வாழ்வில் தவிர்க்க முடியாத சிலவற்றுள் பிரிவும் ஒன்று. இதோ, இந்த ஹைதராபாத் மாநகருக்கு வந்து கழிந்த இரண்டு வருடங்களில் என் சக பயணியாய், தோழனாய் பயணித்தவர் விடை பெரும் நேரம் வந்து விட்டது. பாதைகள் ஒன்றானாலும் பயணங்கள் ஒன்றல்லவே!!! இதோ பயணத்திற்கு ஏதுவாக பாதைகளும் பிரிகின்றன... அவர் பிரியும் தருணம் வந்துவிட்டது. உதட்டில் புன்னகையும் கண்ணில் கண்ணீரும் ஒரு சேர சுமக்கும் ஜீவன் மனிதன் மட்டுமே. சுமக்கின்றோம்...!!!!

இந்த கவிதை அவருக்காக... என் வழிப்பயணத்தில் அவர் சிந்திய மணித்துளிகளுக்காக!!! அந்த மணித்துளிகள் சிப்பியில் விழுந்த மழைத்துளிகள்... வீற்றிருக்கும் என்றும் முத்தாய்... அந்த முத்தை கொண்டே இந்த பாமாலை... அந்த முத்துக்காக!!!   


"கரைகின்றன காலங்கள்...
     நம்மையும் கரைத்துக்கொண்டே...
இதோ,
ஒரு வழி இரு வழிகளாய்
    பிரிந்து கிடக்கின்றது.....
இரு விழியோ ஒரு துளியால்
     நிறைந்து துடிக்கின்றது!!!
பிரிவு...
இத்தனை காலங்களாய் நிற்காது
  அத்தனை கண்ணீர்களை பருகியும்
இதோ புன்னகையோடு
   நம்மை நோக்கி வருகின்றது - தாகத்தோடு!!!
ஆம்!!!
   இது கண்ணீரின் நேரம் தான்!!!
சந்திப்பவர்கள் அனைவரும் பிரிவதுபோல்
   பிரிந்தவர்கள் அனைவரும் சந்திப்பதில்லை!!!

பயணம்,
ஒரே பாதையில் பயணித்தும்
    நம் பயணங்கள் ஒன்றல்ல!!!
இதோ,
   உன் வெற்றியை தேடி
        உன் பயணத்தை தொடங்கி விட்டாய்...
  நேசத்துடன் வாழ்த்துகள்!!!  

உன்னுடன் பயணித்த பாதையை திரும்பிப் பார்க்கிறேன்
     நீ உதிர்த்த வார்த்தைகளும் கரைத்த காலமுமா
அங்கே பூத்தோட்டங்கலாய் மாறி இருக்கின்றன?
     வாழ்த்துகள்- பிரிவை வீழ்த்தும் திறன் உன்னிடம் இருக்கின்றது!!!

ஆம்,
  வெல்ல நினைத்தவர்கள் எதையும் வென்றது கிடையாது
     வாழ்வையும் சரி...பிரிவையும் சரி...
  வாழ நினைத்தவர்களே வென்றிருகிறார்கள் அவற்றை!!!
  நீ வாழ்ந்து இருக்கிறாய்...
    அந்த தோட்டங்கலாய் வீற்று இருப்பாய்-என்றும்!!! 

பிரிவோம் தோழா!!!
காலங்களில் நாளை என்றும் அழிவதில்லை...
நாளை இருக்கும் வரை என் நம்பிக்கையும் குறைவதில்லை!!!
மீண்டும் சந்திப்போம்!!!   "


                                             - வழிப்போக்கன்     

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… 1 மே, 2010 அன்று 9:40 AM  

imagee superungo...

ada ithu Cheran padam allavo

Classy poem & image...very touching...

உங்கள் பதிவிற்கு நன்றி விக்னேஷ்

nadru, innum neraiya munnetrathirku idam irukku.

Tamil la neraiya varthaigal irukku, athai yellam kathuttu naduvil payanpaduthu.

//இந்த கவிதை அவருக்காக... என் வழிப்பயணத்தில் அவர் சிந்திய மணித்துளிகளுக்காக!!! அந்த மணித்துளிகள் சிப்பியில் விழுந்த மழைத்துளிகள்... வீற்றிருக்கும் என்றும் முத்தாய்... அந்த முத்தை கொண்டே இந்த பாமாலை... அந்த முத்துக்காக!!!//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை.இலக்கியங்களைப் படித்தால் உங்களால் இன்னும் சிறப்பாக எழுத முடியும்.

நிச்சயமாய் எழுத்துகளையும் கருத்துகளையும் இன்னும் செம்மை படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றேன் தோழர்களே!!!

உங்கள் பதிவிற்கு நன்றி - தொடர்ந்து படியுங்கள்... உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு