"அன்னப் பறவைகள் காலத்தில் மரித்து விட்டனவா?" என்றாய்
"இல்லை!! அவை உருமாறிவிட்டன" என்றேன்
" உருமாறிவிட்டனவா!! யாராய்? " என்றாய்
"பெண்களாய்!!!" என்றேன்
"பொய் சொல்கிறாய்!!! எங்க விளக்கு பார்ப்போம்" என்றாய்
" பொய் அல்ல !! என்னில் இருந்து என்னை எடுத்து விட்டு
      உன்னை மட்டும் விட்டு செல்கிறாய்‍ ,
இது அன்னத்தின் செயல் தான் அல்லவா!!!" என்றேன்
...புன்னகைத்தாய்!!!
" அப்படி என்றால் நானும் அன்னப்பறவையா?" என்றாய் வெட்கத்துடன்...
"இல்லை!!!
     நீ அன்னங்களின் தேவதை" என்றேன்.
தேவதை என் தோழ் சாய்ந்தது!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி