நீ நேசித்த தென்றல் மீது கோபம் கொள்கிறாய்
துவைத்த துணிகளை அவை தெரியாது மண் சேர்த்துவிடும் பொழுது!!
மழையிடமும் கோபம் கொள்கிறாய்
அவை உலர்ந்த துணிகளை தெரியாது நனைத்திடும் பொழுது!!
நீ நேசிக்கும் அனைத்தின் மேலும் ஒருகாலம் கோபம் கொள்கிறாய்
அவை உன் உழைப்பை வீணாக்கும் பொழுது!
பின் ஏனம்மா என்னை பார்த்து மட்டும் புன்னகைக்கிறாய்
நீ கஷ்டப்பட்டு துவைத்த துணிகளை
கஷ்டப்படாது அழுக்காக்கி கொண்டு வந்து நிற்கும் பொழுது!!!"
இப்படிக்கு!!!
- உன் அருமை மகள்