செவ்வாய், 29 ஜூன், 2010

ஊழ் செதுக்கும் உளி



வந்தாய்... சிறு சாரல் ஊற்றாய்
கரைந்தாய்... ஆடி மாதக் காற்றாய்
பெண்ணே நீ கானல் நீர் தானோ?...

என் நெஞ்சம்... அது துடிக்கவில்லை
மஞ்சம்... அதில் தூக்கமில்லை
பெண்ணே உன் காதல் சொல்வாயோ?...

செல்லும் பாதைகள் ... தெரியவில்லை
புது வலிகள் ... அவை புரியவில்லை
நான் இன்று நானாய் இங்கில்லை...
இதில் சத்தியமாய் எந்தன் பங்கில்லை!!!!





அடி ஊழ் சூழும் முன்னே
உன் விழி சூழ்ந்தது என்ன???...
புவியீர்ப்பு விசையாய்
என்னை உன் விழி ஈர்த்தது என்ன???...
நீ கடந்த நொடியில்
என் யுகங்கள் கண்டேனே....
உன் விழி...
 ஊழ் செதுக்கும் உளி என்பேனே!!!

2 கருத்துகள்:

பகுத்தறிவு சொன்னது…

நன்றாக இருக்கிறது... ஆனால் சாரல் ஊற்று என்றால் என்ன?

Kumar014 சொன்னது…

arumai arumai...

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...