முந்தையப் பகுதி

சாத்தானையும் பயன்படுத்துகிறவர் கடவுள்

கடவுள் சாத்தானையும் பயன்படுத்துகிறவர். ஏனெனில் சாத்தான் கடவுளை மீறி எதுவும் செய்ய இயலாது. இதற்கு பைபிளில் சான்றுகள் இருக்கின்றன. சாத்தானையே பயன்படுத்துகின்றவர் என்றால் அவரால் ஐரோப்பியர்களை பயன்படுத்த முடியாதா?

இன்று வரை நூல்களையும் அழியாமல் பாதுகாத்து வந்திருக்கின்றார்கள். நூல்களும் அழியாமல் பாதுகாக்கப்பட்டமையால் தான் அவற்றின் அடிப்படையில் நாம் ஆய்ந்து உண்மை வரலாற்றை வெளியேக் கொண்டு வர வாய்ப்புக் கிடைத்து உள்ளது. இன்று உலகம் முழுவதும், அனைத்து நாடுகளிலும், அனைத்து பிரிவு மக்களிடத்திலும் பைபிள் இருக்கின்றதென்றால் இதற்கு காரணம் ஐரோப்பியர். கிருத்தவ மதம் இன்று ஓர் உலகப் பெரும் மதமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஐரோப்பியரே.

பரிசுத்த ஆவியானவர்

பைபிள் உருவாகாத காலத்தில் செயல்பட்ட பரிசுத்த ஆவியானவர் பைபிள் செல்லாத இடங்களிலும், பைபிளுக்கு தவறாக விளக்கம் கொடுக்கப்படும் இடங்களிலும் கூட அவருடைய செயலை யாரும் கட்டுப்படுத்த முடியாதல்லவா? எல்லா காரியங்களையும் அதனதன் காலத்தில் சிறப்பாக செயல்படுத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர்.

மக்கள் ஆட்சியும் விசுவாசத் தளர்ச்சியும்

மன்னர் ஆட்சிக் காலம் மறைந்து மக்கள் ஆட்சிக் காலம் உலகம் உழுவதும் மலர்ந்துக் கொண்டிருக்கின்ற இந்த காலத்தில், மக்கள் ஆட்சிக் காலச் சிந்தனையின் விளைவாகக் கேள்விகள் கேட்கத் தொடங்கும் பொழுது சரியான விடை கிடைக்காமையால் விசுவாசம் தளர்ந்து, வேறு மதங்களுக்கும், கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஐரோப்பியர் ஆட்சி செய்யும் இடங்களில் திருச்சபைகள் காலியாகி திருச்சபைக் கட்டடங்கள், விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எப்படியாவது ஆட்கள் வந்தால் போதும் என்னும் நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களை அவர்கள் அங்கீகரித்து அவர்களுடைய திருமணங்கள் திருச்சபைகளில் நடத்தப்படுகின்றன.

ஓரினச் சேர்க்கையாளர்கள் போதகர்களாகவும், பேராயர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். கிறித்தவக் கோவில்களுக்கு ஆட்கள் வந்தால் போதும் என்னும் நிலைக்கு ஐரோப்பியர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள். இதை ஆன்மிகம் என்று எவ்வாறு கூற முடியும்? இவையாவும் மன்னர் ஆட்சிக் காலப்பிடியில் இருந்து விடுபட்டு, மக்கள் ஆட்சிக்காலம் நடைபெறுவதால் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள், கிருத்தவ மதம் பற்றி மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து, மக்களுடைய விசுவாசத்தைப் பாதுகாக்கும் ஆற்றல் ஐரோப்பியர்களிடம் இல்லை.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
 
 
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

1 கருத்துகள்:

//கடவுள் சாத்தானையும் பயன்படுத்துகிறவர். ஏனெனில் சாத்தான் கடவுளை மீறி எதுவும் செய்ய இயலாது. இதற்கு பைபிளில் சான்றுகள் இருக்கின்றன. சாத்தானையே பயன்படுத்துகின்றவர் என்றால் அவரால் ஐரோப்பியர்களை பயன்படுத்த முடியாதா?//

துப்பாக்கிகளாலும், வெடிகுண்டுகளாலும், மத கலவரங்களாலும் மட்டுமே ஒரு கடவுள் தன்னுடைய மதத்தை நிலை நிறுத்த முடியும் என்றால் எனக்கு அந்த கடவுளே தேவை இல்லை...
- நடிகர் கமலஹாசன்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி