எங்க ஊர் பங்குனி பொங்கல்னா கண்டிப்பா பல பேர் சட்டி எடுப்பாங்கணு தெரியும். 21 நாள் விரதம் இருந்து ஒரு நேர்த்திக்கடனுக்காக எடுப்பாங்கன்னும் தெரியும். ஆனால் எப்படி எடுக்கிறாங்கனு தெரியாது. நெருப்பை கையில் சுமந்து கொண்டு பல மணி நேரம் நடக்கிறார்களே அவர்களுக்கு கை சுடாதா என்ற கேள்விகளுக்கும் பதில் தெரியாது. கோவிலுக்கு சென்று பல பூச்சட்டிகளை வேடிக்கை மட்டும் பார்த்து இருக்கின்றேன். இந்த பொங்கலுக்கு முன்னால் வரை.


"டேய்! இந்த பொங்கலுக்கு எங்க அப்பாவும் அம்மாவும் சட்டி எடுக்குறாங்கடா. கண்டிப்பா நீங்களும் கூட வரீங்கடா " என்ற நண்பனின் அழைப்பை மறுக்க முடியவில்லை.
"நிச்சயமா வர்றோம்டா... எத்தனை மணிக்கு அங்க இருக்கணும்னு சொல்லு சரியா  வந்திர்றோம்" என்றேன்.
"விடியக்காலைல 1:30 மணிக்குடா" என்றான் நண்பன்.
"சரி விடு... சரியா அந்த நேரத்திற்கு அங்க இருப்போம்" என்று சொல்லி நாங்கள் கிளம்பினோம்.

சொல்லியவாறே அவனின் பெற்றோர் எடுத்த சட்டிக்கு துணையாக சென்றோம். அவன் வீடு கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அங்கே இருந்து கிளம்பி முதலில் மாரியம்மன் கோவிலை சுற்றி விட்டு பின் தெப்பம் வழியாக சென்று கருப்பசாமியை தரிசித்து விட்டு பின் மீண்டும் ஊரை சுற்றி மாரியம்மன் கோவிலை அடைந்து சட்டியை இறக்கி வைக்கும் வரை கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் வெறுங்காலில் சுற்றியும் நாங்கள் உணரவில்லை  தளர்ச்சியை. நாங்கள் உணராதது பெரிதல்ல. அவனின் பெற்றோர்கள் தளர்ச்சியை சற்றும் உணராது நின்றிருந்தார்கள். ஆச்சர்யம் தான். 21 நாள் விரதம் இருந்ததிற்கு அப்புறம், இவ்வளவு தூரம் சட்டியை எடுத்து கொண்டு நடந்தும் இவர்கள் தளரவில்லையே...அதிலும் நண்பனின் அம்மாவை நினைத்து தான் இன்னும் ஆச்சர்யமாய் இருந்தது... தூரம் கூட கூட நண்பனின் தந்தையின் வேகம் சற்று குறைந்தது போல் இருந்தது. ஆனால் அவனின் தாயின் வேகமோ கோவிலை நெருங்க நெருங்க அதிகரித்து கொண்டே இருந்தது... பெண்களின் சக்தி ஆச்சர்யமானது தான்!!!.    

எல்லாம் முடிந்து கோவிலுக்கு வெளியே வரும் போது ஒரு நண்பன் கையை உதறி கொண்டே வந்தான்.
"டேய்!! என்னடா ஆச்சி" என்றேன்
"ஒண்ணும் இல்லடா... அவங்க அப்பா கைல இருந்து சட்டி கொஞ்சம் நழுவுற மாதிரி இருந்துச்சி அதான் பிடிக்கலாம்னு போன்னேன்...பொசிக்கிருச்சி" என்றான்
"ஏன்யா சட்டிய மேலயா பிடிப்ப... அதுக்கு பதில்லா நெருப்புக்குள்ள கைய விட்டுருக்க வேண்டியது தான" என்றவாறே எங்களுடன் வந்து சேர்ந்தார் விக்கி அண்ணா.
"ஏன்னா!! சட்டி சுடும் தான" என்றேன்
"சுடலைனா அத எதுக்கு எடுக்குறாங்க" என்றார் அவர். 
"அப்புறம் எப்படினா இவ்வளவு தூரம் அத தூக்கிட்டு இவங்களால வர முடியுது" என்றேன்.
"அதுக்குதான்யா இந்த விரதம் இருக்கிறது எல்லாம். அருள் பெறணும் என்று மனசை பக்குவப்படுத்திகிறாங்க. அதனால தான் அவங்களால சூட்ட தாங்கிக்க முடியுது" என்று முடித்தார். 


அப்பொழுது இன்னொரு சட்டி எங்களை கடந்து சென்றது. ஒரு தாய் தன் கைக்குழந்தையை கழுத்தில் கட்டிய தூழியில் சுமந்து கொண்டு கையில் சட்டியை ஏந்தி சென்று கொண்டிருந்தார். அவர்கள் செல்வதையே சிறிது நேரம் கண்டு விட்டு மீண்டும் விக்கி அண்ணாவை நோக்கி திரும்பினேன்.

"அண்ணா அந்த குழந்தை அழாது தான" என்றேன்
"ஆமாம்" என்றார்
"பொதுவா சின்ன கொழந்தைங்க தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டா கூட முழிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சிருங்க தான " தொடர்ந்தேன்.
"ஆமாம்!!!"
"அப்புறம் எப்படினா இந்த குழந்தைகள் மட்டும் இவ்வளோ சத்தத்திற்கு நடுவிலேயும் அழாம இருக்குங்க. அதுவும் பக்கத்துலேயே நெருப்பும் இருக்கு. அம்மாவும் கவனிக்க முடியாத நிலையில இருக்காங்க. எப்படினே அழாம இருக்குங்க" என்றேன்
"அதுங்க அழாதுங்கையா" என்றார்.
"அதான் எப்படினே" என்றேன்
அவர் திரும்பி கோவிலை பார்த்தார்.
"அந்த குழந்தைகளோட அம்மா தான் அதுங்கள பார்த்துகிட்டு இருக்காங்கல்ல அப்புறம் எதுக்கு அதுங்க அழ போகுதுங்க... அந்த குழந்தைகள் அழாதுங்க" என்று சொல்லி நடக்க ஆரம்பித்தார்.

நானும் திரும்பி கோவிலை பார்த்தேன். அந்த சட்டியை எடுத்த தாய் கோவிலுள் சென்று கொண்டு இருந்தார். கோவிலுள் மாரி அன்னை வீற்றிருந்தாள். ஆம் குழந்தைகள் ஏன் அழ வேண்டும்?. அவற்றை தான் அவர்களின் அன்னை பார்த்து கொண்டு இருக்கின்றாளே!!!

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

12 கருத்துகள்:

touching lines one friend told you are virudunager. good

தோழரே,
முதல மண்பொம்மை போதும் மருத்துவர்கள் வேண்டாணு சொன்னீங்க? இப்ப தீச்சட்டி, விரதம் இருந்தா சுடாதுணு சொல்றீங்க? அடுத்து என்ன? ஆத்தாள நினைச்சு தீ மீதிச்சா, கால் வலிக்காதுனா? இல்ல வேப்ப இலை அரைச்சு குடிச்சா cancer குணமாயிடுணா? சிரிப்பும் கோபமும் தான் வருது தோழரே, உங்களால எப்படி இப்படிபட்ட மூடநம்பிக்கைகளுக்கு வக்காளத்து வாங்க முடியுது, இல்ல நீ நாத்திகன் உனக்கு இதெல்லாம் புரியாது, இது எல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டது, நம்பிக்கை வேணும் இதெல்லாம் காட்ட முடியாது உணரணும் அப்படினு சொன்னீங்கனா? ஒன்னும் வேண்டா நீங்க நம்புற நீங்க உணர்ந்த உங்க மாரி ஆத்தாள நினைச்சுட்டு உங்க மூக்கையோ, நாக்கையோ ஒரே ஒரு இஞ்ச் வெட்டி காணிக்கையா போடுங்க, வெட்டும் போதும் உங்களுக்கு வலிக்குதா இல்லையாணு பார்ப்போம்? எனக்கு என்னவோ உங்களுக்கு வெட்டுன் மூக்கோ நாக்கோ திரும்ப GRAPHICS பண்ண மாதிரி வளந்துறும் தான் தோணுது, யோசிச்சு பாறுங்க வெறும் மண்பொம்மைய லஞ்சமா(காணிக்கை(decent))வாங்கிட்டு மருந்துதாளையோ, மருத்துவராளைலோ குணபடுத்தமுடியாத நோயை குணபடுத்துற, கைய சுடாதபடிக்கு தெளிவா வடிவு அமைக்கபட்ட தீச்சட்டியல(இது பற்றி ஒரு தனி பதிவே போடுறேன்) இருந்து பக்தருகள காக்குற உங்க மாரியாத்தாவுக்கு உங்க மூக்க வளக்குறது ஒண்ணும் பெரிய விசயமில்ல? நீங்க என்ன சொல்றீங்க?

ஒன்ன சொல்ல மறந்துட்டேன் ,21 ஆம் தேதி ஹரியானால தலிதுங்கிற ஒரே காரணத்துக்காக உயிரோட ஒரு ஊனமுற்ற பெண்ணையும் அவரோட தந்தையாரையும் எரிச்சாங்களே, அதுவும் நெருப்பு தான் அதை தாங்கற சக்திய தீச்சட்டி எடுத்த உங்க நண்பணோட அம்மாவுக்கோ அப்பாவுக்கோ குடுத்ததுக்கு பதிலா அந்த பொண்ணுக்கு கொடுத்துயிருக்கலாம் உங்க மாரியாத்தா? இல்லைனா ஜீ பூம்பா போட்டு மழைய வரவச்சு தீய அனைச்சுயிருக்கலாம்? என்ன செய்ய, எல்லாம் அவன்(கடவுள்) செயல் அல்லது அவன்(கடவுள்) இன்றி ஓர் அணுவும் அசையாது...

அந்த செய்தியோட சுட்டி:http://timesofindia.indiatimes.com/india/Two-Dalits-burnt-alive-after-clash-over-dog/articleshow/5846407.cms

தோழரே,
மருத்துவர்களை அணுக வேண்டாம் என்று நான் பதிவில் சொன்னது போல் எனக்கு தோன்றவில்லை. அடுத்து நெருப்பு சுடாது என்றும் சொல்லவில்லை. சுடும் நெருப்பை பொறுத்துக்கொள்ளும் தன்மையை பற்றியே சொல்லி இருக்கின்றேன். இந்த செயல்கள் சரியா? அல்லது என்ன செய்ய வேண்டும் என்று எழுதுவதாக இருந்தால் நீங்கள் சொன்னது போல் மருத்துவரை பற்றி எழுதி இருக்கலாம். ஆனால் இது சரி ... இது தவறு ... என்று விவாதத்திற்காக இந்த பதிவுகளை நான் பதியவில்லை. என் வாழ்வில் எங்கள் ஊரில் நான் கண்ட சில செயல்களையும் என் நம்பிக்கையும் கொண்டே எழுதி இருக்கின்றேன். அவ்வளவே!!!
கடவுள் இருகின்றாரா?
இந்த கேள்விக்கு, அதோ அங்கே பார் அவர் தான் கடவுள் என்று கடவுளை காட்டும் வல்லமை எனக்கு கிடையாது. ஏன், உலகத்தில் யாருக்குமே கிடையாது. கடவுளை பற்றிய தேடல் தனி மனித தேடல்... உணராமல் அவரை அறிய முடியாது. நீங்கள் நிரூபணம் இல்லாத வரைக்கும் எதையும் நம்ப போவதில்லை. நீங்களாய் உணராதவரை உலகில் கடவுள் இல்லை தான். எனவே கடவுளை எங்களால் நிரூபிக்க முடியாது, எக்காலமும். ஆனால் உங்கள் அறிவியலால் நிரூபிக்க முடியும் கடவுள் இல்லை என்று. இதோ பாருங்கள் முட்டாள்களே!!! வெற்றிடத்தில் இருந்து (இல்லையெனில் ஒரு செல் உயிரி இலிருந்து) இதோ ஒரு ஆண்ணையும் பெண்ணையும் உருவாக்கி விட்டோம் என்று நிருபியுங்கள். இல்லை ஒரு குரங்கையாவது மனிதனாய் மாற்றி காட்டுங்கள். அடுத்த கணம் நான் மாற்றி எழுதுகிறேன்... முட்டாள்களே சுமக்காதீர் வெட்டியாய் மண் சட்டிகளை... அவை சுடும் என்று!!!

கையை வெட்டுங்கள்... உங்கள் கடவுள் அதை மீண்டும் வளர்பார்ரா? .... மாட்டார்!!! வெட்டிய கை வளராது என்பது விதி... ஆனால் கை இன்றி நான் வாழ எனக்கு துணையாய் அவர் தன்னம்பிக்கையை தருவார்... அப்படியே கூடவே வழியையும்... இது என் நம்பிக்கை!!!

தங்கள் பதிவிற்கு நன்றி தோழரே!!!

பதிவைக் காட்டிலும் பின்னூட்டங்கள் இரண்டும் மிக அருமை.... வழிப்போக்கன் கூறுவது போல் கடவுள் மறுப்பாளர்கள் இதுவரை எந்த உயிரையும் படைத்ததில்லை... பெரியாரின் பிறந்த நாளில் அவருடைய சிலைக்கு மாலை அணிவிப்பது என்பது நாம் அவரை நினைவு கூறுவதன் ஒரு வகை தான்! அதே போல் சாதி பார்க்காமல், சமயச் சண்டை போடாமல் நல்லதை நினைத்து ஒற்றுமையை எதைச் செய்தாலும் அதில் கடவுள் இருப்பதாக உணர்கின்றேன். எனவே பெரியார் சிலைக்கு மாலை போடுவது நல்லது என்றால் தீச்சட்டி தூக்குவதிலும் தவறு இருப்பதாகக் கூறமுடியாதல்லவா... அதே சமயம் கடவுள் இல்லை என்று சொல்லிச் சிங்களத்தானுக்கு உறுதுணையாக இருந்த கருணாநிதிக்கும் திருப்பதி வெங்கடாசலபதியைக் கும்பிட்டுத் தமிழர்களைக் கொன்று குவித்த இராசபக்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றுதான் சொல்வேன்.

வழிப்போக்கனையும் மோகனையும் படித்துக் குழம்பிப் விட்டது... கடவுளை உணரப் பொது வழி என்ன என்பது பற்ற(நம்பிக்கைகளைப் புறம் தள்ளிவிட்டு) ஒரு பதிவு இடுங்கள் வழிப்போக்கன்... தோழர் மோகன் கடவுள் என்று எதை மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் அவர்கள் மூட நம்பிக்கைகள் பற்றியும் ஒரு பதிவு இடுங்கள்... இரண்டையும் படித்து விட்டு க் குழப்பம் தீர்த்துக் கொள்கிறேன்... இப்போதைக்குப் பிடிக்கிறேன் ஓட்டம்....

இல்லை இரண்டு பேருமே இதைப் பற்றிப் பேசாமல் ஆக்க வேலைகளில ஈடுபடுங்கள்... நாங்களாவது தப்பிப்போம்... பாருங்கள் பதிவைப் படிக்க வந்த நான் பின்னூட்டங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். (கைப்புள்ள - உனக்கு இதெல்லாம் தேவையா/ மீண்டும்... விர்ர்.. விர்ர்..)

"அதே சமயம் கடவுள் இல்லை என்று சொல்லிச் சிங்களத்தானுக்கு உறுதுணையாக இருந்த கருணாநிதிக்கும் திருப்பதி வெங்கடாசலபதியைக் கும்பிட்டுத் தமிழர்களைக் கொன்று குவித்த இராசபக்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றுதான் சொல்வேன்."

ஆம்... கடவுள் உண்டு என்று சொல்லி கொண்டு பாவங்களை செய்துவிட்டு மன்னியுங்கள் என்று வேண்டினாலும் அந்த பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை... அதே சமயம் கடவுள் இல்லை என்று சொல்லி நல்லது செய்தாலும் அந்த நல்லது மறக்கப்படுவதில்லை!!!
இறைவனை நினைகிறாயா அல்லது மறுக்கிறாயா என்பது அவனுக்கு முக்கியம் இல்லை. நன்மை செய்வதே முக்கியம்.
இறைவன் இருக்கின்றான் என்கின்றாயா... சிரிப்பான்
நல்லது.. மகிழ்ச்சி... நல்லதை செய்
இறைவன் இல்லை என்கின்றாயா... சிரிப்பான்
பரவாஇல்லை... நல்லது செய்!!!
இதுவே அவன் பார்வை...!!!

தங்கள் பதிவிற்கு நன்றி சங்கத்தாரே!!!

Mohan thozha..
Oru chinna science..
Neega kooda thee-chatti edukkalaam...
21 naal veradham irunga, kadavulla nenaika venaam.. thee-chatti chudaathunu mattam romba stronga nenachukittae irunga..

chappal podaama nadanga, kaal hard aahirum..

verum tharaila padunga, spinal cord hard aahirum..

2 vela mattum saapdunga, udambu week aagi, manusu strong aahum..

"Enakku therinju thee chatti edukra yaarum, valikaadha maadhiri nadikraanganu thonala..
andha avasiyamum theva illa.."




Kadavul ngradhu nambikai thaanae..

எந்தக் கடவுளும் மண்சட்டி தூக்கவும் சொல்லவில்லலை,ஒரு தலித் பெண்ணை தீயிலிட்டு எரிக்கவும் சொல்லவில்லை.இவற்றை எல்லாம் செய்வது மனிதன்தான். எல்லா மூட நம்பிக்கைகளுக்கும் கடவுளை கருப்பொருளாக்கும் தன்மை வழிப்போக்கனது பதிவில் தெரிகிறது.எல்லாத்தவறுகளுக்கும் கடவுளைக் குற்றவாளியாக்கும் வேகம் மோகனின் பின்னூட்டத்தில் தெரிகிறது.உண்மையில் கடவுளை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.உங்க்ள் இரண்டு பேருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகிறார்.எந்த கடவுளும் லிட்டர் லிட்டராக பாலை சிலைக்கு ஊற்றச் சொல்லவில்லை.அதைச் செய்தால் அது செய்பவரின் முட்டாள் தனமே அன்றீ கடவுளின் தவறு அன்று.கடவுளை விளக்க முற்படும் எல்லா நூல்களுமே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணச் சொல்கின்றன.இப்படி எல்லாவற்றுக்கும் கடவுள் பெயரை இழுப்பதையும்,கடவுள் பெயரைச் சொல்லி மூட நம்பிக்கையை வ்ளர்ப்பதைக்காட்டிலும் ஆக்கபூர்வமாக எதாவது செய்யுங்கள்.கடவுள் என்று ஒருவர் இருந்தால் உங்களை வாழ்த்துவார்.

கும்பக்கோனத்துகாரரே வணக்கங்கள்!!!
நான் என்னுடைய பதிவில் கடவுள் செய்ய சொல்வதாக எதையும் சொல்லவில்லை. எல்லா சக மனிதரிடத்தும் கடவுளை காண்பதும், அவர்களை நேசிக்கவும், அவர்களுக்கு உதவி செய்யவும் தான் அவர் கூறி இருகின்றார் என்பதையும் அறிவேன். ஆனால் இந்த பதிவு எங்கள் ஊரில் நடக்கும் ஒரு திருவிழாவை பற்றி அமைந்ததே ஆகும். இதில் நான் இந்த செயல்கள் சரியா தவறா என்றோ, கடவுள் என்ன சொல்கின்றார் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. அவற்றை குறிபிடுவதும் இந்த பதிவின் நோக்கம் அல்ல!!

ஆம்! நீங்கள் சொல்வது போல் உணவில்லாது வெளியே ஏழைகள் வாடிக் கொண்டு இருக்கும் போது உள்ளே கடவுள் பேரை சொல்லி கொண்டே பால் அபிஷேகம் என்ற பெயரில் பாலை வீணாக்குவது என்பது மூட நம்பிக்கை தான். அதற்கு என்றும் நான் ஆதரவாளன் அல்ல.

சட்டி எடுத்தாலும் எடுக்கா விட்டாலும் , பொம்மைகள் வைத்தாலும் வைக்கா விட்டாலும்... ஒருவன் நல்லது செய்து இருந்தால் அவனுக்கு நல்லது கிடைக்கும். அவன் தீமை செய்து இருந்தால் தீமை கிடைக்கும். இது நியதி. இது மாறப் போவதில்லை.

நான் எழுதி இருகின்றது எங்கள் ஊரில் நடக்கும் ஒரு விழாவை பற்றி மட்டுமே!!! ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருத்தரை ஒருத்தர் வாழ்த்திக்கொண்டும் உதவிக்கொண்டும் மகிழ்ச்சியாய் வேறுபாடு காணாது கொண்டாடும் நேரத்தில், அவன் கேட்காமலையே அவனுக்கு செய்கின்றோம். அவ்வளவே!!!
அந்த செயல் உங்களுக்கு மூட நம்பிக்கையாய் தெரிகின்றது. எனக்கு இது ஒரு நம்பிக்கையாய் தெரிகின்றது.
நீங்கள் கடவுளை காண ஏழைக்கு உதவுங்கள் என்றீர். ஏழைக்கும் உதவுவோம்... சற்று கொண்டாடவும் செய்வோம் அவர்களையும் அனைத்துக்கொண்டே!! தவறில்லையே!!! வாழ்கை வாழத்தானே தோழரே...

தங்கள் பதிவிற்கு நன்றி

hello boss.. inga yaaravdhu.. mooda nambikaiku sariyaana artham sollunga..

apdiyae, quantum physics definition sollunga..

plz.. rendukkum correcta yaaravadhu sollunga..

indha kelviku answer pannitu yaara irundhaalum adutha reply anupunga..

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு