இயேசு கிருத்து சிலுவையில் அறையப்பட்டார். இதில் மாற்றுக் கருத்து நமக்கு ஏதும் அல்ல. ஆனால் அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றியக் கருத்துக்களைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதுவும் குறிப்பாக ஒரு விடயத்தினை நாம் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டி இருக்கின்றது.

"இயேசு கிருத்து தான் சிலுவையில் அறையப்படும் முன் அந்த முழு சிலுவையையுமே சுமந்து சென்றாரா?" என்பதே அந்த விடயம். இதனை பற்றி நாம் விரிவாக பார்க்க வேண்டும் என்றால் அன்றைய காலத்தில் நிலவிய பழக்கவழக்கங்கள் மற்றும் சிலுவையினைப் பற்றியும் அறிந்துக் கொள்வது இன்றியமையாத ஒன்றாக அமைவதால் ஒரு எட்டு சென்று அவற்றைப் பார்த்துக் கொண்டு வந்து விடலாம்.

நாம் முந்தைய பதிவுகளில் கண்டவாறு கி.பி நான்காம் நூற்றாண்டு வரை சிலுவை என்பது ஒரு கொலைக்கருவியே ஆகும். அக்காலத்திற்கு பின்னர் தான் அது ரோமப் பேரரசன் கோன்சுடைன் என்பவரால் அரசியல் காரணங்களுக்காக சிறப்பிக்கப்பட்டு கிருத்துவர்களின் சின்னமாக மாறுகின்றது. அதற்கு முன்னர் வரை சிலுவை என்பது எதிரிகளை துன்புறுத்திக் கொலை செய்யும் ஒரு கொடிய கொலைக்கருவியாகவே ரோமர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கிருத்துவுக்கு முன்னரும் சரி பின்னரும் சரி பலர் சிலுவையில் அறையப்பட்டு இருக்கின்றனர். ரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிலுவையில் அறையப்பட்டு ஒருவன் இறப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமான ஒரு விடயமாகத் தான் இருந்து இருக்கின்றது. பொதுமக்கள் அஞ்ச வேண்டும் என்ற ஒரு காரணத்திற்க்காக ஊருக்கு வெளியே அனைவரும் காணும் படி ஒரு மனிதனை சிலுவையில் அறைந்து அவனைக் கொல்வது என்பது ரோமர்கள் கையாண்ட ஒரு யுக்தி ஆகும். அவ்வாறு எதிரிகளை, குற்றவாளிகளை சிலுவையில் அறைவதற்காகவே ஊருக்கு வெளியே ஒரு இடத்தினை ரோமர்கள் எப்பொழுதும் தயாராக வைத்து இருந்தனர் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து.நிற்க.

இப்பொழுது நாம் சிலுவையினைப் பற்றி சற்றுக் கண்டு விடலாம்.

சிலுவைகள் என்பன தொடக்கக் காலம் முதல் அந்த வடிவிலேயே தான் இருந்தனவா என்றால் ஒரு தெளிவான விடை நமக்கு கிடைக்க மாட்டேன்கின்றது. சில குறிப்புகள் சிலுவை என்பது ஒரே மரக்கட்டை தான் என்கின்றன (அதாவது செங்குத்தாக நிற்கும் பகுதி மட்டுமே தான் சிலுவையாக பயன்படுத்தப்பட்டது என்றும் அதன் மேல் இன்றுக் காணப்படுவது போன்ற படுக்கைவசமான பகுதி அன்று இருக்கவில்லை என்கின்றன), வேறு சில குறிப்புகளோ சிலுவை என்பது இருக் கட்டைகளால் ஆனது என்றும் ஆனால் அதன் வடிவம் கூட்டல் குறிக்கு நிகராக இருந்தது என்றும் கூறுகின்றன. இருக்கட்டும். இந்த வேறுபாடுகள் இப்பொழுது நமக்கு முக்கியமில்லை. நாம் நம்முடைய கேள்விக்கு விடையினைக் காண இப்பொழுது வழக்கில் இருக்கும் சிலுவையின் வடிவினை கொண்டே தொடருவோம்.

இன்று பெரும்பாலான வடிவங்கள் சிலுவையினை இரு பகுதிகள் கொண்ட வடிவமாகவே காட்டுகின்றன.(படம் இடதுபுறம்)

ஒரு மரப்பகுதி செங்குத்தாக இருக்கின்றது. மற்றொன்று அதன் மேல் படுக்கைவசமாக இருக்கின்றது. இதுவே தான் சிலுவையின் அமைப்பாக இருக்கின்றது. ரோமர்களின் வழக்கப்படி அந்த செங்குத்தான பகுதி மண்ணில் ஊன்றப்பட்டு இருக்கும். பின்னர் படுக்கைவசமாக இருக்கும் பகுதியில் குற்றவாளியின் கைகள் இரண்டும் இணைக்கப்பட்டு (ஆணிகள் மூலமாகவோ அல்லது கயிறின் மூலமாகவோ), அந்தப் பகுதி செங்குத்தான பகுதியில் இணைக்கப்படும். இதுவே ரோமர்கள் ஒருவனை சிலுவையில் அறையும் முறை. மேலும் ஒருவன் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர், அவன் சிலுவையில் அறையப்படும் இடம் வரை அவனே அவனது சிலுவையை தூக்கிக் கொண்டு வருவதும் ரோமர்களின் பழக்கம் ஆகும். நிற்க.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது இந்த அமைப்பின் எடையைத் தான். ஆய்வாளர்களின் கணிப்புப்படி ஒரு முழு சிலுவையின் எடை கிட்டத்தட்ட 130 கிலோவாகவும், படுக்கைவசமாக இருக்கும் பகுதியை மட்டும் தனியாக கணக்கிட்டால் 35 இருந்து 60 கிலோ வரை இருந்து இருக்க வேண்டும் என்றும் நாம் அறிய முடிகின்றது. இந்நிலையில் ஒரு மனிதன் முழு சிலுவையையும் அதாவது 130 கிலோ எடை உடைய அமைப்பினை சுமந்துக் கொண்டு செல்வது நடைமுறையில் சாத்தியமானதொன்றாக இருக்குமா என்பதே இப்பொழுது நம் முன் எழும் ஒரு கேள்வி. இக்கேள்விக்குரிய விடையினைத் தேடினோம் என்றால் நமக்கு விடையாய் கிட்டுவது "சிலுவையைச் சுமப்பது என்பது முழு சிலுவையையும் குறிக்காது. மாறாக சிலுவை அமைப்பில் ஒரு பகுதியான அந்த படுக்கைவசப் பகுதியை மட்டுமே சுமந்து செல்வது ஆகும்" என்ற விடையே ஆகும். இந்த விடையை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சிலுவை என்பது ஒரு பொதுவான கொலைக்கருவி என்று நாம் கண்டுவிட்டோம். மக்களை சிலுவையில் அறைவதும் அன்று வெகு இயல்பாக ரோமர்களால் நிறைவேற்றப்பட்ட ஒரு செயல் தான். இந்நிலையில் மக்களை சிலுவையில் அறைவதற்கு என்றே ஒரு இடத்தினை ரோமர்கள் தனியாக வைத்து இருந்தனர் என்பதும் அங்கேத் தான் சிலுவையில் அறைய மக்கள் அனைவரும் கொண்டு செல்லப்பட்டனர் என்பதுமே பொதுவான கருத்துக்களாக நிலவுகின்றன. எனவே மக்களை சிலுவையில் அறையும் இடத்தில அவர்களை சிலுவையில் அறைவதற்கான கருவிகள் தயாரான நிலையிலேயே இருந்து இருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. அதாவது சிலுவையின் ஒரு பகுதியான செங்குத்தான மரப்பகுதிகள் சிலுவைகள் அறையப்படும் இடத்திலேயே எப்பொழுதும் வீற்று இருந்து இருக்க வேண்டும் என்றும் அதில் அறையப்பட இருப்பவர்களை எடை குறைவான படுக்கைவசப் மரப்பகுதியினை மட்டுமே சுமந்து கொண்டு அவ்விடத்திற்கு வரவழைத்தனர் ரோமர்கள் என்றுமே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதுவே ரோமர்களின் பழக்கமாக இருப்பின், இயேசுவும் அந்த படுக்கைவசமான மரப்பகுதியினையே சுமந்துக் கொண்டு சென்று இருக்க வேண்டும். மேலும் விவிலியக் குறிப்புகளின் படி இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன் சவுக்கினால் அடித்தும் துன்புறுத்தி இருக்கின்றனர்.

"அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்." - மத்தேயு (27-26)

இந்நிலையில் அவரால் முழு சிலுவையையும் சுமந்து சென்று இருக்க இயலுமா என்பதும் கேள்விக்குறியே. மேலும் இந்த வாதத்தை வலுப்படுதுமாறு விவிலியத்தில் மற்றொரு குறிப்பும் உள்ளது. அதாவது இயேசுவின் சிலுவையை சுமக்குமாறு சீமோன் என்ற மனிதனை காவலர்கள் பணித்தவாறு குறிப்பும் விவிலியத்தில் இருக்கின்றது.

"போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்." - மத்தேயு (27-32)

இதன் வாயிலாக இயேசு சிலுவையை சுமக்க முடியாத உடல் நிலையில் தான் இருந்தார் என்று நாம் எண்ண முடிகின்றது. இந்நிலையில் அவர் 130 கிலோ எடையுடைய முழு சிலுவையையும் சுமந்து சென்று இருக்க முடியும் என்பது சாத்தியமில்லாத ஒரு கூற்றாகத் தான் இருக்கின்றது.

இதன் அடிப்படையில் இயேசு மக்களின் மத்தியில் சிலுவையின் ஒரு பகுதியான படுக்கைவசமான கட்டையை சுமந்து சென்றார் என்றும் அதனை இடையில் சீமோன் என்ற மனிதன் ஏற்றுக் கொண்டான் என்றும் அவர்கள் அவ்வாறு கபாலஸ்தலம் என்ற இடத்தை அடைந்ததும் அங்கே ஏற்கனவே நிறுவப்பட்டு இருந்த சிலுவையின் செங்குத்தான பகுதியில் இயேசு அறையப்பட்டார் என்றும் நாம் அறிய முடிகின்றது.

எனவே இயேசு முழு சிலுவையை சுமந்து கொண்டு செல்லவில்லை மாறாக அவரின் தோளில் படுக்கைவசமான ஒரு மரப்பகுதியையே சுமந்து சென்று இருக்கின்றார் என்று நாம் அறிய முடிகின்றது. நிற்க.


இப்பொழுது நாம் இந்தத் தலைப்பினைக் கண்டதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கின்றது.

மேலே உள்ள பதிவின் படி 'இறைவனின் மைந்தர்' மக்களுக்காக படுக்கைவசமான ஒரு மரப்பகுதியை சுமந்துக் கொண்டு மலையின் மீது ஏறிச் சென்று இருக்கின்றார். சரி தானே.

இங்கே ஆச்சர்யப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் உலகின் மற்றொரு பகுதியில் இன்று 'இறைவனின் மைந்தனை' வேண்டிக் கொண்டு தோளில் படுக்கைவசமான மரப்பகுதியை ஏந்திக் கொண்டு மலை ஏறும் வழிப்பாட்டு பழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.

என்ன கண்டுபிடிச்சிடிங்களா!!!

அட ரொம்ப யோசிக்காதீங்கங்க...

அந்த உலகின் மற்றொரு பகுதி - தமிழகம்தேன்
இறைவனின் மைந்தன் - நம்ம முருகப் பெருமான்தேன்

அந்த வழிப்பாட்டு முறை - நம்ம தமிழர்களின் காவடி ஆட்டம்தேன்.


ஏற்கனவே பிள்ளையாரப் பத்தி பார்த்தாச்சி (இணைப்பு). இப்போ அவருடைய தம்பி...நம்ம தமிழ் கடவுள பத்தி பார்க்கலாமா...!!!

வெற்றி வேல்... வீர வேல்....!!!

பயணம் தொடரும்...!!!

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… 17 ஆகஸ்ட், 2012 அன்று PM 2:40  

தூக்குமரத்தில் தொங்கவிடுதல் என்பது- குற்றவாளிகளை நிர்வாணமாக உயரமாக சாரத்தில் தொஙவிடுதல், ககள் கட்டப்பட, தலை சுதந்திரமாக இருக்கும், மரணம் வர 3-5 நாள் வரை ஆகும். மரணம் நிகழ்ந்தபின் கழுத்து எலும்பு முறிய, மண்டை ஓடு புரளும்வரை குற்றவாளி தொஙுவார். அதனால் தான் தூக்குமர மரணதண்டனை இடம் -கபாலஸ்தலம்- மண்டைஓடு புரளுமிடம் எனப்படும்.

இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!
http://pagadhu.blogspot.in/2012/08/blog-post_4.html
ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும்
http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_25.html
இயேசு- பெத்லஹேமில் பிறந்தாரா?
http://pagadhu.blogspot.in/2012/07/blog-post.html
யோபு 25:4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

உபாகமம்24:16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.

நண்பரே...உங்களின் பின்னூட்டம் எனக்கு சற்று புரியவில்லை. எனவே மன்னித்துக் கொள்ளவும். சிலுவை கிருத்துவர்களின் சின்னம் கிடையாது என்று நாம் முன்னரே கண்டுவிட்டோம். இந்தப் பதிவு முருகனுக்கு ஏன் காவடி எடுக்கின்றனர் என்பதனைப் பற்றியே.

முருகனுக்கு ஏன் காவடி எடுக்கின்றனர் என்று தங்களிடம் மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது மிகவும் பலனுள்ளதாக இருக்கும். நன்றி.

இயேசு கிருத்து சிலுவையில் அறையப்பட்டார். இதில் மாற்றுக் கருத்து நமக்கு ஏதும் அல்ல.

ஏன் உங்களுக்கு இதில் மாற்று கருத்து இல்லை ... ஏன் கண்மூடி கொண்டு நம்புரிங்க :)

@Arun Pravin,

மன்னிக்கவும் நண்பரே...இங்கே ஒன்றினை தெளிவுப் படுத்த விரும்புகின்றேன்.
இயேசு கிருத்து மரத்தில் அறையப்பட்டார் என்ற ஒருக் கருத்தும் இருக்கின்றது.

ஆனால் அவர் சிலுவை என்று இன்று எண்ணப்பெரும் ஒரு கட்டையினை சுமந்து சென்றார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை...!!!

நன்றி!!!

இயேசு என்பவர் ஏன் ஒரு கற்பனை பாத்திரமாக இருக்க குடாது .. அவரின் முழு வாழ்க்கை சரித்திரம் யாரும் அறிய வில்லையே ... எங்கும் சொல்ல படவும் இல்லையே ... அப்படி இருக்கும் உங்களுக்கு ஏன் இதில் மாற்று கருத்து எழ வில்லை

என்னுடைய மற்றொரு கருத்தை அழித்தமைக்கு காரணம்

//என்னுடைய மற்றொரு கருத்தை அழித்தமைக்கு காரணம் //

மன்னிக்கவும்...நான் எந்த ஒரு கருத்தினையும் அழித்தவாறு நியாபகம் இல்லை.. அவ்வாறு அழிக்கும் எண்ணமும் எனக்கு துளியும் இல்லை.. எனவே சற்று சரி பார்க்கவும்!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு