திருக்குறளினைப் பற்றி நாம் பல பதிவுகளை முன்னரே கண்டு இருக்கின்றோம்...இருந்தும் இன்னும் சில விடயங்களை நாம் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது. காரணம் இன்னும் தெளிவற்ற கருத்துக்கள் பல வெளியில் உலாவிக் கொண்டு தான் இருக்கின்றன.
உதாரணமாக திருவள்ளுவர் கூறும் கடவுள் யார் என்றக் கேள்விக்கும் திருவள்ளுவரின் சமயம் யாது என்ற கேள்விக்கும் பலவிதமான கருத்துக்கள் நம்முடைய சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் திருவள்ளுவரை பௌத்தர் என்றும் சமணர் என்றும் கூறுவர்...இன்னும் சிலர் அவர் கடவுள் என்றுக் கூறியது சூரியனைத் தான் என்றும் கூறுவர்...சிலர் அவர் சைவ வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுவர்.
ஆனால் இவை அனைத்துமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை...இவைகளில் யாதேனும் ஒன்று தான் விடையாக இருக்க முடியும்...இல்லையேல் இவைகள் அல்லாத ஏதேனும் வேறு ஒன்று தான் விடையாக இருக்க முடியும். ஒரே நேரத்தில் திருவள்ளுவர் பௌத்த சமணத்தைச் சார்ந்தவராகவோ அதே நேரம் சமண சமயத்தைச் சார்ந்தவராகவும் இருத்தல் இயலாது. சரி இருக்கட்டும்...இப்பொழுது நமது கருத்தினைக் காண்போம்...!!!
திருவள்ளுவர் இறை நம்பிக்கை உடையவர். இதில் மாற்றுக் கருத்தே நமக்கு கிடையாது. அதனால் தான் அவர் அவரது நூலிற்கு எழுதிய சிறப்பாயிரத்தை கடவுள் வாழ்த்துப் பகுதியுடன் ஆரம்பித்து உள்ளார். ஆனால் அந்த கடவுள் வாழ்த்துப் பகுதியில் அவர் கடவுளாக கூறியுள்ளது யாரை என்றக் கேள்வி தான் பலரையும் பல கருத்துக்களைக் கொள்ள வைத்து உள்ளது. இப்பொழுது அக்கேள்விகளுக்கு விடையினைக் காண முயல்வோம்...
திருவள்ளுவர் கூறும் கடவுள் சூரியனா?
பண்டைய தமிழர்களாக இருக்கட்டும்...அல்லது இயற்கை வழிபாட்டினை உடைய பண்டைய நாகரீகங்களாக இருக்கட்டும் சூரிய வழிபாடு என்பது அவர்களது வாழ்வில் இருந்து உள்ளது. சூரியனுக்கு அவர்களது வாழ்வில் முக்கியத்துவம் தரும் தன்மையை நாம் காணுகின்றோம்.
மேலும் நமது வார நாட்களின் முதல் நாளான கிழமையை 'ஞாயிறு' என்றே அழைப்பதாலும் ஆங்கிலத்திலும் '' என்றே சூரியனைச் சிறப்பித்தே வழங்குவதாலும் சூரியனின் சிறப்பை நாம் உணருகின்றோம் என்றும் ...இந்தியிலும் கூட 'ஆதிவார்' என்றே முதல் கிழமை வழங்கப் பெறுவதாலும் வள்ளுவர்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்ற தனது குறளின் மூலம் ஆதியான சூரியனையே கடவுளாக வழங்குகின்றார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இவர்கள் 'ஆதி' என்ற ஒற்றை வார்த்தையை எடுத்துக் கொண்டே அவர்களது முடிவிற்கு வந்து விட்டது தான் வியப்பாக இருக்கின்றது. நாம் இந்தக் கூற்றினை மறுத்துத் தான் ஆக வேண்டி இருக்கின்றது.
காரணம் வள்ளுவர் அந்த ஒரு வார்த்தையினை மட்டுமே தனது குரளினில் பயன்படுத்தி இருக்கவில்லை (மேலும் ஆதி என்ற தமிழ்ச் சொல்லிற்கு தொடக்கம் என்ற பொருள் தான் பரவலாக அறியப்படும் பொருள்...வள்ளுவர் காலத்தில் தெலுங்கோ இந்தியோ அல்லது சமசுகிருதமோ தோற்றம் பெற்று இருக்கவில்லை). மேலும் ஒரே ஒரு குறளினை மட்டும் வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் விட்டுச் செல்லவில்லை...வேறு ஒன்பது குறள்களையும் விட்டுச் சென்று இருக்கின்றார்.
எனவே ஒரே ஒரு குரளினில் வரும் ஒரே ஒரு வார்த்தையையும் அவ்வார்த்தைக்கு பொதுவாக யாரும் கொள்ளாத பொருளையும் வைத்துக் கொண்டு மட்டும் திருவள்ளுவர் கூறும் இறைவன் சூரியன் என்று கூறுவது சரியானதொன்றாக அமையாது. வள்ளுவர் சூரியனைத் தான் கடவுள் என்று கூறி இருந்தார் என்றால் மற்ற குறள்களிலும் அதற்குரிய சான்றுகளோ அல்லது குறிப்புகளோ நிச்சயம் காணப்பட வேண்டும்... அவ்வாறு காணப்படுகின்றதா என்பதனை நாம் இப்பொழுது காண்போம்...!!!
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5
இக்குறளில் வள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இங்கே வள்ளுவர் சூரியனைத் தான் கடவுளாக கூறினார் என்று கூறுபவர்கள், வள்ளுவர் கூறும் இரு வினைகள் யாது, அவை எவ்வாறு ஒரு மனிதனை இருளில் சேர்த்து விடுகின்றன என்பதையும் அவ்வினைகள் எவ்வாறு சூரியனின் அடியினை சேர்ந்தால் விலகி விடுகின்றன என்பதையும் கூறி ஆக வேண்டி இருக்கின்றது.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6
இங்கே வள்ளுவர் ஐந்தவித்தான் என்று இறைவனை ஐம்புலன்களை அடக்கியவன் என்றுக் கூறுகின்றார்...வள்ளுவர் சூரியனையே இறைவனாக கூறி இருந்தார் என்றால் சூரியன் ஐம்புலன்களை எப்பொழுது பெற்றது என்றும் ஐம்புலன்களை எப்பொழுது/எப்படி அது அடக்கியது என்றும் நமக்கு கூறித் தான் ஆக வேண்டி இருக்கின்றது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10
இங்கே வள்ளுவர் தெளிவாகக் கூறுகின்றார் இறைவனின் அடியினைச் சேராதவர்களால் பிறவிப் பெருங்கடலை கடக்கவே முடியாது என்று. இறைவனாக வள்ளுவர் சூரியனைக் கூறி இருந்தார் என்றுக் கூறுபவர்கள் பிறவிப் பெருங்கடல் என்பது என்ன என்றும் அதனை மக்கள் சூரியனின் அடியினைச் சேர்வதன் மூலம் மட்டுமே கடக்க முடியும் என்று வள்ளுவர் கூறியிருப்பது எதனைக் குறிக்கும் என்பதனையும் நமக்குக் கூறி ஆகத் தான் வேண்டி இருக்கின்றது.
மேலும் வள்ளுவர் திருக்குறளின் சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியினை மட்டும் வைக்கவில்லை...மாறாக வான் சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல் என்று வேறு மூன்று அதிகாரங்களையும் வைத்துவிட்டுச் சென்று இருக்கின்றார்.
அவற்றில் வான் சிறப்பு என்பது மழையைக் குறிக்கின்றது என்று பலர் கூறினாலும் அக்கூற்றுகளில் இன்னும் விவாதங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. மழையை சிறப்பித்து சிறப்பாயிரத்தில் வைப்பது என்பது தமிழ் இலக்கிய உலகம் காணாத ஒரு பழக்கம் ஆகும்.
மேலும்,
நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.
என்ற குறளில் வள்ளுவர் தெளிவாக நீரையும் 'வான்' என்று அவர் கூறுவதையும் வேறுபடுத்திக் கூறியுள்ளார். (வான் என்று கடவுளின் அருட் சக்தி வழங்கப்படுவதை நினைவிற் கொள்க)
அவ்வாறே நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில், கடவுள் வாழ்த்தில் இறைவனை குறிக்க பயன்படுத்திய 'ஐந்தவித்தான்' என்றச் சொல்லை வள்ளுவர் மீண்டும் பயன்படுத்தி உள்ளார்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
கடவுள் வாழ்த்துப் பகுதி மட்டும் இருக்கும் சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியுடன் வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரங்களையும் வைத்த வள்ளுவர், 'ஐந்தவித்தான்' என்ற சொல்லின் மூலம் கடவுளையும், நீத்தாரையும் இணைத்து உள்ளார்.
வள்ளுவர் சூரியனையே கடவுளாக கூறி இருந்தார் என்றால் ஏன் சூரியனை ஐந்தவித்தானாக கூற வேண்டும், ஏன் அவனை நீத்தாருடன் இணைக்க வேண்டும்...ஏன் கடவுள் வாழ்த்துப் பகுதியில் வான் சிறப்பு/நீத்தார் பெருமை/அறன் வலியுறுத்தல் போன்ற பகுதிகளைச் சேர்க்க வேண்டும்?
என்பன போன்ற கேள்விகளுக்கு வள்ளுவர் சூரியனைத் தான் இறைவனாக கூறினார் என்றுக் கூறுபவர்கள் விடையினைத் தந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.
அவ்வாறு விடையினைத் தராமல் வெறும் யூகங்களின் அடிப்படையில் வள்ளுவர் கூறிய கடவுள் சூரியன் என்று ஒருவர் கூறினார் என்றால் ஒன்று அவர் அறியாமையில் கூறுகின்றார் என்றோ அல்லது கருத்தினை திரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடோ கூறுகின்றார் என்றே தான் நாம் கருத முடியும்...!!!
சரி இப்பொழுது வள்ளுவர் சமணம் அல்லது பௌத்த சமயத்தைச் சார்ந்தவரா என்றே காணலாம்...!!!
தொடரும்....!!!
பி.கு:
திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க
2 கருத்துகள்:
திருக்குரளை எழுதியது திருவள்ளுவர் என்ற நபர் என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை. அனால் திரு வள்ளுவர் என்றழைக்க காரணம் அவர் வள்ளுவர் இனத்தை சார்ந்தவர் என்பதால். திருக்குரளை 1000 வருடங்களாக கட்டி காப்பாற்றி வருபவர்கள் வள்ளுவ பறையர்கள். இன்னமும் தமிழகத்தில் வள்ளுவ பறையர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது போன்றவற்றில் புலமை பெற்றிருந்தனர். வள்ளுவர் என்ற பெயரோ பட்டமோ இந்திய நிலப்பரப்பில் வேறு எந்த சாதிக்கும் இல்லை என்பது இங்கே குறிப்பிடப்பட விரும்புகின்றேன். சமகாலத்தில் நம்மிடம் இருக்கும் திருக்குரளை அளித்தவர் அயோத்தி தாச பண்டிதரின் குடும்பம். அவர் பறையர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிபீடியா வலைத்தளம் ஆதாரங்கள் இல்லாது எதையும் பதியாது.
பறையர் பற்றி ஆய்வு செய்த மானிடவியல் (Anthropology) அறிஞர்கள் தமது கீழ் உள்ள புத்தகங்களில் திருவள்ளுவரும் ஒளவையாரும் பறையர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு திருவள்ளுவரையும் ஒளவையாரையும் இந்த பக்கத்தில் சேர்க்கின்றேன்.
நூல் ஆதாரம் 01- : “Wikipedia, The Free Encyclopedia” (விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து - விக்கிபீடியா வலைத்தளம் (wikipedia.org) ஆதாரங்கள் இல்லாது எதையும் பதியாது என்பது அறிவு கூறும் நல்லுலகம் அறிந்த விடையம் இதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
“...Edgar Thurston (1855-1935), for example, claimed that their status was nearly equal to that of the Brahmins in the past. H. A. Stuart, in his Census Report of 1891, claimed that Valluvans were a priestly class among the Paraiyars, and served as priests during Pallava reign. Robert Caldwell, J. H. A. Tremenheere and Edward Jewitt Robinson claimed that the ancient poet-philosopher Thiruvalluvar was a Paraiyar … “
தமிழாக்கம் : “ஒரு காலகலத்தில் பறையர்களின் தகுதி பிராமணர்களுக்கு சரிசமமாக இருந்து”
(எட்கர் தர்ஸ்டன் மானிடவியல் அறிஞர் (Anthropology)
“வள்ளுவர்கள் (பறையர் பூசகர்கள்) பல்லவ அரசர்களுக்கு பூசாரிகளாக இருந்தனர்”
(எச் ஏ ஸ்டுவர்ட், 1891இன் அவரது குடிசன மதிப்பு அறிக்கையில் )
“திருக்குறளை எழுதிய பண்டைய தமிழ் தத்துவவாதி திருவள்ளுவர் ஒரு பறையர்” என்கிறார்கள்.
(ராபர்ட் கால்டுவெல், ஜே.எச்.ஏ திரமென்ஹீர் மற்றும் எட்வர்ட் ஜேவிட் ராபின்சன் போன்ற மானிடவியல் (Anthropology) அறிஞர்கள் )
“... Valluvars are believed to have been the priests of the Pallava kings before the introduction of Brahmins and for sometime after their arrival The exalted position of Valluvars in the social hierarchy during those times is indicated by inscriptions which refer to Valluvars in a respectful manner.Moreover, the Tamil saint Thiruvalluvar is believed to have been a member of this community. He has written the famous Tirukkural. and there is a subsect of Valluvars claiming descent from him … “
தமிழாக்கம் : வள்ளுவர்கள் (பறையர் பூசகர்கள்) பிராமணர்களின் அறிமுகத்திற்கு முன்னரும் அதன் பின் சில காலங்களும் பல்லவ அரசர்களுக்கு பூசாரிகளாக இருந்தனர். சமூகப் படிநிலையில் வள்ளுவர்கள் மிகவும் மதிப்புக்குரிய குலமாக அக்காலத்தில் இருந்தனர் என கல்வெட்டுகள் கூறுகின்றன. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் வள்ளுவர் குலத்தை சேர்ந்தவர்.
From Thiruvalluvar 1st poem (Kural) "AADHI" means not GOD more than GOD i.e. "BRAMMAM"
To indentify BRAMMAM just a name given thats all.
All qualities of BRAMMAM given to GOD but the GOD couldnot equal to BRAMMAM near to BRAMMAM
Still more to explain BRAMMAM spread all as GOD, SKY, SPACE, PRAMATMA, JEEVATMA etc
Another ex: KAMBAR writes about BRAMMAM without mentioning in his open poem
i.e. I or We bow to "WHO" Creates,Safeguard,Destroy and doing Stillness"
Before going to Kamba Ramayana Kambar writes a poem as "Kaduvul Vaalthu" but he didnot mean
GOD only the people at that of exist or later meantioned "BRAMMAM" as GOD
From Mylapore
k.r.homenaath
8939611519
கருத்துரையிடுக