ஒவ்வொரு பயணத்தையும்
ஒரு பயணியாகவே தொடங்குகின்றேன்…
இருந்தும் தனித்திருக்கும் அமைதியில்
சாளரம் தாண்டிய தென்றல் தீண்ட
எங்கோ என்னுள் நீ புகுந்துத் தான் கொள்கின்றாய்… ஒவ்வொரு முறையும்!!!
ஏனோ ஒரு புதுக் கவிஞனாகவே
என் பயணத்தை முடித்துக் கொள்கின்றேன்… அவ் ஒவ்வொரு முறையும்!!!
நான் கவிஞனா…???
அல்லது கவிஞன் ஆக்கப்பட்டவனா…???
விடைத் தேடுதல்களில் பிறக்கின்றது
மற்றுமொரு கவிதை!!!
******************************************
நீண்ட நெடிய இரவு ஒன்று
நினைவுகள் என்ற சாட்டையினைச் சுழட்ட
என் நினைவுப் படிமங்களில் புதைந்திறந்த அவள்
ஒவ்வொரு படிமமாய் கடந்து வருகின்றாள்
சிறு புன்னகையில்
சிறு புன்னகையில்
மீண்டும் தொடங்கிற்று ஒரு பழைய பயணம்.
என்றோ ஒரு மழைக்காலத்தில்
சிதறிய மழைத் துளிகளோடு…அவள் சிந்திய முதல் புன்னகை…
என் முதல் கவிதை… தொடங்கி
ஏதோ ஒரு இலையுதிர்க்காலத்தில்
சிதறிய சருகளோடு…மறைந்த அவள் காலடித் தடம் வரை
எங்கேயோ நான் தொலைத்த உலகங்களில்
மீண்டும் ஒரு காலச் சுழலில் உலா வரத் தான் செய்கின்றேன்…நான்!!!
பயணத்தின் முடிவில் இன்று
எஞ்சி இருப்பது நானும்…ஒரு வெற்றுக் காகிதமும் தான்.
எழுதப்படாத அக்காகிதமும் நாளை
என் கவிதை புத்தகத்தினொரு பக்கமாகும்…
நான் அறிந்தக் கவிதை ஒன்றை
நான் மட்டுமே அறிய ஏந்திக் கொண்டு!!!
***************************************
0 கருத்துகள்:
கருத்துரையிடுக