சனி, 8 மே, 2010
வேண்டும் ஒரு மழைகாலம்!!!
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புல்வெளி. புல்வெளியை பிரித்துக் கொண்டு நடுவே ஓர் வழி. அதில் தனியாய் நான். சிறிது நேரத் துணையாய் மழை. மழை விட்டுச் சென்ற துளிகளை காதலோடு தாங்கியவாறு புதிதாய் மலர்ந்த பூக்கள். உடல் சிலிர்க்க தீண்டிச் செல்லும் தென்றல். மனம் சிலிர்க்க தீண்டும் உன் கூந்தல். இப்படியே நீள்கின்றதடி என் கனாக்கள்...ஒரு காதலோடு...ஒரு கவிதையாய்!!! கற்பனைகள் சிறகடித்து பறக்கும் நேரம் இது... நிச்சயமாய்!!! ஏனோ புரியவில்லை, மெய்யில்லா கற்பனை கூட உன்னை எண்ணும் போது மெய் சிலிர்க்கின்றததடி!!!
மாற்றமில்லை...
என் காதலுக்கு நீ வேண்டும்.
அக்காதலை சொல்ல, வேண்டும் கண்டிப்பாய் ஒரு மழைகாலம்!!!
"மழைக்காலம் வேண்டும்...
துணையாய் நீயும் வேண்டும்...
மாலை நேரத் தென்றல் தீண்டும்
யாருமில்லா பாதை வேண்டும்...
வயல்களின் வழியாய்
குடையின்றி வாராய் பெண்ணே....
குடையாய் நானிருக்க
ஒருசேர நடை பயில்வோம்!!!"
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!
தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...

-
"சில நேரங்களில் ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகின்றது தோழரே...அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு விட்ட இந்தச் சமூகத்தில் நாம் எ...
-
ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோ...
4 கருத்துகள்:
காதலை சொல்ல மழைக்காலம் - நல்ல இணைப்பும் கற்பனையும் !
சந்தேகம் - ஏன் பல !!! உங்கள் பதிவுகளில் ?
நண்பரே,
விருதுநகரை சேர்ந்தவரா... நான் 6(1995-2005)
வருடங்கள் விருதுநகரில் காலேஜ் இல் தான் படித்தேன்.
அன்புடன்,
லக்கி லிமிட்
ஆம் தோழரே!!! நான் விருதுநகர் தான். நீங்கள் எங்கள் ஊரில் படித்தவரா.. ஆஹா மிக்க மகிழ்ச்சி... உங்களின் மொழிபெயர்ப்புகள் அருமை... இந்த நல்ல சேவையை தொடருங்கள்...
தங்கள் கருத்திற்கு நன்றி மாசிலன்.. '!!!'ஐ குறைக்க முயற்சிக்கிறேன்!!!
கருத்துரையிடுக