புரியவில்லை அம்மா உன் அன்பு
    உலகிற்கு வளர்ந்தவளாக தெரியும் நான்
எப்படி உன் கண்களுக்கு மட்டும்
    சிறுமியாகவே தெரிகின்றேன்" என்றேன்
“ஏன் என்றால் நீ இன்னும் சிறுமி தான்" என்றாய் புன்னகைத்துக்   கொண்டே.
“நான் சிறுமி அல்ல! வளர்ந்து விட்டேனாக்கும்” என்றேன்.
“ஆம்! வளர்ந்து விட்டாய்…சிறுமியாகவே!!!” என்றாய்.
உண்மை புரிந்தது அம்மா,
காலங்களில் உன் பாசம் வளரும்
ஆனால்
உன் பார்வையில் நான் வளர்வதில்லை என்று !!!!          
                                                                   இப்படிக்கு,
                                                                                                             - உன் அன்பு மகள்!!!

2 கருத்துகள்:

அன்பன் சொன்னது… 25 ஏப்ரல், 2010 அன்று 2:14 PM  

எனக்குத் தெரிந்த ஒரு பாட்டி அடிக்கடி சொல்லலுவாள்,"ஊருக்கே ராசாவானாலும் தாய்க்கு அவன் மகன் தானே என்று".தாயின் பாசம் எப்போதுமே மாறுவதில்லை.

"தாயின் பாசம் எப்போதுமே மாறுவதில்லை." - உண்மை தான் அன்பரே !!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு