உனக்கென்ன,
ஏதும் அறியாது உலா போய்க்கொண்டிருப்பாய்
பூக்களின் மத்தியில் பூக்களின் இளவரசியாய் -
முழிப்பவன் நான் தானே,
மலர்கள் என்றும் நடப்பதில்லை
என்று கூறிய அறிவாளியாய்
"ஏன் இந்த மலர் மட்டும் நடக்கின்றது"
என்று உன்னைப் பார்த்துக் கேட்கும் குழந்தையின் முன்!!!

“முத்தங்கள் எதற்கடி... எண்ணிக்கொள்ளவா அல்லது எண்ணிக்கொல்லவா???” என்றேன்"
"ம்ம்ம்... எண்ணிக்கொல்வதை எண்ணிக்கொள்வதற்கு" என்றாள்.


பூக்கள் கண்டவுடன் புன்னகைக்கிறாயே!!!

உண்மையைச் சொல்

பூக்கள் பூப்பதால் புன்னகை பூக்கிறாயா

அல்லது நீ புன்னகை பூப்பதால் பூக்கள் பூக்கின்றனவா???" என்றேன்

"ஐயோ அசடு, உளராதே!!! யார் சிரித்தாவது பூக்கள் பூக்குமா???

இருந்தாலும்... பிடிச்சி இருக்கு!!!" என்று என் தோள் சாய்ந்தாய் நாணத்துடன்

பூரித்தது இதயம் சரி... ஆனால் வாடியல்லவா போய்விட்டன என் தோட்டத்து மலர்கள்!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு