முன் குறிப்பு:


அனைத்து சமயங்களுக்குள்ளும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்று நாம் கண்டுக் கொண்டு இருக்கின்றோம். இப்பொழுது ஒரு குறிப்பிட்ட ஒற்றுமையைப் பற்றி நாம் காணலாம்.

இறைவனின் உலக வருகை… அதாவது சமயங்கள் சில, அவற்றின் இறைவன் உலகில் எப்பொழுது பாவங்கள் பெருகுகின்றதோ அப்பொழுது மக்களைக் காப்பாற்ற மீண்டும் உலகினில் தோன்றுவான் என்றே நம்புகின்றன.

புத்தம் – மைத்ரேய புத்தனுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றது.

இந்து – கல்கிக் காக காத்துக் கொண்டு இருக்கின்றது.

கிருத்துவம் – கிருத்துவின் இரண்டாம் வருகைக்காக காத்து இருக்கின்றது.

இந்தக் கடவுளரின் வருகை என்பது ஒரே கடவுளை குறிப்பதா அல்லது அத்தனைக் கடவுளும் ஒவ்வொரு முறையாக உலகின் மக்களின் பாவம் தீர்க்க தனித் தனியே வரப்போகின்றனரா என்பது எனக்குத் தெரியவில்லை. சிந்திப்போம். விடைக் கிட்டினாலும் கிட்டும்.

இருந்தும் அவர்கள் உலகிற்கு வருவதனைப் போலவும் அவர்கள் வந்தால் என்ன நடக்கலாம் என்றும் எண்ணியே இந்தக் கற்பனைப் பதிவுகள்.

இயேசுவின் இரண்டாம் வருகை:


ஊரெங்கும் ஒரே பேச்சு
”இன்று இயேசு வருகின்றாராம்!!!”
ஈராயிரம் ஆண்டுகள் காத்திருப்பு
முடிந்தது என்று தேவதூதன் சொன்னானாம்!!!
**********************************************
என்றோ மறந்த வசனங்களை
நினைவூட்டிக் கொண்டே
மந்தையோடு மந்தையானேன்…
மேய்ப்பவனை எதிர்பார்த்தே!!!
*********************************************
“அதோ வருகின்றார்…” என்றான் ஒருவன்.
உறைந்திருந்த நேரம் விரையத் தொடங்கியது…
திசைகள் எட்டும் ஒன்றாக அவரும் வந்தார்
பாவிகளை நாடி காவியில்…திருநீறோடு!!!
**************************************************
பாவீகளின் ரட்சகன் காவியிலா?
“யார் நீர்” என்றேன்
“இயேசு” என்றார்
“சிலுவை சுமக்காதவர் இயேசு அல்லர்” என்றேன்.
சிரித்தார்…”மீண்டுமா”
அருகில் இருந்த மலையில் புதிதாய் பூத்ததொரு சிலுவை.
இறைவன் மூன்றாம் வருகைக்கு ஆயுத்தமானார்.
**********************************************
நான் இரண்டிலே நின்றிருந்தேன்.
உயிர்த்தெழுந்தால்
மூன்றாக்கி கொள்ளலாம்.
************************************

பின்குறிப்பு:

என்ன இயேசு திருநீறோடு வந்தாரா? இயேசுவைக் அவமதிக்கின்றீர்களா என்று சில நண்பர்கள் எண்ணினீர்கள் என்றால் இந்தப் பதிவுகளை முதலில் படித்து விடுங்கள். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

கிருத்துவமும் திருநீறும்
என் கடவுள் உன் கடவுள் நம் கடவுள்

6 கருத்துகள்:

தமிழருக்குச் சொல்லிதந்த தாமஸ் என்னும் அழகான கட்டுரையில் தெய்வநாயகம் அவர்களின் உளறல் ஆய்வுகளை அழகாக விமர்சித்து உள்ளார்.
http://www.jeyamohan.in/?p=600

இணைப்பில் உள்ள பைபிளியல் கட்டுரையையும் படிக்கவும்.

கிறிஸ்து யார்- இயேசுவா?
http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html
கிறிஸ்து என ஒருவர் பழைய ஏற்பாட்டில் இல்லை என - இயேசு காலத்தில் மோசேவின் நாற்காலியில் அமர்ந்திருந்த எபிரேயமொழி சதுசேயர் தெளிவாக்கி உள்ளனர்.


சுவிசேஷக் கதைகளின் நாயகர் ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார்.

கிறிஸ்துவ மத ஸ்தாபகர் பவுல் தன் வாழ்நாளில் இரண்டாவது வருகை என்றார்.

மேம்போக்கில் படிக்கும்போது தாங்கள் தமிழ் பற்றாளர் எனும் தோற்றம் தெரிந்தாலும்- இஸ்ரேலில் இறைவனற்ற அரசியல் காரணங்களுகளுக்காக பொ.மு.300 - 50 இடையே (வரலாறு அகழ்வாராய்ச்சி பொய் என தெளிவாக நிருபித்துள்ளவற்றை) கடவுள் வார்த்தை என புனையப்பட்டதை இப்படி பரப்பும் பொழுது தாங்கள் தமிழ் பற்றாளர் எனும் முகமூடியில் அன்னிய மதத்தினை பரப்புதல் தெளிவாகிறது.

சங்க இலக்கியத்தில் 100க்கும் அதிகமான தடவை வேதம். நான்மறை, மறை, புலம், ஓத்து, ஆரங்கம், கேள்வி, எழுதாக் கற்பு என பல பெயர்களில் கூறப்பட்டுள்ளன.

கா.சு.பிள்ளை இவை இந்தியக் கண்டம் முழுதும் ஏற்கும் வேதங்களில்லை, தமிழில் வேறு எனப் புனைந்த உடனே அடுத்த செந்தமிழ்செல்வி இதழில் தேவநேயப் பாவாணர் அதை மறுத்து சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுபவை ரிக்- யஜுர்- சாம & அதர்வண வேதங்கள் தான் எனத் தெளிவாக உறுதியாகக் கூறினார்.

உலக மொழிகள் இலக்கியம் அனைத்தையும் ஆராயும் ஹாவர்ட், ஆக்ஸ்போர்ட் போன்ற பன்னாட்டு பல்கலை கழகங்கநிச்சயமாக ஆதாரமில்லா பொய் என்பதைளின் பெரும்பாலானோர் ஆராந்ச்சிக்குப்பின் தெளிவாக ஏற்கும் காலங்களை ஏற்க மறுக்கின்றீர். விக்கியை ஆதாரமாகத் தந்தீர், அதே விக்கி வேதங்கள் தொகுக்கப்பட்ட காலம் பொ.மு.1700 - 500

ஒரு மதம் பரப்ப வேண்டும் என்னும் கொள்கையோடு, தாங்கள் கூறும் ஊகங்களுக்கு துணையான வாசகங்களை- அவை தெளிவாக மறுக்கப்பட்டு பல அறிஞர்களும் ஏற்றதை இல்லை என சொல்வதை திரும்பி சொல்லும் ஒரே குழுவான தெய்வநாயகம் -தேவகலா - நிச்சயமாக ஆதாரமில்லா பொய் என்பதைகட்டுரைகளை நீவீர் தொடர்ந்து தருவதும் வினாக்குரியதே

நண்பர் மாயாண்டி அவர்களுக்கு வணக்கங்கள்...

//இஸ்ரேலில் இறைவனற்ற அரசியல் காரணங்களுகளுக்காக பொ.மு.300 - 50 இடையே (வரலாறு அகழ்வாராய்ச்சி பொய் என தெளிவாக நிருபித்துள்ளவற்றை)//

இதற்கான சான்றுகள் இருந்தால் தயைக் கூர்ந்து பகிரவும் நண்பரே. நானும் படித்து அறிந்துக் கொள்கின்றேன்.

//தமிழ் பற்றாளர் எனும் முகமூடியில் அன்னிய மதத்தினை பரப்புதல் தெளிவாகிறது//

ம்ம்ம்... புரியவில்லை நண்பரே. இதனை நீங்கள் இன்னும் சற்று தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும். முதலில் மதம் என்றால் என்ன என்பதையும்... மத மாற்றம் என்றால் என்ன என்பதையும் நீங்கள் கூறினால் இன்னும் நன்றாக இருக்கும், அப்படியே என்னுடைய எந்த பதிவில் நான் மத மாற்றத்தினைப் பற்றி கூறி இருக்கின்றேன் என்று தாங்கள் கூறினாலும் அதற்கு நான் விடை அளிக்க இயலும். அதை விடுத்து பொதுவாக அந்நிய மதத்தினைப் பரப்புகிறேன் என்றக் குற்றச்சாட்டினை...மன்னிக்கவும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

//சங்க இலக்கியத்தில் 100க்கும் அதிகமான தடவை வேதம். நான்மறை, மறை, புலம், ஓத்து, ஆரங்கம், கேள்வி, எழுதாக் கற்பு என பல பெயர்களில் கூறப்பட்டுள்ளன.//

வேதங்களைப் பற்றிய பதிவுகளில் இவற்றைப் பற்றிக் காண முயற்சிப்போம் நண்பரே.

//செந்தமிழ்செல்வி இதழில் தேவநேயப் பாவாணர் அதை மறுத்து சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுபவை ரிக்- யஜுர்- சாம & அதர்வண வேதங்கள் தான் எனத் தெளிவாக உறுதியாகக் கூறினார்.//

ஆகா..தேவநேயப் பாவாணர் அவ்வாறுக் கூறினாரா...அதற்குரிய இணைப்பினை எனக்குத் தந்தீர்கள் ஆனால் அதையும் நான் அறிந்துக் கொள்ள இயலும். மேலும் தேவநேயப்பாவாணர் ஆரியர்கள் குறித்தும் தமிழ் தான் முதல் மொழி என்றுக் கூறி இருந்ததைப் பற்றி தாங்கள் அறிவீர்கள் என்றே நான் எண்ணுகின்றேன்.

//விக்கியை ஆதாரமாகத் தந்தீர், அதே விக்கி வேதங்கள் தொகுக்கப்பட்ட காலம் பொ.மு.1700 - ௫௦௦//
விக்கியினை மட்டும் ஆதாரமாகத் தரவில்லை. இந்திய அகழ்வாராய்ச்சி கழகத்தின் மற்றுமொரு இணைப்பையும் சேர்த்து தந்தாவாறே எண்ணுகின்றேன். விக்கியினைத் தந்ததிற்கு காரணம் அதில் மேற்கோளாக காட்டப்பட்டு இருந்த புத்தகமும் நீங்கள் மேற்கோளாக கொடுத்து இருந்த புத்தகமும் ஒரே புத்தகமாக இருந்த ஒரு காரணம் தான் நண்பரே. நீங்கள் கி.மு ஒன்பதாம் நூற்றாண்டில் சமசுகிருத கல்வெட்டுக்கள் கிடைப்பதாக சொன்னீர்கள், ஆனால் அதே புத்தகத்தை மேற்கோளாக கொண்ட இணையம் வேறு மாதிரி கூறுகின்றனவே. எனவே தான் விக்கியினைக் கொடுக்க வேண்டி இருந்தது.

//ஒரு மதம் பரப்ப வேண்டும் என்னும் கொள்கையோடு//

இதற்கு ஏற்கனவே நான் பதில் கூறி விட்டேன்... இருந்தும் ஒருக் கேள்வி. இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல, அது வாழ்கை நெறி என்று தானே கூறுகின்றீர்... பின்னர் எவ்வாறையா மத மாற்றம் என்ற சொல்லாடல் அதற்கு பொருந்தும். இல்லை இந்து மதம் ஒரு மதம் தான் என்றால் அந்த மதம் ஏககாலத்தில் இருந்து இருக்கின்றது என்று தாங்கள் கூறினால் அறிந்துக் கொள்வேன்.

அவ்வாறே சைவத்தில் இல்லாத, வைணவத்தில் இல்லாத சாதி ஏற்றத்தாழ்வு எவ்வாறு இந்து சமயத்தினில் நுழைந்தது என்றும் தாங்கள் விளக்க முடியுமா...

நன்றி நண்பரே!!!

"இயேசுவின் கிறிஸ்து இரண்டாம் வருகை"

http://isakoran.blog.com/

@ மாயாண்டி
நண்பரே... இந்தப் பதிவினை நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டு இருக்கின்றீர் என்றே எண்ணுகின்றேன். நீங்கள் முன் குறிப்பினை மீண்டும் ஒரு முறை படித்தீர்கள் என்றால் நலமாக இருக்கும்.

மேலும் நான் கேட்டக் கேள்விகளுக்கும் தாங்கள் தந்துள்ள இந்தப் இணைப்புக்கும் யாதொரு தொடர்பும் இருப்பது போன்று எனக்கு தெரியவில்லை.

கோபன் ஹேகன் பல்கலைக் கழக பேராசிரியர் இன்று உலகில் பழைய ஏற்பாடு ஆராய்ச்சியில், இஸ்ரேல் புதைபொருள் அகழ்வாராய்ச்சி ஆய்வில் மிகவும் மதிக்கப்படுபவர் தாமஸ் தாம்சன்
http://www.amazon.com/The-Mythic-Past-Biblical-Archaeology/dp/0465006493
இஸ்ரேல் தலைநகர் டெலவிவ் பல்கலைக் கழக புதைபொருள்துறைத் தலைவர் இஸ்ரேல் ப்ராங்கிஸ்டன்
http://www.amazon.in/The-Bible-Unearthed-Archaeologys-Ancient/dp/0684869136
இரண்டு புத்தகமும் இணையத்தில் இலவசமாகவே உள்ளது.

பைபிள் பழைய் ஏற்பாடு முழுமையும் கட்டுக்கதை. இஸ்ரேல் நாடு என்பது பொ.மு. 9ம் நூற்றாண்டிலும், அதை சமாரியர் தோற்கடிக்க சமாரிய, கானானியர், அம்மோனியர் யூதேயாவில் குடியேற பொ.மு. 7ம் நூறாஆண்டில் 25000 பேர் கொண்ட நாடாக உருவானது.

அதாவது தாவீது - சாலமன் காலத்திற்கு 250 ஆண்டு பின்பு யூதேயா பகுதியில் மக்கள் குடியேற்றம் பெற்று நாடானது.
கானானியரே யூதர்.

இனவெறி தூண்ட பொய்யாய் எழுந்ததே பழைய ஏற்பாடு. சாக்கடல் சுருள்களில் இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் தன் ஆலயம் எனத் தேர்ந்தெடுத்தது சமாரிய கெர்சிம் மலையை.
http://en.wikipedia.org/wiki/Mount_Gerizim
The masoretic text of the Tanakh says the Israelites later built an altar on Mount Ebal, constructed from natural (rather than cut) stones, to place stones there and whiten them with lime,[2] to make peace offerings on the altar, eat there, and write the words of this law on the stone.[6] The Samaritan Pentateuch version of Deuteronomy, and a fragment found at Qumran,[7] holds that the instruction actually mandated the construction of the altar on Mount Gerizim, which the Samaritans view is the site of the tabernacle, not Shiloh.[8][9] Recent Dead Sea Scrolls work supports the accuracy of the Samaritan Pentateuch's designation of Mount Gerizim rather than Mount Ebal as the sacred site.
இன்றைய பழைய ஏற்பாடு முழுமையும் சீயோன் - ஜெருசலேம், தாவீது - அதற்கு மேசியா எல்லாமே பொ.மு 100 க்கு பிற்பட்டு புனையப்பட்டவை

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு