ஒருமுறை இயேசுவை சோதிக்கும் வண்ணம் பழைமைவாத யூத ஆசிரியர்கள் சிலர் அவரை
அணுகினர். அவர்கள் அவரிடம் "ஒரு மனிதன் தன்னுடைய மனைவியைக் கைவிடலாமா?" என்றே கேட்டனர்.
அதற்கு இயேசு "உலகத் தொடக்கத்தில் இருந்தே மனிதனானவன் ஆணாகவும்
பெண்ணாகவுமே படைக்கப்பட்டு இருக்கின்றான். அதுவே இறைவனின் சித்தமாக இருக்கின்றது.
அந்த ஒரு காரணத்திற்காகவே ஆணானவன் தன்னுடைய தந்தையையும் தாயையும் விட்டுவிட்டு
தன்னுடைய மனைவியினைப் பற்றிக் கொள்கின்றான். கணவனும் மனைவியும் ஓர் உடலாக
இணைகின்றனர். எனவே ஒரு மனிதனுக்கு அவனது மனைவியானவள் அவனுடைய சொந்த மாமிசத்தினைப்
போலவே இருக்கின்றாள். எனவே கடவுள் அமைத்துக் இருக்கும் இந்த இயற்கை விதியினை
மனிதன் மீறக்கூடாது. எது இணைக்கப்பட்டதோ அதனை மனிதன் பிரிக்கக் கூடாது.
யூதர்களாகிய உங்களிடம் இருக்கும் மோசேவின் சட்டத்தின்படி ஒரு மனிதன் தன்னுடைய
மனைவியினை விட்டுவிட்டு மற்றொருப் பெண்ணை மனைவியாகத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்
என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையல்ல. இறைவனின் சித்தத்தின்படி அது
உண்மையல்ல. எவன் ஒருவன் தன்னுடைய மனைவியை கைவிடுகின்றானோ அவன் அவளை விபச்சாரத்தில்
தள்ளுவதற்கு இணையானக் காரியத்தைச் செய்கின்றான் என்றே நான் உங்களிடம்
கூறுகின்றேன். மேலும் அவளுடன் இணையும் பிறரையும் விபச்சாரத்தில் அவன்
தள்ளுகின்றான். அவ்வாறு தனது மனைவியினை விட்டு அவன் பிரிவதன் மூலம் உலகத்தினில்
அவன் விபச்சாரத்தினைப் பரப்புகின்றான்." என்றே கூறினார்.
அதனைக் கேட்ட இயேசுவின் சீடர்கள் அவரிடம் "ஒரே பெண்ணுடன் இறுதிவரை
வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கின்றது. அது தான் மனிதனிடம் இருந்து
எதிர்பார்க்கப்படுகின்றது என்றால் திருமணமே செய்யாமல் வாழ்வது என்பது சிறந்த
ஒன்றாக இருக்கும்" என்றே கூறினர்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி "திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்வதை
நீங்கள் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் தான். ஆனால் அதன் அர்த்தம் என்னவென்று
நீங்கள் அறிந்து இருக்க வேண்டும். ஒருவன் எந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்துக்
கொள்ளாது வாழ விரும்பினான் என்றால் அவன் முற்றிலும் தூய்மையானவனாக பிற பெண்களுடன்
தொடர்பு கொள்ளாதவனாக இருக்க வேண்டும். ஆனால் பெண்களை நேசிக்கின்றவன் ஒரு
மனைவியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறே தான் ஒன்றாக ஒன்றிணைந்த தனது
மனைவியைக் கைவிடாமலும் பிற பெண்களைக் காணாமலும் அவன் இருக்க வேண்டும்." என்றே
கூறினார்.
1 கருத்துகள்:
வணக்கம்
தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்
http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html
நன்றி
சாமானியன்
கருத்துரையிடுக