இதோ, காலத்தின் கட்டளையால் மேலும் சில பிரிவுகள். அப்பிரிவுகளை எண்ணியே இப்பதிவு.
காலம் உன்னை சில ஓவியங்கள் கொண்டு ஒரு ஓவியனாய் வரைந்து கொண்டு இருக்கின்றது. காலத்தின் ஓவியம் நீ... உந்தன் ஓவியங்கள் நீ கடந்த காலங்கள்...
உன்னுடைய பல ஓவியங்கள் கொண்டே நீ முழுமை பெறுகின்றாய். உன்னுடைய ஓவியங்கள் பிரிவில் முழுமை பெறுகின்றன. எனவே பிரிவை எண்ணி நீ வருந்தாதே... அவை உன்னை முழுமையாக்கும் என்பதை மறவாதே...சென்று வாருங்கள் தோழர்களே ... மீண்டும் சந்திப்போம்...
எங்கள் வாழ்வில் நீ பதித்து விட்டுச் சென்ற
வழித்தடங்கள்
சந்தேகம் இன்றி எங்களின் அக்காலத்து
உயிர்வளித் தடயங்கள்...
கேளும் தோழா,
பிரிவு ஒரு சித்திரம்...
ஓவியனே ஓவியமாகிப் போகும் ஒரு விசித்தரம்!!!
உயிர் கொண்டு வரைந்தாய்-
உயிர் தந்தாய்
காலம் பல கடந்து
கோலம் சில புனைந்தாய்...
நீ உழைத்தாய்
ஓவியம் தழைத்தது!!!
அந்தோ!!!
முற்றுப் பெறா ஓவியம் என்றும் ஓவியம் ஆவதில்லை...
இதோ,
ஓர் புள்ளியிலே தோன்றியது
ஓர் புள்ளியிலே முடிகின்றது
இடையில் முடியாது நீ நிற்கின்றாய் - ஓவியனாய்
நாங்களும் நிற்கின்றோம் - உன் ஓவியமாய்!!!
முகில் நீங்கா துளிகள்
பயனில்லை இம்மண்ணினிலே...
அதை போல்
ஓர் ஓவியத்திலே முடிவடையும் ஓவியன்
ஒளிர்வதில்லை பாரினிலே!!!
புறப்படு கலைஞனே,
இன்னும் பல ஓவியங்கள் காத்து இருக்கின்றன
உன் கரம் பட்டு தழைக்க... புன்னகைக்க...!!!