அங்கே நீங்கள் செல்லவும் தடை இல்லை. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள். பக்கத்துக்கு நாட்டிற்க்கு சென்று உங்கள் தொழிலை ஆரம்பிப்பீர்களா இல்லையா? ஆரம்பிப்பீர்கள் தானே!!!

அதையே தான் அந்த ஆரியர்களும் செய்தார்கள். புத்தம் பரவாது இருந்த, புத்த மன்னர்கள் இல்லாது இருந்த தமிழகத்தில் அவர்கள் நுழைய தடை ஒன்றும் இல்லை. போதாக்குறைக்கு வந்தோரை வாழ வைத்தே பழகிய தமிழகமும் அவர்களை வரவேற்க தடை ஒன்றும் இடவில்லை. போதாதா!!!

காலப்போக்கில் ஆரியர்கள் தமிழகத்தில் நுழைகின்றனர்.

"என்ன ஐயா... உங்களுக்கு பிழைக்க இடம் இல்லையா... அவ்வாறு சொல்லாதீர்கள்... நாங்கள் இருக்கும் வரை எங்கள் தேசத்தில் இல்லை என்பதே இல்லை... தாராளமாக நீங்கள் வரலாம்... தமிழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது" என்றவாறே மன்னர்கள் அவர்களை வரவேற்கின்றனர்.

இந்த நிகழ்வு கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. வடக்கில் செல்வாக்கினை இழந்த ஆரியர்கள் தெற்க்கே நுழைகின்றனர். வடக்கே வழக்கிழந்த வேள்விகளையும் இதர செயல்களையும் அவர்கள் தமிழகத்தில் மறு சீரமைப்பு செய்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது தான் அவர்கள் எதிர்பாராத ஒரு செயல் நிகழ்கின்றது.

தன் பேரரசு முழுமையும் புத்தத்தினை பரப்பிய அசோகன் அதனை மற்ற நாடுகளுக்கும் பரப்ப ஆட்களை அனுப்புகின்றான். அசோகனின் செய்தியினை சுமந்தப்படி துறவிகள் உலகெங்கிலும் செல்லுகின்றனர். சீனத்திற்கு, கிரேக்கத்திற்கு...தமிழகத்திற்கு!!!

ஆரியர்களை வரவேற்று ஏற்றுக் கொண்ட தமிழர்கள் ... அசோகனின் துறவிகளையும் வரவேற்று ஏற்றுக் கொள்ளுகின்றனர். அவ்வாறே அசோகனின் கருத்துகளையும்!!! புத்தம் தமிழகத்திலும் பரவுகின்றது. புத்ததினைப் போன்றே ஏற்கனவே மற்றொரு நாத்திக சமயமான சமணமும் தமிழகத்தில் பரவி இருக்கின்றது.

சமணம் மற்றும் புத்த சமயங்களின் கருத்துக்கள் தமிழக மன்னர்களின் மனதினைக் கவர அவர்களுள் சிலர் அம்மதங்களுக்கு மாறுகின்றனர். ஒரு வித்தியாசமான சூழ்நிலையினை தமிழகம் சந்திக்கின்றது.

பல மொழி பேசும் பல மனிதர்கள், வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் இன்னும் பல மேற்கு நாட்டவர்கள்... பாலி மொழி பேசும் மௌரியர்கள்... சமயத்தினை பரப்ப வந்த துறவிகள்... ஆரியர்கள், ஒரே நேரத்தில் தமிழகத்தில் வந்து சேர்ந்து இருந்தனர்.

இவர்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும். தங்கு தடையின்றி பேசிப்பழக வேண்டும். அதற்கு என்ன செய்வது... சிந்திக்க ஆரம்பித்தனர் தமிழக மன்னர்கள்.

"தமிழ் இனிமையான மொழி... ஆனால் நம்முடைய மொழியினை இவர்கள் கற்க வேண்டும் என்று திணிப்பது சரியல்ல... மேலும் இவர்களுள் பலர் சில வேலை நிமித்தமாக வந்து இருக்கின்றனர்... இவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழியினை நாம் உருவாக்கினால் என்ன?... நம் வணிகர்களும் அந்த நாட்டிற்கு சென்று வணிகம் செய்வதற்கு அம்மொழி உதவும் தானே!!!" என்று எண்ணி ஒரு மொழியினை உருவாக்கும் முயற்சியினை மேற்கொள்கின்றனர்.

தமிழ் அறிஞர்கள் அப்பொறுப்பினை எடுத்துக் கொண்டு முழு வீச்சில் ஒரு மொழியினை செம்மையாக உருவாக்க ஆரம்பிக்கின்றனர். தமிழில் இருந்தே மற்ற மொழிகள் தோன்றி இருப்பதினால் அவர்களின் வேலை எளிதாக அமைகின்றது. கிரேக்கம், இலத்தின், பாலி, அரேமியம் போன்ற மொழிகளையும் தமிழையும் சேர்த்து ஒரு மொழி உருவாக்கப்படுகின்றது.

"எம் தமிழ் மக்கள் பேசி மகிழ எம் உயிரினும் மேலான தமிழ் இருக்கின்றது... பிறநாட்டவர் தங்களது பணிகளை எளிதாக இங்கே மேற்கொள்ள இந்த புதிய மொழி உதவட்டும்... தமிழில் உள்ள செல்வங்கள் இம்மொழியின் வாயிலாக உலகிற்கு செல்லட்டும்" என்றக் கொள்கையோடு தமிழ் மன்னர்கள் அந்த புதிய மொழியினை உருவாக்கிப் பரப்புகின்றனர்.

அம்மொழி தான் சமசுகிருதம்.

சமசுகிருதம் என்றால் 'செம்மையாக செய்யப்பட்டது' என்பதே பொருள். இம்மொழி தோன்றியக் காலம் கிமு முதல் நூற்றாண்டு என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறு தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மொழி பிற்காலத்தில் தமிழினையும் தமிழையும் அடக்கி ஒடுக்க பயன்படும் ஒருக் கருவியாக மாறியது.

அது எவ்வாறு... காண்போம்!!! நம் பயணம் இப்பொழுது 'கிபி'யினுள் முதல் முறையாக நுழைகின்றது.

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

இது வரை நாம் பல தகவல்களைக் கண்டு விட்டோம். அந்தத் தகவல்களுக்குத் உறுதுணையாக சில ஆதாரங்களையும் கண்டு இருக்கின்றோம். ஆனால் அந்த தகவல்களெல்லாம் ஒன்றாக கோர்க்கப் படாத முத்துக்களைப் போல் தனித்தனியே நின்றுக் கொண்டு இருக்கின்றன.

அந்த முத்துக்கள் அனைத்தையும் சிறிது கற்பனை என்னும் நூலினைக் கொண்டு ஒன்றாகச் சேர்த்து வழங்கும் முயற்சியே இந்தப் பதிவு.

உலகின் வரலாறு:

ஆதியில் ஆணும் பெண்ணும் குமரிக்கண்டத்தினில் படைக்கப்படுகின்றனர்.
அவர்கள் தமிழ் மொழியில் இறைவனிடம் பேசுகின்றனர். தமிழிலேயே உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பெயர் இடுகின்றனர். பூமியின் தட்பவெட்ப நிலைக்கு ஏதாக அவர்கள் கருப்பு நிறத்தில் இருக்கின்றனர்.

மனிதன் தொடர்ந்து குமரிக்கண்டதினில் வாழ்ந்து வருகின்றான். காலத்தில் மனிதன் எண்ணிக்கையில் பெருகுகின்றான். அச்சூழ்நிலையில் தான் குமரிக்கண்டம் கடற்கோள்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. இந்தக் கடல்கோள்களுக்கு காரணம் பனிக்காலத்தின் முடிவுக்காலத்தில் ஏற்ப்பட்ட பனி உருகலும் அதனால் கூடிய கடல் அளவுமே என்று அறிவியல் கூறுகின்றது.

சிலர் கருதுவது போல குமரிக்கண்டம் ஒரே அடியாக மூழ்கிப் போய்விடவில்லை. இதனை தமிழ் சங்க இலக்கியங்கள் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.

முதல் வெள்ளத்தில் தப்பிய மக்கள் குமரிக்கண்டத்தின் வடக்கே நோக்கி செல்கின்றனர். மீண்டும் சில வருடங்களுக்கு பின்னர் கடற்கோள் தாக்க மீண்டும் மனிதன் வடக்கே நகருகின்றான். நகர்ந்து இன்றைய தமிழகத்தில் குடி ஏறுகின்றான். இக்காலத்தில் தான் குமரிக்கண்டம் முழுமையாக அழிகின்றது.

இன்றைய ஆசுற்றேலியாவினையும் ஆபிரிகாவினையும் ஆசியாவோடு இணைத்துக் கொண்டு இருந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு கடலினுள் போக சில புவி மாற்றங்கள் பூமியில் நடக்கின்றது. கடலினுள் இருந்த இமயமலை மேலே வருகின்றது. குமரிக் கண்டம் இருந்த இடத்தினில் தற்போதைய இந்திய மகாக்கடல் தோன்றுகின்றது.

பின் காலப்போக்கில் மனிதர்களின் எண்ணிக்கை கூடக் கூட அவர்கள் வேறு இடம் தேடிச் செல்ல ஆரம்பிக்கின்றனர். சிலர் தெற்கே சென்று எகிப்தில் குடியேறுகின்றனர். சிலர் கிழக்கே செல்லுகின்றனர். சிலர் வடக்கே நோக்கி செல்லுகின்றனர். இவ்வாறு மக்கள் குமரிக்கண்டத்தின் அழிவிற்கு பின்னால் இடம்பெயர்ந்ததையே நோவா கதையாக சமய நூல்கள் கூறுகின்றன.

ஆனால் அனைத்து மக்களும் இடம் பெயரவில்லை. பலர் தமிழகத்திலேயே தங்கி விடுகின்றனர். தமிழகத்திலே ஒரு மாபெரும் கலாசாரம் மலர்ந்து இருக்கின்றது. நகரங்கள் தோன்றி இருந்தன. கடல் போக்குவரத்து சிறந்து இருந்தது. அவர்கள் விரும்பிய அனைத்தும் அங்கே கிடைக்கப் பெற்றது. பாண்டியனின் தலைமையில் தமிழர்கள் அங்கே நிகரின்றி விளங்கிக்கொண்டு இருந்தனர்.

வடக்கே சென்ற தமிழர்கள் தாங்கள் தங்கிய இடங்களுக்கு எல்லாம் தமிழிலேயே பெயர் வைக்கின்றனர். எனவே தான் நாம் இன்றும் அங்கே ‘ஊர்’ என்று முடியும் பெயர்களைக் காண முடிகின்றது. உதா.. செயப்பூர், கான்ப்பூர்.

வடக்கே சென்ற தமிழர்கள் சிலர் கங்கை நதியின் கரையில் சில நகரங்களைக் அமைத்து அங்கேயே குடியேறுகின்றனர். மேலும் சிலர் இன்னும் வடக்கே சென்று பல நகரங்களைக் கண்டப்பின் சிந்து சமவெளியினை அடைகின்றனர்.

பரந்து விரிந்த அந்த செழிப்பான இடத்தினைக் கண்டதும் அவர்கள் அங்கே ஒரு நாகரீகத்தினை தொடங்குகின்றனர். ஆனால் சில காலம் கடந்ததும் மீண்டும் உலகினைக் காண வேண்டும் என்ற ஆவல் மேல்லோங்க சில தமிழர்கள் சிந்து சமவெளியில் இருந்து மேற்கே செல்லுகின்றனர். அங்கே அவர்கள் சுமேரிய நாகரீகம், மேசொபோடமியா நாகரீகம் மற்றும் பாபிலூனிய நாகரீகம் போன்ற நாகரீகங்களைத் தோற்றுவிக்கின்றனர். (இந்தக் கூற்றுகளுக்கு சான்றுகள் பல இருக்கின்றன... அவற்றினை நாம் பின் வரும் பதிவுகளில் காண்போம்)

மேலும் சில மக்கள் வடக்கே செல்லத் தொடங்கினர். மக்கள் தாங்கள் சென்ற இடம் எங்கிலும் தங்களது வழிப்பாட்டு முறையினையும் கொண்டுச் சென்றனர். மிருக பழி வழிப்பாடு கிட்டதட்ட அனைத்து நாகரீகங்களிலும் காணப்படுகின்றது. அதேப் போல் கல் வழிபாடும் காணப்படுகின்றது.

தமிழகத்தில் இருந்து கிழக்கே சென்ற மக்கள் சிலர் தென் அமெரிக்காவிற்கு சென்று அங்கே குடிகொள்கின்றார்கள். சிலர் வட அமெரிக்காவிற்கு சென்று அங்கே குடிக்கொள்கின்றார்கள். சிலர் சப்பானில்… சிலர் சீனாவில்… சிலர் ஆசுற்றலியாவில்…!!! இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்கள் பரவுகின்றனர். (இந்தக் கூற்றினை அம்மக்களின் வரலாற்றினையும் மொழியினையும் வைத்துப் பார்த்து நாம் ஆராய்ந்தாலே அறிந்துக் கொள்ள முடியும்... அவற்றினையும் நாம் மற்ற பதிவுகளில் பார்ப்போம்.)

இந்தக் காலத்தில் தான் புவியின் வெட்ப நிலைக்கு ஏற்றார்ப் போல், குளிர் பிரதேசங்களான மேற்கு பகுதிக்கும் வடக்கு பகுதிக்கும் சென்ற தமிழர்களின் நிறம் வெண்மையாக மாறத் தொடங்குகின்றது. தலைமுறை தலைமுறையாக மேற்கிலேயே தங்கிய மக்கள் தாங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்னும் உண்மையினை காலப்போக்கில் மறக்கத் தொடங்குகின்றனர். ஆனால் கிழக்கில் ஒரு வளமையான நாடு இருக்கின்றது என்ற செய்தி மட்டும் கதையாக அவர்களிடம் பதிந்து விடுகின்றது.

இந்தக் காலத்தில் தான் தமிழ் மொழி மருவ ஆரம்பிக்கின்றது. பிரிந்து சென்ற குழுக்களிடம் புது புது மொழிகளாய் அது உருமாறுகின்றது. இலத்தின், கிரேக்கம் போன்ற மொழிகள் உருபெருகின்றன.

அதேப்போல் மக்கள் இவ்வாறு இடப்பெயர்ச்சி செய்துக் கொண்டு இருந்த காலத்திலும், தமிழகத்தில் இருந்த மக்கள் அந்த அனைத்து நாகரீகங்களுடனும் வாணிக அளவிலான தொடர்பினை வைத்து இருந்தனர்.

எனவே உலகில் உள்ள அனைத்து மக்களும் தமிழகத்திற்கு வந்து செல்வதும், தமிழர்கள் அவர்களின் நாடுகளுக்குச் செல்வதும் காலத்தில் நடைப் பெற்றுக் கொண்டே இருந்தன. இன்றைய கேரளாவில் அதாவது அன்றைய சேர நாட்டில் கிரேக்கர்கள், அரபியர்கள் போன்றவர் வந்து வாழ்ந்து இருந்தனர் என்பது வரலாற்றில் இருந்து நமக்கு கிடைக்கும் செய்தி.

மேலும் பண்டைய ரோமர்களின் நாணயங்கள் தமிழகத்தில் அதிகமாக கிடைப்பதும் அத்தகைய வாணிகம் தமிழகத்தினில் நடைப்பெற்றது என்பதற்கு சான்றாக உள்ளது.

இவ்வாறே காலங்களும் ஓடிக் கொண்டு இருக்கின்றன. உலகில் பல நாகரீகங்கள் தோன்றி விட்டன. சில அழிந்தும் விட்டன.

ஒவ்வொரு நாகரீகங்களுக்கும் இடையே போர்களும் தோன்றிவிட்டன.

மனிதன் உலகின் பல்வேறு மூலைக்கும் சென்று பரவி விட்டான். இந்தக் காலத்தில் தான் மேற்கில் இருந்து சில நாடோடிகள் சிந்து சமவெளியின் மீது படை எடுத்து வருகின்றனர். அவர்களைத் தான் நாம் ஆரியர்கள் என்கின்றோம். அவர்கள் கிரேக்கம் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து குதிரையின் மீது ஏறி வந்தவர்கள். யாகம் மற்றும் வேள்வி முறையில் நம்பிக்கை உடையவர்கள்.
அதாவது நெருப்பினை மூட்டி அதில் யாகம் செய்வது.

அந்த நெருப்பினில் உணவுப்பண்டங்களையும் மற்ற பொருட்களையும் போட்டால் அப்படிப் போடப்பட்ட பொருட்கள் கடவுளிடம் போய் சேரும் என்ற நம்பிக்கையினைக் கொண்டவர்கள்.

அதாவது இப்பொழுது ஒரு நெருப்பினை மூட்டி அதில் ஒரு பழத்தினைப் போட்டீர்கள் என்றால் அந்தப் பழம் இறைவனிடம் சென்று விடும். அப்படி சென்ற பழத்தினை இறைவன் உண்டு விடுவார். இது கிரேக்க வழிப்பாட்டு பழக்கம்.

இதே முறை இப்பொழுது நம் ஊரினில் ‘சுவாகா…சுவாகா…!!!’ என்றுக் கூறிக் கொண்டு நெருப்பினில் உணவினைக் கொட்டும் முறையாக இருப்பதை நாம் எல்லா யாகங்களிலும் காணலாம்.

சுவாகா - என்றால் சாப்பிடுங்கள் என்றுப் பொருள்.

அப்பேர்ப்பட்ட ஆரியர்கள் சிந்து சமவெளியினை அடைகின்றார்கள். நீண்ட நெடிய போருக்குப் பின் சிந்து சமவெளி மக்கள் பின் வாங்குகின்றார்கள். சிந்து சமவெளி நாகரீகம் மெதுவாக அழிகின்றது. ஆரியர்கள் வட நாட்டினுள் நுழைகின்றனர். ஆனால் சிந்து சமவெளியில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி இந்தியாவின் மற்ற இடங்களில் அவர்களுக்கு கிட்டவில்லை. அங்கு ஏற்கனவே சென்று தங்கி நகரங்களைக் கட்டி வாழ்ந்து வந்த தமிழர்கள் ஆரியர்களைக் காட்டிலும் பலம் பொருந்தியவர்களாக இருந்ததினால் ஆரியர்களின் போர் முயற்சிகள் அங்கே வெற்றிப் பெறவில்லை. மேலும் ஆரியர்களாக வந்தவர்களின் எண்ணிக்கை தமிழர்களை கணக்கிடும் பொழுது மிகவும் குறைவு.

எனவே ஆரியர்கள் மாற்று வழியினை யோசித்தார்கள்.
“வெள்ளையர்களான நம்மால் கறுப்பர்களான இந்த மக்களை பலத்தினால் வெல்ல முடியவில்லையா…. சரி… அப்படியானால் நாம் தந்திரத்தினால் வெல்வோம்…!!!” என்று முடிவு செய்துக் கொண்டு அந்த மக்களுடன் கலந்தனர்.

வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர்.

அவ்வாறு தமிழர்களுடன் கலந்த ஆரியர்கள் தமிழர்களின் வழிப்பாட்டு முறைகளுடன் தங்களது முறைகளை கலக்க ஆரம்பித்தனர்.

“என்ன ஐயா செய்கின்றீர்.. வெறுமனே பலி இட்டால் போதுமா…நெருப்பினை மூட்டி அதனில் சில மந்திரங்களை சொல்லிவாறே இந்தப் பலியினைக் காணிக்கை செய்தால் தானே ஐயா இப்பலி இறைவனை திருப்தி படுத்தும்…இது தெரியாமல் இருக்கின்றீர்களே…” என்றுக் கூறிக் கொண்டே அந்த மக்களின் மனதினை மாற்றுகின்றனர்.

வீரத்தினிடம் வீழாத தமிழர்கள் தந்திரத்தில் வீழுகின்றனர். மந்திரம் மற்றும் யாகம் ஆகியனவற்றை அறியாத சமுதாயத்தினுள் மெல்ல யாகம் அடி எடுத்து வைக்கின்றது. தமிழர்களின் இந்த வீழ்ச்சி ஆரியர்களுக்கு வசதியாக போய் விடுகின்றது. இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழர்களின் கடவுள்கள் பழக்கவழக்கங்கள் முதலியவற்றுள் அவர்களின் கருத்துக்களை திணிக்கின்றனர். கிரேக்க கதைகளை ஒட்டிய இதிகாசக் கதைகள் தமிழ் கடவுள்களுக்கு எழுதப்படுகின்றன. ஆரியர்கள் வட நாட்டினில் தங்களை நிலைப் பெற செய்துக் கொள்ளுகின்றனர். நிற்க.

"ஆரியர்கள் எண்ணிக்கையில் குறைவு என்று கண்டோம். பின்னர் எவ்வாறு அவர்கள் அவ்வளவு செல்வாக்கினைப் பெற்றார்கள். அவர்கள் இனம் தமிழர்களிடையே எவ்வாறு தழைத்தது" என்றுக் கேட்க்கின்றீர்களா... ஆரியர்கள் தமிழர்களை மணமுடித்துக் கொண்டனர். மணமுடித்துக் கொண்டு அவர்களுடன் கலந்தனர். ஆனால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தினை மட்டும் விடாது இருந்தனர்.

இவ்வாறே சென்றோம் என்றாம் சூழ்ச்சியால் மக்களை அடக்கி ஆண்டு விடலாம் என்று அவர்கள் என்னும் பொழுது தான் மகாவீரரும் புத்தரும் வருகின்றனர்.

ஆரியர்கள் திகைக்கின்றனர்….”யாகத்தினையும் பலியையும் வைத்து நாம் பிழைப்பினை ஒட்டிக் கொண்டு இருக்கும் பொழுது பலி கூடாது என்று இவர்கள் சொல்லுகின்றார்களே… என்ன செய்வது” என்று யோசிக்க ஆரம்பிக்கின்றனர்.

அந்தக் காலத்தில் தான் அசோகரும் வருகின்றார்….!!! பௌத்தமும் சமணமும் வட நாட்டில் நன்றாக பரவுகின்றது.

ஆரியர்கள் திகைத்தவாறே நிற்கின்றனர்.
வரலாறு தொடரும்….

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11

சூலியன் அசாஞ்சே (Julian Assange) தெரியுமா…!!!

உலகத்தையே அடக்கி ஆள நினைக்கும் ’பெரிய அண்ணன்’ அமெரிக்காவின்
கண்களிலேயே தனது விரலை விட்டு ஆட்டுபவர்!!!

‘விக்கிலீக்சு’  என்ற தனது இணையத்தளத்தின் மூலம் அமெரிக்கா மற்றும் இதரப் பல நாடுகளின் அதிர வைக்கும் ரகசியங்களை, கொடூரச் செயல்களை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்த ஒருவர்!!!

எவரையும் கண்டு அஞ்சாத அமெரிக்கா இவரைக் கண்டு சற்று அஞ்சத் தான் செய்தது!!!

இன்னும் அஞ்சத் தான் செய்கின்றது!!!

“உண்மை வெளிப்பட வேண்டும்… அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் சரி… மக்கள் உண்மையினை அறிய வேண்டும்” என்ற எண்ணத்தில் உலகளாவிய அரசியல் செய்திகளை (அதாவது வெளிவரக்கூடாது என்று அரசியல்வாதிகள் நினைக்கும் செய்திகளை) மக்களுக்கு அசாஞ்சே கொண்டு வந்துச் சேர்ப்பதுப் போல் நம் ஊரிலும் யாராவது செய்யமாட்டார்களா?…

தினமும் ஒவ்வொரு அமைச்சர் மற்றும் ஒவ்வொரு அதிகாரிகளைப் பற்றியும் பலத் தகவல்களைப் படிக்கின்றோம்… ஒருத் தொலைக்காட்சி சொல்லும் செய்தியினை மற்றொரு தொலைக்காட்சி மறுத்துக் கூறுகின்றது… இந்த நிலையில் உண்மையினை வெளிக்கொணர இம்மண்ணில் எவரும் இல்லையா? என்றக் கேள்விகள் உங்கள் மனதினில் எழுகின்றதா…!!!

அக்கேள்விகளுக்கு பதிலாய் உண்மையினை எழுத சிலர் இருக்கின்றனர்…

பயத்தினையும் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது அவர்கள் எழுதிக் கொண்டே இருக்கின்றனர்!!!

அவர்களுள் இப்பொழுது முக்கியமான ஒருவரைப் பற்றியே இந்தப் பதிவு!!!

அவர் சவுக்கு சங்கர்!!!

இவர் யார்:

2008 ஆம் ஆண்டு வரை சங்கர் என்ற இந்தப் பெயர் தமிழகத்தில் பிரபலமாகி இருக்க வில்லை!!!

தமிழக உளவுத் துறையில் பத்தோடு பதினொன்றாவது ஆளாய் இருந்த அவரை,
ஒரு நிகழ்ச்சி வெளிக் கொண்டு வருகின்றது!!!

அப்போதைய திமுக அமைச்சர் பூங்கோதை தனக்கு வேண்டப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரிடம் பேசிய தொலைபேசி பேச்சுக்கள்
 ஊடகங்களில் வெளி வந்த நிகழ்ச்சி தான் அது.

சற்று அரண்டு தான் போகின்றது திமுக.

எப்பொழுதும் தங்களுக்கு எதிராய் இருப்பவர்களைப் பற்றியச் செய்திகள்
மட்டும் பத்திரிக்கைகளுக்கு ’கசியும்’ காலத்தில்,
அவர்களுடைய அமைச்சர் ஒருவரின் பேச்சு பத்திரிக்கைகளுக்கு சென்றது
எவ்வாறு???

ஆவேசப்படுகிறார் கருணாநிதி…!!!

மாட்டுகிறார் சங்கர்…!!!

ஏன் இந்தச் செய்தியை வெளியிட்டாய்? என்று அதிகாரம் மிரட்ட “என்னுடைய மனசாட்சிக்கு எதிராய் வேலை செய்ய இயலாது…
 தவறு செய்தார்கள்… அதை வெளிக் கொண்டு வந்தேன்” என்றது சங்கரின் நேர்மை.

பதில்…கடமைத் தவறியதாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார் சங்கர்!!!

“சரி தான் போங்கடா…!!!”  என்றுக் கூறிக் கிளம்பும் சங்கர் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை ஒவ்வொரு பத்திரிக்கையிலும் கொடுக்க முயல்கிறார்.

ஆனால் ஆளும் கட்சியின் மேல் இருக்கும் பயத்தினால் எந்தப் பத்திரிக்கையும் அந்தச் செய்திகளை பிரசுரிக்க மறுத்து விடுகின்றன.

இந்த நிலையில் தான் நண்பர்கள் சிலரின் உதவியுடன் இணையத்தளம் ஒன்றைத் தொடங்குகிறார் சங்கர்!!!

அந்த இணையம் தான் ‘சவுக்கு’…!!!

‘சவுக்கு’ சங்கர்:

இணையம் ஆரம்பித்து ஆளும்கட்சியின் வண்டவாளங்களை அவர் தண்டவாளம் ஏற்ற ஆரம்பிக்க வேர்க்க ஆரம்பிக்கின்றது திமுகவிற்கு.

அனைத்து பத்திரிக்கைகளும் நம் துதிப் பாடிக் கொண்டு இருக்கும் பொழுது நேர்மையாய் அதுவும் நம்முடைய அழிச்சாட்டியங்களை வெளிப்படுத்துகிற மாதிரி ஒருவன் எழுதுகின்றானா… பிடி அவனை!!!

என்று சங்கரின் மேல் ஒருப் போலி வழக்கினைப் போட்டு அவரை சிறையில் அடைத்து சித்தரவதை செய்கின்றனர்.

ஆனால் நண்பர்களின் முயற்சியால் நீதி வெல்ல, சங்கர் விடுதலையாகிறார்.
தொடர்ந்து எழுதவும் செய்கின்றார்..!!!

அவருடைய செய்திகளின் உண்மையும், ஆதாரங்கள் கொண்டே அனைத்து குற்றத்தையும் அவர் எழுதும் தன்மையும் அவருடைய இணையத்தினை பிரபலமாக்கிக் கொண்டே வர…. ‘சவுக்கு - இந்தியாவின் விகிலீக்சு’ என்றுக் கூறும் வண்ணம் வளர்ந்து நிற்கின்றது!!!

சவுக்கின் பலம்:

ஆதாரங்கள் - தான் முன் வைக்கும் ஒவ்வொருக் குற்றச்சாட்டுக்கும் பலமான ஆதாரங்களை முன் வைக்கின்றது சவுக்கு.

நடை - மிகவும் அழகான எழுத்து நடை, சவுக்கின் பதிவுகளுக்கு ஒரு மிகப் பெரிய பலம்.

சவுக்கின் மேல் வைக்கப் படும் குற்றச்சாட்டு:

சவுக்கு திமுகவினைப் பற்றி மட்டுமே செய்திகளை அதிக அளவு வெளி இடுகின்றது. அதிமுகவினைப் பற்றியச் செய்திகள் அதிக அளவு வெளியிடப்படுவது இல்லை. எனவே சவுக்கு அதிமுக சார்ந்ததா? என்றக் கேள்வி எழுந்தது. ஆனால் இதை சவுக்கு மறுத்து உள்ளது.


முடிவாக, அரசியல்..நாட்டு நடப்பு, ஊழல், சமுகம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் சவுக்கினை நிச்சயம் படிக்கலாம்… படித்தால் நல்லது… நாட்டுக்கு!!!

சவுக்கு - ஒரு தைரியமான போராட்டம்!!!

இக்காலக் கட்டத்தில் குமரிக் கண்டம் உண்மை என்று சொன்னாலும் அது வெறும் நம்பிக்கையே. குமரிக்கண்டம் இல்லை என்றால் அதுவும் நம்பிக்கையே.

ஏனெனில் குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் தொடங்கப்படவே இல்லை. சிறிது தொடங்கப்பட்ட ஆராய்ச்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது.

இப்பொழுது குமரிக்கண்டம் என்பது உண்மை என்று நம்புவோர்களின் கூற்றையும் குமரிக்கண்டம் பொய் என்று நம்புவோர்களின் கூற்றையும் காண்போம்.

குமரிக்கண்டம் உண்மை என்போர் அது உண்மை என்று அவர்கள் நம்புவதற்கு சில காரணிகளைக் கூறுகின்றனர்…

௧) ஆபிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் காணப்படும் மரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஒன்றுப் போல் இருக்கும் விடயம்.

௨) ஆசுதிரேலிய பழங்குடி மக்கள் மற்றும் ஆபிரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல்.(இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம்).

௩) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள்.

௪) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்.

௫) தனுசுக்கோடி மற்றும் காவேரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கிய வரலாறு.

௬) ஆடு மேய்ச்சான் பாறை என்று பெயர் கொண்ட பாறை கடற்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி கடலின் நடுவில் இருக்கும் செய்தி.

ஆனால் குமரிக்கண்டம் என்பது கற்பனையே என்றுக் கூறுவோர் கூறும் காரணங்கள்…

௧) இதை அறிவியல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

௨) இக் கதைகள் சங்க இலக்கிய செய்திகளில் மட்டுமே இருப்பதினால் இவை வரலாறாக ஏற்றுக்கொள்ள பட மாட்டாது. இவை புராணங்களே.

இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்…

அறிவியல் குமரிக்கண்டதினை மறுக்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை… ஏனெனில் அறிவியல் அங்கே இன்னும் சென்று ஆராய்ந்தே பார்க்க வில்லை. ஆராய்ந்து தெளிவு படுத்தாத விடயங்களை அறிவியல் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அறிவியலின் உதவி தற்போது குமரிக்கண்டதினைப் பற்றிய விடயத்தில் நமக்கு கிட்டவில்லை.

எனவே இப்பொழுது நாம் மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்றுப் பார்ப்போம்.

அவர்களின் கூற்றுப்படி,

மனிதன் தோன்றிய இடம் - குமரிக்கண்டம்.முதல் மனிதன் - தமிழன்.முதல் மொழி - தமிழ். குமரிக்கண்டதினில் தோன்றிய மனிதனே வடக்கே பயணித்து சென்று அங்கே சில நாகரீகங்களை நிறுவி பின் உலகம் முழுவதும் பரவுகின்றான். இதற்கு சான்றாக அவர்கள் பல விடயங்களை தருகின்றார்கள்.

உதாரணமாக “பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.”

இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள்.

இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது.

“அப்படி எவ்வாறு கூறுகின்றீர்கள்… வடக்கில் இருந்தும் அவன் தெற்கே வந்து பெயரிட்டு இருக்கலாம் அல்லவா?” என்று கூறுகின்றீர்களா.

சரி தான். அதற்கும் வாய்ப்பு இருக்கத் தான் செய்கின்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் மொழியறிஞர்கள் ஏன் அப்பெயர்கள் தெற்கில் இருந்து வடக்கே சென்றன என்று கூறுகின்றனர் என்பதனை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழி திரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவது, ஒரு நாகரீத்தில் இருந்து மற்றொரு நாகரீகத்திற்கு பெயர்கள் கொண்டு
செல்லப் பட்டு இருக்கின்றன என்றால் முதலில் தோன்றிய நாகரீகம் காலத்தில் இரண்டாவது நாகரீகத்திற்கு முந்தியதாக இருந்திருக்க வேண்டும். எனவே வடக்கில் இருந்து இந்த பெயர்கள் தெற்கே வந்தன என்றால் வடக்கில் உள்ள நாகரீகம் காலத்தில் தெற்கு நாகரீகங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.

இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரீகங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து சமவெளியிலோ, சுமேரியாவிலேயோ அல்லது மேசபோடமியாவிலேயோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரீகங்கள் இருந்தனவா?… அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் என்று அந்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுவீச்சில் ஆராயத் தொடங்கவில்லை. இந்நிலையில் தான் நாம் ஒரு ஆங்கிலேய ஆய்வாளரைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அவர் பெயர் கிரகாம் கான்காக் (Graham Hancock). உலகமே சுமேரியாவையும் மேசொபோடமியாவையும் சிந்து சமவெளியையும் ஆராய்ந்துக் கொண்டு இருந்த வேளையில் இவர் இந்தியாவில் தெற்கினை நோக்கி தன் ஆராய்ச்சியினை தொடங்குகின்றார்.

அவரின் ஆராய்ச்சி பிரம்மிப்பூட்டும் பல தகவல்களை வெளி இடுகின்றது. உதாரணமாக சிந்து சமவெளிக்கும்  3000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் ஒன்று குசராத் மாநிலத்தில் கடலோரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த நாகரீகதினைத் தொடர்ந்து அவர் மீண்டும் தெற்கே நோக்கி நகர்கின்றார்.

அங்கே குசராத் நாகரீகத்தினை விட 3000 ஆண்டுகள் பழமையான ஒரு மாபெரும் நாகரீகத்தினை அவர் கண்டுப்பிடிக்கின்றார்…. தமிழகத்தினில்!!! அந்த இடம் பூம்புகார் எனப்படும் காவேரிப்பூம்பட்டினம். அவரின் கூற்றுப் படி இந்த நாகரீகம் சுமார் 11000 ஆண்டுகள் பழமையானது என்றும் அந்த நாகரீகம் கடற் கோள்களால் அழிந்தது என்றும் (400 அடி உயர் அலைகளால் என்றும் குறிப்பிடுகின்றார்) கூறுகின்றார். மேலும் அந்த இடங்களை நன்றாக ஆராய்ந்தோம் என்றால் பல உண்மைகள் வெளி வரும் என்றும் ‘அந்த இடத்தினை ஏன் ஆராயாது இது வரை விட்டு வைத்து இருக்கின்றார்கள் என்பது தமக்கு வியப்பளிப்பதாகவும்’ அவர் கூறுகின்றார். இவருடைய இந்தக் கருத்தினை இங்கிலாந்தில் உள்ள துர்கம் பல்கலைக்கழகமும் (Durham university) ஏற்று உள்ளது.

ஆனால் அந்த ஆராய்ச்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு மேற்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேலும் பூம்புகார் பற்றிய இந்தத் தகவல்கள் மக்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை.
கான்காக்கின் ஆராய்ச்சியினைப் பற்றி அறிய இந்த இணைப்பை பார்க்கவும்…

இவ்வாராய்ச்சிகள் மொழியறிஞர்கள் சொல்லும் கூற்றினை, அதாவது நாகரீகம் தெற்கில் தோன்றி பின்னர் வடக்கே நோக்கி சென்று இருக்கின்றது என்பதனை மெய்ப்பிப்பது போல் இருக்கின்றன. தொடர்ந்து இந்த இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டால் உண்மைகள் வெளிப்படும். ஆனால் இந்திய அரசாங்கம் இந்த ஆராய்ச்சிகளை தானும் மேற்கொள்ளாது மற்றவர்கள் மேற்கொண்டாலும்
அதற்கு தடங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டதினைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா?உண்மை வெளிப்படுமா?

சிந்திப்போம்…!!!

சில நண்பர்கள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்களை பகிருமாறு கேட்டுக்கொண்டார்கள். இதோ சில ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்கள்…

மா.சோ.விக்டர் - இவர் மொழியியல் அறிஞர். உலகின் தாய் மொழி தமிழ் தான் என்றும் மற்ற மொழிகள் அனைத்தும் தமிழின் திரிபுகளே என்றும் அவர் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கூறுகின்றார். பல புத்தகங்களை இவர் மொழி தொடர்பாகவும் குமரிக்கண்டம் மற்றும் தமிழர்கள் தொடர்பாகவும் எழுதி உள்ளார். உதா… ‘குமரிக் கண்டம்’ ‘எபிரேயத்தின் தாய் மொழி தமிழே’ ‘அ’….

தேவநேயப் பாவாணர் - இவரும் ஒரு மொழி அறிஞர். தமிழ் மொழியில் இருந்தே வடமொழி போன்ற அனைத்து மொழிகளும் தோன்றின என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதனை நிரூபித்தவர். இவரும் பல புத்தகங்களை மொழி தொடர்பாகவும் தமிழர் வரலாறு தொடர்பாகவும் எழுதியுள்ளார். உதா… தமிழர் வரலாறு.

மாத்தளை சோமு - இவர் ஒரு ஆய்வாளர். உலகம் முழுவதும் சென்று அங்கு வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் இடங்கள் போன்றவற்றை ஆராய்பவர். இவருடைய நூல்கள் பல அவற்றுள் நான் எடுத்துக் கொண்ட நூல் ‘வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்’.

மறைமலைஅடிகள் - இவரும் ஒரு தமிழ் ஆர்வலர். தனித்தமிழ் இயக்கத்தினை தோற்றுவித்து தமிழை வளர்த்தவர். தமிழ் தொடர்பாகவும், ஆரியர் திராவிடர் போன்ற கூறுகளைப் பற்றியும் பல நூல்களை எழுதி உள்ளார். உதா… தமிழர் மதம்.

தெய்வநாயகம் - இவர் ஆன்மீக ஆராய்ச்சியாளர். தமிழிலேயே அனைத்து மதங்களுக்கும் பொதுவான தத்துவ மற்றும் ஆன்மீகக் கருத்துக்கள் மறைந்து இருக்கின்றன. அனைத்து மதங்களும் அடக்குமுறைகளில் இருந்தும் பகைமையில் இருந்தும் விடுபட்டு மக்களின் நலனுக்காக மாறுவதற்குரிய வழி தமிழில் இருக்கின்றது என்னும் கருத்தினை உடையவர். சைவ வைணவ சமயங்கள், கிருத்துவ சமயம் மற்றும் இசுலாமிய சமயங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இவரும் பல நூல்களை எழுதி உள்ளார்.

சரி... குமரிக்கண்டதினைப் பற்றி பார்த்தாயிற்று.. மேலும் விவிலியம், அசோகர், சமணம்...புத்தம், பக்தி இயக்கம் போன்றியவற்றை பற்றியும் பார்த்து இருக்கின்றோம். ஆனால் அந்த அனைத்துச் செய்திகளும் கோர்க்கப் படாத முத்துக்களைப் போல் தனித்தனியே இருக்கின்றன... உலகின் வரலாறினை அறிய அந்த முத்துக்கள் கோர்க்கப்பட வேண்டும்.

கோர்ப்போம்... உலகின் வரலாறு காத்து இருக்கின்றது...!!!

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10

தொடரும்...!!!

கடலினுள் கண்டங்கள் மூழ்கி உள்ளனவா… மக்கள் வாழ்ந்து இருந்த மாபெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளையிட்டுக் கொண்டு சென்று விட்டதா? என்றக் கேள்விக்கு ஆம் என்கின்றனர் கிரேக்க ஞானிகளான பிளாடோவும் (Plato) ஓமரும் (Homer) , நம் இளங்கோவடிகளும்.

ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.

ஆனால் இவர்களின் கூற்று அந்தச் செய்தியினை கூறுவதோடு மட்டும் நின்று விடுகின்றது. அந்த கண்டம் எங்கே இருந்தது, அதில் இருந்த மக்கள் யார் என்ற செய்திகள் அவர்களின் கூற்றுகளில் தெளிவாக இல்லை. எனவே இவர்களின் கூற்றுகள் வெறும் கதைகளாக மாறிப் போகின்றன.

மேற்குலக அறிவியலாளர்களும், இவர்களின் கூற்றினை அடிப்படையாக கொண்டே ஒரு அழிந்தக் கண்டதினை உலகம் முழுவதிலும் தேடிக் கொண்டு வருகின்றனர். ஆனால் முடிவு கிட்டியப் பாடில்லை.

அவர்களின் ஒவ்வொரு ஆராய்ச்சியும் ஒவ்வொரு இடத்தினைக் குறிப்பதாகவே அமைந்து வருகின்றன.

ஒரு சமயம் அட்டுலாண்டிசு அமெரிக்காவிற்கும் ஐரோபியாவிற்கும் இடையில் உள்ளது என்கின்றனர்.

மறு சமயம் அது சப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருப்பதாக சொல்லுகின்றனர்.

மற்றொரு சமயம் ‘பெர்முடா முக்கோணம்’ இருக்கும் இடத்தில் தான் இந்தக் கண்டம் இருந்து இருக்கலாம் என்கின்றனர்.

இத்தகைய முரண்பாடான தகவல்கள் மூலம் அட்டுலாண்டிசு என்னும் கண்டம் தனியே இருந்ததா இல்லை வேறேனும் ஒரு மூழ்கிய கண்டத்தினைப் பற்றிய தகவல்கள் அட்டுலாண்டிசு என்னும் பெயரின் மூலம் கதையாக வெளியாகி உள்ளதா என்று எண்ணும் எண்ணம் வருகின்றது.

அப்படி வேறோரு கண்டத்தினைப் பற்றி ஐரோப்பிய அறிவியலாளர்கள் இன்னும் அவர்களின் தேடலை ஆரம்பிக்கவில்லை. பிரச்சனை இல்லை நாம் ஆரம்பிப்போம்.

தமிழ் நாட்டில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒருத் தருணத்தில் எந்த வழியிலாவது குமரிக்கண்டம் என்ற வார்த்தையினை கேளாது இருந்து இருக்க முடியாது. கடலில் மூழ்கிய இந்தக் கண்டத்தினைப் பற்றி கதைகளாகவோ, இலக்கியங்கள் மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ நாம் நிச்சயம் அறிந்து இருப்போம். அட்டுலாண்டிசு என்றக் கண்டத்தினைப் போல் விவரங்கள் தெளிவாக இல்லாத நிலை போல் அல்லாது குமரிகண்டதினைப் பற்றிய விவரங்கள் தெளிவாக கிடைகின்றன. தமிழ் சங்க இலக்கிய பாடல்களிலும், சிலப்பதிகாரத்திலும் குமரிக்கண்டதினைப் பற்றியக் குறிப்புகள் தெளிவாக இருக்கின்றன.

இந்த இடத்தில் இந்த நிலையில் தான் குமரிக் கண்டம் இருந்தது என்று அந்த நூல்கள் உறுதிப்படக் கூறுகின்றன. நாம் முன்னரே கண்டது போல் நம்முடைய நூல்கள் எந்த இடத்தில் குமரிக்கண்டம் இருந்தது என்றுக் கூறுகின்றனவோ அதே இடத்தில் தான் உயிரினம் தோன்றி இருக்க வேண்டும் என்று அறிவியலும் கருதுகின்றது.

மேலும் தமிழர்களின் சில பழக்க வழக்கங்களும் சமகாலத்தில் நடந்த சம்பவங்களும் குமரிக்கண்டம் என்ற ஒன்று இந்த மண்ணில் இருந்தது என்றும் கூற்றுக்கு ஆதாரங்களாக இருந்துக் கொண்டு இருக்கின்றன. குமரிக் கண்டதினையும் அதன் வழி மனிதனின் வரலாற்றினையும் பார்க்கும் முன் நாம் அந்த விடயங்களைப் பார்த்து விடுவது நல்லது.

௧) குமரிக் கண்டத்தினைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுவது என்ன..

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள….

மேலே உள்ள இந்தக் கூற்றின் படி பல மலைகளுடன் குமரிக்கண்டமும் கடலினுள் சென்றது என்ற செய்தி நமக்கு தெரிகின்றது.

௨) ஆடு மேய்ச்சான் பாறை…

தமிழகத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஒரு பாறை இருக்கின்றது. அந்த பாறையினை அங்கு வாழும் மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ என்று வழங்குகின்றனர். காரணம் என்னவெனில் ஒருக் காலம் அந்தப் பாறை இருந்த இடம் தரையாக இருந்தது அப்பொழுது அங்கு சென்று மக்கள் ஆட்டினை மேய்த்து இருக்கின்றனர். ஆனால் காலத்தில் கடல் அந்த இடத்தினைக் கொள்ளைக் கொள்ளவே மக்கள் அவ்விடம் விட்டு நகர்ந்து வந்து விட்டனர். ஆனால் ஆடு மேய்த்த பாறை என்ற பெயர் மட்டும் அங்கேயே தங்கி விட்டது.
இதன் மூலம் தமிழர்கள் வாழ்ந்து இருந்த இடம் இன்று கடலுக்கு அடியினில் மூழ்கி உள்ளது என்று நாம் அறிய முடிகின்றது.

௩) காவேரிப்பூம்பட்டினம்…

பூம்புகார் என்றுப் பெயர் பெற்ற இந்த மாபெரும் நகரமும் கடலினுள் மூழ்கி விட்டது. காலத்தில் பூம்புகார் நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தினை விட முந்தியது என்பது அறிஞர்களின் கருத்து.

௪) தனுசுக்கோடி…

இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது. 1964 இல் அடித்த புயல் மற்றும் கடல் ஊழிக் காரணமாக தனுசுக்கோடி என்னும் ஊர் கடலினுள் மூழ்கியது.

எனவே கடலில் நம் நகரங்கள் மறைந்து உள்ளன என்னும் செய்திகள் பொய்யல்ல என்பது புலனாகிறது.
இன்னும் பல சங்க இலக்கியங்கள் மூலமாகவும்,
தெற்கு திசையில் உள்ள தமிழர்களின் பழக்க வழக்கங்கள் வாயிலாகவும், ஒரு பெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளைக் கொண்டு போய் உள்ளது என்னும் செய்தியினை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

இந்த உண்மைகள் எல்லாம் அந்த நிலப்பரப்பினில் தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம் என்றால் நிச்சயம் புலனாகும். ஆனால் இந்திய அரசோ அத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாது இருக்கின்றது. அத்தகைய ஆராய்ச்சிகளை மற்றவர்கள் மேற்கொள்ளவும் ஆதரிக்காது இருக்கின்றது” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஏன் இந்தியா ஆராய்ச்சியினை மேற்கொள்ளாது இருக்கின்றது என்ற கேள்வியோடு சேர்த்து நாம் இது வரை பார்த்து இருந்த கேள்விகளுக்கும் விடையினைக் காண முயல்வோம்….ஆனால் அதற்கு எல்லாம் அடிப்படையாக நாம் தெளிவாக குமரிக்கண்டதினைப் பற்றி அறிய வேண்டும்... குமரிக்கண்டம் உண்மையா அல்லது கற்பனையா என்பதனை அடுத்தப் பதிவில் காண்போம்.

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9

தொடரும்…

“ஒரு கொடிய யுத்தம் இங்கே நடந்து இருக்கின்றது.
இந்தப் பகுதியில் நெடுங்காலமாக நாகரீக வாழ்வினை மேற்கொண்டு வந்த மக்களின் மேல் அன்னியர்கள் படை எடுத்து வந்து உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையில் போர் மூண்டு உள்ளது. இறுதியில் அந்த நாகரீக மக்கள் தோற்கடிக்கப்பட்டு அந்த நாகரீகம் அந்த இடத்தில் ஒரு அழிவிற்கு வந்து இருக்கின்றது.” 

இது சிந்து சமவெளி நாகரீகத்தினைப் பற்றி ஆராய்ச்சிகளைச் செய்த சில அறிஞர்களின் கூற்று. அவர்களின் இந்தக் கூற்றினைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்கும் முன் சிந்து சமவெளி நாகரீகம் என்றால் என்ன என்பதினை நாம் அறிந்துக் கொள்வோம்.

சிறு வயதில் வரலாற்றுப் பாடத்தில் மொகன்சதாரோ மற்றும் கரப்பா நகரங்கள் பற்றி படித்து இருப்பீர்கள் தானே. அந்த நகரங்களையும் மேலும் பல நகரங்களையும் உள்ளடக்கி சிந்து நதியினைச் சுற்றி அமைந்து இருந்த நாகரீகமே சிந்து சமவெளி நாகரீகம் ஆகும்.

வளமையான பிரதேசம்…பண்பாடுள்ள மக்கள்… வளர்ச்சி அடைந்த கலைகள்… தெளிவான வாழ்கை முறை… வழிப்பாட்டுப் பழக்கங்கள் என அனைத்தும் பெற்று இந்த நாகரீகம் தலைச் சிறந்து விளங்கிற்று என்பதனை சரித்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய நாகரீகத்தின் மேல் அன்னியர்கள் படை எடுத்து வந்தமையினால் அந்த நாகரீகம் அழிவுற்றது என்றும் கூறும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஒருக் கருத்தினையும் கூறுகின்றனர்.

சிந்து சமவெளியில் கண்டெடுத்த எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களை ஒத்து இருக்கின்றன என்பதே அந்தக் கருத்து ஆகும்.

மேலும் அங்கு காணப்படும் கட்டிடங்கள் சுட்ட செங்கலினால் கட்டப்பட்டு இருக்கும் பாங்கையும் கணக்கில் கொண்டு அவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தினை திராவிட நாகரீகத்தினுடன் ஒப்பிடுகின்றார்கள்.

“என்ன திராவிட எழுத்துக்களா…அப்படி என்றால் அங்கே இருந்தது திராவிடர்களா? அவர்கள் மேல் படை எடுத்து வந்தவர்கள் யார்?” போன்ற கேள்விகள் உங்கள் மனதினில் தோன்றுகின்றனவா?அந்த கேள்விகளுக்கு சான்றுகளுடன் விடைக் கூறும் முன் சிந்து சமவெளியில் நடந்தது என்ன என்பதினை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது மிக்க அவசியம் ஆகின்றது.
சிந்து சமவெளி நாகரீகம்… நடந்தது என்ன?

சிந்து சமவெளி நாகரீகத்தில் தமிழர்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றார்கள்(திராவிடம் என்பது தமிழையே குறிக்கும் எனவே திராவிடர்கள் என்று அவர்கள் குறிப்பிடுவது அக்காலத்தில் தமிழர்களையே). அவர்களின் மேல் நாடோடிகளான ஆரியர்கள் படை எடுக்கின்றார்கள். ஆரியர்கள் என்பவர்கள் மத்திய ஆசியாவில் இருந்தும் ஐரோப்பியாவில் இருந்தும் வந்த மக்களை குறிக்கும் சொல்லே ஆகும் (இட்லேர் (Hitler) தன்னை ஆரியன் என்று கூறிக் கொண்ட செய்தியினை நினைவிற் கொள்ளுங்கள்). அப்பொழுது நடந்த யுத்தத்தில் சிந்து சமவெளி நாகரிக மக்கள் தோற்று பின்வாங்குகின்றார்கள். ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைகின்றார்கள்.

நில்லுங்கள்… யுத்தம் நடந்தது என்று சொல்லுகின்றீர்களே. அதற்கு சான்றுகள் இருக்கின்றதா? என்றால் அந்த யுத்தத்தினைப் பற்றிய செய்திகள் ஆரியர்களின் ரிக் வேதத்திலேயே இருக்கின்றது என்பதே பதிலாகும்.

ரிக் வேதத்தில் யுத்தத்தினைப் பற்றிய செய்தியா… சற்று விளக்கமாக காண்போம்.

ரிக் வேதம் என்பது ஆரியர்களால் பாடப்பட்ட பல்வேறு பாடல்களின் தொகுப்பே ஆகும். போர்க்களத்தில் எதிரியை வெல்ல அவர்கள் இந்திரனிடம் வேண்டிய பாடல்கள் தான் வேதங்களாக தொகுக்கப்பட்டு உள்ளது. வேதத்தினை படித்தவர் எவரும் இதனை எளிதில் உணர்ந்துக் கொள்வர். மேலும் இந்த வேதங்களில் சிவன் என்றப் பெயரே எங்கேயும் வரவில்லை.

ஒரே ஒரு இடத்தில் மட்டுமே ருத்திரன் என்றப் பெயர் வந்து இருக்கின்றது. அந்த ருத்திரன் என்றச் சொல்லும் சிவனை குறிக்கின்றதா என்பது சந்தேகமே.

ஆரியர்கள் அசுரர்களை எதிர்த்து போர் செய்ததாகவும், அந்த மூர்க்கத்தனமான அசுரர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றி வெற்றி பெற செய்யுமாறு இந்திரனை அவர்கள் வேண்டுமாறு அந்தப் பாடல்கள் அமைந்து இருக்கின்றன.

இப்பொழுது நாம் அந்த அசுரர்கள் என்ற வார்த்தையினை சிறிது நன்றாக பார்க்க வேண்டும்.

ஆரியர்கள் நாடோடிகள் என்று நாம் கண்டோம். அவர்கள் இன்புற்று இருக்க ‘சுரா’ பானம் என்ற மதுவகை ஒன்றினை அருந்துவார்கள் (இந்தச் செய்தியும் அந்த வேதங்களில் இருக்கின்றது). தமிழர்கள் அந்த சுரா பானத்தினைக் அருந்த மாட்டார்கள். எனவே சுரா பானத்தினை அருந்தாதவர்கள் அ’சுரர்கள்’ ஆகி விட்டனர்.
சுரர்கள் - சுரா பானத்தினைக் குடிப்பவர்கள்.
அசுரர்கள் - சுரா பானத்தினை அருந்தாதவர்கள்.
இவ்வாறு ஆரியர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் மீது போர் தொடுத்து அதில் வெற்றியும் கண்டனர். கண்டு இந்தியாவினுள் நுழைகின்றனர்.

சரி… ஆரியர்கள் சிந்து சமவெளியில் வென்று விட்டார்கள். அங்கிருந்த தமிழர்களின் நிலை என்னாயிற்று… அவர்கள் தமிழர்கள் என்று நீங்கள் எவ்வாறு கூறுகின்றீர்… என்றுக் கேட்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன் சில கேள்விகள்…

௧) சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படும் பொருட்கள் பல தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் பகுதியிலும் காணப்படுவதினை நீங்கள் அறிந்து இருக்கின்றீர்களா?

௨) கடலில் மூழ்கிய பூம்புகார் நகர நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தினைக் காட்டிலும் பழமையானது என்று உங்களுக்குத் தெரியுமா?

௩) ‘ஊர்’ என்ற வேர்ச் சொல் தமிழில் இருக்கும் பொழுது ‘செயபூர் (jaipur)’ என்றும் ‘கான்பூர்’ என்றும் ‘நாக்பூர்’ என்றும் வட நாட்டில் உள்ள ஊர்களுக்கு பெயர் இருப்பது ஏன் என்று எண்ணி இருக்கின்றீர்களா?


௫) சிந்து சமவெளி மக்கள் ‘சிவலிங்க வழிப்பாட்டு’ முறையினை பின்பற்றினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடையினை அளிக்க கடலுள் மூழ்கி இருந்த ஒருக் கண்டம் வெளிவர வேண்டும்.!!!

அடுத்த பதிவில் அந்த கண்டம் வெளிவரும்…!!!


முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8

தொடரும்…

பி.கு:

சிந்து சமவெளி நாகரீகம் இயற்கை மாற்றங்களால் அழிந்தது என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தியாவின் மீது படை எடுத்து வந்த ஆரியர்கள் சிந்து சமவெளிக் காலத்தில் வர வில்லை என்றும் அவர்கள் கி.மு 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் மீது படை எடுத்துக் கொண்டு வந்தவரே ஆவர் என்பதும் புதிய ஆராய்ச்சிகள் கூறும் முடிவுகள் ஆகும். இதனைப் பற்றி மேலும் படிக்க ஆரியர்கள் யார் -1 , ஆரியர்கள் யார் -2. அவ்வாராய்ச்சிகளின் படி சிந்து சமவெளி நாகரீகம் வேற்று இனத்தவரின் எவ்வித கலப்பும் இல்லாது திகழ்ந்த முழுமையான திராவிட/ தமிழ் நாகரீகம் என்றே நாம் கூற முடியும்.

நோவாவினை சந்திக்கும்  முன் உங்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கின்றது…!!!

உலகம் இதற்கு முன்னர் அழிந்து இருக்கின்றதா? ஆம் என்றால் எவ்வாறு?

இந்தக் கேள்விகளுக்கு,
கிருத்துவர்கள் - ஆம் உலகம் அழிந்து இருக்கின்றது. கடவுள் வெள்ளத்தின் மூலம் இவ் உலகத்தினை அழித்தார் என்றும்

இந்துக்கள் - ஆம், கிருசுனரின் மச்ச அவதாரத்தின் போது, உலகம் வெள்ளத்தால் அழிந்தது என்றும்

தமிழ் அறிஞர்கள் - ஆம், குமரிக்கண்டம் கடற்கோள்களால் அழிந்தது என்றும் கூறுவர்.

மேலாக சுமேரிய மக்களிடத்தும், மெசொபொடாமிய மக்களிடத்தும் உலகம் வெள்ளத்தால் அழிந்தக் கதைகள் உள்ளன. அப்படி என்றால் இந்த உலகம் எத்தனை முறை அழிந்து உள்ளது?.

அதுவும் கடற்கோள்களாலேயே அத்தனை முறையும் அழிந்து இருக்கின்றதா?நம்புவதற்கு இந்தக் கருத்து ஏதாக இல்லையே!!!

மேலும் விவிலியத்தில்,

 ”இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.” - ஆதியாகமம் (9 - 11 )

என்று இறைவன் வாக்குக் கொடுப்பதாக அமைந்து இருப்பதினால் இன்னொரு உலக அழிவு நீரினால் வந்து இருக்க வாய்ப்பில்லை.

மேலும் இந்துக் கதைகளிலும் உலகம் மச்ச அவதாரத்திற்கு பின்னர் அழிந்ததாக வரலாறு இல்லை.

இந்த கருத்துக்களை எல்லாம் வைத்துப் பார்த்தோம் என்றால் உலகம் ஒரே ஒரு முறை நீரினால் அழிக்கப்பட்டு இருக்கின்றது  என்றும் அந்த வரலாறே காலப்போக்கில் மனிதன் சென்ற இடங்களில் எல்லாம் பல்வேறுக் கதைகளாக மாறி இருக்கின்றது என்றும் புலனாகும்.
சரி… இப்பொழுது நாம் நோவாவிடம் வருவோம்!!!

விவிலியத்தின்படி, நோவா பாவம் செய்து பெருகி இருந்த மனிதர்களுள் உத்தமனாக இருந்தவன். எனவே இறைவன் அவனைத் தேர்ந்து எடுத்து அவனை ஒரு படகினைச் செய்ய சொல்லுகின்றார். அவர் இந்த உலகினை வெள்ளத்தினைக் கொண்டு அழிக்கப் போவதாகவும், அவ்வாறு உலகம் அழியும் போது நோவா அவன் குடும்பத்தினரையும் உலகில் உள்ள மற்ற உயிரினங்களையும் அந்தப் படகினில் ஏற்றி உயிர் பிழைக்குமாறும் சொல்லுகின்றார். அவ்வாறே நோவாவும் செய்து வெள்ளத்தில் பிழைக்கின்றான்.
மீண்டும் உலகில் அவன் வாழ்வினையும் தொடங்குகின்றான். இது தான் நோவாவின் கதை.

கதை இருக்கட்டும் நோவா உலகின் முதல் மனிதன் தமிழன் என்றுப் பறைசாட்டுவதாக சொன்னீர்களே அது என்னவாயிற்று என்று வினவுகிறீர்களா…!!!

இதோ நம் கதைக்கு வருகின்றேன்.

நோவா என்றவன் படகுடனேயே தொடர்புக் கொண்டவனாக விவிலியத்தில் அறியப்படுகின்றான். நோவா என்றால் அனைவருக்கும் படகு தான் நினைவிற்கு வரும். இங்கு தான் நாம் ஒரு தமிழ் வார்த்தையைப் பற்றிப் பார்க்க வேண்டி வருகின்றது.

‘நாவாய்’ - தமிழில் படகிற்கு வழங்கும் பலப் பெயர்களில் இதுவும் ஒன்று. இங்கு நமக்கு ஆச்சர்யம் அழைப்பது என்னவென்றால் ‘நாவாய்’ என்றச் சொல்லுக்கும் ‘நோவா’ என்ற சொல்லுக்கும் உள்ள பொருத்தம் தான். வரலாற்று அறிஞர்களும் மொழி அறிஞர்களும் ’நாவாய்’ என்றச் சொல்லே மருவி ‘நோவா’ என்று மாறி இருக்கின்றது என்றுக் கூறுகின்றனர்.
இறைவன் ஓர் மனிதனை

‘நாவாயினைக்’ கட்டச் சொல்லுகின்றார். அந்த ’நாவாயினைக் கட்டிய மனிதனே’ காலப்போக்கில் மருவி ‘நோவாவாக’ மாறி விட்டான் என்பதே அறிஞர்களின் கருத்து.
மேலும் விவிலியத்தின்படி இறைவன் நோவாவிற்கு படகினைக் கட்ட சில அறிவுரைகள் தருகின்றார்.

“நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு” - ஆதியாகமம் ( 6 - 14)

இங்கே கொப்பேர் மரம் என்று ஒரு மரத்தினைக் குறிப்பிடுகின்றார். நீங்கள் யாராவது வேறு எங்கேயாவது ‘கொப்பேர் மரம்’ என்ற ஒன்றினை கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா?நான் கேள்விப்பட்டது இல்லை. எனவே அது கொப்பேர் மரம் தானா என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருக்கின்றது. அது ஏன் ‘காப்பெரு’ மரமாக இருக்கக் கூடாது.

‘காப்பெரு மரம்’ மொழியாக்கத்தின் போது ‘கோப்பெரு மரமாக’ மாறி இருக்கலாம் அல்லவா!!!

காப்பெரு மரமா?… அப்படி என்றால் என்ன என்றுக் கேட்கின்றீர்களா…

’காப்பெரு’ என்றால் காட்டில் உள்ள பெரிய மரம் என்று அர்த்தம். இறைவன் நோவாவை ஒரு மிகப் பெரிய கப்பலினைக் கட்டச் சொல்லுகின்றார் என்றுக் கண்டோம்.

அந்தக் கப்பலின் அளவையும் விவிலியத்தின் படி அவரே கூறி இருக்கின்றார்.

 ”நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.” - ஆதியாகமம் (6 - 15)

இந்த நீளத்தில் படகினைச் செய்ய ஒரு மரம் வேண்டும் என்றால் அது நிச்சயம் பெரிய மரமாகவே இருக்க வேண்டும். அத்தகைய பெரிய மரங்கள் காதினில் காணப்படுவதே இயற்கை. எனவே இறைவன் நோவாவினை ‘காட்டினில் உள்ள பெரிய மரத்தினைக்’ கொண்டு நாவாயினைக் கட்டு என்று சொல்லி இருக்க கூடும். அதுவே காலத்திலும் மொழியாக்கத்திலும் ‘கோப்பெரு மரம்’ என்று மருவி இருக்கக் கூடும்.நிற்க.

இது வரை நாம் நோவாவின் வரலாறு எவ்வாறு தமிழுடன் கலந்து வருகின்றது என்பதனைப் பார்த்தோம். இப்பொழுது நோவா செய்த ஒரு முக்கியமான செயலைப் பற்றிப் பார்ப்போம்.

வெள்ளம் வற்றி விட்டது. நோவாவின் கப்பலும் கரை தட்டி விட்டது. அவன் கப்பலில் ஏற்றிய உயிரினங்களோடும் அவனின் குடும்பத்தினரோடும் நோவா தரை இறங்கி விட்டான். அப்பொழுது அவனை அழியாமல் காப்பாற்றிய கடவுளுக்காக அவன் ஒருக் காரியம் செய்கின்றான். அவன் கடவுளிடம் தன நன்றியைத் தெரிவிப்பதற்காக சில மிருகங்களைப் பலி இடுகின்றான்.

“அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.” - ஆதியாகமம் (8 - 20)

நோவாவின் இந்தச் செயலின் மூலமே உலகில் பலி இட்டு இறைவனை வேண்டும் வழிப்பாட்டு முறை தோன்றியது. அது இன்றைக்கும் நம் ஊரினில் தொடர்வதனை நாம் காணலாம். இந்தப் பலி வழிப்பாட்டு முறை தான் பின்னாளில் சமணமும் பௌத்தமும் தோன்றுவதற்கு காரணம் என்றும் நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

சரி…பலி முடிந்தாயிற்று. நோவாவின் மக்களும் உலகில் பெருகுகின்றனர். பெருகி அவர்கள் உலகில் பரவ ஆரம்பிக்கின்றனர். அதைப் பற்றிய விவிலியத்தின் செய்திகள் ஆதியாகமம் 11 இல் தரப் பட்டு இருக்கின்றன…

“ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்” - 2

இங்கேயும் மக்கள் கிழக்கில் இருந்து வந்து இருக்கின்றார்கள் என்று கூறப்படும் செய்தியை கவனியுங்கள். நாம் முன்னரே ‘கிழக்கு’ என்பது சிந்து சமவெளி நாகரீகத்தினை குறிக்கலாம் என்று கண்டு இருந்தோம். எனவே விவிலியத்தின் இந்தச் செய்தியின் படி மக்கள் கிழக்கில் இருந்து சிநேயார் என்னும் தேசத்திற்கு செல்லுகின்றனர்.

எனவே ‘கிழக்கு’ என்பது சிந்து சமவெளி நாகரீகமாக இருந்தால் இந்தச் செய்தியின் படி மக்கள் அதில் இருந்து அதற்கு மேற்கில் உள்ள சிநேயார் என்னும் தேசத்திற்கு சென்று இருக்க வேண்டும். ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு மேற்கில் ‘சிநேயார்’ என்னும் தேசம் இல்லை. ‘சுமேரியா’ என்னும் தேசமே இருந்து இருக்கின்றது. இங்கு தான் மொழி அறிஞர்களின் உதவி நமக்குத் தேவைப்படுகின்றது.

அவர்களின் கூற்றுப்படி ‘சுமேரியர்’ என்ற சொல்லே ‘சிநேயார்’ என்று திரிந்து உள்ளது. எனவே மக்கள் சிந்து சமவெளியில் இருந்து மேற்கில் உள்ள சுமேரியாவிற்கு சென்றனர் என்பது வரலாற்று உண்மையாகின்றது.
அப்படி சுமேரியாவிற்கு பயணித்த மக்கள் யார் என்பதற்கும் விவிலியத்தில் அதே ஆதியாகமத்தில் விளக்கம் இருக்கின்றது…

“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.” - 1

“அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.” - 3

மேலே உள்ள வாக்கியங்களில் “ நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம்” என்ற வார்த்தைகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
உலகிலேயே முதன்முதலில் செங்கல்லை சுட்டு கட்டிடங்கள் கட்டும் பழக்கம் தமிழனுக்கே உண்டு என்பது ஒரு வரலாற்று உண்மை. செங்கல்லை சுடும் பழக்கம் தமிழனால் கண்டுப் பிடிக்கப்பட்ட ஒன்று. சிந்து சமவெளி நாகரீகத்தில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் சுட்ட செங்கலினால் கட்டப்பட்டு உள்ளன என்பதும் வரலாற்று ஆய்வு உண்மை. எனவே விவிலியத்தில் குறிக்கப்பட்டு உள்ள மக்கள் தமிழர்களே என்று நாம் கருத முடிகின்றது.

மேலும் அதே விவிலியத்தில் உலகத்தில் அப்பொழுது ஒரே மொழி தான் இருந்தது என்று கூறப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் இருந்த மனிதன் தமிழன் தான் என்றால் இருந்த ஒரே மொழியும் தமிழாகத்தான் இருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.

எனவே விவிலியத்தின் படி உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்றும் நாம் அறிய முடிகின்றது!!!.

ஒரு நிமிடம்… சிந்து சமவெளி நாகரீகம் என்கின்றீர்… அது தமிழர் நாகரீகம் என்கின்றீர். ஆனால் ஆரியரும் அதற்கு உரிமைக் கொண்டாடுகின்றார்கள். எனவே அது தமிழர் நாகரீகம் என்பதற்கு நீங்கள் எந்த விதமான சான்றுகளையோ அல்லது விளக்கங்களையோ அளிக்கவில்லை.

இரண்டாவது நீங்கள் மக்கள் தோன்றியது ‘குமரிக் கண்டத்தில்’ என்கின்றீர் ஆனால் அதைப் பற்றியே வாய் திறக்கவில்லையே. சிந்து சமவெளியினைப் பற்றியே பேசி இருக்கின்றீர். அப்படி என்றால் மக்கள் தோன்றியது குமரிக் கண்டதிலேயா அல்லது சிந்து சமவெளியிலேயா?… தெளிவாக சொல்லுங்கள் என்றுக் கேட்கின்றீர்களா…!!!!

நியாயமான கேள்விகள். சரி அப்படி என்றால் நாம் சற்று குமரிகண்டத்தையும் சிந்து சமவெளியினையும் கண்டு விட்டு வந்து விடலாம்…!!!

சிந்து சமவெளி அதோ பரந்து விரிந்து நிற்கின்றது…!!!


முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7


சில கூடுதல் தகவல்கள்:
‘Navy’ மற்றும் ’NAVAL’ என்ற ஆங்கிலச் சொற்களின் வேர்ச் சொல் ‘நாவாய்’ என்று நீங்கள் அறிவீர்களா?.

நாவாய் என்பதே ‘நாவி’ என்று மாறி பின்னர் ’நேவி (NAVY)’ என்று மாறி உள்ளது.

மேலும் விவிலியம் கூறும் ‘நோவாவின்’ கதையுடன் திருமாலின் ’மச்ச அவதாரக்’ கதையும் ஒத்துப்போவதை கவனத்தீரா?…இதேப் போல் இன்னும் பல விடயங்கள் விவிலியத்திற்கும் இந்துக் கதைகளுக்கும் இடையில் ஒன்றுப் போல இருக்கின்றன.

இது இப்பொழுது நமக்கு முக்கியம் அல்ல. பின்னர் பார்க்கலாம்.

தொடரும்…

நண்பர்களே வணக்கம்!!!

நீங்கள் கதைப் பல படிப்பீர் என்று அறிய நேர்ந்தது. அக்கணம் முதல் உங்களை சந்தித்து என்னுடைய கதையினைக் கூற வேண்டும் என்ற ஆவல் என்னுள் மிகுந்து இருந்தாலும் நேரம் கிட்டவில்லை. எனவே உரியத் தருணத்திற்காக காத்துக் கொண்டு இருந்தேன். இன்று உங்களை சந்திக்கும் அந்தத் தருணம் கிட்டியதினை எண்ணி நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் அத்துடன் என்னுடைய கதையினை கேட்க நீங்கள் சம்மதிப்பீர்கள் என்ற எண்ணத்திலேயே இத்தனை நாட்களாக என் மனதினுள் வைத்து இருந்த என்னுடைய கதையினையும் கூற ஆரம்பிக்கின்றேன். பொறுமையாய் கேளுங்கள்…!!!

அது ஆங்கிலேயர்கள் இந்தியாவினை ஆண்டுக் கொண்டு இருந்தக் காலம்.

1916 ஆம் வருடம்.

தென் தமிழகத்திலுள்ள விருதுப்பட்டி (இன்றைய விருதுநகர்) என்னும் ஊரினில் தான் நான் பிறந்தேன். கந்தக பூமியாய் அறியப்பட்டு இருந்த பிரதேசத்தில் தாகம் தணிக்க வந்த என்னை எண்ணி பூரிக்காத மக்களே இல்லை எனலாம்.

மண்ணின் மைந்தனான என்னை சீராட்டி, ‘காளிமார்க்’ என்று பெயரூட்டி என்னை அவர்களது இல்லத்தில் ஒருவனாகவே வளர்க்க ஆரம்பித்தனர் மக்கள்.
நானும் மக்களின் அன்பினில் தவழ ஆரம்பித்தேன்.

இவ்வாறே காலங்கள் நகர்ந்தன.

சிறிது சிறிதாக நடக்க கற்றுக் கொண்டு இருந்த என்னை ‘என்னடா பையா மெதுவாக நடந்துக் கொண்டு இருக்கின்றாய்… ஒரு இந்தியச் சிறுவன் இவ்வாறா இருப்பான்… சுறுசுறுப்பாய் ஓடடா… நாம் இந்தியர்கள்’ என்றுக் கூறி என் கையினைப் பிடித்துக் கொண்டு ஓடச் சொல்லித் தந்தார் சுதேசி இயக்க அண்ணா.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறை சிறுவனான என்னைத் தாக்காதவாறு என்னை பல காலம் காத்தார் அந்த அண்ணா. அவரின் கவனிப்பில் நானும் நன்றாக வளர்ந்தேன்.

இவ்வாறே காலங்கள் கழிய நாங்கள் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்தது. எங்களின் ஊரினை விட்டு அன்னியர்கள் ஒரு வழியாக வெளி ஏறினார்கள்.

சிரித்தேன்.

“ஏன் சிரிக்கின்றாய்….!!!” என்றார் சுதேசி இயக்க அண்ணா.

“விடுதலை அண்ணா… சுதந்திரம்… இனி நாம் நன்றாக வளரலாம் தானே… நாமும் நம் சகோதரர்களும் நம்முடைய மண் முழுவதும் சுற்றலாம்.. தடை ஒன்றும் இல்லையே அண்ணா… அதான்” என்றேன்.

அவரும் சிரித்தார்.”ஆமடா பொடியா… நாம் வளரலாம்…!!! இது வரை நாம் ஓடிக் கொண்டு இருந்தோம். இனி ஓடியது போதும். இது பறக்கும் தருணம்.. வா பறப்போம்… வானம் நமக்காக காத்துக் கொண்டு இருக்கின்றது” என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு பறக்க ஆரம்பித்தார்.

ஒரு பொற்காலம் உதயமாயிற்று.

நான் நன்றாக வளர்ந்தேன். கூடவே என்னுடைய உடன்பிறப்புகளான ‘டொரினோ’ ‘கோல்ட்ச்போட்”லெமன் ஒ’ ‘போவொண்டோ’ போன்றவர்களும் நன்றாக வளர ஆரம்பித்தனர். எங்களின் விளையாட்டுகள் ஊர் மக்களை பெரிதும் கவர்ந்தன. பொறாமை எதுவும் இல்லாத எங்களது போட்டியினைக் கண்டு பக்கத்து வீட்டுப் பசங்களான ‘மாணிக்க விநாயகர் சோடா’ போன்றவர்களும் எங்களுடன் ஆட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

எங்களை தங்களது சொந்த வீட்டுப் பிள்ளைகளைப் போலவே அனைவரும் கருதி அவர்களது இல்ல விழாக்களுக்கு அழைப்பர். நாங்கள் இன்றி எந்த நிகழ்ச்சியும் நடை பெறாது. வாழ்கை இனிமையாக சென்றது.

அவர்கள் வரும் வரை.

அவர்கள் வெளிநாட்டு பணக்கார ஆட்கள்.

“என்னய்யா… நாம் துரத்தி விட்ட ஆட்கள் மறுபடியும் வந்து இருக்கின்றார்கள்” என்றவாறே அரசாங்கத்தினை பார்க்க, இளித்தார் குல்லா வைத்த சிங்.

“இவங்க நல்ல பையனுங்கபா… நேர்மையா விளையாடுவானுங்க… விளையாட்டுதான சும்மா விளையாடுங்க” என்றார்.

‘சரி… போட்டினா நம்ம பயலுவ கம்பா இருப்போம்ல’ என்று எண்ணிக் கொண்டும் வேறு வழி இல்லாமலும் அவர்களுடன் போட்டியிட தயாரானோம்.

ஆனால் போட்டி தொடங்கும் முன்னரே வெற்றிக் கோப்பையை அந்த வெளிநாட்டு ஆட்களிடம் கொடுத்து விட்டார் சிங்.

“என்னங்க இது… போட்டியே தொடங்கல ஆனா கோப்பையை அவிங்களுக்கு தறீங்க” என்று அதிர்ச்சியுடன் நாங்கள் கேட்க

“அட என்னப்பா… கோப்பை 250 ரூ… அவங்க 500 ரூ கொடுத்துட்டாங்க… அப்புறம் எதுக்கு போட்டி” என்றார் பணத்தினை எண்ணிக் கொண்டே.

ஆரம்பத்திலேயே ஏமாற்றம்…!!!

எங்கு சென்று முறையிட வேண்டும் என்றும் தெரியவில்லை. மெது மெதுவாக அந்த வெளிநாட்டவர்கள் தங்களின் சுய உருவத்தினைக் காட்ட ஆரம்பித்தனர்.
ஒருக் காலத்தில் பரந்து விரிந்துக் கிடந்த என்னுடைய நட்பு வட்டாரம் சுருங்கத் தொடங்கியது. “மாணிக்க விநாயகர் சோடா” இறந்தே போனான்.

இந்த நிலையில் தான் சுதேசி இயக்க அண்னாவினை காணச் சென்றேன். என்னை வளர்த்த அவரை விட்டால் எனக்கு வேறு யார் கதி?.

ஆனால் அவரின் நிலைமை எங்களின் நிலைமையைக் காட்டிலும் படு மோசமாக இருந்தது. அவரை வளர்த்தக் காலம் இன்று அவரை தளர்த்தி இருந்தது. நடமாட தடுமாறிக் கொண்டு இருந்த அவரை தாங்கினேன்.

“ஏன் அண்ணா இந்த நிலைமை… என்ன தவறு செய்தோம் நாம்” என்றேன்.

இருமினார்.

“நாம் என்றும் அந்நியர்களிடம் தோற்றதில்லை…சகுனிகளிடமும் கூட இருந்தே குழிப்பறிப்பவர்களாலேயே தான் தோற்று இருக்கின்றோம்… சுதந்திரம் பெற்ற உடன் அந்த சகுனிகளை களை எடுக்க மறந்து விட்டோம். இன்று அவன் தலை எடுத்து விட்டான்” என்றார்.

“அண்ணா, நாம் இப்பொழுது என்ன அண்ணா செய்வது… நம் நிலைக்கு எண்ணத் தீர்வு” என்றேன்.

“புரட்சி…!!! புரட்சி பொடியனே… அதுவே தான் தீர்வு…!!! வேறு வழி இல்லை… மக்கள் உண்மையினை அறிய வேண்டும்… இந்தியன் என்ற நமது முழக்கத்தையே இன்று அந்நியன் தன கையினில் எடுத்து உள்ளான்… அதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்… புரட்சியே தீர்வு!!!” என்று முழங்கினார்.

“ஆனால் அண்ணா உங்களுக்கு உடல் நலம் சரியில்லையே… நீங்கள் இருந்தால் தானே புரட்சி… நீங்கள்…” என்றேன்.

“என்னை பற்றி கவலைப் படாதே பொடியா…. இன்று நான் இவ்வாறு இருக்கின்றேன்… ஆனால் இது என் முடிவல்ல… இதை அனைவரும் அறிவர். வெளிநாட்டு கொள்ளைகாரர்கள் முதல்…!!! என் துணைக்கு நீ இருக்கின்றாய்…. உன்னை போல் மேலும் சில நண்பர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் என்னை தாங்கிக் கொள்வீர்கள். அப்புறம் இருக்கவே இருக்கின்றார்கள் எண்ணிலடங்கா என் மண்ணின் வாலிபச் சிங்கங்கள். அவர்கள் மட்டும் உண்மை அறிந்து தெளிவுக் கொள்ளட்டும்… அப்புறம் பாரடா என்னை… உண்மையான நாட்டுப் பற்றும் உணர்வும் கொண்ட ஒருவன் உள்ளவரை நான் இருப்பேன்… இம்மண்ணோடு… கவலைக் கொள்ளாதே… இப்பொழுது நீ புறப்பட்டு சென்று அச் சிங்கங்களை தேடு. தேடி உன் கதையினைக் கூறு…மாற்றம் அதுவாய் வரும்… இன்னும் இம் மண்ணின் இரத்தம் குளிர்ந்து விடவில்லை!!!” என்று கூறி சிரித்தார்.

நானும் அன்று முதல் மக்களிடம் என்னுடைய கதையினை கூற அலைந்துக் கொண்டு இருக்கின்றேன். இப்பொழுது உங்களிடமும் கூறி விட்டேன்.

“நண்பர்களே இதுவே என் கதை… உலகமே ஒரு கிராமமாகிக் கொண்டு வருகின்றது என்று சொல்லுகின்றார்கள். ஆனால் அவர்களின் இந்த கூற்றினால் எத்தனை கிராமங்கள் அழிந்துப் போய் விட்டன என்று அவர்கள் கூறுவார்களா?… உலகம் ஒரு நாகரீகம் என்று சொல்லுகின்றார்கள். ஆனால் எத்தனை நாகரீகங்களை அவர்கள் அழித்து இருக்கின்றார்கள் என்று கூறுவார்களா?… நிச்சயம் மாட்டார்கள். அவர்கள் கூறும் கிராமம் பணக்காரர்களின் கிராமம். பணக்காரர்களின் நாகரீகம். பணமே அங்கே கடவுள், சட்டம், நீதி அனைத்தும். வாழ்க்கைக்கும் நிம்மதிக்கும் அங்கே இடமில்லை…உணர்ந்துக் கொள்ளுங்கள்… உங்களை நம்பியே இங்கே சிலர் இருக்கின்றோம்… உங்களுக்காகவே!!! காப்பாற்றுங்கள்!!!”.

இப்படிக்கு 95 வயதானாலும் உங்கள் அன்பையும் பாதுகாப்பையும் எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்கும் ஒரு சுதேசி மைந்தன்.

கவனிப்பீர்களா…???

வலி…!!!

திடீரென்று பயங்கர வலி…!!!

உணவருந்திக் கொண்டு இருந்த ராகுல் உண்ண முடியாமல் தவித்தான்.

அதுவரை நன்றாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த நண்பன் திடீரென்று நிறுத்தியதைக் கண்ட செல்வனும் உண்பதை நிறுத்தினான்.

“என்னடா ஆச்சி… ஏன் திடீர்னு ஒரு மாதிரி இருக்க?” என்றான் செல்வன்.

“என்னனு தெரியலடா… திடீர்னு சாப்பிடும் போது மட்டும் இடுப்புப் பக்கம் வலிக்குது… வலி பயங்கரமா இருக்குடா” என்று வலியுடனே பதில் அளித்தான் ராகுல்.

“இடுப்புப் பக்கமா?… எந்த இடத்திலேனு சரியா சொல்லு” என்றான் செல்வன் சற்று யோசித்தவாறே.

“இங்கடா..” என்று கூறியவாறே ராகுல் காட்டிய இடம் அவனின் சிறுநீரகம் இருக்கும் இடத்திற்கு அருகில் இருந்தது.

செல்வன் மேலும் யோசித்தான்… பின்னர் “சரி இது ஒண்ணும் பெருசா இருக்காது… நீ போயி எதுக்கும் நம்ம அலுவலகத்துல இருக்குற மருத்துவரைப் போய் பார்த்திட்டு வந்துடு” என்றுக் கூறிவிட்டு தனது உணவைத் தொடர்ந்தான்.

ராகுலும் செல்வனின் சொற்படியே சென்று மருத்துவரைச் சந்தித்தான். சில சோதனைகளும் கூடவே சில மணி நேரங்களும் கடந்தப் பின்பு அவன் வலியின் காரணம் அவனுக்கு தெரிய வந்தது.
வலிக்கு காரணம் சிறுநீரகத்தில் கல்(Kidney Stone)!!!

இதை செல்வனிடம் அவன் தெரிவித்தபோது அந்தச் செய்தியினை முன்னரே எதிர்ப்பார்த்து இருந்த மாதிரி தலையினை அசைத்து “நினைத்தேன்…!!!” என்றான் செல்வன்.

“என்னடா சொல்ற… இது கல்லாதான் இருக்கும்னு நெனச்சியா… எப்படிடா?” என்றான் ராகுல் ஆச்சர்யத்துடன்.

“சிறுநீரகக் கல்லைப் பற்றி எனக்கு கொஞ்சம் முன்னாடியே தெரியும்… நீ சொன்ன அறிகுறியும் அதுக்குரிய அறிகுறி மாதிரியே இருந்துச்சி… அதான் இது சிறுநீரக் கல்லா இருக்கலாம்னு நெனச்சேன்..” என்றான் செல்வன்.

“உனக்கு இதப் பத்தி தெரியுமா.. அப்படினா சொல்றா மச்சான்… இது ஒண்ணும் ஆபத்தானது இல்லைலே… சரியாயிடும்லே… சொல்றா” என்றான் ராகுல் சிறிது பயத்துடன்.

“ம்ம்ம்ம்…. சொல்றேன் கேள்…” என்று தொடங்கினான் செல்வன்.

சிறுநீரகக் கல்:

ஒருக் குடத்தினில் உப்புத் தண்ணீரை பிடித்து வைத்து கொள்ளுங்கள். பின்னர், அதை நீண்ட நாட்களுக்கு பயன் படுத்தாமலேயே விட்டு விடுங்கள். சில நாட்களுக்குப் பின்னர் அந்த நீரினை கீழே ஊற்றி விட்டு, அந்தக் குடத்தினைப் பாருங்கள். குடம் முன்னர் இருந்த நிலையிலேயேவா இருக்கும்???

இல்லை… குடத்தில் உப்பு படிந்து ஒரு கடின படிவநிலையாக உருவாகி இருக்கும். அந்த நிலையைக் கரைத்து குடத்தினை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது சற்று கடினமான காரியம் தான்… ஆனால் முடியாதது அல்ல!!!

அதேப் போலத்தான் நம் சிறுநீரகமும். சிறுநீரகம் இரத்தத்தினை சுத்தப்படுத்தவும் கழிவுகளை அகற்றவும் செய்கின்றது. இந்தப் பணிக்கு அதற்கு இன்றியமையாதத் தேவை தொடர்ச்சியான நீரோட்டம் தான். அந்த நீரோட்டம் நின்று விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ அதன் பாடு திண்டாட்டம் தான்.

ஏனெனில், சிறுநீரகத்தில் இருக்கும் தண்ணீரில் தாதுப் பொருட்கள் உள்ளன. தேவை இல்லாத தாதுப் பொருட்கள் கழிவுகளாய் வெளி ஏற்றப்படுகின்றன. தேவை உள்ள தாதுப் பொருட்கள் இரத்தத்தின் மூலம் உடலுக்கு அளிக்கப் படுகின்றன.

அப்பேர்ப்பட்ட தாதுப் பொருட்கள், தக்க நேரத்தில் வெளி ஏற்றப் படாவிட்டாலோ, அல்லது சுழற்சி முறைக்காக தக்க நேரத்தில் வராவிட்டாலோ, அந்தத் தாதுப் பொருட்கள் கடினமாகி ஒரு படிவமாக உருவாகிவிடும். இதே நிலை தொடர்ந்தால் அந்தப் படிவத்தைக் கரைக்கும் தன்மையை அல்லது வலிமையினை சிறுநீரகம் இழந்து விடும். அந்தப் படிவமும் வலிமையான ஒன்றாக நிலைப் பெற்றுவிடும். அந்தப் படிவமே கல். சிறுநீரகத்தினில் அது உருவாவதால் அது சிறு நீரகக் கல்.

தண்ணீர்க் குடம் — > சிறுநீரகம்.
உப்புத் தண்ணீர் — > தாதுக்கள் கலந்த நீர்.
உப்புப் படிவம் — > சிறுநீரகக் கல்.

சரி இந்த கல் நம்முடைய உடம்பினில் உருவாகாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்???

பெரிதாய் ஒன்றும் இல்லை… நேரத்திற்கு தண்ணீர் குடியுங்கள்… அதிகமாக குடியுங்கள். அது போதும்!!! தேநீர் குடிப்பதினை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.உடம்பின் நீர் சுழற்சியினை சீராக வைத்துக் கொள்ளுங்கள்…!!! கல் உருவாக வாய்ப்பே இருக்காது.

சரி… கல் உருவாகிவிட்டது… இப்பொழுது என்ன செய்ய வேண்டும்…???

இப்பொழுதும் தண்ணீர் குடியுங்கள். அதிகமாக குடியுங்கள்… உருவாகிய கல்லினை அது கரைத்து விடும். அதற்கு என்ன, அது தான் உலகக் கரைப்பான் (universal solvent …  எப்படி எங்க மொழியாக்கம் !!!) ஆயிற்றே…

கூடுதலாக வாழைத் தண்டினை நன்றாக அரைத்து உண்டால், அது அந்தக் கல்லினைக் கரைத்து விடும். (பாட்டி மற்றும் சித்த மருத்துவ வழி). அவ்வளவே…!!! சரியான உணவுப் பக்குவம்… தண்ணீர் குடிக்கும் பழக்கம்… இவை இருந்தால் போதும்… கல் அதுவாய் கரையும்!!! மேலும் நீர் அதிகமாக பருகுவது உடலிற்கு எல்லாவிதத்திலும் நல்லது.

நண்பர்களே இந்தப் பேரண்டமே 75% நீர் இருப்பதினால் தான் இயங்குகின்றது என்றால்… நம்முடைய சிறிய உடல் இயங்க நீர் அவசியம் தானே.!!!

பி.கு:

இந்தப் பதிவு மென்பொறியாளர்களுக்கான ஒரு முக்கியப் பதிவு. எங்கோ விரைந்துக் கொண்டு இருக்கும் இந்த உலகத்தில் எதைத் தேடி அலைகிறோம் என்றுத் தெரியாமல் உடலினைத் தொலைத்துக் கொண்டு ஓடும் பலர் இங்கேத் தான் இருக்கின்றனர். ஏன்… நானும் அவர்களுள் ஒருவனே!!!

“உடல் வளர்த்தேன்… உயிர் வளர்த்தேன்..” என்று உடலின்

முக்கியத்துவத்தினைக் கூறிச் சென்றுவிட்டார் திருமூலர்.
ஆனால் இன்றோ “உடல் தொலைத்தேன்… பணம் வளர்த்தேன்” என்றுக் கூறும் சமூகத்தினர் கூடி விட்டனர். எனவே நோய்களும் தான்.
அப்படிப்பட்ட நோய்களையும் வலிகளையும், அதற்குரிய நிவாரண வழிகளையும் பற்றி என்னால் இயன்ற அளவு மக்களுக்குத் தெரிவிக்கலாமே என்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு. இந்தப் பதிவு ஒரு கையேடு… அவ்வளவே!!!
வாருங்கள் ‘உடல் வளர்ப்போம்… உயிர் வளர்ப்போம்…!!!!

விவிலியம்கிருத்துவர்களின் வேத நூல்!!!இந்நூலில் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றதா? பார்ப்போம்…!!! விடையினைச் சுமந்துக் கொண்டு பழைய ஏற்பாடு இதோ நிற்கின்றது!!!
முதலில் பழைய எற்பாட்டினைப் பற்றி சிறிது அறிந்துக் கொள்வோம்.

இது கிருத்துவின் வருகைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி எடுத்து உரைப்பது. உலகத்தின் வரலாற்றில் ஆரம்பித்து யூத இனத்தவரின் வரலாறாக செல்லும் ஒரு நூல்.
சரி இப்பொழுது நம் விசயத்துக்கு வருவோம்.விவிலியத்தின் படி கடவுள் ஆறு ஊழிக் காலங்களில் உலகினைப் படைக்கிறார். ஆறாவது ஊழிக் காலத்தில் அவரின் சாயலிலேயே மனிதனைப் படைக்கிறார். அவனைக் கடவுள் மண்ணில் இருந்துப் படைக்கிறார்.சரிஅந்த மனிதனை எங்கே படைக்கிறார்? என்றக் கேள்விக்கு விவிலியம் அளிக்கும் பதில்..

தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…” - ஆதியாகமம் (2 -8)

மனிதனை ஏதேன் தோட்டத்தில் உருவாக்கினார் சரி. அந்தத் தோட்டம் ஏன் குறிப்பாக கிழக்கே இருந்தது என்றுக் குறிக்கப்பட்டு உள்ளது? சற்று ஆராயலாமா…!!! 
 விவிலியம் என்பது பல்வேறுக் காலங்களில் பல்வேறு நபர்களால் தொகுக்கப்பட்ட ஒரு நூலே ஆகும்.
விவிலியம் தொகுக்கப்பட்ட இடம் - மத்திய ஆசியா. எனவேகிழக்குஎன்று குறிப்பிட்டு உள்ள இடம் மத்திய ஆசியாவிற்கு கிழக்கிலே தான் இருந்து இருக்க வேண்டும். 

சரிமத்திய ஆசியாவிற்கு கிழக்கில் உள்ள நாடுகள் என்ன என்ன?இந்தியா, சீனம் மற்றும் சப்பான்!!!

இந்த மூன்று நாடுகளில் மிகவும் பழமையான நாகரீகம் கொண்ட நாடு என்ன என்பதனை நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் மனிதன் தோன்றிய இடம் தானே உலகிலேயே பழைமையான நாகரீகம் உடைய இடமாக இருந்து இருக்க வேண்டும்.
அப்படி பழமையான நாகரீகம் எதுவென்று நாம் பார்க்கையில் நமக்கு விடையாய் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது தருவது இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரீகமே ஆகும்.

அப்படி என்றால் விவிலியத்தினில் கூறப்படும்கிழக்கில் உள்ள இடம்சிந்து சமவெளி என்று நாம் கருத இடம் இருக்கின்றது (அதாவது அதை விட பழைய நாகரீகம் கிழக்கில் கண்டுப் பிடிக்கப் படும் வரை).

சிந்து சமவெளி நாகரீகம் தான் விவிலியம் சொல்லும் இடம் என்றால் அதில் வாழ்ந்த மனிதன் தான் முதல் மனிதனாக இருக்க வேண்டும். அப்படி என்றால் சிந்து சமவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? சிந்து சமவெளி நாகரீகம் யாருடையது?

இந்தக் கேள்விக்கான பதிலுக்கு இருவர் போட்டி இடுகின்றனர். சிந்து சமவெளி நாகரீகம் தங்களுடையது என்று அவர்கள் உரிமைக் கொண்டாடுகின்றனர்.

ஒருவர்ஆரியர்

இன்னொருவர்தமிழர்.

இந்த நாகரீகத்திற்கு ஆரியர் உரிமைக் கொண்டாடினாலுமே, சான்றுகளும், எழுத்துக்களும், பல்வேறு வெளிநாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சியும் இந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றே முடிவினைத் தருகின்றது.

இதன் அடிப்படையில் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்றும் அதனால் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் நாம் கருத முடிகின்றது.
நிறுத்துங்கள்…! நிறுத்துங்கள்…! சிந்துசமவெளி என்கின்றீர்கள்தமிழர்கள் என்கின்றீர்கள்…!!! சான்றுகள் போதவில்லையேஇன்னும் கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள் என்கின்றீர்களா…!!!

சரிவிவிலியத்தின்படி முதல் மனிதன் யார்?

ஆதாம் தானே.

அவனுக்கு அந்தப் பெயரினை வைத்தது யார்?

விவிலியத்தில் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாம் பெயர் இடுகின்றான் (ஏவாளுக்கும் உட்பட) ஆனால் அவனுக்கு பெயர் யார் இட்டது என்பதனைப் பற்றிய செய்தி இல்லை.

அப்படியே ஆதாம் சகல வித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் சகலவித காட்டு மிருகங்களுக்கும் பெயரிட்டான்…” ஆதியாகமம் (2 -20)

ஆதாம் என்றப் பெயரே ஆதியாகமம் (2-19) தான் முதல் முறையாக பயன்படுத்தப் படுகின்றது.

அதற்கு முன்னால் முதல் மனிதன்மனிதன்என்ற சொல்லாலேயே குறிக்கப்பட்டு வந்துள்ளான். அவனுக்கு ஆதாம் என்றப் பெயர் எப்படி வந்தது என்றச் செய்தி விவிலியத்தில் இல்லை. ஒரு வேளை அது தொடர்பான செய்தி  இருந்து, பின்னர் அது ஒரு சிலரால் விலக்கப்பட்டு இருக்கலாம் (விவிலியத்தின் செய்திகளை பலர் தங்களுக்கு சாதகமாக மாற்றி உள்ளனர் என்பது வரலாறு) என்றக் கருத்துக்களும் உலாவிக் கொண்டு இருக்கின்றன. எது எப்படியோ அந்தப் பெயர் எப்படி வந்தது என்று நமக்கு கூற நம் வரலாற்று அறிஞர் இருக்கின்றார். அட அவர்தாங்கதமிழ்!!!

ஆதி!!!

இந்த வார்த்தையைக் கண்டவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகின்றது

ஆதி என்றால் தொடக்கம்.

அப்படி என்றால் தொடக்கத்தில் இருந்த மனிதனை நீங்கள் அழைக்க வேண்டும் என்றால் எவ்வாறு அழைப்பீர்கள்?

ஆதி மனிதன் என்று அழைக்க வாய்ப்பு இருக்கின்றதா..!!!

ஆதி மனிதன்‘ … ‘ஆதன்என்றாகி பின்னர் மொழிப்பெயர்ப்பில்ஆதாம்என்றாகி இருப்பதற்கு வாய்ப்பு உண்டல்லவா?

ஆதாம் என்ற சொல்லுக்கும் ஆதிமனிதன் என்ற சொல்லுக்கும் உள்ள பொருத்தங்களை நீங்களே பார்த்து முடிவு செய்துக் கொள்ளுங்கள்

இப்பொழுது நாம் ஏவாளைப் பற்றி பார்ப்போம்!!!

ஏவாளுக்குப் பெயர் இட்டவன் ஆதாம்.

ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான். ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 )

மேல் உள்ள வாக்கியத்தின் படி, ஏவாள் என்றால் தாய் என்றும் அல்லது பாட்டி என்றும் பொருள் தர வேண்டும்.

ஆனால் ஆங்கிலத்தில்இவே (EVE)’ என்றுச் சொல்லும் சொல் இந்தப் பொருளைத் தருகின்றதா என்றால் இல்லை என்பதே பதில்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம், விவிலியம் என்பது எபிரேயத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட ஒன்றே ஆகும். எனவே இந்தச் சொல்லினை நாம் எபிரேயத்தில் காண்பதே சரியாக அமையும்.

எபிரேயத்தில் ஏவாள்ஆயாஎன்றே குறிக்கப்படுகின்றாள்.

ஆயா என்றால் பாட்டி என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இவளே பாட்டி என்பதினால் இவளை ஆயா என்றான் ஆதிமனிதன்.

ஆயாஎன்றச் சொல்லே மருவிஈயாஎன்றும்இவேஎன்றும் மாறி நிற்கின்றது.

ஆயா என்றச் சொல்லும் அதன் அர்த்தமும் எம்மொழியினைச் சேர்ந்தவை என்று கூறத் தேவை இல்லை என்றே தான் நினைக்கின்றேன். இரண்டுமே தமிழில் இன்றும் பழக்கத்தில் இருப்பதினை நாம் காண முடியும்.

எனவே, ஆதி மனிதனும் , ஆயாவும் தமிழர்களே என்பதினில் சந்தேகம் இல்லை.

இன்னும் மேலாக,
கடவுள் மனிதனை மண்ணில் இருந்தே படைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி…” - ஆதியாகமம் (2 - 7)

இப்பொழுது அவன் மண்ணில் இருந்து படைக்கப்பட்டதினாலேயே அவனை மனிதன் (மண் - தன்) என்றுக் கருதவும் வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் அவனிடம் மனசு இருப்பதினால் அவனை மனுசன் என்றுக் கூறப்படுகின்றது என்றும் கருதலாம்.

இப்பொழுது ஆங்கிலத்தின் man என்ற வார்த்தையையும் woman என்ற வார்த்தையையும் நாம் எடுத்துக் கொள்வோம்.

மண்ணில் இருந்துப் படைக்கப் பட்டவன் என்பதினால் அவனை மண் (Man) என்றுக் கூறுகின்றார்கள் என்றும்,

மண்ணினால் செய்யப்பட்ட மனிதனின் உள்ளிருந்து உருவாக்கப்பட்டதால் பெண்ணை, உள் - மண் (மண்ணின் உள்ளிருந்து) என்ற அர்த்தம் பொருந்த woman என்றும் கூறுகின்றார்கள் என்று நாம் கருதலாம் தானே.

மண்ணும், மனசும் - எந்த மொழி என்று நமக்கு நன்றாகத் தெரியும். தமிழ் மொழியே அது…!!!

மேலே நாம் கண்டக் கருத்துக்களின் மூலம்அதாவது,

ஆதாம் - ஆதி மனிதன்
ஏவாள் - ஆயா
Man - மண்
Woman - உள் மண்

விவிலியம் கூறும் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்றும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

சரிமனிதன் பிறந்து விட்டான்தவறுகளும் செய்யத் தொடங்கி விட்டான். இறைவன் அதனைக் கண்டு மனம் உடைந்து உலகினை அழிக்க முடிவு எடுத்துவிட்டான்உலகினை அழிக்க வெள்ளம் தயாராக இருக்கின்றதுஅதோ வெள்ளம் வரும் அறிகுறி தெரிகின்றது….!!!

வெள்ளத்திலும் முதல் மனிதர்கள் தமிழர்கள் என்று பறைசாட்ட நோவா தன்னுடைய படகுடன் அதோ நிற்கின்றார்

நோவாவை சந்திப்போம்அடுத்தப் பதிவில்!!!

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு