சென்றப் பதிவில் எவ்வாறு தமிழர்கள் அவர்களைத் தவறாக சத்திரியர்கள் என்றுக் கருதிக் கொண்டு இருக்கலாம் என்று கண்டோம். இப்பொழுது நாம் இங்கே மற்றுமொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. ஒரு நாடார் இனப் பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது கிட்டிய விடயம் தான் அது.

இன்று நாடார்களும் தாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் தாங்கள் சத்திரிய வம்சத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் கருத்தினைக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் இங்கே சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால் சில காலங்களுக்கு முன்பு வரை நாடார் இன மக்கள் பஞ்சமர்கள் என்ற நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

பள்ளர் பறையர் சாணார் சக்கிலியர் என்று பஞ்சமர்களாக வைக்கப்பட்டு இருந்த மக்களுள் சாணார் என்ற மக்கள் தான் இன்று நாடார்கள் என்று அழைக்கப் பெறுபவர்கள். அப்படி இருக்கையில் பஞ்சமர்கள் என்று தாழ்த்தி வைக்கப்பட்டு இருந்த அவர்களும் தாங்கள் சத்திரியர்கள் என்றுக் கூறுகின்றனரே? அது எவ்வாறு என்று கேள்வியினை எழுப்பியப் பொழுது அதற்கு விடையாய் அப்பெரியவர் சொன்னது..."விசய நகர ஆட்சியில் தான் நாடார்கள் தாழ்த்தப்பட்டு பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டனர்" என்பதே.

அதாவது விசயநகர படை எடுப்பின் பொழுது இங்கே அரசாண்டுக் கொண்டு இருந்த தமிழ்த் தலைவர்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். அதனால் தான் சாணார்கள் பஞ்சம வரிசையில் இருந்தனர் என்பதே அவர் கூறிய விளக்கத்தின் பொருள் ஆகும்.

சரி...சரியான ஒரு விளக்கமாகத்தான் படுகின்றது. இதன் அடிப்படையில் பார்த்தோம் என்றால் பஞ்சம வரிசையில் வைக்கப்பட்டு இருந்த அனைவருமே அக்காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்து இருக்கலாம் தானே....பள்ளர்கள் பறையர்கள் போன்ற தமிழ் மக்களும் விசயநகர அரசின் கீழ் தாழ்த்தப்பட்டு இருக்கலாம் தானே...? இதையே அப்பெரியவரிடம் கேட்ட பொழுது அவரால் அதனை ஏற்க முடியவில்லை..."அது எப்படி தம்பி...அவங்க எல்லாம் முன்னாடியே தாழ்த்தப்பட்டவங்க அப்படின்னு சமயங்களில் இருக்கே..." என்றே அவர் கூறினார். சமயங்களில் இருந்தமைக்கு சான்றுகளை அவரால் தர முடியவில்லை இருந்தும் மற்ற மக்களும் விசயநகர ஆட்சியின் காலத்தில் தாழ்த்தப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணத்தினை அவரால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பிரச்சனையே அதில் தான் இருக்கின்றது.

இன்றைக்கு தங்களை ஆண்ட இனம் என்றுக் கூறிக் கொள்ளும் மக்களுள் பெரும்பான்மையான மக்கள் தங்களின் சாதிப் பெருமையினைப் பேசுவதற்கே அவ்வாறு கூறுகின்றனர். அவர்களைப் பொறுத்த வரை அவர்கள் சாதி உயர்ந்த சாதி...அதே சமயம் மற்ற சாதிகள் தாழ்ந்த சாதிகள். அவ்வளவே.

ஒருவன் தன்னை சத்திரியன் என்று எப்பொழுது கூறுகின்றானோ அவன் அப்பொழுது தன்னை விட மேலாக பிராமணன் இருக்கின்றான் என்றும் தனக்கு கீழாக சூத்திரன் என்று ஒருவன் இருக்கின்றான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். மேலும் மனிதர்களைப் பிறப்பால் பிரிக்கும் மனு நீதியையும் அவன் ஏற்றுக் கொள்கின்றான். இந்த நிலைப்பாட்டால் தமிழர்களுக்கோ அல்லது தமிழ் நாட்டுக்கோ யாதொரு நலனும் கிட்டப் போவதில்லை...மாறாக சாதிச் சண்டைகள் வன்முறைகள் நிம்மதி இன்மை போன்றத் தீமைகள் தான் கிட்டப்பெரும்.

இந்த நிலைப்பாடு, சாதி ஏற்றத்தாழ்வு என்றால் என்ன...நமது சமயங்கள் அதைத் தான் கூறுகின்றனவா...தமிழனின் வரலாற்றில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்தனவா என்பதனைப் போன்ற விடயங்களை அறியாமல் அறியாமையிலேயே தமிழன் இருக்கின்றனத் தன்மையினால் ஏற்படுகின்ற ஒன்றாகும்.

உதாரணத்திற்கு...இன்று மக்களிடையே சில கேள்விகளை வையுங்கள்...

உலகின் முதல் மொழி என்ன என்றுக் கேட்டால் சமசுகிருதம் என்றுக் கூறுவார்கள்...வேதங்கள் என்ன என்றுக் கேட்டால் அவை ரிக், யசுர்,சாம அதர்வண வேதங்கள் என்றுக் கூறுவார்கள்...இறைவன் மனிதனை எத்தனைப் பிரிவுகளாகப் பிரித்து இருக்கின்றான் என்றுக் கேட்டால் நான்கு...அவை பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்றுக் கூறுவர். இவைகள் சரியானவைகளா இல்லையா என்பதனைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது...அவர்களுக்கு அவ்வாறு தான் சொல்லித் தரப் பட்டு இருக்கின்றது...அதனால் அதை அவர்கள் கூறுகின்றனர்.

இதே நிலையில் தான் இன்று தாங்கள் ஆண்ட இனத்தவர்கள்...சத்திரியர்கள்... என்றுக் கூறிக் கொள்ளும் தமிழர்கள் இருக்கின்றனர். நிற்க.

தமிழ் இனம் என்பது ஒரு மாபெரும் இனம்....மிகப்பெரிய வரலாறு...பண்பாடு...நாகரீகம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கிய/விளங்கும் ஒரு இனம் அது. அத்தகைய நாகரீகத்தை வெறும் மன்னர்கள் மட்டுமா கட்டி இருப்பார்கள். இல்லை...!!! பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், வீரர்கள், கலைஞர்கள், சான்றோர்கள் போன்ற மேலும் பல சிறந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் தமிழ் நாகரீகம். அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு இனம் தமிழ் இனம்.

அப்படிப்பட்ட ஒரு இனம் இன்று ஒன்றும் இல்லாது கிடக்கின்றது. அது கண்ட சிகரங்கள் வெறும் வரலாறாய் உறைந்துக் கிடக்கின்றது. இந்நிலையில் தான் தமிழ் இனத்திற்கு உரிமைக் கொண்டாடும் குரல்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்று பெரும்பாலான சாதிகள், 'நாங்கள் ஆண்ட இனம்' என்றுக் கூறிக் கொண்டு சோழனுக்கும் பாண்டியனுக்கும் உரிமைக் கொண்டாடுகின்றனவேத் தவிர எந்த சாதியும் நாங்கள் அறிஞர்களாக இருந்தவர்கள்...ஆன்மீகச் சான்றோர்களாக இருந்தவர்கள்...என்று உரிமை பாராட்ட பெருமளவில் முன்னே வருவது இல்லை.

ஆண்ட இனத்திற்குத் தான் அத்தனைப் போட்டியும்... !!! ஏன் அரசர்களும் வீரர்களும் மட்டும் சேர்ந்து உருவாக்கிய நாகரீகமா தமிழ் நாகரீகம்? இல்லையே!!! அப்படி இருக்கையில் ஆண்ட இனத்திற்கு மட்டும் போட்டி இருப்பது எதனால் என்றே நாம் கண்டோம் என்றால் விடையாய் வருவது இன்றைய சமூகத்தின் பொது நிலையான எண்ண ஓட்டமே ஆகும்.

ஒருவன் பத்து பேரினை அடித்தான் என்றால் அவன் வீரன். அவன் தான் பெரியவன். அப்படி வீரத்துடன் இருந்தால் தான் கௌரவம்...அது தான் அவன் குலத்திற்கு...சாதிக்கு அழகு...பெருமை. இந்த எண்ண ஓட்டத்தினில் தான் இன்று பெரும்பாலான சாதிகள் ஆண்ட சாதிகள் என்ற பட்டத்திற்கு போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன. 'ஆள்வது' என்ற ஒரு விடயத்தினை மாபெரும் பொறுப்பாகப் பார்க்காமல் வெறும் பெருமையாகக் காணும் நிலை மட்டுமே அவர்களிடையே பெருவாரியாக இருக்கின்றது. 'வீரப் பரம்பரைக்குத்' தான் அனைத்துப் போட்டியும் இருக்கின்றவே ஒழிய 'அறிஞர் பரம்பரை'...'ஆன்மீகப் பரம்பரை' போன்றவைக்கு போட்டிகள் பெருவாரியாக இங்கே இருப்பதில்லை. இது ஒரு மிகவும் மோசமான நிலை ஆகும்.

எடுத்துக்காட்டுக்கு புலிகளை எடுத்துக் கொள்வோம்...ஈழத்தில் அவர்கள் பல பிரிவுகளைக் கொண்டு பல கடமைகளை செய்து வந்தனர். அவைகள் அனைத்தும் இன்று ஒடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் மீண்டும் முன்னேறி வரும் நிலையில்...அவர்களுக்குள்ளேயே 'ஏய் நான் வான்புலி...நான் உயர்ந்தவன்...நீ கடற்புலி...நீ தாழ்ந்தவன்' என்று பிரிவினைகளைக் கொண்டு இருந்தால் உண்மையான எழுச்சி என்பது அங்கே இருக்குமா? இருக்காது தானே. அதைப் போன்று தான் தமிழகத்திலும்...தோற்கடிக்கப்பட்டு இருக்கும் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக எழவில்லை என்றால் தமிழ் இனம் இன்று இருக்கும் நிலையிலேயே தான் தொடர்ந்து இருக்கும்.

தமிழர்களின் அரசர்கள் மட்டும் கொல்லப்படவில்லை...ஆன்மீகத் தலைவர்களும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். தமிழர்களின் அரசுகள் மட்டும் அடிமைப்படுத்தப்படவில்லை அவர்களின் அறிவியலும் சரி ஆன்மீகமும் சரி சேர்ந்தே தான் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் தமிழ் இனம் விடுதலைப் பெற வேண்டும் என்றால் அடிமைப்படுத்தப் பட்ட அனைத்துத் துறைகளும் விடுதலைப் பெற வேண்டும். அனைத்துத் துறைகளும் விடுதலைப் பெற அனைத்து தமிழ் இனங்களும் ஒன்றிணைய வேண்டும். சாதி ஏற்றத்தாழ்வு என்பது தமிழ் மண்ணுக்கு உரியதல்ல என்றும் நான் வீரன் என்றால் அவன் அறிஞன் என்ற சகோதர நேசமும் தெளிவும் வர வேண்டும்...இத்தெளிவு வரலாற்றினைப் பார்த்தால் மட்டுமே கிட்டும்.

நாடார்கள் என்பவர்கள் சாணார்கள் என்று கண்டோம் அல்லவா. அந்தச் 'சாணார்' என்றச் சொல் 'சான்றோர்' என்றச் சொல்லின் திரிபே ஆகும்.

சான்றோர்--->சான்றார்--->சானார் என்றே மருவி உள்ளது. தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்ற ஒரு கூற்றும் இங்கே கருதத்தக்கது.

திருவள்ளுவர் பறையர் சாதியைச் சார்ந்தவர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வள்ளுவ சாதி என்றே ஒரு சாதி இருக்கின்றது...அதுவும் தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருக்கின்றது. சைவ கோவிலான சிதம்பரத்தில் பூசை செய்து வந்த நாயனார் பறையர் இனத்தைச் சார்ந்தவர் என்பதும் அவர் கொலை செய்யப்பட்டார் என்பதும் வரலாறு.

இதனைப் போன்று ஒவ்வொரு தமிழ் இனத்திற்கும் மிகப் பெரிய வரலாறு இருக்கின்றது...அது மறைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழர்கள் விடுதலைப் பெற வேண்டும் என்றால் அவ்வரலாற்றினை நாம் ஆய்வு செய்து மக்களை ஒன்றிணைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் என்று எவருமே தமிழகத்தில், தமிழ் கலாச்சாரத்தில் கிடையாது. ஏன் பிறப்பின் அடிப்படையில் பிரிவுகளே தமிழகத்தில் கிடையாது...தொழில் அடிப்படையான பிரிவுகள் தான் தமிழர்களின் பிரிவுகள். இதனை ஆய்வுகள் நிச்சயம் உறுதி செய்யும்.

இதனை உணராது நான் ஆண்ட சாதி அவன் தாழ்ந்த சாதி என்று தமிழர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டை இட்டுக் கொண்டு இருந்தனர் என்றால் தொடர்ந்து அடிமையாகவே நமக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருந்து விட வேண்டியது தான்....உண்மையிலேயே தமிழ் இனத்தினைக் கட்டி எழுப்பிய மக்கள் நம்மை அப்பொழுது நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) முந்தையப் பதிவுகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |

22 கருத்துகள்:

naadaa= virumpathey,,naadar=virumpathakathavar endrum porulpadum padi naan vaasithullen,avarkal kerala matrum enaya pagukuthil irunthum vanthathal avarkalai nadakoodathu enpatharkaga naadar endru sonnathagavum thagaval undu.

actually they adopted the name naadaar in the meaning of 'naadaan' - naatinai aandavarkal. they adopted the name because they felt the name saanaar was disrespectful.

they felt so because they didn't know the true meaning of the word saanaar.

saanaar means englightened people....and it was not by birth.

thank you. contact me. plesae. i will discuss you. my thinking is same to you.my no:9551317417.

Jathi veriya thoondathinka government .News laye nadar ennani detail irukku poi paarunka

Jaathi verriya eerpaduthathinka government news la nadar na ennani detail irukkutu adutha jaathiya thazhthi naanka onnum enkala usathala naanka yaaruni sollurom avvalavu thaan..

@Jega Jegan,

//Jaathi verriya eerpaduthathinka//

I Don't know what aspect of this post makes you think in this Way...And i feel u may have understood the post...so Please let me know wat part made u feel that it induces 'Jaathi veri' and i shall explain...

Please read the Post Carefully Thozhare!!!

According to Tamil Lexicon "Ezham" means "Toddy". The "Ezhavar" means, the people who involved in "Toddy and Palmyra/Coconut Tree related activity. The word "Nadar" is in practice from very very later period onwards. The earlier name of the "Nadars" was called as "Ezhavar", which are found in valid/authentic copper plates and inscriptions published by the authority.


The Vellore palayam copper plate of the Pallava King "Nandivarman-III" dates back to 8th century A.D, mentions about the "Ezhavas" and their tree climbing profession. Line 61 & 62 of the copper plate :-


"Thengum Pannaiyum evargal manamindri Ezhavar eraperadaragavum".


Which means, in Brama deiyam lands without permission of the authority, the tree climbers "Ezhavar" not to climb in the trees of coconut and palmyra".


Similarly, the 10th & 11th century copper plates such as "Easalam Copper Plates", "Thiruvalangadu Copper Plates" pertaining to the Chola King Rajendra Chola-I and the recent discovered, the India's biggest copper plate "Tiruvindalur Copper Plate" pertaining to the Chola King Rajendra Chola-II very cleary speaks about "Ezhavar and their tree climbing profession".


The "Enathi Nayanar" one of the 63 nayanmars referred in literature by Nambiandar Nambi as "Ezha Kula Deepan" hails from the "Nadar community". The well known 12th century A.D. poet "Sekkilar" also denotes the same in Periyapuranam hymns.


In the 1374 A.D. inscription, (South Indian Inscriptions Vol-VIII No.400) refers "Nadar community" name as "Sanar". Accordingly, the Kanyakumari (Thovalai) inscription refers "Nadar community" name as "Sanar" (Kanyakumari Inscriptions Vol-5, No.1969/33).


The "Thirumuruganpundi copper plate" of 16th century A.D, released by Tamil Nadu Archaeology Department, speaks about "Sanar and their tree climbing history". Similarly the, Tamil Nadu Archaeology Department released "Tharangampadi Oolai Avanam" speaks in detail about "Sanar and their tree works".


In the hymns of "Kabilar Agaval" Nadars are mentioned as "Kaveripumpattanathil Kalveliangar cheriyil Sanaragathanil uruvai valarthanal". This hymns refers "Sanar and their toddy works"


The Kottaiyam Siriyan Christian Copper Plate-I speaks about "Sanar and Ezhavar" as synonyms. Many of the cholas inscriptions/copper plates refers about "Ezham Putchi", one of the levy collected from the "Toddy Tappers" (i.e) the "Sanars".


The "Idangai Valangaiyar Varalaru" of 18th century A.D, published by the Tamil Nadu Government Oriental Manuscripts clearly speaks about "Sanar and their tree climbing works" in the page 81 & 82. In that, the title "Nadar" used by very few people.


In the "Thattaparai Vanitham Pattaiyam" copper plate of the year 1780 A.D, the "Sana Nadargal" is mentioned. In the "Virudunagar District Inscriptions : Vol-I, published by Tamil Nadu Archaeology Department, from inscriptions No.296/2005 to 302/2005, in the year between 1830 to 1886, the title "Nadar" is mentioned with out saying "Sanar".


So, from the above mentioned records from 8th century onwards, the Ezhavar/Sanar/Nadar community people involved in their profession only and not as a rulers. History is true fact. The word "Nadar" is of later origin, it means "a country man" but not a ruler.

எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார் பறையர்
இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா?
ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர்
பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை
புறக்கணித்து வருகின்றார்கள்

திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் BC ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை. இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.

ஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்
Christian church untouchablity
http://marayar.blogspot.in/

நன்றி சிறந்த பதிப்பு

சான்றோர் மருவி சாணார் ஆனது
எனது முன்னோர்களின் ஒரு அரசு பதிவில் இது உள்ளது அதில் குறிப்பிட்டிருப்பது
வலங்கை உயிர் கொண்டார்கள் சத்திரிய குல சான்றோர் மக்கள் வழி
இந்த ஆவணம் என்னிடம் உள்ளது

சான்றோர்/சாண்றார்/சாணார் என மறுவி வந்ததாக கூறுவதால் சாண்றோர் என்றால் அறிவில் உயர்ந்தவர்கள் என்று பொருள் உள்ளது. . . இதன் பொருட்டு முந்தைய நூல்கள் பலம் பெரும்காப்பியங்கள் என எதிலாவது சாதி அடிப்படையில் நாடார்களை பற்றி குறிப்பிருந்தால் பதிவு செய்யுங்கள். . . .

//ந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.//

இளையராஜா = பறையர்
இளையதளபதி ஜோசப் விஜய் = பறையர் - நாடார் கலப்பு
நடிகர் ஜெய் = தேவர் (மியூசிக் டைரக்டர் தேவா தம்பி மகன்)
பார்த்தீபன் = ஆசாரி
மியூசிக் டைரக்டர் தேவா = தேவர்
கிரானைட் குவாரி.சகாயம் = நாடார் கிறிஸ்தவர்

பறையர்கள் களபிறர் ஜாதிகளில் ஒருவர்கள். ஆதியில் மாந்திரிகம் போன்ற சிலவேலைகளை செய்தவர்கள். அதனால் அவர்களுக்கு மறையர் என்ற பெயரும் உண்டு. மேலும் திர்வள்ளுவர் காலத்தில் களபிறர்கள் தமிழ் நாட்டில் இல்லை. பறையர்களில் வள்ளுவ பண்டாரம் என்ற ஜாதிக்கும் வள்ளுவருக்கும் சம்பந்தம் இல்லை.

நூல் ஆதாரம் 02- : “Encyclopedia of Global Studies” (உலகளாவிய ஆய்வுகள் கலைக்களஞ்சியம்)
“..Encyclopedia of Global Studies” “...பக்கம் 1290-ல் by Helmut K. Anheier, PhD, is President and Dean at the Hertie School of Governance, and holds a chair of sociology at Heidelberg University, Mark K. Juergensmeyer … “
தமிழாக்கம் : பக்கம் 1290-ல் திருக்குறளை எழுதிய தமிழ் புலவரான திருவள்ளுவர் ஒரு பறையர் என குறிக்கப்பட்டுள்ளது.


நூல் ஆதாரம் 03- : “Encyclopaedia Britannica” (கலைக்களஞ்சியம் பிரிட்டானிகா)
The following is a description of "Paraiyars" originally appearing in Volume V20, Page 802 of the Encyclopaedia Britannica 1911.The name can be traced back to inscriptions of the 11th century, and the "Pariah poet," Tiruvalluvar, author of the Tamil poem, the Kurral, probably lived at about that time
தமிழாக்கம் : 11ம் நூற்றாண்டின் எழுத்துக்களில் இருந்து “பறைய புலவர்” என அழைக்கப்படும் திருவள்ளுவர் அந்த காலகட்டத்திலேயே வாழ்ந்திருக்கலாம் என அனுமானிக்கலாம்.
(குறிப்பு : பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா; Encyclopædia Britannica) உலகிலேயே மிகப் பழையதும், பெரு மதிப்புடையதுமான ஆங்கில மொழிப் பொதுக் கலைக்களஞ்சியம் ஆகும். இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைக்குரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் எனக் கருதப்படுகின்றன. இது ஸ்காட்லாந்து அறிவொளியின் (Socttish enlightenment) விளைவாக உருவாக்கப்பட்டது.)நூல் ஆதாரம் 04- : Castes and Tribes of Southern India (தென்னிந்திய குலங்களும் குடிகளும்)
எட்கர் தர்ட்ஸனின் ( Edgar Thurston – “Castes and Tribes of Southern India” ) “தென்னிந்திய குலங்களும் குடிகளும்” என்ற நூல் பல வரலாற்று ஆய்வாளர்க்குக்கு மூல ஆய்வு நூல் போல் பயன்பட்டு வருகிறது. இதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“.... Valluvan -The Valluvans are summed up by Mr. H. A. Stuart as being " the priests of the Paraiyans and Pallans. Tiruvalluvar, the famous Tamil poet, author of the Kura', belonged to this caste, which is usually regarded as a sub-division of Paraiyans. It appears that the Valluvans were priests to the Pallava kings before the introduction of the Brahmans, and even for some time after it …“

(Volume 1 Edgar Thurston, Kandur Rangachari Asian Educational Services, 1987 - Caste - 397 pages)
தமிழாக்கம் : திரு எச் ஏ ஸ்டூவர்ட் - பறையர்களின் ஒரு பிரிவினரான வள்ளுவர்கள் பறையர், பள்ளர் பூசகர்கள் பிராமணர்களின் அறிமுகத்திற்கு முன் பல்லவ அரசர்களுக்கு பூசாரிகளாக இருந்தனர். குறளை எழுதிய தமிழ் புலவரான திருவள்ளுவர் வள்ளுவ சாதியை சேர்ந்தவர். வள்ளுவ சாதி பறையர்களின் ஒரு உட்பிரிவு.

நூல் ஆதாரம் 05 - : “Dialogue and History: Constructing South India” (உரையாடல் மற்றும் வரலாறு : தென் இந்தியாவின் மீள்ளாய்வு)

“…Thiruvalluvar, the Tamil author of the Thirukkural, the great Tamil poetess Auvaiyar, and the architect of the classical city of Hastinapur had all been Paraiyars…“
(1795–1895. By : Eugene F. Irschick. university of california press)

தமிழாக்கம் : திருக்குறளை எழுதிய தமிழ் புலவரான திருவள்ளுவர், ஒளவையார் ,பாரம்பரிய ஹஸ்தீன்பூர் ( the classical city of Hastinapur ) நகரத்தை உருவாக்கியவர் ஆகிய அனைவரும் பறையர்களே

“…In his long statement, Tremenheere also argued, seeking to recreate a former age, that “the Pariahs were not always in their present condition of degradation. The most popular poem,” he wrote, “ever produced in the Tamil country, the Kural, was written by a Pariah named Tiruvalluvar ‘the divine Pariah’ as he has been called.” In undertaking these tasks, Tremenheere was simply one of thousands of individuals who wanted to eliminate the previous “dishonest” and “inappropriate” signification of the paraiyars …“

(1795–1895. By : Eugene F. Irschick. university of california press)

தமிழாக்கம் : முழு தமிழ் வரலாற்றினதும் பிரசித்தி பெற்ற தலைசிறந்த நூல் திருக்குறளை எழுதிய தமிழ் புலவரான திருவள்ளுவர் ஒரு பறையர் “ஒரு தெய்வ பறையர்”.நூல் ஆதாரம் 06 - : “A Comparative Grammar of the Dravidian Or South-Indian Family of Languages” (தென் இந்திய மொழிக் குடும்பத்தின் ஒரு ஒப்பீட்டு இலக்கணம்)

issues related to the Paraiyan/Valluvan identity to the forefront. Robert Caldwell, the author of the famous work called “A Comparative Grammar ofthe Dravidian, or South Indian Family of Languages (1856)”, expressed the opinion that the-Kural was the oldest text and that Valluvar was a Paraiyar.

தமிழாக்கம் : புகழ் பெற்ற மானிடவியல் (Anthropology) அறிஞர் ஆயர் ரொபர்ட் கால்ட்வெல் (Bishop Robert Caldwell) - “குறள் மிகவும் பழமை வாய்ந்த தமிழ் நூல், தமிழ் புலவரான திருவள்ளுவர் ஒரு பறையர்”

By Bishop Robert Caldwell “A Comparative Grammar of the Dravidian Or South-Indian Family of Languages - 1856 ”)
The commentary of Parimelaragar on the Kural of Tiruvalluvar (supposed to have been a Pariar) (Pareiya, see Appendix ), (yet the acknowledged and deified prince of Tamil authors) is the most classical production written in Tamil by a Brahman.

திருவள்ளுவர் குறள் மீது பரிமேலழகரின் கருத்து அதாவது (ஒரு பறையர் ஆக இருந்ததாக வேண்டும்) (இன்னும் ஒப்புக் கொள்ளப்பட்ட தமிழ் புலவர்களின் புனிதர்) பிராமணரால் தமிழில் எழுதப்பட்ட மிக பாரம்பரிய படைப்பு.

the author of the 'Kurl' is known only as Tiruvalluvar, 'the sacred Valluvan' or Pareiya priest. This is one of Tamil country, and of considerable merit, are ascribed to a sister of Tiruvalluvar, a Pareiya woman ! Auveyfir's real name, like that of her brother, is unknown,—Auvei or Auveiydr, signifying ' a mother,’ venerable matron.'

'குறள்' ஆசிரியர் திருவள்ளுவர், மட்டுமே 'புனித வள்ளுவன்' அல்லது பறைய பூசாரி என அறியப்படுகிறார். இந்த தமிழ் நாட்டில் ஒருவருக்கு மட்டுமே திருவள்ளுவர் சகோதரிக்கு தகுதி உண்டு அது ஒரு பறைய பெண். ஔவையார் உண்மையான பெயர், அவரது சகோதரர், என்பது போன்ற விஷயங்கள் தெரியவில்லை. ஔவை அல்லது ஔவையார், 'ஒரு தாய்,' மதிப்பிற்குரிய வயதான மணமானவள்.

நூல் ஆதாரம் 07 - : “Nandanar's Children: The Paraiyans' Tryst with Destiny, Tamil Nadu” (நந்தனார் குழந்தைகள்: பறையர்களின்’ நம்பிக்கை விதி, தமிழ்நாடு)

“….In his (Bishop Robert Caldwell) work on the Tinnevelly he state, "Tiruvalluvar(a name which the scared Paraiya priest) is the esteemed prince of Tamil poets; but having been a Paraya.

it was not without miracle wrought in his favour that he was allowed a place on the much-coveted bench.

Robert Caldwell like many of his conemporaies interpreted the valluvan legend form the anti brahmin standpoint. Robert Caldwell tried to highlight the fact that the Paraiyans were original Tamils.


தமிழாக்கம் : கால்டுவெல் - திருவள்ளுவர் (புனித பறையர் பூசாரி) தமிழ் கவிஞர்களின் மதிப்பிற்குரிய முன்னோடி ஆனால் ஒரு பறையர். மற்றும் அவரை ஒரு இடத்தில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆதரவாக செய்தவைகளை அதிசயம் என்றும் கூட சொல்லலாம் என்கிறார்.

கால்டுவெல் போன்ற பல அவரது சமகாலத்தவர்கள் (மானிடவியல் (Anthropology) அறிஞர்கள்) வள்ளுவர்கள் காலம்காலமாக பிராமணர் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து வருபவர்கள் என விளக்கம் கொடுத்துள்ளனர். மற்றும் பறையர்கள்தான் அசல் தமிழர்கள் என்ற உண்மையை வெளிக்காட்டினார்
In one of his essays entitled "Are the Pariars of southern India Dravidans, he argued that they were Adi-Dravidans.

Robert Caldwell also argued that the myth centering around the fact that the Paraiyans were the result of miscegenation with Brahmins was false .Cardwell emphasized that such a myth has been propagated by the Brahmins to preserve their superiority.

தமிழாக்கம் : கால்டுவெல் - "பறையர்கள் தென்னிந்திய திராவிடர்களா” என்ற தலைப்பில் தனது கட்டுரை ஒன்றில் “பறையர்கள் தென்னிந்திய ஆதி திராவிடர்கள்“ (திராவிடர்களுக்கு மூத்தவர்கள்) என்று கூறகிறார்.

கால்டுவெல் - பறையர்கள் பிராமணர்களுடன் இனக்கலப்பின் விளைவாக வந்துதிருக்கலாம் என்ற கட்டுக்கதை தவறானது என்று திட்டவட்டமாக மறுக்கிறார். இது போன்ற ஒரு கட்டுக்கதை பிராமணர்கள் அவர்களின் மேன்மையை பாதுகாக்க அவர்கள் மூலம் வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது என்று வலியுறுத்தி கூறுகிறார்.

Caldwell's opinions also found expression in the writings of his other British contemporaries. In 1873, a British writer, Edward Jewitt Robinson, had observed, "That he [meaning Tiruvalluvar] was a Pariah no one doubts." At the same time,missionaries like Charles Gover also strongly believed that the Brahmanical element that had been deliberately imposed on the Tirukkural had to be eliminated and that Tiruvalluvar needed to be recognized as a member of a low Dravidian caste.

தமிழாக்கம் : கால்டுவெல்லின் கருத்துக்களை அவருடைய இதர பிரிட்டிஷ் சமகாலத்தவர்களின் எழுத்துக்களில் வெளிப்படுவதை கணக்கூதிதாக உள்ளது.

1873 ஆம் ஆண்டில், ஒரு பிரிட்டிஷ் மானிடவியல் (Anthropology) அறிஞர், எட்வர்ட் ஜெவிட் ராபின்சன், திருவள்ளுவர் ஒரு பறையர் யாருக்கும் இதில் சந்தேகம் வெண்டாம் என்று அடித்து கூறுகிறார்.

அதே நேரத்தில், சார்லஸ் கோவர் போன்ற மிஷனரிகள் உறுதியாக நம்பினார்கள் அதாவது வேண்டுமென்றே திருக்குறள் மீது பிராமணிய சாயம் பூசப்பட்டது இதை அழித்தாக வேண்டும் மற்றும் திருவள்ளுவர் ஒரு குறைந்த திராவிட சாதி உறுப்பினராக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

In August 1889,Lee Warner, the collector of Chingleput also sought to recreate the forgotten past of Paraiyan history .He argued that the Paraiyans were not always "in thier present state of degradation". He referred to the achievements of Tiruvalluvar,"the divine Pariah" the well-known compose of the Tamil Kural

தமிழாக்கம் : ஆகஸ்ட் 1889 இல், லீ வார்னர், செங்கல்பட்டு கலெக்டர் மறக்கப்பட்ட பறையர் வரலாறு பற்றி பேசும் போது பறையர்கள் இப்போது இருக்கும் நிலையை விட அவர்கள் ஆரம்பகாலத்தில் மிகவும் உன்னதமான நிலையில் இருந்தனர். எடுத்துகாட்டாக திருக்குறள் தந்த தெய்வீக புலவர் திருவள்ளுவர் ஒரு பறையர் என்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம் என்கிறார்.

Subsequently, the English officials like Tremenheere indulged in attempts to unravel the hidden origins of the twelfth century Tamil poet saint Tiruvalluvar. It was pointed out that Tiruvalluvar would not have attained fame and honour, had not the Valluvans enjoyed a
respectable position in the ancient society. In order to substantiate his views, Tremenheere referred to Tiruvalluvar as the ‘divine Pariah’

தமிழாக்கம் : அதனைத் தொடர்ந்து, ரிமேன்ஹெர் போன்ற ஐரோப்பிய மானிடவியல் (Anthropology) அறிஞர்கள் தமிழ் புலவர் திருவள்ளுவர் பூர்வீகம் பற்றி மறைந்திருக்கும் உண்மையை அவிழ்பதில் முயற்ச்சி செய்தார்கள். அதாவது அவர்கள் பார்வையில் திருவள்ளுவர் புகழ் எட்டாதற்கு காரணம் தெய்வீக புலவர் திருவள்ளுவர் ஒரு பறையர் என்பதால் தான் என்று சுட்டிக்காட்டினார்கள்.
British officials such as Tremenheere and missionaries like Rev. Clayton and Rev. T.B. Pandian, in the course of this debate, tried to reconstruct the history of Paraiyans. They argued that the Paraiyans were the original Dravidian inhabitants of South India and that they enjoyed a higher social status, which was exemplified in the life and achievements of Tiruvalluvar, the Tamil poet laureate

தமிழாக்கம் : Tremenheere, Rev. Clayton and Rev. T.B. Pandian போன்ற மானிடவியல் (Anthropology) அறிஞர்கள், பறைர்கள்தான் தென்னிந்தியாவின் அசல் திராவிட குடிகள் என வாதிட்டார்கள். அவர்கள் சமூகத்தில் உயர் தரத்தில் இருந்தார்கள். எடுத்துக்காட்டாக தமிழ் கவிஞரான திருவள்ளுவரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் கூறலாம் என்கிறார்கள்.


நூல் ஆதாரம் 08- : “Anti-Brahmanical and Hindu nationalist
reconstructions of Indian prehistory” (இந்திய முந்திய வரலாற்றில் -பிராமணிய எதிர்ப்பு மற்றும் இந்து மதம் தேசியவாத மறுகட்டுமானங்கள்)

In this connection it was then of particular interest that Tiruvalluvar, the author of the Tirukkural was identified as a Paraiyar in Tamil tradition (as, incidentally, were also other famous ancient Tamil writers, e.g., Auvaiyar; cf. Pope 1886: i–ii, x–xi)
தமிழாக்கம் : திருவள்ளுவர், திருக்குறள் ஆசிரியர் ஒரு பறையர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.( அதேபோல் மற்ற பிரபலமான ஒரு பண்டைய தமிழ் எழுத்தாளர்கள், எ.கா, ஒளவையார் )
“….By Michael Bergunder Universität Heidelberg…”

நூல் ஆதாரம் 09 - : “The Paraiyan, and the Legend of Nandan” (பறையரும் நந்தன் புராணமும்)

“….He quotes an unpublished Vatteluttu inscription, believed to be of the ninth century, in which it is noted that "Sri Valluvam Puvanavan,the Uvacchan(or temple ministrant),will employ six men daily, and do the temple service." The inference is that the Valluvan was a man of recognised priestly rank, and of great influence. The prefix Sri is a notable honorific. By itself this inscription would prove little, but the whole legendary history of the greatest of all Tamil poets,Tiruvalluvar, "the holy Valluvan," confirms all that can be deduced from it..”

தமிழாக்கம் : பறையர் என்பதிலிருந்துதான் முழு தமிழ் வரலாற்றினதும் பிரசித்தி பெற்ற தமிழ் புலவரான "திருவள்ளுவர்" (Tiruvalluvar ) “புனித வள்ளுவன்” (the holy Valluvan) என்ற பெயர் வந்திருக்க முடியும் என்பதை உறுதிபடுத்துகிறது.

நன்று

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி