சிறு வயதில் நான் நட்சத்திரங்களை எண்ணுவேனாக்கும்" என்றாள்!!!
"நானும் தான்" என்றேன்
"ஆ!!! மாட்டினாயா!!! அப்படி என்றால் சொல்
விண்ணில் நட்சத்திரம் எத்தனை என்று?" என்றாள்
புன்னகைத்தேன்...
"அது எல்லாம் எனக்குத் தெரியாது… ஆனால்
அன்று பார்த்த நட்சத்திரங்களில்
ஒன்று இன்று விண்ணில் இல்லை..." என்றேன்...
மங்கித்தான் போய் விட்டன நட்சத்திரங்கள்
என்னவள் நாணத்தின் முன்!!!
அந்தோ வீழ்த்தத் தான் நினைக்கிறாள்
அறிந்து என்னை ஞானத்தால்
ஆயினும் வீழ்த்தித் தான் செல்கிறாள்
அறியாது நாணத்தால்!!!...

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு