லூக்காவின் ஓவியம்:
லூக்கா அவருடைய எழுத்துக்களில் மரியாளை கடவுளாக சித்தரித்து இருக்கவில்லை. ஏன் இயேசுவின் சீடர்கள் எவருமே மரியாளை கடவுளாக சித்தரித்து இருக்கவில்லை. ஒரே கடவுள் தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்ற மூன்று நிலையில் இருக்கின்றார் என்பதே அவர்களின் கருத்து. அவ்வாறு இருக்கையில் கி.பி 30இல் லூக்கா மரியாளை கடவுளாக சித்தரித்து ஓவியம் வரைந்தார் என்பது எவ்வாறு ஏற்புடையது?
மேலும் விவிலியத்தின் படி இயேசுவே தான் இறக்கும் தருவாயில் மரியாளிடம் 'இதோ உன் மகன்' என்று யோவானைக் காட்டி விட்டுத் தான் இறந்து இருக்கின்றார்.
"அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்."
அவ்வாறு இருக்கையில் எவ்வாறு மரியாள் கடவுளாக ஆக்கப்பட்டார்? மரியாளை கடவுளாக சித்தரித்து லூக்கா வரைந்தார் என்று ஏன் கூற வேண்டும்?
பலி கேட்ட கடவுளும் பலியான கடவுளும்:
பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள கடவுள் ஒரு இனத்தாருக்கு மட்டுமே உரியக் கடவுளாக, பலி கேட்கும் கடவுளாக அறியப்படுகின்றார்.
"நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்." - லேவியராகமம் 1
ஆனால் புதிய ஏற்பாட்டிலோ இறைவன் அன்பே உருவானவராக மக்களுக்காக மனிதனாக உலகில் வந்து பலியானவராக அறியப்படுகின்றார். புதிய ஏற்பாட்டுக் கடவுள் பலி கேட்கவில்லை...மேலும் 'ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்' என்றக் கருத்தினையும் கூறி இருப்பவராய் இருக்கின்றார்.
ஏன் இந்த முரண்பாடு...முரண்பாடுகள் உடையவர் கடவுளாக இருக்க முடியுமா? இல்லை தானே... அப்படி என்றால் பிழை எங்கே இருக்கின்றது கடவுளிலா அல்லது நூலிலா அல்லது நூலினைப் புரிந்துக் கொண்ட விதத்திலா?
தோமாவும் இந்தியாவும்:
தோமா இந்தியா வந்தார் அதுவும் குறிப்பாக தமிழகம் வந்தார்...அங்கேயே அவர் கொலையும் செய்யப்பட்டார் என்றக் கருத்து இங்கே இருக்கின்றது. சென்னையில் புனிதத் தோமா மலை, சாந்தோம் தேவாலயம் போன்றவைகள் தோமா இங்கே இருந்தார் என்று கூறிக் கொண்டு இருக்கின்றன.
ஆனால் போப்போ 'தோமா இந்தியா சென்றார் என்பது ஒரு கட்டுக்கதை' என்றுக் கூறுகின்றார். ஏன் இவ்வாறு போப் கூற வேண்டும்? இவ்விரண்டுக் கூற்றுகளில் எது உண்மை?
தோமா இந்தியா வந்தார் என்பதனை ஏற்றுக் கொண்டால் தோமாவின் கருத்துக்கள் இங்கே எந்தளவு பரவி இருக்கின்றன என்று ஆராய வேண்டி வரும், அவ்வாறு ஆராய்ந்தால் கிருத்துவத்தினை ரோமர்களும் போப்களும் எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர் என்பது புலனாகி விடும் என்ற அச்சத்தினால் தோமாவின் வருகையை மறுக்கின்றாரா போப்?
இல்லை தோமா தமிழகம் வரவே இல்லை என்றால் எதற்காக முன்னர் கபாலீஸ்வரர் கோவில் இருந்த இடத்தினை இடித்து விட்டு அங்கே தோமாவின் கல்லறை இருக்கின்றது என்றுக் கூறி எதற்காக ஒரு தேவாலயம் கட்ட வேண்டும்?
ஒன்று போப்பின் கூற்று உண்மையாக இருக்க வேண்டும் இல்லை தோமா இந்தியா வந்தது உண்மையாக இருக்க வேண்டும், அதற்கு மாறாக வேறு ஒரு விடை இருக்க வாய்ப்பே இல்லை.
இந்நிலையில் ஒன்று போப் அவரின் கூற்றினைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தோமா தமிழகம் வந்தார் என்றுக் கூறும் கிருத்துவர்கள் அக்கூற்றினை மாற்றிக் கொண்டு சென்னையில் தோமாவின் அடையாளங்கள் என்று அவர்கள் கூறுவனவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். மாறாக இருவருமே அவர்களதுக் கருத்துகளை மாற்றிக் கொள்ளாது இருப்பது அரசியலே ஆகுமே அன்றி ஆன்மீகமாகாது.
தொடர்புடைய இடுகைகள்: (இந்தியாவில் தோமா, கபாலீசுவரர் கோவில்,)
கிருத்துவமும் மனு தர்மமும்:
அனைத்து மனிதர்களும் சமம் என்றுக் கூறுவது கிருத்துவம். ஆனால் அதற்கு மாறாக மனிதர்களைப் பிறப்பிலேயே ஏற்றத் தாழ்வுடன் பிரிப்பது மனு தர்மம். அவ்வாறு இருக்கையில் இவ்விரண்டுக்கும் தொடர்பே இருக்க முடியாது. முற்றிலுமாக மாறுப்பட்ட இரு கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றன இரண்டும்.
அவ்வாறு இருக்க...மனுதர்மத்தினை மொழிபெயர்த்து அதனை இந்தியாவில் உள்ள பெருவாரியான சைவ வைணவ சமயங்களைப் பின்பற்றிய மக்களுக்கு சட்ட நூலாக ஆக்கிய சர்.வில்லியம் ஜோன்ஸ் அவர்களுக்கு இங்கிலாந்து தேவாலயத்தில் சிலை எதற்கு....அதுவும் மனு தர்ம நூலினை கையில் ஏந்திக் கொண்டு இருப்பதனைப் போன்ற சிலை எதற்கு?
"கிருத்துவ சமயத்தினை அடிமைப்படுத்தி அதன் வாயிலாக உலகின் பல்வேறு மக்களை கட்டுக்குள் இன்று தேவாலயங்களும் போப்களும் வைத்து இருப்பதனைப் போன்று, சைவ வைணவ சமயங்களை அடிமைப்படுத்தி இந்திய மக்களை கட்டுக்குள் வைத்து இருக்கின்றனர் என்பதனால் பிராமணர்களுடன் ஏற்பட்ட கூட்டுக் காரணமாக, எக்காலத்திலும் உண்மை வெளிப்பட்டு நம்முடைய மேலாதிக்கம் குறைந்து விடக் கூடாது என்றே மனு தர்மத்தினை தேவாலயத்தில் வைத்து அழகுப் பார்கின்றனரா?"
நிறவெறியுடன் கூடிய இனவெறியினை கத்தோலிக்கத் திருச்சபை வளர்க்கின்றது...சாதி வெறியுடன் கூடிய இனவெறியினை இங்கே மனு தர்மம் வளர்க்கின்றது...அவ்வாறு ஏற்படும் கலவரங்கள் மூலமாக சிலர் தங்களது அரசியல் செல்வாக்கினை பலப்படுத்திக் கொள்கின்றனர். அதனால் தான் சமயங்களை அடிமைப்படுத்தியவர்கள் தங்களுக்குளே ஏற்படுத்திக் கொண்ட கூட்டின் வெளிப்பாடாக மனுதர்மம் கிருத்துவர்களின் கோவிலினுள் இருக்கின்றதோ?
போப்:
கான்சுடன்டைன் காலத்திற்கு பின்னர் ரோமர்கள் மட்டுமே போப் ஆக வர முடிகின்ற நிலை இருந்தது.
இயேசு கிருத்து ஆசிய நாட்டினைச் சார்ந்தவர்.
அவரின் சீடர்கள் அனைவரும் ஆசிய நாட்டினைச் சார்ந்தவர்கள்.
அவர் பேசிய மொழி ஆசிய மொழி.
விவிலியம் தொகுக்கப்பட்டது ஆசியாவில்.
அவ்வாறு இருக்கையில் ரோம நாட்டினைச் சார்ந்தவர்கள் மட்டுமே அச்சமயத்தின் தலைவர்களாக வர முடியும் என்பது அரசியலா ஆன்மீகமா? கிருத்துவச் சமயம் அடிமையாக்கப்பட்டதைத் தானே இது காட்டுகின்றது.
மாட்ரின் லூதர் என்பவரின் எழுச்சிக்கு பின்னர் தான் ரோமர்களைத் தவிர மற்ற ஐரோப்பியர்களும் போப் ஆக வரலாம் என்ற நிலை வருகின்றது. இப்பொழுதும் ஐரோப்பியர்களே போப் ஆக வர முடியும் என்றால் இது ஆன்மீக ரீதியிலான ஏற்பாடா இல்லை அரசியல் ரீதியான ஏற்பாடா?
இயேசுவின் சீடர்கள் அனைவரும் அவர்களின் கருத்துக்களுக்காக கொல்லப்பட்டனர் என்பதும் கான்சுடன்டைன் காலத்திற்கு பின்னரே கிருத்துவம் அரச சமயமாக வடிவு பெறுகின்றது என்று நாம் கண்டிருக்கின்றோம். அக்காலத்திலேயே அது ஆன்மீக பாதையில் இருந்து அரசியல் பாதைக்கு அடிமையாக்கி மாற்றப்பட்டு விட்டது என்று நாம் கருத முடிகின்றதா இல்லையா?
தொடர்புடைய இடுகைகள்: (கிருத்துவத்தின் வரலாறு)
தொடரும்...!!!
பின்குறிப்பு:
1) இத் தொடர் ஒரு தேடல் முயற்சியே...மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.
2) (இதற்கு முந்தைய பகுதிகளைக் காண இச் சுட்டியினை சொடுக்கவும் - சமயங்கள்-முகப்பு)

3 கருத்துகள்:
மாறாக இருவருமே அவர்களதுக் கருத்துகளை மாற்றிக் கொள்ளாது இருப்பது அரசியலே ஆகுமே அன்றி ஆன்மீகமாகாது................. மதம் எப்படி ஆன்மிகம் ஆகும்... மதத்துக்கும் ஆன்மிகத்துக்கும் என்ன சமதம்..... மதம் ஆன்மிகம் ஆகாது...
உண்மை தான் தோழரே.... மதங்கள் என்றுமே ஆன்மீகமாகாது...அவை அரசியல் கருவிகள் அவ்வளவே!!!
nanbargale thiruchabai varalarai partheergalanal, christava samayamagathan irundhadhu kalapokil manidhargalal than arasiayalakapatadhu. christuvin teachigs ellame manidham sarndhadu than, arasiyal than adhai thannudayadki kondahu
கருத்துரையிடுக