பிறவிக் கரை-
நீயோ ஆழ்கடல் மௌனம்!
மௌனத்தில் பிறப்பெடுத்து
ஆர்ப்பரித்துக் கரைச் சேர்ந்து
மீண்டும் மௌனத்திற்கே திரும்பும் அலையாய் நான்!!!
ஆர்ப்பரிப்பாய் மனம்...
மௌனமாய் நீ...
ஆர்ப்பரிக்கும் வரை மௌனம் புலப்படுவதில்லை -
மௌனமோ என்றும் ஆர்ப்பரிப்பதில்லை!!!




எம்பிரானே!
மௌனத்தின் சிறப்பு மௌனத்தால் அறியப்படுவதில்லை
இதோ
இவ்ஆர்பரிப்புகளுக்கு நடுவேயே அதன்  அர்த்தம் புரியும்
என்றோ
காலத்தால் அலையாய் இப்பயணம்?

உன் எண்ணப்படியே பயணிக்கின்றோம்
வழிகள் நீ தந்தவை...
பயணமும் நீ வகுத்தவை...
பயணிப்பது மட்டுமே நாங்கள் செய்பவை!!!

வழித்துணையாய் நீ இருக்கையில்
கவலைகள் எதற்கு இவ்வாழ்க்கையில்!!!   

4 கருத்துகள்:

//மௌனத்தில் பிறப்பெடுத்து
ஆர்ப்பரித்துக் கரைச் சேர்ந்து
மீண்டும் மௌனத்திற்கே திரும்பும் அலையாய் நான்!!!
//

அருமையான வரிகள்!!!

தங்கள் பதிவிற்கு நன்றி நரேன்!!!

மௌனத்தில் பிறப்பெடுத்து
ஆர்ப்பரித்துக் கரைச் சேர்ந்து
மீண்டும் மௌனத்திற்கே திரும்பும் அலையாய் நான்!!!
-இந்த வரிகள் என்னைக் கவர்ந்தன...

நன்றி பிரகாஷ் ... தொடர்ந்து படியுங்கள் ... அப்படியே உங்கள் கருத்துகளையும் என்னை செம்மையாக்க பதியுங்கள்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு