உடலும் உயிரும் எவ்வாறு இயங்குகின்றன என்றே நாம் கண்டு வருகின்றோம்...!!!


உலகமும் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. ஒரு பொழுதும் அது ஓய்வுக் கொண்டு இருப்பதில்லை. அதுவும் சிற்றுடலைப் போன்றே பல விதிகளின் படி செம்மையாக இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இன்றைய அறிவியல் இதனைப் பற்றித் தான் இயங்கவியல் என்றுக் கூறுகின்றது. உலகம் ஒரு சடப் பொருள் அல்ல...அது இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. அவ்வுடலுக்கென்று பல்வேறு பணிகள் இருக்கின்றன...அவைகள் செம்மையாக நடைப்பெற்றுக் கொண்டு இருக்கின்றன...எப்பொழுது அப்பணிகளில் பிரச்சனைகள் நிகழ்கின்றதோ அப்பொழுது அதற்கேற்ற பின்விளைவுகள் நிகழப் பெறுகின்றன. இருந்தும் உலகமும் தன்னிச்சையாக மீண்டும் அனைத்தையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளத் தான் செய்கின்றது.

எவ்வாறு ஒரு உடல் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்கின்றதோ அதனைப் போன்றே உலகும் அதனை அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிகளைச் செய்யும் வல்லமையைப் பெற்று இருக்கின்றது. இது தான் இயற்கை. இவை அனைத்தும் விதிகளின் படியே நிகழ்கின்றது. ஆனால் சிற்றுடலால் தானாக இயங்க முடியாது. உயிர் இருந்தால் தான் இயங்க முடியும். அதைப் போல் தான் பேருடலான உலகின் நிலையும்.

சிற்றுடலான மனித/உயிரினங்களின் உடல் எவ்வாறு பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றதோ அதனைப் போன்று தான் இந்த பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

எவ்வாறு உயிர் இன்றி சிற்றுடலால் இயங்க முடியாதோ அவ்வாறே உயிர் இன்றி பேருடலால் இயங்க முடியாது. சிற்றுடலை இயக்க சிற்றுயிர் இருப்பதனைப் போன்று பேருடலை இயக்க பேருயிர் இருக்கின்றது.

எவ்வாறு உயிர் பிரிந்தப் பின் சிற்றுடல் பேருடலுடன் கலக்கின்றதோ அதனைப் போன்றே சிற்றுயிர் பேருயிரிடம் கலக்கின்றது.

இந்த இயக்கம் முழுவதும் நெறிப்பட்ட விதிகளின் வழியே நடைப்பெறுகின்றன. உடலின் விதிகளை அறிவதை நாம் மருத்துவம் என்கின்றோம்...பேருடலின் விதிகளை அறிவதை அறிவியல் என்கின்றோம். இங்கே நாம் உடலையும் உயிரையும் பற்றி மட்டுமே கண்டு இருக்கின்றோம். ஆன்மாவைப் பற்றி நாம் காணவில்லை. பிரச்சனை இல்லை இப்பொழுது காணலாம்...!!!

உலகிற்கு என்று உடல் இருக்கின்றது அதனை இயக்கும் உயிரும் இருக்கின்றது என்று நாம் கண்டோம். அதனைப் போன்றே உயிரினங்களுக்கும் உடல் இருக்கின்றது அதனை இயக்கம் உயிரும் இருக்கின்றது என்றும் கண்டோம் சரி. ஆனால் உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் சிறப்பாக ஆன்மா என்று ஒன்று இருக்கின்றது என்று கூறுகின்றோமே அது எப்படி என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

இந்த உலகத்தினை நாம் உற்றுக் கவனித்தோம் என்றால் அனைத்து உயிரினங்களையும் கட்டுப்படுத்தி ஆட்சிப் புரியும் வல்லமையை மனிதன் பெற்று இருக்கின்றான் என்பது புலனாகின்றது. அவனது உடல் இயங்கும் முறையினைப் பற்றியும் அவனால் அறிய முடிகின்றது...அவன் வசிக்கும் உலகம் இயங்கும் முறையைப் பற்றியும் அவனால் அறிய முடிகின்றது...அதனை மாற்றும் வல்லமையையும் அவன் பெற்று இருப்பதையும் அவனது செயல்களால் அறிய முடிகின்றது.

மற்ற உயிரினங்கள் ஆண்டாண்டுக் காலமாக எப்படி இருந்தனவோ அதனைப் போன்றே தொடர்ச்சியாக இருக்க மனிதன் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றான்...அனைத்தையும் அறிந்துக் கொண்டு, ஆக்கிக் கொண்டு, அழித்துக் கொண்டு...!!!

இந்த வல்லமையை அவன் மட்டும் பெற்று இருப்பதற்கு காரணம் என்று இறை நம்பிக்கையாளர்கள் கூறுவது அவன் ஆன்மாவை பெற்று இருக்கின்றான். உலகையும் உயிர்களையும் படைத்த இறைவன் மனிதனுள் ஆன்மாவை வைத்து இருப்பதன் மூலம் அவனுக்கு இவ்வுலகத்தின் மேலும் உயிர்களின் மேலும் ஆதிக்கத்தை தந்து இருக்கின்றார் என்பதே அவர்களின் கூற்று.
 
//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6 - இது சவுலின் கூற்று. (கிருத்துவம்)
 
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் (சைவம்)

அதனால் இவ்வுலகத்தின் விதிகள் அனைத்தையும் தனது முயற்சியால் அறிந்துக் கொள்ளும் வல்லமை மனிதனுக்கு உண்டு...அவனால் அனைத்தையும் அறிந்துக் கொள்ள முடியும் இறைவனைத் தவிர. இறைவனை அவன் அறிய வேண்டும் என்றால் இறைவனாக அவனுக்கு உணர்த்த வேண்டும்...இறைவன் உணர்த்தாமல் மனிதனால் இறைவனை அறிய முடியாது(இங்கு தான் மாயை என்ற ஒன்று வருகின்றது...இதனைப் பற்றி இன்னொரு பதிவில் காணலாம்) . இறைவன் மனிதனுக்கு ஆன்மாவின் மூலமாகத் தான் உணர்த்த முடியும். எப்பொழுது இறைவன் உணர்த்துகின்றானோ அப்பொழுது மனிதன் இறைவனின் அடி நோக்கிச் செல்வான் என்பதே சமயங்களின் கருத்தாகும்.

அதனைப் போன்றே எவ்வாறு உயிர் பிரிந்தப் பின் சிற்றுடல் பேருடலுடன் கலக்கின்றதோ அதனைப் போன்றே இறைவனின் ஒரு பகுதியான ஆன்மாவும் இறைவனை சென்று அடையும். இது தான் சமயங்களின் கருத்தாகும்.

ஆனால் இக்கருத்துக்கள் வெளி வராத வண்ணம் அனைத்து சமயங்களும் அரசியலால் அடிமைப்படுத்தப் பட்டுக் கிடக்கின்றன. ஆகையால் பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிர்கள் இருக்கா என்று அறிவியல் தேடுமே ஒழிய பிரபஞ்சத்தின் உயிர் என்ன என்று அதனால் தேடல் இயலாது. தன்னுடைய ஐம்புலன்களுக்கு தென்படும் உடலினை ஆய்வு செய்யுமே தவிர அதனால் உயிரைப் பற்றியோ அல்லது ஆன்மாவைப் பற்றியோ அல்லது இறைவனைப் பற்றியோ அறிந்துக் கொள்ள முடியாது.

காரணம் மனிதனால் இறைவன் உணர்த்தினால் மட்டுமே தான் இறைவனை உணர முடியும். அந்நிலையில் இறைவனைப் பற்றி உணர்ந்தவர்கள் கூறியதை மனிதனுக்கு கூறி அவனை நல்வழிப் படுத்த வேண்டிய கடமை சமயங்களையும் இறை நம்பிக்கையாளர்களையும் சேருகின்றது. ஆனால் இன்றைக்கு அவைகள் அனைத்தும் அரசியலுக்கு பலியாகி இருப்பதனால் உண்மை மறைந்து தான் இருக்கின்றது.

அட சரிங்க...இறைவன் உணர்த்தினால் ஆன்மா உணர்ந்து விடும் அப்படின்னு சொல்றீங்க சரி...அப்படினா கடவுள் எல்லா மனுசனையும் உணர வச்சிரலாம்ல...ஏன் எப்படி வைக்காம மனுசன் துன்பப்படுறத பார்த்துகிட்டு இருக்காரு? என்ற கேள்வி இங்கே எழ வாய்ப்பு இருக்கின்றது... இங்கே தான் நாம் மாயையைப் பற்றியும் இன்னும் சில விடயங்களைப் பற்றியும் காண வேண்டி இருக்கின்றது...

காணலாம்...!!!

தொடரும்....

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

7 கருத்துகள்:

sORRY BOSS , AGAIN YOUR CONFUSING HERE , PLEASE MAIL YOUR CONTACT NO.
I CANNOT EXPLAIN IN MAIL.

MAHESH DHIVAKAR
NEW DELHI
(9971392949)

///எவ்வாறு ஒரு உடல் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்கின்றதோ அதனைப் போன்றே உலகும் அதனை அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிகளைச் செய்யும் வல்லமையைப் பெற்று இருக்கின்றது.//// மிகவும் தவறான பதிவு....இதை ஒத்துகொள்ள முடியாது ... இந்த அண்டம் முயற்சிகளால் சுழல வில்லை, ஈர்ப்பு விசைகளால் சுழலுகின்றது.. உங்கள் பதிவு போல் அவைகள் ஒன்றுக்கு ஓன்று முயற்சி செய்து இருந்தால் இபொழுது இந்த அண்டத்தில் பல கோடி பூமிகள் உருவாகி இருக்கும்... உங்கள் இந்த பதிவை ஒத்துகொள்ள முடியாது நண்பரே...:-)

////சிற்றுடலான மனித/உயிரினங்களின் உடல் எவ்வாறு பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றதோ அதனைப் போன்று தான் இந்த பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது//// இந்த பிரபஞ்சம் உருவாக படவில்லை தன்னால் உருவானது... உங்கள் கருத்தை இதில் கொண்டு திணிக்க வேண்டாம்....

கடவுள் ?கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !

@Ruban,
வணக்கம் நண்பரே...

//இந்த அண்டம் முயற்சிகளால் சுழல வில்லை, ஈர்ப்பு விசைகளால் சுழலுகின்றது//

நான் கூற வந்ததை தவறாக புரிந்துக் கொண்டு உள்ளீர்கள் என்றே எண்ணுகின்றேன். சரி தெளிவாக உங்களுக்காக நான் கூற முயல்கிறேன்.

ஒரு காற்றழுத்தத் தாழ்வு மையம் கடலில் உருவாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்...ஒரு சில காரணங்களால் தான் அது உருவாகின்றது. ஆனால் அதே நிலை தொடர்ந்து இருப்பதில்லை. பெரு மழையையும் புயலையும் விளைவாக உருவாக்கியப் பின் காற்றழுத்தத் தாழ்வு மையம் நீங்கி மீண்டும் இயல்பு நிலை வருகின்றது. இந்த மாற்றத்தைத் தான் முயற்சிகள் என்றுக் கூறினேன். இயல்பான நிலைக்கு வரவே உலகும் சரி நமது உடலும் சரி முயன்றுக் கொண்டு இருக்கின்றன என்பதே இப்பதிவின் சாரம்.

இயங்கவியல் என்று இதனை இன்றுக் கூறுகின்றனர். உலகும் சரி நமது உடலும் சரி இயங்கிக் கொண்டே இருக்கின்றன...சில விதிகளின் படி. நீங்கள் கூறும் ஈர்ப்பு விசைகள், மின் காந்த அலைகள் அனைத்தும் உலகையும் உடலையும் உருவாக்கப் பயன்பட்டு இருக்கும் விடயங்கள் அவ்வளவே...!!!

எவ்வாறு இயங்க வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன...அவ்வாறே உடலும் இருக்கின்றது. ஆனால் இயக்குவது ஏது என்பதைக் குறித்தே இப்பதிவுகள்...ஐரோப்பிய அறிவியல் விதிகளிலும் உடலிலும் மட்டுமே நின்று விட்டது. அதனால் பல கேள்விகளுக்கு விடைகள் தர இயலாது.

http://vazhipokkanpayanangal.blogspot.in/2010/05/blog-post_22.html

நண்பர் சொன்னது போல,

கண்டவர் விண்டிலர்..விண்டவர் கண்டிலர்...!!!

@ Ruban,

// இந்த பிரபஞ்சம் உருவாக படவில்லை தன்னால் உருவானது... உங்கள் கருத்தை இதில் கொண்டு திணிக்க வேண்டாம்.... //

நிரூபணம் செய்து விட்டீர்களா...? ஆராய்ச்சிக் கூடங்களில் ஐம் புலன்களுக்கு ஏது புலனாகின்றதோ அதனை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் அறிவியலை நீங்கள் நம்புகின்றீர்கள் என்றே நான் எண்ணுகின்றேன். மிக்க நல்லது.

அவ்வாறு இருக்கையில் வெற்று இடத்தில் இருந்து ஏதோ ஒரு பொருளையும், உயிரையும் அவர்கள் உருவாக்கி காட்டி விட்டனர் என்பதை கண்ட பின்னரே, நீங்கள் நான் கருத்தைத் திணிக்கின்றேன் என்று கூறுகின்றீர்கள் என்றே நம்புகின்றேன்.

அவ்வாறு இல்லாது, உயிரையும் அறியாது, வெற்று இடத்தில் இருந்து எந்த ஒரு பொருளின் துணை இல்லாது வேறு எதையும் உருவாக்காது வெறும் வெற்றுக் கூற்றுகளை நம்பியே அவ்வாறு கூறினீர்கள் என்றால் அது கருத்தினைத் திணிப்பது ஆகாதா நண்பரே :)

உயிர் என்றால் என்ன...கண்டு பிடித்து விட்டார்களா...உடலினை ஆய்பவர்கள்... :)

Ayya vanakkam. thangaladhu thedal ennavendru ennal purindhukolla mudigiradhu. unmaiyaagavey thangaladhu vilakkangal ennai aachariyathil aazhthugiradhu. aanaal adhaivida thangaladhu vilakkangalai siridhum vilangikollaamal madathanamaaga ketkappadum kelvigalukkum thaangal siridhum porumai izhakkaamal thelivaaga badhil alippadhu innum adhigam ennai aachariyapada vaikkiradhu. thangalidamirundhu naan karkavendiyadhu anegam ulladhu. NANRIGAL.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு