விவிலியம்கிருத்துவர்களின் வேத நூல்!!!இந்நூலில் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றதா? பார்ப்போம்…!!! விடையினைச் சுமந்துக் கொண்டு பழைய ஏற்பாடு இதோ நிற்கின்றது!!!
முதலில் பழைய எற்பாட்டினைப் பற்றி சிறிது அறிந்துக் கொள்வோம்.

இது கிருத்துவின் வருகைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி எடுத்து உரைப்பது. உலகத்தின் வரலாற்றில் ஆரம்பித்து யூத இனத்தவரின் வரலாறாக செல்லும் ஒரு நூல்.
சரி இப்பொழுது நம் விசயத்துக்கு வருவோம்.விவிலியத்தின் படி கடவுள் ஆறு ஊழிக் காலங்களில் உலகினைப் படைக்கிறார். ஆறாவது ஊழிக் காலத்தில் அவரின் சாயலிலேயே மனிதனைப் படைக்கிறார். அவனைக் கடவுள் மண்ணில் இருந்துப் படைக்கிறார்.சரிஅந்த மனிதனை எங்கே படைக்கிறார்? என்றக் கேள்விக்கு விவிலியம் அளிக்கும் பதில்..

தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…” - ஆதியாகமம் (2 -8)

மனிதனை ஏதேன் தோட்டத்தில் உருவாக்கினார் சரி. அந்தத் தோட்டம் ஏன் குறிப்பாக கிழக்கே இருந்தது என்றுக் குறிக்கப்பட்டு உள்ளது? சற்று ஆராயலாமா…!!! 
 விவிலியம் என்பது பல்வேறுக் காலங்களில் பல்வேறு நபர்களால் தொகுக்கப்பட்ட ஒரு நூலே ஆகும்.
விவிலியம் தொகுக்கப்பட்ட இடம் - மத்திய ஆசியா. எனவேகிழக்குஎன்று குறிப்பிட்டு உள்ள இடம் மத்திய ஆசியாவிற்கு கிழக்கிலே தான் இருந்து இருக்க வேண்டும். 

சரிமத்திய ஆசியாவிற்கு கிழக்கில் உள்ள நாடுகள் என்ன என்ன?இந்தியா, சீனம் மற்றும் சப்பான்!!!

இந்த மூன்று நாடுகளில் மிகவும் பழமையான நாகரீகம் கொண்ட நாடு என்ன என்பதனை நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் மனிதன் தோன்றிய இடம் தானே உலகிலேயே பழைமையான நாகரீகம் உடைய இடமாக இருந்து இருக்க வேண்டும்.
அப்படி பழமையான நாகரீகம் எதுவென்று நாம் பார்க்கையில் நமக்கு விடையாய் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது தருவது இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரீகமே ஆகும்.

அப்படி என்றால் விவிலியத்தினில் கூறப்படும்கிழக்கில் உள்ள இடம்சிந்து சமவெளி என்று நாம் கருத இடம் இருக்கின்றது (அதாவது அதை விட பழைய நாகரீகம் கிழக்கில் கண்டுப் பிடிக்கப் படும் வரை).

சிந்து சமவெளி நாகரீகம் தான் விவிலியம் சொல்லும் இடம் என்றால் அதில் வாழ்ந்த மனிதன் தான் முதல் மனிதனாக இருக்க வேண்டும். அப்படி என்றால் சிந்து சமவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? சிந்து சமவெளி நாகரீகம் யாருடையது?

இந்தக் கேள்விக்கான பதிலுக்கு இருவர் போட்டி இடுகின்றனர். சிந்து சமவெளி நாகரீகம் தங்களுடையது என்று அவர்கள் உரிமைக் கொண்டாடுகின்றனர்.

ஒருவர்ஆரியர்

இன்னொருவர்தமிழர்.

இந்த நாகரீகத்திற்கு ஆரியர் உரிமைக் கொண்டாடினாலுமே, சான்றுகளும், எழுத்துக்களும், பல்வேறு வெளிநாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சியும் இந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றே முடிவினைத் தருகின்றது.

இதன் அடிப்படையில் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்றும் அதனால் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் நாம் கருத முடிகின்றது.
நிறுத்துங்கள்…! நிறுத்துங்கள்…! சிந்துசமவெளி என்கின்றீர்கள்தமிழர்கள் என்கின்றீர்கள்…!!! சான்றுகள் போதவில்லையேஇன்னும் கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள் என்கின்றீர்களா…!!!

சரிவிவிலியத்தின்படி முதல் மனிதன் யார்?

ஆதாம் தானே.

அவனுக்கு அந்தப் பெயரினை வைத்தது யார்?

விவிலியத்தில் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாம் பெயர் இடுகின்றான் (ஏவாளுக்கும் உட்பட) ஆனால் அவனுக்கு பெயர் யார் இட்டது என்பதனைப் பற்றிய செய்தி இல்லை.

அப்படியே ஆதாம் சகல வித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் சகலவித காட்டு மிருகங்களுக்கும் பெயரிட்டான்…” ஆதியாகமம் (2 -20)

ஆதாம் என்றப் பெயரே ஆதியாகமம் (2-19) தான் முதல் முறையாக பயன்படுத்தப் படுகின்றது.

அதற்கு முன்னால் முதல் மனிதன்மனிதன்என்ற சொல்லாலேயே குறிக்கப்பட்டு வந்துள்ளான். அவனுக்கு ஆதாம் என்றப் பெயர் எப்படி வந்தது என்றச் செய்தி விவிலியத்தில் இல்லை. ஒரு வேளை அது தொடர்பான செய்தி  இருந்து, பின்னர் அது ஒரு சிலரால் விலக்கப்பட்டு இருக்கலாம் (விவிலியத்தின் செய்திகளை பலர் தங்களுக்கு சாதகமாக மாற்றி உள்ளனர் என்பது வரலாறு) என்றக் கருத்துக்களும் உலாவிக் கொண்டு இருக்கின்றன. எது எப்படியோ அந்தப் பெயர் எப்படி வந்தது என்று நமக்கு கூற நம் வரலாற்று அறிஞர் இருக்கின்றார். அட அவர்தாங்கதமிழ்!!!

ஆதி!!!

இந்த வார்த்தையைக் கண்டவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகின்றது

ஆதி என்றால் தொடக்கம்.

அப்படி என்றால் தொடக்கத்தில் இருந்த மனிதனை நீங்கள் அழைக்க வேண்டும் என்றால் எவ்வாறு அழைப்பீர்கள்?

ஆதி மனிதன் என்று அழைக்க வாய்ப்பு இருக்கின்றதா..!!!

ஆதி மனிதன்‘ … ‘ஆதன்என்றாகி பின்னர் மொழிப்பெயர்ப்பில்ஆதாம்என்றாகி இருப்பதற்கு வாய்ப்பு உண்டல்லவா?

ஆதாம் என்ற சொல்லுக்கும் ஆதிமனிதன் என்ற சொல்லுக்கும் உள்ள பொருத்தங்களை நீங்களே பார்த்து முடிவு செய்துக் கொள்ளுங்கள்

இப்பொழுது நாம் ஏவாளைப் பற்றி பார்ப்போம்!!!

ஏவாளுக்குப் பெயர் இட்டவன் ஆதாம்.

ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான். ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 )

மேல் உள்ள வாக்கியத்தின் படி, ஏவாள் என்றால் தாய் என்றும் அல்லது பாட்டி என்றும் பொருள் தர வேண்டும்.

ஆனால் ஆங்கிலத்தில்இவே (EVE)’ என்றுச் சொல்லும் சொல் இந்தப் பொருளைத் தருகின்றதா என்றால் இல்லை என்பதே பதில்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம், விவிலியம் என்பது எபிரேயத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட ஒன்றே ஆகும். எனவே இந்தச் சொல்லினை நாம் எபிரேயத்தில் காண்பதே சரியாக அமையும்.

எபிரேயத்தில் ஏவாள்ஆயாஎன்றே குறிக்கப்படுகின்றாள்.

ஆயா என்றால் பாட்டி என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இவளே பாட்டி என்பதினால் இவளை ஆயா என்றான் ஆதிமனிதன்.

ஆயாஎன்றச் சொல்லே மருவிஈயாஎன்றும்இவேஎன்றும் மாறி நிற்கின்றது.

ஆயா என்றச் சொல்லும் அதன் அர்த்தமும் எம்மொழியினைச் சேர்ந்தவை என்று கூறத் தேவை இல்லை என்றே தான் நினைக்கின்றேன். இரண்டுமே தமிழில் இன்றும் பழக்கத்தில் இருப்பதினை நாம் காண முடியும்.

எனவே, ஆதி மனிதனும் , ஆயாவும் தமிழர்களே என்பதினில் சந்தேகம் இல்லை.

இன்னும் மேலாக,
கடவுள் மனிதனை மண்ணில் இருந்தே படைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி…” - ஆதியாகமம் (2 - 7)

இப்பொழுது அவன் மண்ணில் இருந்து படைக்கப்பட்டதினாலேயே அவனை மனிதன் (மண் - தன்) என்றுக் கருதவும் வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் அவனிடம் மனசு இருப்பதினால் அவனை மனுசன் என்றுக் கூறப்படுகின்றது என்றும் கருதலாம்.

இப்பொழுது ஆங்கிலத்தின் man என்ற வார்த்தையையும் woman என்ற வார்த்தையையும் நாம் எடுத்துக் கொள்வோம்.

மண்ணில் இருந்துப் படைக்கப் பட்டவன் என்பதினால் அவனை மண் (Man) என்றுக் கூறுகின்றார்கள் என்றும்,

மண்ணினால் செய்யப்பட்ட மனிதனின் உள்ளிருந்து உருவாக்கப்பட்டதால் பெண்ணை, உள் - மண் (மண்ணின் உள்ளிருந்து) என்ற அர்த்தம் பொருந்த woman என்றும் கூறுகின்றார்கள் என்று நாம் கருதலாம் தானே.

மண்ணும், மனசும் - எந்த மொழி என்று நமக்கு நன்றாகத் தெரியும். தமிழ் மொழியே அது…!!!

மேலே நாம் கண்டக் கருத்துக்களின் மூலம்அதாவது,

ஆதாம் - ஆதி மனிதன்
ஏவாள் - ஆயா
Man - மண்
Woman - உள் மண்

விவிலியம் கூறும் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்றும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

சரிமனிதன் பிறந்து விட்டான்தவறுகளும் செய்யத் தொடங்கி விட்டான். இறைவன் அதனைக் கண்டு மனம் உடைந்து உலகினை அழிக்க முடிவு எடுத்துவிட்டான்உலகினை அழிக்க வெள்ளம் தயாராக இருக்கின்றதுஅதோ வெள்ளம் வரும் அறிகுறி தெரிகின்றது….!!!

வெள்ளத்திலும் முதல் மனிதர்கள் தமிழர்கள் என்று பறைசாட்ட நோவா தன்னுடைய படகுடன் அதோ நிற்கின்றார்

நோவாவை சந்திப்போம்அடுத்தப் பதிவில்!!!

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6

42 கருத்துகள்:

tamilarkale ethai vasippathodu nintru vitamal enimal ungalin pangum sirithenum thamilukka erukkattum....

நல்ல ஆய்வுக் கட்டுரை. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

மிகவும் அவசியமான ஆய்வு. சுவாரசியமாகவும் வசியமாகவும் உள்ளது.
ஆதி.
மல்லாங்கிணர்.

மத மாற்றதிம் மற்றொரு முகமே இந்த கட்டுரை ... உலகில் முதல் மனிதன் தமிழன் என்பதில் மாற்று கருத்து இல்லை அவன் பெயர் ஆடம் என்றும் அவனை பற்றி விவிலியம் என்னும் நூலில் வாயிலாக அறிய முற்படுவதும் மிக பேரும் நகைச்சுவை ...

பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்:

வேத மதம் கூறும் பிரபஞ்சவியலில், பிரபஞ்சச் சக்கரத்தின் கால்பங்கேயான தோன்றும் பகுதியில் நான்முகப் பிரம்மன் படைப்பை ஆரம்பிக்கிறார். இந்தப் படைப்பு நிகழும் விதம், பல வகைகளில் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளது. அவற்றுள் நாம் பார்க்கும் பிரபஞ்ச – உலக வகையில் கிரகித்துக் கொள்ளக் கூடிய அடிப்படைகளை இங்கே விளக்குவோம். முதல் அடிப்படை கீதையில் விளக்கப்படுகிறது. (பகவத் கீதை 3, 4-ஆம் அத்தியாயங்கள்.)

இது யக்ஞம் எனப்படும் வேள்வி ரீதியான படைப்பு. யக்ஞம் என்றால் அர்ப்பணிப்பின் வாயிலாக வழிபடுதல் என்று பொருள். வழிபாடு என்பதே அர்ப்பணிப்பு ஆகும். அர்ப்பணிப்பு என்றால் எதையாவது கொடுத்தல் என்று அர்த்தம். எதையாவது ஒன்றைக் கொடுத்தால்தான், பிரதிபலனாக ஒன்று கிடைக்கும். நாம் ஒன்றும் கொடுக்காமல், நமக்கென்று ஒன்றை எடுத்துக் கொண்டால் அது திருட்டுக்குச் சமானம். அதுவே பாபம் என்றும் சொல்லப்படும். அது மட்டுமல்ல, திருப்பிக் கொடுக்காமல் எடுத்துக் கொண்டால், இருப்பு குறைந்து கொண்டே வரும்; மேலும் மேலும் அதனால் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.

இந்தக் கருத்துதான் யக்ஞம், ஹோமம், வேள்வி, வழிபாடு, நைவேத்யம், படைப்பு போன்றவற்றுக்கான அடிப்படையானது. இந்த வழிபாட்டை விருப்பு வெறுப்பு இல்லாமல், பற்றிலாமல் செய்ய வேண்டும். படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் அப்படித்தான் ஆரம்பித்து வைத்தார். ‘ப்ரவர்திதம் சக்ரம்’ என்று அவரால் பரம்பரையாகத் தொடங்கி வைக்கப்பட்ட இந்தச் சக்கரத்தை நாம் அனைவரும் செயல்படுத்திவந்தால்தான் படைப்பு என்பது தொடர்ந்து கொண்டே செல்லும். அது எப்படி என்று பார்ப்போம்.

யக்ஞம் அல்லது ஹோமம் அல்லது வேள்வி என்றால் அங்கே ஹோம குண்டம் இருக்க வேண்டும். அதில் அக்னி இருக்க வேண்டும். அதில் அர்ப்பணிக்க அவிப்பொருள் இருக்க வேண்டும். அந்த அவிப்பொருள் யாரைச் சென்றடைகிறதோ அவர் அதற்குப் பலன் ஒன்றைத் திருப்பி தருகிறார். அந்தப் பலன் பலரையும் சென்றடையும். அப்படிப் பலன் பெறுபவர்கள், இலவசமாகக் கிடைத்தது என்று வாங்கி அனுபவித்தால் மட்டும் போதாது. பிரதிபலனாக திருப்பிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அது திருட்டுக்குச் சமானம். அது பாபத்தைக் கொடுக்கும். இது எப்படி நடக்கிறது என்று முதலில் உலக வகையில் புரிந்து கொண்டு, பிறகு பிரபஞ்ச அளவில் காணலாம்.

உலகம் என்னும் ஹோம குண்டம்

உலகத்தை எடுத்துக் கொண்டால் நீர்-சுழற்சி ஒரு வேள்வி ஆகும். இதில் உலகம் ஹோம குண்டமாகிறது. சூரியனது வெப்பம் அக்னியாகிறது. கடல் மற்றும் நீர் நிலைகளிலிருந்து வெளியாகும் நீராவி அவிப்பொருள் ஆகிறது. இந்த அவிப்பொருள் சென்றடையும் தெய்வம் வருண பகவான் என்னும் மேகம். அவன் இந்திரன் என்னும் தெய்வத்தின் ஆயுதமான வஜ்ராயுதத்தின் (இடி, மின்னல்) உதவியுடன், மித்திரன் என்னும் நட்புத் தெய்வமாக மழை என்னும் பலனைத் தருகிறான்.

இவ்வாறு மழை உண்டாவதே ஒரு வேள்விதான் (கீதை 3-14). இந்த வேள்வி என்பது பிரம்மம் என்னும் முழு முதல் கடவுளிலிருந்து தொடங்கப்பட்டு வருகிறது. தானே தன்னில், தன்னையே அர்ப்பணித்து, தானே உருமாறி, படைப்பை எடுத்துச் செல்கிறது இந்தப் பிரம்மம். (கீதை 4-24)

பிரம்ம வேள்வி என்னும் அந்தப் படைப்பின் பயனாக உண்டாகுவது நீர் ஆகும். அறிவியல் மொழியில் சொல்வதென்றால், நீருக்கு ஆதாரமான ஹைட்ரஜன் உண்டானது இந்த வேள்வியின் பயனாகும். நட்சத்திரங்கள் உருவாகும் விதத்தை நோக்கினால் இந்த ஹைட்ரஜனும் தன் பங்குக்கு வேள்வி என்னும் யக்ஞத்தைச் செய்கிறது என்பது புரியும். தானே, தன்னை, தன்னில் அர்ப்பணித்து, ஹைட்ரஜன் செய்யும் வேள்வியை (thermo nuclear fusion ) நட்சத்திரங்கள் என்னும் ஹோம குண்டங்களில் காணலாம். இடைவிடாமல், எதிர்ரபார்ப்பு இல்லாமல் நிகழும் இந்த வேள்வியின் பயனாக இரும்பு முதலான தாதுப் பொருள்கள் வரை உருவாகி, அடுத்தக் கட்ட படைப்புத் தொடருக்கு வித்திடுகின்றன.

அதன் பயனாக உருவான சூரிய மண்டலத்தில், உலகமே ஹோமக் குண்டமாக இயங்கி நடக்கும் வேள்வியின் பயனாக மழை உண்டாகிறது. மழையிலிருந்து உணவு உண்டாகிறது. உணவிலிருந்து உயிர் உண்டாகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் எங்கணும் நட்சத்திரங்கள் இருந்தால் மட்டும் போதாது. அவற்றைச் சுற்றும் கிரகங்கள் இருந்தால் மட்டும் போதாது. அங்கே சுழற்சி முகமாக, வேள்வி ரூபமாக, நீர் உண்டாகிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இடத்தில்தான் உயிர் உண்டாக முடியும்.

நால்வகை உயிர்கள்

அப்படி உண்டாகும் உயிர்களும் நான்கு வகைகளில்தான் உருவாக முடியும். (சந்தோக்ய உபநிஷத் – 6 – 3 & பிரம்ம சூத்திரம் – 3-1 -21 முதல் 27 வரை.) இதைக் கூறும் சூடாமணி நிகண்டு சூத்திரமும் தமிழில் உண்டு (12-20). இதன்படி உயிர்கள் கருப்பையிலிருந்து தோன்றுவன, முட்டையிலிருந்து தோன்றுவன, வித்து, வேர் முதலியவற்றிலிருந்து தோன்றுவன, ஈரம், வேர்வை அல்லது கசகசப்பிலிருந்து தோன்றுவன என்று நான்கு வகைக்குள் அடங்கி விடுகின்றன. டார்வின் பரிணாமவியல் போன்ற அறிவியல் கோட்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் அசட்டுக் கோட்பாடுகள் இவை என்று எண்ணுவதற்குமுன் யோசிக்க வேண்டும்.

டார்வினது பரிணாமவியல் எல்லைக்குட்பட்டது என்று இன்று அறிவியலாளர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பரிணாமவியல் அந்தந்த இனத்துக்குள்ளே நிகழ்கிறது. அதன்படி, பாக்டீரியாக்களின் பரிணாமம், பாக்டீரியா இனத்துக்குள் நடக்கிறது. பறவை இனப் பரிணாமம், பறவை இனங்களுக்குள்ளே நடக்கிறது. வேத மதம் கூறுவது நால்வகை அடிப்படை வகைகள். அவ்வவற்றுக்குள்ளே பரிணாம வளர்ச்சியும், மாற்றமும் நடக்க முடியும். வகைகளைத் தாண்டி, வேறு வகையுடன் கூடி அல்லது மாறுபாடு அடைந்து புது வகை உருவாக முடியாது. அப்படி நடந்த ஆராய்ச்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

உருளைக் கிழங்கையும், எருமை மாட்டையும் இணைத்து ஒரு ஆராய்ச்சி முன்பு நடந்தது. (வேத மதக் கோட்பாட்டின்படி இவை இரண்டும் வேறு வேறு வகையைச் சேர்ந்தவை). அதன் பயனாக உருளைக் கிழங்கின் சதைப் பற்றுடன் கூடிய எருமையை உருவாக்க முடிந்தது. அல்லது எருமைத் தோலுடன் கூடிய உருளைக் கிழங்கை உருவாக்க முடிந்தது. பரிணாமம் என்று ஒரு புது வகையை உருவாகக் முடியவில்லை.

பிரபஞ்சத்தில் எங்கு தேடினாலும் வேத மதம் கூறும் இந்த நான்கு வகைக்குள்தான் உயிர்கள் அடங்கும். பூமியின் ஆழத்தில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகளில் இருக்கும் நுண்ணுயிர்களும், வளி மண்டலத்தில் புழங்கும் நுண்ணுயிர்களும், தலை முடி அழுக்கில் தோன்றும் பேனும் ஒரே வகையைச் சேர்ந்தவை. அவை ஈரம், அல்லது கசகசப்பு இருந்தாலே போதும், தோன்றி விடும். மற்ற உயிர்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவை உண்டாக நீருடன், நிலமும் காற்றும் வேண்டும்.

இவை தேவை அல்ல; ஸ்டீபன் ஹாகிங் சமீபத்தில் கூறியுள்ளாரே, நட்சத்திரங்களின் மத்தியிலும் வேற்று கிரகவாசிகள் இருக்கலாமே என்று கேட்கலாம். நட்சத்திரங்களின் மத்தியில் வசிக்கும் உயிரினத்தைப் பற்றி வேத மதமும் கூறுகிறது! அந்த உயிரினம் தேவன் என்னும் தெய்வம்! ஹாகிங் அவர்கள் தன்னை அறியாமலேயே வேத மதக் கருத்தைக் கூறியுள்ளார். ஒவ்வொரு தேவனும் ‘நக்ஷத்ராணி ரூபம்’ என்று நட்சத்திர ரூபத்தில் உள்ளான் என்பது வேத வாக்கு.

நமக்கு அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனில் இருப்பவனும் தேவன் எனப்படும் தெய்வமே என்கிறது வேத மதம். அவனை அடைய ‘மது வித்தை’ என்னும் உபாசனையை மேற்கொள்ள வேண்டும். (பிரம்ம சூத்திரம் 1-3- 30, 31 & 32). அவன் பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு உயிரினம். ஐம்பொறிகளால் பார்க்க முடியாத உயிரினம். அவனை அறிய, அல்லது அடைய மனத்தின் பரிணாம வளர்ச்சியால்தான் முடியும். புறப்பொருள் பரிணாமத்தால் அல்லது பௌதிக உபகரணங்களால் அல்ல. சூரியதேவ உபாசகர்கள், சூரிய கிரகணத்தின் போது, அக்னி குண்டம் மூட்டி அதில் தன்னையே அர்ப்பணித்து சூரிய மண்டலத்தில் இருக்கும் புருஷனை அடைவர் என்று சொல்லப்படும் கருத்தை ஊர்ஜித்தப்படுத்தும் வண்ணம், கர்நாடகத்தின் பல பகுதிகளில் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஆக, வெளியுலக வாசிகள் என்றால் அவர்கள் தேவ வடிவினர் என்பது வேத மதக் கருத்து. தேவர்கள் என்றால் அவர்கள் வகையில், பித்ருக்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வசுக்கள் என்று பல வகையினரும் அடங்குவர். அவர்கள் உடலை ஊனக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் அவர்களுக்கும் உடல் உண்டு.

உடல் கொண்டவை என்னும் அடிப்படையில் நான்கு வகைகளை வேத மதம் கூறுகிறது. அவை தேவன், மனிதன், விலங்குகள், தாவரங்கள். தேவ வகையினர் வாழ பஞ்ச பூதங்கள் தேவையில்லை. மற்ற வகையினருக்கு பஞ்ச பூதங்கள் தேவை. மற்ற மூன்று வகையினரும், மேற்சொன்ன நான்கு வகை உயிர்களாகப் பிறக்கின்றன.

யக்ஞ ரூபமான மனிதப் பிறப்பு

மனிதன் ஐந்து அக்னிகள் மூலமாகப் பிறக்கிறான். இதைப் பஞ்சாக்னி வித்தை என்பர். (சந்தோக்ய உபநிஷத் – 5- 4 – 1 முதல் 5 -8 – 2 வரை மற்றும் பிரம்ம சூத்திரம் 3 -1- 22 முதல் 27 வரை.) மனிதப் பிறப்பும் யஞ்ய வழியைச் சேர்ந்தது. ஒன்றிலிருந்து ஒன்றாக அர்ப்பணிக்கப்பட்டு மனிதன் பிறக்கிறான். தன் கர்ம வினைகளுக்கு ஏற்ப, சரீரத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க, பிறப்பெடுக்கத் தயாராகும் ஜீவன் அப்படியே கருப்பைக்குள் நுழைய முடியாது. அது வரும் பாதை ஐந்து அக்னிகள் வாயிலான ஹோமத்தின் அர்ப்பணிப்பு போன்றது.

முதல் அக்னி மழை. நெருப்பை அணைக்கும் சக்தி மழைக்கு (நீருக்கு) இருப்பதால், அந்த நெருப்பை உள்வாங்கி அதை அணைப்பதால் நீரும் அக்னி என்ப்படுகிறது. பிறக்கத் தயாராகும் ஜீவன் மழையோடு கலந்து பூமியில் விழுகிறது.
இரண்டாவது அக்னி பூமி. உஷ்ணத்தை உள்வாங்கிக் கொள்வதால் பூமியும் ஒரு அக்னி. மழை மூலமாக வந்த ஜீவன் பூமிக்குள் செல்கிறது.
பூமிக்குள் சென்ற ஜீவன் செடிக்குள் நுழைகிறான். செடி மூன்றாவது அக்னி. அதனுள் இடைவிடாது செயலாக்கம் நடந்து கொண்டிருப்பதால் அது உஷ்ணத்துடன் இருக்கிறது. எனவே அதுவும் அக்னி எனப்படுகிறது. செடியின் வேர் வாயிலாக நுழையும் ஜீவன் அந்தச் செடியின் காய் அல்லது கனியில் நிலை கொள்கிறான்.
பூமிக்குள் வரும் வரை ஜீவனால் திரும்பிச் செல்ல முடியும். பிறப்பெடுப்பது ஜீவனது விருப்பம் மற்றும் ஒத்துழைப்புடன்தான் நடக்கிறது. கர்மவினையை அனுபவிக்கப் பிறக்கத் தயாராகும் ஜீவனே இப்படி இறங்கி வருகிறது. செடி என்னும் மூன்றாவது அக்னியில் நுழைந்தவுடன், அந்த ஜீவனால் திரும்பிச் செல்லுதல் முடியாது. பாதைக்குள் நுழைந்தாகிவிட்ட நிலை. பயணத்தைத் தொடர்ந்துதான் ஆகவேண்டும்.
ஜீவன் நிலை பெற்ற காய் அல்லது கனியை உண்ணும் ஆண் நான்காவது அக்னி. அவனது உணவுக் குழாய் மூலமாகச் சென்று அவனது விந்தில் அந்த ஜீவன் நிலைபெறுகிறது. அப்படி அது விந்தில் இருக்கும் காலம் இரண்டு மாதங்கள். இது வரை வந்த எந்த நிலையிலும் ஜீவனுக்கு இன்ப துன்பம் என்னும் எந்த அனுபவமும் கிடையாது.
அந்த ஆணிலிருந்து பெண்ணின் கருப்பைக்கு விந்து செல்கிறது. அந்தப் பெண் ஐந்தாவது அக்னி. கர்ப்பத்தில் நுழைந்த நொடியில் ஜீவன் பிறந்தவனாகிறான். ஆகவே உயிர் என்பது கரு உண்டான நேரத்தில் உண்டாவது. அங்கேயே அதன் கர்ம வினைப்படியான இன்ப துன்பங்கள் ஆரம்பிக்கின்றன

சில மணி நேரக் கருவைக் கொல்வதும் சிசுஹத்திதான். கருச்சிதைவு செய்தல் என்பதும் சிசுஹத்திதான்.

இதில் தெரியும் மற்றொரு உண்மை, கருத் தரித்தல் என்பது எதேச்சையானது அல்ல, எதிர்பாராதவிதமாக அமைவதும் அல்ல. ஒரு கரு உருவாவதற்கு முன் இரண்டு மாதங்கள் அந்த ஜீவன் தந்தை உடலில் இருக்கிறது. அதற்கு முன் மூன்று அக்னி வாயிலாகவும் இறங்கி வர கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே ஒவ்வொரு பிறப்பும் திட்டமிட்ட பிறப்பே.

ஆனால் பிறப்பு என்பது ஒரு ஜீவனுக்கு மூன்று விதமாக அமைகிறது என்று ஐதரேய உபநிஷத் (2-3 & 4) கூறுகிறது. தந்தையிடமிருந்து தாயிடம் புகுந்தது முதல் பிறப்பு. தாயிடமிருந்து உலகில் பிறந்தது இரண்டாவது பிறப்பு. இறக்கும் பொழுது மற்றொரு இடத்தில் பிறப்பதால், அந்த உலகில் பிறப்பது மூன்றாவது பிறப்பு.

இதில் முதல் இரண்டு பிறப்பும் எடுத்துக் கொள்ளும் காலம் = தந்தை உடலில் 2 மாதங்கள் + தாய் உடலில் 10 மாதங்கள். இதில் தந்தை உடலில் செல்லாமல் தாயின் உடலில் முழு காலமும் இருந்ததால், ராமனும் அவன் சகோதரர்களும் கர்ப்பத்தில் இருந்த காலம் 12 மாதங்கள். அவர்கள் பஞ்சாக்னியில் முதல் மூன்று அக்னி வாயிலாக வரவில்லை.

அதே போல கடைசி அக்னியையும் தவிர்த்து பிறப்புகள் நிகழலாம் என்று வேத மதம் கூறுகிறது. (பிரம்ம சூத்திரம் 3 – 1 – 19 ) மனிதர்களுள் அப்படிப் பிறந்தவர்கள் துரோணர், திரௌபதி, திருஷ்டத்யும்னன் போன்றோர். அவர்கள் ஐந்தாம் அக்னியான தாய் மூலமாகப் பிறக்கவில்லை. Parthenogenesis என்னும் முறையில், ஐந்தாவது அக்னி இல்லாமல் கருவில் தோன்றும் விலங்கு உயிரினங்கள் உள்ளன. பொதுவாக கருவில் தோன்றும் உயிரினங்கள் பஞ்சாக்னி முறையில் தோன்றுபவையே.

ஐந்தாவது அக்னி இல்லாமல் தோன்றும் பிறப்பு cloning முறையில் நிகழ்வதையும் காணலாம். தாயின் கருவை எடுத்துக் கொள்ளாமல் பிறப்பது ஐந்தாவது அக்னியைத் தவிர்த்துப் பிறப்பதற்கு ஒப்பாகும்.

இப்படி நிகழும் பிறப்பும், யஞ்ய ரூபமாக, அவிப்பொருளை அர்ப்பணிப்பதைப் போல அர்ப்பணிக்கப்பட்டு பிறக்கிறது. அப்படிப் பிறக்கும் சரீரமும் ஒரு ஹோம குண்டத்துக்கு ஒப்பாகும் என்று வேத மதம் கூறுகிறது. ‘அக்னயோஹ்யத்ர ச்ரியந்தே’ என்று கர்ப்ப உபநிஷத் கூறுகிறது. ஞானாக்னி, தர்சனாக்னி, கோஷ்டாக்னி என்னும் அக்னிகள் இதை ஆச்ரயித்து இருப்பதால், இது சரீரம் என்னும் பெயர் பெற்றது என்கிறது இந்த உபநிஷத். உண்ணும் உணவு பக்குவப் படுத்தப்படுவது முதல், அறிவு பட்டை தீட்டப்படுவது வரை, நம் உடலில் பல அக்னிகளால் இடைவிடாது யாகம் நடத்தப்படுகிறது என்கிறது இந்த உபநிஷத்.

@ Arun Pravin,

//மத மாற்றதிம் மற்றொரு முகமே இந்த கட்டுரை ... உலகில் முதல் மனிதன் தமிழன் என்பதில் மாற்று கருத்து இல்லை அவன் பெயர் ஆடம் என்றும் அவனை பற்றி விவிலியம் என்னும் நூலில் வாயிலாக அறிய முற்படுவதும் மிக பேரும் நகைச்சுவை ...//


நண்பருக்கு மீண்டும் வணக்கங்கள்...மத மாற்றம் என்றால் என்னவென்று சிறிது விளக்க முடியுமா? அவ்வாறே நான் மக்களை என்னுடைய பதிவினில் எங்காவது ஏதாவது குறிப்பிட்ட சமயத்திற்கு மாறுங்கள் என்று கூறி இருக்கின்றேனா என்று நீங்கள் கண்டுக் கூறினாலும் நலமாக இருக்கும்... அவ்வாறு இல்லாது வெறுமனவே மதம் மாற்றம் என்ற முத்திரைக் குத்துவது எவ்வகையிலும் பொருந்தாது.

உலகின் முதல் மனிதன் தமிழன் மற்றும் முதல் மொழி தமிழ் என்பது பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் முடிவாகவே இருக்கின்றது. மேலும் ஆதன், ஆதி மனிதன் என்ற சொல் சுமேரிய இலக்கியங்கள், பாபிலோனிய இலக்கியங்கள் போன்றவைகளிலும் காணப்படுகின்றன . எனவே இது ஒரு நூலினை வைத்து மட்டுமே எழுதப்பட்ட கட்டுரைகள் அல்ல. அதாவது விவிலியத்தினைப் பற்றி பேசினால் அவன் கிருத்துவன், சிவன் என்றால் சைவன், பெருமாள் என்றால் வைணவன் என்ற குறுகிய எண்ண ஓட்டத்தினைக் கொண்டு எழுதப்பட்டதல்ல இந்த பதிவுகள்.

உலகப் படைப்பினைப் பற்றி இதோ சிவஞானபோதத்தின் கருத்து...

அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையில்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துள தாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

இதோ உங்கள் வேல்வியினைப் பற்றிய சிவவாக்கியாரின் கருத்து,
இட்ட குண்டம் ஏதடா !
இருக்கு வேதம் ஏதடா ?
சுட்ட மட்க லத்திலே
சுற்று நூல தேதடா ?
முட்டி நின்ற தூணிலே
முளைத்தெ ழுந்த சோதியைப்
பற்றி நின்ற தேதடா ?
பட்ட நாத பட்டனே ! ( பாடல் 306 )

சரி... எனது பதிவுகளை தொடர்ந்து படிக்கின்றீர்கள் என்றே அறிகின்றேன்... அதில் பல கேள்விகளும் கேட்டு இருக்கின்றேன்... அதற்கு விடை அளித்தால் மிக்க நலமாக இருக்கும்...அவற்றில் சில கேள்விகள் உங்களுக்காக,

௧) வேதங்களில் பலியான கடவுளர் பற்றி வருவதன் காரணம் என்ன?
௨) வேதங்களும் வேதாந்தங்களும் சமசுகிருததிலேயே இருக்கின்றன...அவ்வாறு இருக்க மகாயான புத்த சமய நூல்களும் சமசுகிருதத்தில் இருக்க வேண்டியக் காரணம் என்ன?
௩) கி.பி ஏழாம் நூற்றாண்டில் வடக்கே அதுவரை படை எடுத்து இருந்த சகர்கள், ஹுன்னேர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தாங்கள் அக்னி குண்டத்தில் இருந்து மறு பிறப்பு எடுத்ததாகக் கூறிக் கொண்டு தங்களை 'இரு பிறப்பாளர்கள்' என்று அழைத்துக் கொண்டு பெர்சிய முறைப்படி பூணூல் அணிந்துக் கொண்டது ஏன் என்று தெரியுமா? அவர்கள் அவ்வாறு அமைத்தது தான் ஆரியவர்த்தம் என்பதும் தெரியுமா?
௪) ஏன் பிள்ளையார் என்றக் கடவுள் கி.பி நூற்றாண்டுகளிலேயே காணப்படுகின்றார் என்று தெரியுமா?
௫) வேதங்களில் சிவனும் பெருமாளும் காணப்படவே இல்லையே.. பின் எவ்வாறு வேதங்களில் இருந்து தான் சைவமும் வைணவமும் தோன்றிற்று என்று கூறுகின்றீர்?

மேலும் பல கேள்விகள் இருக்கின்றன நண்பரே...அவைகள் எனது சந்தேகங்களே...தீர்த்து வைத்தால் நலமாக இருக்கும்...

மேலும் இதோ விவிலியத்தில் உள்ள ஒரு கருத்தும் நமது திருமூலரின் கருத்தும் ஒன்றை போலவே இருக்கின்றதே...

19. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? - I கொரிந்தியர் 6

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. - திருமந்திரம்

//ஆறாவது ஊழிக் காலத்தில் அவரின் சாயலிலேயே மனிதனைப் படைக்கிறார்.//

மனிதனை அவருடைய சாயலிலே படைக்கிறார்(ஆதாமை), மனுசியை யாருடைய சாயலில் படைக்கிறார்?...

//மேலும் இதோ விவிலியத்தில் உள்ள ஒரு கருத்தும் நமது திருமூலரின் கருத்தும் ஒன்றை போலவே இருக்கின்றதே...

19. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? - I கொரிந்தியர் 6//

இது மட்டும் தான் பவுலுக்கு தெரிந்ததா?

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

என்று சிவபெருமானை பற்றி பாடியது தெரியவில்லையா?

//உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. - திருமந்திரம்//

இது சிவபெருமானை குறிப்பது இயேசுவை அல்ல...

//௧) வேதங்களில் பலியான கடவுளர் பற்றி வருவதன் காரணம் என்ன?//

இப்படி பாபிலோனிய மற்றும் சுமேரியன் புராணங்களிலும் உண்டு (இயேசு பிறப்பதற்கு முன்னரே) என்பதை மறவாதீர்...

////ஆறாவது ஊழிக் காலத்தில் அவரின் சாயலிலேயே மனிதனைப் படைக்கிறார்.//

மனிதனை அவருடைய சாயலிலே படைக்கிறார்(ஆதாமை), மனுசியை யாருடைய சாயலில் படைக்கிறார்?...//

//அம்மையே அப்பா ஒப்பிலா மணியே// - இது மாணிக்கவாசகரின் கூற்று. இதில் இறைவன் அம்மாவாகவும் இருக்கின்றான் அப்பாவாகவும் இருக்கின்றான் என்கின்றார்.

//விண்ணோர் பெருமானை வீரட்டனை
வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்
பெண்ணானை ஆணானைப் பேடி யானைப்//

மேலும் இந்தப் பாடலில் சிவன் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருக்கின்றான் என்கின்றனர். அவ்வாறு மூன்றாகவும் இருக்கக் கூடிய இறைவன் அவன் உருவிலே பெண்ணைப் படைக்க முடியாதா என்ன?

மேலும் நண்பரே...இன்று இருக்கும் யாதொரு சமய நூல்களும், அவை எந்தளவு புனிதமாகக் கருதப்பட்டாலும் கூட, அவை இறைவனால் எழுதப்பட்டவை அல்ல. மனிதரால் எழுதப்பட்டவையே. எனவே அவை மனிதர்களின் எழுத்து நடைக்கேற்பவே எழுதப்பட்டு இருக்கும். அது எந்த சமயத்தினைச் சார்ந்த நூல்களாக இருந்தாலும் கூட அதுவே உண்மையான நிலை.

மேலும் பழைய ஏற்பாடு என்பது ஒரு தொகுக்கப்பட்ட நூலே ஆகும்...உலகத் தொடக்கதினைப் பற்றிய விவரங்களும், பெரு வெள்ளத்தினைப் பற்றிய விவரங்களும் சுமேரிய இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன...காரணம் அவர்கள் குமரிக்கண்ட அழிவில் இருந்து பிழைத்து சென்ற மனிதர்கள் என்பதினால் வெள்ளத்தினைப் பற்றியக் கதைகள் அங்கே சென்று உள்ளன...அந்த செய்திகளே தான் பின்னர் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. அந்த செய்திகளில் வரலாறு இருக்கின்றது...ஆனால் அதில் இருப்பது மட்டுமே வரலாறு...புனித செய்திகள் என்று யார் எண்ணினாலும் அது சரியான பாதையினையோ அல்லது பதிலினையோ நல்காது!!!

//இப்படி பாபிலோனிய மற்றும் சுமேரியன் புராணங்களிலும் உண்டு (இயேசு பிறப்பதற்கு முன்னரே) என்பதை மறவாதீர்...//

பல்வேறு கடவுள்களுள் சண்டைகள்...அவற்றில் சில கடவுள்கள் இறப்பது போன்ற புராணங்கள் மனிதகுல வரலாறு முழுவதும் காணப்படுகின்றன. அவை குலதெய்வ வழிபாடுகள்...எகிப்திற்கு சில கடவுள்கள், சுமேரியர்களுக்கு சில கடவுள்கள், பாபிலோனியர்களுக்கு சில கடவுள்கள்... என்று இனத்திற்கு இனம் கடவுள்களினைக் கொண்டு இருந்தனர். அவர்களுள் போர்கள்...அவர்கள் இறப்பது என்று கதைகளும் இருக்கத் தான் செய்கின்றன.

ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம், இயேசு கொல்லப்படவில்லை...மாறாக அவர் பலியானார்.

கொல்லப்படுவதற்கும் பலியாவதற்கும் வித்தியாசங்கள் அநேகம் இருக்கின்றன.

இறைவன் மக்களுக்காக உலகினில் பிறந்து வந்து அவர்களின் பாவம் தீர்க்க பலியானார் என்பதே இயேசுவின் வரலாறு.

//இது மட்டும் தான் பவுலுக்கு தெரிந்ததா?

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

என்று சிவபெருமானை பற்றி பாடியது தெரியவில்லையா?//

:) நண்பரே சிவன் என்ற சொல் சங்க இலக்கியங்களிலோ அல்லது கி.மு காலத்து இலக்கியங்களிலோ காணப்படவே இல்லை. அவ்வாறு இருக்க அக்காலத்தில் சிவன் என்னும் இறைவன் இல்லவே இல்லை என்று கூறிவிடுவீர்களா... இறைவன் உலகத்தை படைத்ததற்கு முன்னர் இருந்தும் இருக்கின்றான்...உலகம் அழிந்தாலும் இருப்பான்...அப்படி இருப்பவனை வெறும் பெயரில் அடைக்கின்றீர்களே.

“ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமே”

என்று மாணிக்கவாசகர் கூறி இருக்கின்றார். அப்படிப்பட்ட இறைவனை வெறும் ஒரு உருவம், ஒரு பெயர் போன்றவற்றுள் அடைத்து இவன் தான் இறைவன் என்று நீங்கள் வழங்கினீர்கள் என்றால், அதனைப் போல் பல உருவங்கள், பல பெயர்கள் போன்ற பலவற்றுள் அவனை அடக்கி ஒவ்வொருவரும் வழங்க முடியும். அவ்வாறு வழங்கினால் எந்த இறைவன் உண்மையான இறைவன் என்று தாங்கள் கூறுவீர்கள்?

எல்லாம் ஒருவன் தானே. எனவே பெயர், உருவம் போன்றவற்றைத் தவிர்த்து குணத்தினைப் பார்த்தீர்கள் என்றால் இறைவனைப் பல்வேறாக பிரிக்க முடியாது.

ஒரே இறைவன்...ஒரே குணம்...அன்பு!!!

அன்பினைப் பற்றி சவுலும் கூறி இருக்கின்றார்!!! :)

மேலும் சவுலின் காலம் என்பது திருமூலரின் காலத்திற்கு 1000 ஆண்டுகள் முந்தியக் காலம் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஆனால் அதனால் யாதொரு வித்தியாசமும் அல்ல. சவுலும் இறைத் தூதர், திருமூலரும் இறைத் தூதர். ஒரே இறைவனின் பல்வேறு தூதர்களுள் அவர்கள் சிலராவர். அவ்வளவே!!!

////உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. - திருமந்திரம்//

இது சிவபெருமானை குறிப்பது இயேசுவை அல்ல...//

இது சிவபெருமானைக் குறிப்பதும் அல்ல இயேசுவைக் குறிப்பதும் அல்ல... இறைவனின் சக்தியாகிய பரிசுத்த ஆவியினைக் குறிப்பது. இதனைப் பற்றி விரிவாக பின்னர் விளக்க முயல்கின்றேன் நண்பரே!!!

//மேலும் இந்தப் பாடலில் சிவன் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருக்கின்றான் என்கின்றனர். அவ்வாறு மூன்றாகவும் இருக்கக் கூடிய இறைவன் அவன் உருவிலே பெண்ணைப் படைக்க முடியாதா என்ன?//

சிவன் இறைவனா?

//௫) வேதங்களில் சிவனும் பெருமாளும் காணப்படவே இல்லையே..//

வேதங்களில் காணப்படாத சிவனை எப்படி நீங்கள் ஆதாரமாக காட்டலாம்...

//கொல்லப்படுவதற்கும் பலியாவதற்கும் வித்தியாசங்கள் அநேகம் இருக்கின்றன.//

இதை நீங்கள் சற்று விளக்கினால் நான் விவிலியத்தில் இருந்து பதில் அளிப்பேன்...

பாபிலோனியர்கள், சுமேரியர்கள், கிரேக்கர்கள் மற்றும் புத்த மத புராணங்களில் கடவுள் பலி ஆகி மீண்டும் உயிர்த்தெழுதல் பற்றி உள்ளன (இயேசு பிறப்பதற்கு முன்னரே)

////௫) வேதங்களில் சிவனும் பெருமாளும் காணப்படவே இல்லையே..//

வேதங்களில் காணப்படாத சிவனை எப்படி நீங்கள் ஆதாரமாக காட்டலாம்...//

வணக்கங்கள் நண்பரே...

வேதங்களில் கடவுள் இல்லை என்றும் அவைகளுக்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே எனது கூற்று. எனவே கடவுளை இன்று வேதங்கள் என்று வழங்கப்படும் நூல்களில் தேடுவது அறியாத ஒரு செயலே ஆகும். எனவே சிவன் வேதங்களில் இல்லை என்பதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை.

உண்மையான சைவர்களும் வைணவர்களும் இன்று வேதங்கள் என்று வழங்கப்படுபவையை பொருட்படுத்தவே மாட்டார்கள். மாறாக வைதீகர்களே வேதங்களை தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவர். காரணம் அதில் அவர்களின் பழக்க வழக்கங்கள் இருக்கின்றது. அவ்வளவே.

//சிவன் இறைவனா?//

சரி சிவன் இறைவன் இல்லை என்றால் தாங்கள் இறைவன் என்று எவரைக் கூறுகின்றீர்கள்? தங்களின் இறைக் கொள்கை யாது என்று விளக்கினீர்கள் என்றாலும் நலமாக இருக்கும்...

//பாபிலோனியர்கள், சுமேரியர்கள், கிரேக்கர்கள் மற்றும் புத்த மத புராணங்களில் கடவுள் பலி ஆகி மீண்டும் உயிர்த்தெழுதல் பற்றி உள்ளன (இயேசு பிறப்பதற்கு முன்னரே)//

பாபிலோனியர்கள், சுமேரியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் புராணங்களில் இறைவன் மக்களுக்காக பலியான செய்தி இருக்கின்றதா...அச் செய்திகளைப் பற்றி சற்றுக் கூறினால் நலமாக இருக்கும்.

மற்றும் புத்தன் பலியான செய்தி புத்தத்தின் ஒரு பிரிவான மகாயான பௌத்ததில் மட்டுமே இருக்கின்றது. அந்த பிரிவு கிபி முதல் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டு உள்ளது. அதனைப் பற்றி நாம் விரிவாக வேறொரு பதிவில் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம்.

//
////ஆறாவது ஊழிக் காலத்தில் அவரின் சாயலிலேயே மனிதனைப் படைக்கிறார்.//

மனிதனை அவருடைய சாயலிலே படைக்கிறார்(ஆதாமை), மனுசியை யாருடைய சாயலில் படைக்கிறார்?...//

//அம்மையே அப்பா ஒப்பிலா மணியே// - இது மாணிக்கவாசகரின் கூற்று. இதில் இறைவன் அம்மாவாகவும் இருக்கின்றான் அப்பாவாகவும் இருக்கின்றான் என்கின்றார்.

//விண்ணோர் பெருமானை வீரட்டனை
வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்
பெண்ணானை ஆணானைப் பேடி யானைப்//

மேலும் இந்தப் பாடலில் சிவன் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருக்கின்றான் என்கின்றனர். அவ்வாறு மூன்றாகவும் இருக்கக் கூடிய இறைவன் அவன் உருவிலே பெண்ணைப் படைக்க முடியாதா என்ன? //

அப்போ சிவன் தான் உலகையும் மனிதன் மற்றும் மனுசியை படைத்தார் என்று சொல்கிறீர்களா?

//பாபிலோனியர்கள், சுமேரியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் புராணங்களில் இறைவன் மக்களுக்காக பலியான செய்தி இருக்கின்றதா...அச் செய்திகளைப் பற்றி சற்றுக் கூறினால் நலமாக இருக்கும்.//

சுமேரியர்களால் தமுசி என்றும், பாபிலோனியர்களால் தம்முஸ் என்றும் கிரேக்க மொழியில் அடோனிஸ் என்றும் அழைக்கப்பட்ட அவதார புருஷனின் கதை மிகவும் பிரபலமானது.
அந்த கதையை போலவே இயேசுவின் கதையும் உள்ளது பார்க்க: http://kalaiy.blogspot.nl/2012/10/blog-post_17.html

சிவனை பற்றி தெரிந்துகொள்ள:
http://kalaiy.blogspot.nl/2012/11/blog-post.html

இதில் ஒன்று மட்டும் புரியவில்லை ஐயா, குமரிகண்டம் கடல்கோளினால் அழிந்த பிறகு அதிலிருந்து தப்பித்த மனிதன் வந்து சேர்ந்த இடம் இலங்கை மற்றும் தமிழகம் பிறகு உலகம் முழுவதும் பயணித்தான் என்று சொல்கிறீர்கள், முதல் மனிதன் தப்பித்த கதை (பெரிய படகு தயார் செய்து) தமிழகத்திலும், இலங்கையிலும் இல்லாமல் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சுமேரியர் மற்றும் பாபிலோனியர் இலக்கியங்களில் இருப்பதற்கு காரணம்? தெரிந்தால் கூறுங்கள்...

வணக்கம் நண்பரே...

ஒரு மனிதனும் அவனுடைய குடும்பமும் மட்டுமே படகில் பிழைத்துச் சென்றனர் என்பது வெறும் கதை...!!! விவிலியத்தில் வெள்ளத்தில் இருந்து பிழைத்துச் சென்ற மனிதன் நோவா என்று அழைக்கப்படுகின்றான்...மேசொபோடோமிய இலக்கியமான 'கில்காமேசில்' வெள்ளத்தில் பிழைத்த மனிதன் ஊத் நா பிஸ்டிம் என்று அறியப்படுகின்றான். இதில் எது உண்மை? நோவா வா அல்லது ஊத் நா பிஸ்டிம் ஆ? இரண்டுக் கதைகளுமே உண்மையாக இருக்க உலகம் இரண்டுத் தடவை ஒரே மாதிரி அழிந்து இருக்கக் கூடுமா என்ன? இல்லை தானே.

குமரிக்கண்டம் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவையும் இந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் இணைத்துக் கொண்டு இருந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பாகவே அறியப்படுகின்றது. அப்படி இருக்கையில் மக்கள் அந்த நிலப்பரப்பில் பல இடங்களில் வசித்துக் கொண்டு தான் வந்து இருப்பர். ஒரே இடத்தில் அனைத்து மக்களும் இருந்து இருப்பார்கள் என்று நாம் கருத முடியாது. அவ்வாறு இருக்க, கடற் கோள்களால் குமரிக்கண்டம் மாபெரும் அழிவினைச் சந்திக்கும் பொழுது பல்வேறு இடங்களில் இருந்து வந்த மக்கள் பல்வேறு திசை நோக்கிச் சென்று இருப்பது இயல்பே. வடக்கிலே இருந்தவர்கள் வடக்கே நோக்கி சென்று இருக்கலாம்...மேற்கே இருந்த மக்கள் கடல் வழியாக படகுகளில் சென்று இருக்கலாம். அவ்வாறு கடல் வழியாக சென்ற மக்கள் மேற்கில் உள்ள இடங்களில் தங்க ஆரம்பித்த பொழுது, அவர்களின் உலகம் நீரினால் அழிந்தது என்றும் இறைவன் அவர்களைக் காப்பாற்றினார் என்றும் கதைகளைக் கூறி இருப்பர் தானே...கதைகள் காலப் போக்கில் மாறும் தன்மையினை உடையவைதானே. எனவே வெள்ளத்தில் இருந்து மக்கள் பிழைத்து வந்த கதையையே சுமேரிய மற்றும் மேசொபோடமிய இலக்கியங்களில் காணுகின்றோம். கடற்கோள்களில் ஒரு மனிதன் மட்டும் பிழைக்கவில்லை. பலர் பிழைத்து இருக்கின்றனர்.

இவையே நான் படித்துள்ள புத்தகங்கள் வாயிலாகவும், சில விவாதங்கள் வாயிலாகவும் அறிந்துக் கொண்டுள்ள விடயமாகும்.

இன்னும் இந்தப் பகுதியில் ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றன...சில கருத்துக்கள் குமரிக்கண்டம் ஒரே அடியாக அழியாது, பல கடற்கோள்களால் பல்வேறு காலத்தில் அழிந்தது என்றும் கூறுகின்றன. ஆராய்ச்சிகள் தேவைப் படத்தான் செய்கின்றன.

ஐயா நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருந்தாலும் பரவாஇல்லை ஆனால் தவறாகவோ அல்லது தேவை இல்லாத கருத்துக்களோ கூற வேண்டாம்...
குமரிகண்டம் கடல்கோளினால் அழிந்த பிறகு அதிலிருந்து தப்பித்த மனிதன் தமிழன் சரிதானே?
சரி தமிழன்(நோவா-ஏற்கனவே நோவா தமிழ் பெயர் என்று நிரூபித்து உள்ளீர்கள்) தப்பித்த கதை (பெரிய படகு தயார் செய்து) தமிழகத்தில் இல்லாமல் நீங்கள் சொல்வது போல் சுமேரியர் இலக்கியங்களிலும் மற்றும் மேசொபோடோமிய இலக்கியங்களிலும் உள்ளது. அதே கதை தமிழகத்தில் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? இது தான் என் கேள்வி...

//ஒரு மனிதனும் அவனுடைய குடும்பமும் மட்டுமே படகில் பிழைத்துச் சென்றனர் என்பது வெறும் கதை...!!!//

அப்போ விவிலியத்தில் எழுதப்பட்டிருப்பது நிஜமல்ல வெறும் கதை என்கிறீர்களா?

சரி அந்த கடல்கோளினால் நிறைய மனிதர்கள் பிழைத்திருப்பார்கள் என்பது சரி தானே?

//விவிலியத்தில் வெள்ளத்தில் இருந்து பிழைத்துச் சென்ற மனிதன் நோவா என்று அழைக்கப்படுகின்றான்...மேசொபோடோமிய இலக்கியமான 'கில்காமேசில்' வெள்ளத்தில் பிழைத்த மனிதன் ஊத் நா பிஸ்டிம் என்று அறியப்படுகின்றான். இதில் எது உண்மை? நோவா வா அல்லது ஊத் நா பிஸ்டிம் ஆ? இரண்டுக் கதைகளுமே உண்மையாக இருக்க உலகம் இரண்டுத் தடவை ஒரே மாதிரி அழிந்து இருக்கக் கூடுமா என்ன? இல்லை தானே.//

எல்லாம் ஒரே கதை தான் நான் இல்லை என்று சொல்லவில்லை. சரி அந்த கதை பழம்பெரும் இலக்கியங்கள் படைத்த தமிழ் மொழியில் ஏன் காணப்படவில்லை இது தான் என் கேள்வி...

//ஐயா நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருந்தாலும் பரவாஇல்லை ஆனால் தவறாகவோ அல்லது தேவை இல்லாத கருத்துக்களோ கூற வேண்டாம்...//

நண்பரே...தேவை இல்லாத கருத்துகளையோ அல்லது தவறான கருத்துகளையோ வேண்டுமென்றே தர வேண்டும் என்பது எனது நோக்கம் கிடையாது...அவ்வாறு கூறுவது எவருக்கும் எவ்வித பலனையும் தராது. நான் உங்களின் கேள்வியினை 'ஏன் சுமேரிய இலக்கியங்களில் வெள்ளத்தில் இருந்து மனிதன் பிழைத்து வந்தது போன்ற செய்திகள் காணப்படுகின்றன...?' என்ற அர்த்தத்திலேயே புரிந்துக் கொண்டேன்... அதனால் தான் ஏன் சுமேரிய இலக்கியங்களில் அந்தக் கதைகள் காணப்படுகின்றன என்பதற்கு நான் அறிந்தக் காரணங்களைக் கூறினேன்.

//குமரிகண்டம் கடல்கோளினால் அழிந்த பிறகு அதிலிருந்து தப்பித்த மனிதன் தமிழன் சரிதானே?//
ஆம்.

//சரி தமிழன்(நோவா-ஏற்கனவே நோவா தமிழ் பெயர் என்று நிரூபித்து உள்ளீர்கள்) தப்பித்த கதை (பெரிய படகு தயார் செய்து) தமிழகத்தில் இல்லாமல் நீங்கள் சொல்வது போல் சுமேரியர் இலக்கியங்களிலும் மற்றும் மேசொபோடோமிய இலக்கியங்களிலும் உள்ளது. அதே கதை தமிழகத்தில் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? இது தான் என் கேள்வி...//

சரி இப்பொழுது நாம் ஒரு விடயத்தினை கற்பனை செய்துக் கொள்வோம். எழுத்துக்களை பத்திரமாக வைத்துக் கொள்வதனை கண்டுப்பிடிக்காத காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றோம். மேலும் இன்று இருப்பது போன்று போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலம் அது. நீங்கள் கடற்கரை ஓரப் பகுதியில் வாழ்கின்றீர்....நான் கடலில் இருந்து தொலை தூரம் உள்ளப் பகுதியில் வாழ்கின்றேன். இப்பொழுது நாம் இருக்கும் இடத்தில் மாபெரும் வெள்ளம் வருகின்றது. அந்நிலையில் நாம் என்ன செய்வோம்? கடல் ஓரத்தில் இருப்பவர்கள் படகில் ஏறி பிழைக்கப் பார்ப்பார்கள்...கடலில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் மக்கள் இன்னும் மேடான இடங்களுக்குச் செல்லப் பார்ப்போம். சரி தானே. இப்பொழுது அவ்வாறு பிழைத்த இருவரும் எவ்வாறு அந்த நிகழ்வை நினைவிற் கொள்வர்...

கடலில் இருந்து படகில் பிழைத்த மக்கள் - கடலால் நாடு அழிந்தது. நாங்கள் படகில் தப்பினோம். இறைவனுக்கு நன்றி என்று கூறி இருப்பர்.
மேடான இடங்களுக்கு சென்று பிழைத்த மக்கள் - கடலால் நாடு அழிந்தது...நாங்கள் அதில் இருந்து பிழைத்து எங்களின் நாடுகளை மீண்டும் அமைத்துக் கொண்டோம் என்று தானே கூறி இருப்பர்.

ஒரு நிகழ்வு... இரு வேறு பார்வைகள். இன்றும் கூட இவ்வாறு இருக்கத் தானே நண்பரே செய்கின்றது. இது தானே இயல்பு. பின்னர் காலங்களில் எழுத்தினை பக்குவமாய் பாதுகாத்து வைக்கும் முறையினைக் கண்டுப்பிடித்ததும் இந்தச் செய்திகளை கதையாக தொகுத்து இருப்பர். ஆனால் அதற்குள் அந்தக் கதை எந்த மாற்றங்களைக் கண்டதோ?...

எனவே வெள்ளக் கதைகள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

தமிழகத்தில் உள்ள கருத்துகளின் படி வெள்ளத்தில் பாண்டியனின் நகரங்கள் அழிய அழிய அவன் மேலே வந்து இறுதியாக கட்டிய நகரம் தான் இன்றைய மதுரை என்று இருக்கின்றது.

மேலும் "தமிழகத்தில் வெள்ளம் வருவதைப் பாண்டியன் சத்தியவிரதன் என்னும் மன்னனிடம் ஒரு மீன் கூறி அவனையும் அவன் உறவினரையும் ஒரு தோணியில் ஏற்றி, தன் கொம்பால் பொதியமலை மீது சேர்த்ததாகக் கூறப்படுகின்றது" என்றே இராகவன் என்ற ஆய்வாளர் கோ நகர் கொற்கை என்னும் நூலில் கூறி இருக்கின்றார்.

எனவே வெள்ளக் கதைகள் தமிழகத்தில் இருக்கின்றன.

இன்னொரு விடயம், சுமேரிய வெள்ளக் கதைகள் நீண்ட ஆராய்ச்சிகளின் பின்னரே கண்டு எடுக்கப்பட்டு அறியப்பட்டு உள்ளன. அங்கே ஆராய்சிகள் செய்யப்படாது இருந்தால் அக்கதைகள் இன்று வெளியிலே வந்தே இருக்காது.
அதே போல் தான் தமிழகத்திலும், இதுவரை கிடைத்துள்ள ஆயிரக்கணக்கான ஓலைச் சுவடிகளையும், கல்வெட்டுக்களையுமே இன்னும் படித்த பாடில்லை நாம். அரசாங்கம் அவற்றை யாரும் படித்து விடக் கூடாது என்ற நிலையில் தெளிவாக இருக்கின்றது. அப்படி இருக்க புதிதாய் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஆராய்வது என்பது இப்பொழுது வரை பகற்கனவே...எனவே அதனை எல்லாம் செய்து முடிக்காது உண்மை என்ன என்பதனை நாம் அறிந்துக் கொள்வது கடினமே.

//அப்போ விவிலியத்தில் எழுதப்பட்டிருப்பது நிஜமல்ல வெறும் கதை என்கிறீர்களா?//
விவிலியம் என்றால் முதலில் என்ன என்று தாங்கள் கூறினீர்கள் என்றால் இக்கேள்விக்கு நான் விடையினைக் கூற எனக்கு எளிதாக இருக்கும். ஏனென்றால் தங்களின் சிந்தனை ஓட்டத்தினைப் பற்றி என்னால் கணிக்க முடியவில்லை. மீண்டும் ஒரு முறை உங்களின் கேள்வியினை தவறாகப் புரிந்துக் கொண்டு தவறாக விடையளிக்க எனக்கு மனமில்லை. எனவே உங்களின் கருத்து யாது? எதைத் தாங்கள் சரி என்றுக் கூறுகின்றீர்கள் என்று கூறினீர்கள் என்றால் எனக்கும் விடை அளிக்க எதாக இருக்கும்.

நன்றி!!!

//விவிலியம் என்றால் முதலில் என்ன என்று தாங்கள் கூறினீர்கள் என்றால் இக்கேள்விக்கு நான் விடையினைக் கூற எனக்கு எளிதாக இருக்கும்.//

விவிலியம் என்பது இஸ்ரேல் மக்களின் வரலாறு அவ்வளவே. விவிலியம் (பைபிள்) நூலை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள் இஸ்ரேல் தேசத்தை ஆண்டவன் தேசமாகவும் எகிப்து தேசத்தை அந்நிய தேசமாகவும் சித்தரித்திருப்பார்கள். அது மட்டுமா, இஸ்ரேல் ஜனங்கள் மட்டும் நல்லவர்களாகவும் மற்றவர்களை கெட்டவர்களாகவும் சித்தரித்திருப்பார்கள். இன்று நடைபெறும் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சனையே அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. விவிலியத்தில் ஆயிரக்கணக்கான வசனங்கள் "இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்" என்று குறிப்பிட காரணம்? மற்ற தேசத்தில் இருப்பவர்களுக்கு அவர் கர்த்தர் இல்லையா?

//விவிலியம் என்பது இஸ்ரேல் மக்களின் வரலாறு அவ்வளவே.//

அட... இதத் தானுங்க நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன் மொதல இருந்து ...பழைய ஏற்பாடு என்பது யூத சமய நூல்...அதில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை. கிருத்துவர்கள் பழைய ஏற்பாட்டினை தூக்கிக் கொண்டு அலைய வேண்டியத் தேவை இல்லை. எவ்வாறு இன்றைய சுமார்த்த பிராமணர்கள் வேதங்களை பிடித்துக் கொண்டு இருக்கின்றார்களோ, அதே போல் கிருத்துவர்களும் விவரம் அறியாது பழைய ஏற்பாட்டினை தூக்கிக் கொண்டு அலைகின்றனர். அவ்வளவே!!! இரண்டுமே வீண் வேலை!!!

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/09/blog-post.html

மிக சிறப்பான, தேவையான ஆய்வு ...நன்றி !

எல்லவற்றிலூம் ஒரு ஒற்றுமை இருக்கத்தான் செய்கிறது. எடுத்துக்காட்டிற்கு " யாசுவா ஹ மசியா" என்பதில் யாசுவாவை திருப்பிச் சொன்னால் " சுவாயா " என வருகிறது . " மசியாவில்" ஒரு "வா" வைச் சேர்த்தால் "மசிவாயா" ஆகிறது.

PLEASE READ BELOW MENTIONED LINK.

IT IS ABOUT ADAM PEAK IN SRI LANKA AND IT IS ALSO CALLED "SIVAN OLI PATHA MALAI" IN TAMIL. SOMETHING INTERESTING ISN'T IT?

http://en.wikipedia.org/wiki/Adam%27s_Peak

இஸ்லாம் - இதை படித்து ஆய்வு செய்யுங்கள் உங்கள் அனைவருக்குமான கேள்வி, சந்தேகங்கள் முழுதாக தீரும். இஸ்லாம் இதில் அனைத்தும் மிகவும் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.

நண்பரே கட்டூரை மிகவும் அருமை, உங்களின் பகிர்தலுக்கு மிக்க நன்றி .
இஸ்லாம் இதில் அனைத்திற்குமான பதிலும், தீர்வும் இருக்கிறது. இஸ்லாம் பற்றி படித்து தெளிவு பெறுங்கள்.

super வழிப்போக்கர்.எல்லாரும் நீங்கள் கேட்கும் கேள்விக்கு கழண்டு ஓடுவது தெரிகிறது.

அதைப் போல் எல்லாருக்கும் நச்சு பதில்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு