இறுதிப் பகுதி - ஆன்மீகப் பொது உடைமை

"மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்" - லூக்.12:20

இவ்வுலகப் பொருளுக்காகவும், இவ்வுலக ஆட்சிக்காகவும் பைபிளைப் பயன்படுத்தும் ஐரோப்பியர், விளக்கைக் கையில் வைத்துக் கொண்டு, ஆழ்குழியில் விழும் குருடர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

இவ்வுலகப் பொருளுக்காகவும் செல்வாக்கிற்காகவும் ஐரோப்பியரின் மூளைச் சலவைப்படையின் ஊழியக்காரர்களாக வாழ்நாளை வீண் நாளாகக் கழிக்கும் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களைப் பார்த்து,

"நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று (மத் 7:13)

என்றும்

"நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்" (மத். 7:19)

கடவுளே மனிதனாக வந்து கற்றுக் கொடுத்தவற்றை ஊழியக்காரர் சிந்தனைக்குப் படைக்கின்றேன்.

" எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." (மத்: 23: 37-39)

"இது முதல் என்னைக் காணாதிருப்பீர்கள்" என்று வருத்தத்துடன் கூறியவர் மறைந்தே போய் விடவில்லை. திரும்பவும் காணப்பட்டார். உரிய காலத்தில் பரலோக இராஜ்யம் மலர்ந்தது.

பூலோக அரசின் ஆட்களாகிய யூதர்களாலும், ரோமர்களாலும் அது மறைக்கப்பட்டாலும், மன்னர் ஆட்சிக் காலம் மறைந்து மக்கள் ஆட்சிக் காலம் மலர்ந்து வரும் இக்காலத்தில் பரலோக இராஜ்யம், உலக மக்கள் ஆட்சியாக முழுமையடையப் போகிறது என்பதில் ஐயம் இல்லை.

பரலோக இராஜ்யமாகிய ஆன்மீகப் பொதுஉடைமை மலர்வதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா? என்னும் கேள்விக்கு "ஆம்" என்னும் பதில் வரலாற்று வழியில் கிடைக்கிறது.

ஆன்மீகத்தை மேலை நாடுகள் கையில் வைத்துக் கொண்டு ஆன்மீகத்திற்கு எதிரான தனியுடைமை நாடுகளாக இருக்கின்றன.

மனித நேயத்திற்குரிய பொது உடைமையைக் கையில் வைத்திருக்கும் கீழை நாடுகள், மனித நேயத்திற்கு எதிரான அடக்கு முறையால், அரசியல் பொது உடைமையைச் செயல்படுத்தி வருகின்றன.

இந்த இரண்டையும் இணைத்து அரவணைப்பவரே உலக இரட்சகராகிய நம்முடைய இயேசு கிருத்து.

இயேசு கிருத்து காட்டியுள்ள பரலோக இராஜ்யமாகிய ஆன்மீகப் பொது உடைமையை உலக மக்கள் அனைவரும் புரிந்துக் கொள்ளக்கூடிய முறையில் ஆறாவது அறிவுக்குரிய அறிவியல் வழியில் விளக்கும் ஊழியக்காரர்களின் படை புறப்பட்டால் வெற்றியடைவதற்கு காலம் கனிந்து இருக்கின்றது.

உலக மக்கள் அனைவரும் போரின்றி அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ விரும்பும் காலம் இது. சமாதானப் பிரபுவாகிய இயேசு கிருத்துவின் நற்செய்தியை ஆறாவது அறிவிற்குரிய அறிவியல் வழியில் புனித தோமாவின் நற்செய்திப் பணியின் விளைவாகிய தமிழர் ஆன்மவியல் அடிப்படையில் விளக்கிக்காட்டும் பொழுது அதை மறுப்பவர் எவரும் இருக்க இயலாது.

இன்று உலகில், பயங்கரவாதம் நடைபெறுவதற்குக் காரணம், மனித நேயமற்ற அடக்குமுறை, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள பெரும்பான்மையினர் அந்நாட்டிலுள்ள சிறுபான்மையினரை நியாயமில்லாமல் நசுக்குதல், நசுக்கப்படும் சிறுபான்மையினருக்கு நீதி வழங்க, அந்த நாட்டைத் தாண்டி உலக அளவில் நீதிமன்றம் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபை நாடுகளுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க முயலுகிறது. வீட்டோ அதிகாரமுள்ள ஐந்து நாடுகளின் கைப்பாவையாக ஐ.நா சபை செயல்படுவதைத் தவிர அதற்கு வேறு வழி இல்லை.

அகில இந்தியாவில் இருந்த 56 நாடுகளுக்கும் 56 படைகள் இந்தியாவில் இருந்தன.

இந்தியா ஒரே மக்களாட்சி நாடாக ஆனவுடன் 56 படைகள் மறைந்து ஒரு படை மட்டும் போதுமானதாயிற்று.

இதைப்போன்று உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ஒரே நாடு என்னும் நிலையில் உலக மக்கள் ஆட்சி அமைந்தால் இப்பொழுது படைகளுக்காகத் தனித் தனி நாடுகள் செய்யும் செலவுகள் அத்தனையும் மறைந்து விடும்.

அடுத்த கிரகத்திலிருந்து நம் உலகைப் பாதுகாக்கும் அமைப்பு மட்டுமே போதுமானதாகி விடும். உலகின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குக் காவல் துறை மட்டுமே போதுமானதாகி விடும்.

உலக மக்கள் ஆட்சி அமைந்தால் உலக மக்கள் அனைவருக்குமான உலக நீதிமன்றம் அமையும், உலக மக்கள் அனைவருக்கும் அப்பொழுது நீதி கிடைக்கும், பயங்கரவாதம் மறைந்து விடும்.

இதற்கு உழைக்கக்கூடியவர்கள் சமாதான கர்த்தராகிய இயேசு கிருத்துவின் ஊழியக்காரர்களே. இந்த ஊழியக்காரர்களுக்கு பயன்படும் கருவி தமிழர் ஆன்மவியல். இந்த ஊழியக்காரர்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். கிருத்துவைச் சேர்ந்தவர்கள், கிருத்து காட்டிய பரலோக இராஜ்ய வாழ்க்கை முறையாகிய ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறைக்கு உழைப்பவர்கள்.

அப்பொழுது உலகம் முழுவதும் ஒரே மனதையும் ஒரே மேய்ப்பரும் இருப்பார்.

அந்த மேய்ப்பர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிருத்து என்பதில் ஐயம் இல்லை.

எப்படி எனில்,

"காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்." (எபேசியர் 1: 9,10)

என்னும் வேத வசனங்களின் நிறைவேறுதலாக அது இருக்கும்.

பூலோகத்தில் நடைபெறும் பரலோக இராஜ்யத்தில்

"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்"
என்னும் நிலையும்
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்"

என்னும் நிலையும் இருக்கும். அனைவரும் இணைந்து ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையையுடைய பரலோக இராஜ்யத்தில் மகிழ்வுடன் வாழ்வர். இதற்கு நம்மை ஒப்படைப்போமாக.

முற்றும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

2 கருத்துகள்:

தோழர் முதலில் பைபிள்யை தொகுத்து வெளி இட்டவர் யார் என்று பதிவு செய்யுங்கள்... அவர்கள் எதற்காக தொகுத்து வெளி இட்டார் என்றும் ஆதரத்துடன் பதிவு செய்யுங்கள்.. உங்கள் பதிவுக்காக காத்து இருக்கிறேன்...

@ரூபன்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்து இருக்கின்றீர் தோழரே...:)வணக்கங்கள்

//முதலில் பைபிள்யை தொகுத்து வெளி இட்டவர் யார் என்று பதிவு செய்யுங்கள்//

ரோம ஆட்சியாளர்களின் பூலோக இராஜ்யத்தின் பிடியில் பரலோக இராஜ்யம் மறைக்கப்பட்டு மறைந்து கிடக்கிறது.

இந்த நிலைக்கு ஏற்ப புதிய ஏற்பாட்டின் 27 நூல்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுக்கப்பட்டு, ஒழுங்கு செய்யப்பட்டு, ரோமர்களின் பூலோக இராஜ்யத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப 27 புத்தகங்களுக்கும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

விவிலியத்தை, அதாவது பழைய ஏற்பாட்டினையும் புதிய ஏற்பாட்டினையும் தொகுத்து கொடுத்து இருப்பவர்கள் ரோமர்கள். காரணம் அரசியல். இதனை விரிவாகவே பல பதிவுகளில் கண்டு இருக்கின்றோம்...

http://vazhipokkanpayanangal.blogspot.in/2014/04/14.html

அப்பதிவுகளை முழுமையாக வாசித்து கேள்விகள் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்கள் நண்பரே...!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு