மழை...
இதோ கொட்டி விட்டு அடங்கி இருக்கின்றது. உலகமே குளிர்ந்து போனது போல் உணருகின்றேன். உண்மையும் அது தான். நாணம் என்னும் முகில் தன்னை மறைக்காது இதோ வானமகள் நட்சத்திரங்கள் என்னும் நகைகளை சூட்டிக்கொண்டு தெளிவாய் புன்னகைக்கிறாள்.
நான் என்னை மறந்து கண்டு கொண்டு நிற்கின்றேன்.
மனிதன் பறப்பதில்லை என்று யார் சொன்னது?... இதோ இந்த குளிர்ந்த தென்றல் என்னை வந்து தீண்டும் போது சற்று விண்ணில் பறந்து சென்று அந்த நிலவை கண்டு கொண்டு தான் வருகின்றேன்... தென்றலோடு தென்றலாய்!!!
யாருக்கும் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் முளைக்கும் தருணம் இது. காதலர்களுக்கு அவர்களது காதலர்களை பற்றியும், காதலிக்க நினைப்பவர்களுக்கு காதலை பற்றியும் வார்த்தைகள் பொழியும் நேரம்!!!
நானோ மழைக்காதலன்... இல்லை இல்லை... இயற்கையின் காதலன்!!! நிச்சயமாய் கவிதைகள் கொட்ட வேண்டிய நேரம் தான். ஆனால் ஏனோ வார்த்தைகள் வர மறுக்கின்றன.
என் அன்னை அழுது கொண்டு இருக்கின்றாள். ஆம்! இயற்கை அன்னை அழுது கொண்டு இருக்கின்றாள். அவளை நினைத்து அவள் அழவில்லை! "ஐயோ! நான் இன்றி என் செல்லங்கள் இல்லை என்பதை அறியாது என் பிள்ளைகளே என்னை அழித்துக் கொண்டு இருக்கிறார்களே!" என்று நம்மை எண்ணியே அவள் அழுது கொண்டு இருக்கின்றாள். மொழிப்பெயர்க்க பட முடியாத கவிதை அவள். அவளை காக்க வேண்டிய பொறுப்பை உணருகின்றேன்! இந்த பதிவுகள் அவளை பற்றியே!!!
வாருங்கள் தோழர்களே - இயற்கையை உணர்வோம்...காப்போம்...ரசிப்போம்...அவளுடன் வாழ்வோம் - இயற்கையாய்!!!
முதல் பதிவு - வைகையில் கிரிக்கெட் விளையாடி கண்டு இருப்போம்... தண்ணீர் ஓடி???. ஏன்?.... வைகையில் தண்ணீர் இல்லாததற்கு கொடைக்கானலில் சில சோலைகள் அழிந்ததும் ஒரு காரணம் என்று சொன்னால் நம்புவதற்கு எளிதாய் இருகின்றதா? உண்மை அது தான்.
ஆனால், முதலில் சோலைகள் என்றால் என்ன என்பதையும் கொடைகானலையும் சற்று தெரிந்து கொள்வோம்! இயற்கையை தேடி ஒரு பயணம்...தொடங்குகிறது கொடைகானலிற்கு 30 கிலோமீட்டர் மேல் ஒரு காட்டில்... பெயர் பேரிஜம்(Berijam)!!! பயணிப்போம்...!!!
"இயற்கை நம் அனைவரின் தேவையை பூர்த்தி செய்ய வல்லமை பெற்று இருக்கின்றது. நம்முடைய பேராசைகளை பூர்த்தி செய்யும் வல்லமை அதற்கு இல்லை" - மகாத்மா காந்தி
1 கருத்துகள்:
// வைகையில் தண்ணீர் இல்லாததற்கு கொடைக்கானலில் சில சோலைகள் அழிந்ததும் ஒரு காரணம் என்று சொன்னால் நம்புவதற்கு எளிதாய் இருகின்றதா? உண்மை அது தான்.// அதிர்ச்சியளிக்கிறது...
கருத்துரையிடுக