அமெரிக்காவினை நீங்கள் எதிர்த்து இருக்கின்றீர்கள். அதே நேரம் உங்களின் மரணத்திற்குப் பின்னர் அமெரிக்காவிற்கு உங்களது கட்சியினாலேயே சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. உங்களது மரணத்தை அடிப்படையாக வைத்து ஆட்சியினைப் பிடித்த உங்களது கட்சியே உங்களது கொள்கையினை காற்றில் பறக்க வைத்து உள்ளது. ஏன் இந்த முரண்பாடு என்று சிந்திக்கவோ அல்லது விவாதிக்கவோ நமது நாட்டினில் ஊடகங்கள் ஏனோ தயாராக இல்லை. அவை ஏன் தயாராக இல்லை என்பதை நாம் முக்கியமாக கண்டாக வேண்டி இருந்தாலும் இப்பொழுது அதனை விட முக்கியமான விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது என்றே எண்ணுகின்றேன். அதுவும் குறிப்பாக நீங்கள் கொலையுண்ட காலப் பின்னணியை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றே எண்ணுகின்றேன்.

அது ஒரு தேர்தல் காலம். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 1991 ஆம் ஆண்டு. அந்த தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு நீங்கள் வரும் பொழுது தான் கொல்லப்பட்டு இருக்கின்றீர்கள். இங்கே என்னுள் எழும் கேள்வி என்னவென்றால் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கப் பெரும் பாராளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 1994 ஆம் ஆண்டில் தான் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் இரு வருடங்களிலேயே பாராளுமன்றத் தேர்தல் மீண்டும் வந்து இருக்கின்றது. அதுவும் அந்த இருவருடங்களில் இரண்டு பிரதமர்களை நமது நாடு சந்தித்து இருக்கின்றது.

சுருக்கமாக சொல்வதென்றால் நமது நாடு அந்த ஆண்டுகளில் ஏதோ மறைமுகப் பிரச்சனைகளைக் கண்டு வந்துக் கொண்டு இருந்து இருக்கின்றது என்றே என்னால் அறிந்துக் கொள்ள முடிகின்றது. நிச்சயம் அதனை நீங்களும் அறிந்து இருப்பீர்கள் என்றே எண்ணுகின்றேன்.

1989 ஆம் ஆண்டில் பிரதமராக பதவி ஏற்ற வி.பி.சிங் அவர்களை நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஈழத்தில் நீங்கள் அனுப்பிய அமைதிக் காக்கும் படையினை திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரு உன்னதமான மனிதர். இன்று வரை தமிழர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் ஒரு பிரதமர் என்றால் அது திரு.வி.பி.சிங் அவர்கள் தான் என்பதனை தமிழகம் நீங்கள் வந்து இருந்தால் நிச்சயம் அறிந்து இருப்பீர்.

ஆனால் வி.பி.சிங் அவர்கள் அமைதிப் படையினை திரும்பப் பெற்றதோடு மட்டும் நிற்க வில்லை...நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இட ஒதுக்கீடுக்கான மண்டல் கமிசனின் பரிந்துரைகளை சட்டமாக்கியவரும் அவரே. "ஆட்சிப் போனாலும் கவலை இல்லை...மக்களுக்கு உரிய இந்த இட ஒதுக்கீட்டினை நான் சட்டமாக்கியே தீருவேன்" என்று கூறி பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீட்டினை பெற்றுத் தந்த ஒரு மாபெரும் தலைவர் அவர்.

இட ஒதுக்கீட்டை அவர் கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக அவர் பதவி விலக வேண்டி இருந்தது என்பதையும், அவருக்கு பின்னர் சந்திரசேகரன் என்பவர் பதவி ஏற்றார் என்பதையும் நீங்கள் நன்றாக அறிவீர்.

இந்த சந்திரசேகரன் என்பவர் தான் அமெரிக்க விமானங்களுக்கு இந்தியாவில் எரிவாயு நிரப்ப அனுமதி தந்தவர் என்பதையும் அதனை பாராளுமன்றத்தில் நீங்கள் வன்மையாக கண்டித்தீர்கள் என்பதையும் வரலாற்றை சற்று கவனித்து இருப்பவர்கள் நிச்சயம் அறிந்துத் தான் இருப்பர். மேலும் இவரும் ஒரு வருடத்திற்கு மேலாக ஆட்சியில் இல்லாமல் ஆட்சி கவிழ மீண்டுமொரு பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்தியா தயாரானது என்பதையும் நீங்கள் அறிவீர். இதனால் தான் 1991 ஆம் ஆண்டில் நீங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராக வேண்டி இருந்தது.

இங்கே பலரும் 1991 ஆம் ஆண்டை மட்டுமே கண்டுக் கொண்டு இருக்கும் பொழுது ஏனோ தெரியவில்லை எனது கவனம் 1989 ஆம் ஆண்டில் திரு.வி.பி.சிங் அவர்களால் கொண்டு வரவேற்றப்பட்ட இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மீதே செல்லுகின்றது. காரணம் மீண்டும் தேர்தல் வருவதற்கு அடிப்படைக் காரணியாகவே அச்சட்டம் விளங்குகின்றது.

அச்சட்டத்தின் வாயிலாக அனைத்து அரசு பணிகளிலும் அனைத்து வகையான மக்களுக்கும் உரிய உரிமைகள் கிட்டப்பெறும். ஆனால் அதே சமயம் இந்தியாவில் பிராமணர்களும் உயர் சாதியினரும் கொண்டு இருந்த ஆதிக்கம் படிப்படியாக குறைந்து இருக்கும். இதனை நிச்சயம் அவர்கள் விரும்பி இருக்க மாட்டார்கள். ஆண்டாண்டுக் காலமாக அநியாயமாக அனுபவித்து வந்த சுகங்களை அவர்கள் இழக்க எவ்வாறு விரும்புவார்கள்?

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் பெரும்பான்மையானோர் பிராமணர்கள்.
பா.ஜ.க வைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
பொதுஉடைமை கட்சி என்றுக் கூறிக் கொள்ளும் கட்சியின் தலைமையிலும் பிராமணர்களும் மலையாளிகளுமே நிறைந்து உள்ளனர்.

இவ்வாறு இந்திய அரசியலில் முக்கியமான இடங்களை எல்லாம் கைப்பற்றிக் கொண்டு இருக்கும் பிராமணர்களும் உயர் சாதியினரும் எவ்வாறு அவர்களது ஆதிக்கத்திற்கு எதிராக வரும் சட்டத்தை ஏற்றுக் கொள்வர். மாட்டார்கள் தானே. எதிர்க்கத் தானே செய்வார்கள். அவர்களின் எதிர்ப்பினால் தானே திரு.வி.பி.சிங் அவர்கள் பதவி விலக வேண்டி இருந்தது. இதனை நீங்களும் தானே அறிவீர்கள்.

இந்த நிலைமையிலேயே தான் நாம் உங்களின் மரணத்திற்கு பின்னர் உங்களது கட்சி கொண்டு வந்த 'தனியார் மயக் கொள்கையினைப்' பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

வி.பி.சிங் சட்டத்தினைக் கொண்டு வந்து விட்டார். இனி அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கும் இருக்கும். படிப்படியாக பிராமணர்கள் மற்றும் இதர உயர் சாதியினரின் செல்வாக்கு குறையும். அதாவது அரசு வேலைகள் என்ற ஒன்று இருந்தால் பிராமணர்களின் செல்வாக்கு குறையும். அரசு வேலைகள் என்று ஒன்று இல்லாது போனால் இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாது போகும். இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாது போனால் பிராமணர்கள் மற்றும் உயர் சாதியினரின் செல்வாக்கு குறையாது. இதில் உள்ள உண்மையை நீங்கள் அறிவீர்கள் தானே...!!!

இதனை அடிப்படையாகக் கொண்டுப் பார்த்தால் 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசு அதனுடைய பணிகளை பெரும்பாலும் தனியார் வசம் விட்டு இருப்பதன் காரணத்தை நாம் அறிய முடிகின்றது தானே.

'பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமாவதும்...அச்சட்டத்தை காரணமாகக் கொண்டு ஒரு அரசைக் கலைத்து அதற்குப் பின்னர் தனியார் மயமாக்கும் வேலையை ஆரம்பிப்பதும்' நிச்சயம் தொடர்புடையவைகளே என்பதனை நீங்கள் இங்கே இருந்து இருந்தால் நிச்சயம் அறிந்தே இருப்பீர்கள்.

இதோ இன்று நமது நாட்டினைப் பாருங்கள்...பெரும்பாலும் அனைத்தும் தனியார் மயமாக்கப் பட்டுக் கொண்டே வந்துக் கொண்டு இருக்கின்றது. அனைத்து தனியார் நிறுவனங்களிலும் மேல் இடங்களில் பிராமணர்களும் உயர் சாதியினருமே நிறைந்து இருக்கின்றனர்.

இதோ 2010 இல் எடுத்த ஒரு ஆய்வு...தலைசிறந்த தனியார் நிறுவனங்களில் மேலான பதவிகளை வகிப்பவர்களில் 93% சதவீதம் பேர் உயர் சாதியினரே என்பதனை அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது (இவர்கள் இந்திய சனத்தொகையில் வெறும் 10% அவ்வளவே).

இதன் மூலமாக உங்களின் மரணத்தில் ஆதாயம் அடைந்து இருப்பது வெறும் அமெரிக்க நாட்டவர்கள் மட்டும் அல்ல இங்கே இருக்கும் உயர் சாதியினரும் பிராமணர்களும் தான் என்பது உங்களுக்கு புலனாகும் என்றே நம்புகின்றேன்.  இந்தக் கூற்றுக்கு சான்றாக உங்களின் மரணத்திற்கு வழிவகுத்த ஒருவராக அறியப்படும் சுப்பிரமணிய சாமி ஒரு பிராமணராக இருப்பதை எடுத்துக் கொள்ளலாம் தானே.

சுப்பிரமணிய சுவாமியை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். நீங்கள் இறந்து விட்ட செய்தியை அவ்விடத்தில் உள்ளவர்களே அறியாத நிலையிலேயே எங்கோ இருந்துக் கொண்டு இராஜீவ் காந்தி இறந்து விட்டார்...விடுதலைப் புலிகள் அவரைக் கொன்று விட்டார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்த ஒருவர் அவர். நிச்சயம் அவரை நீங்கள் அறிந்து இருப்பீர். இல்லை அறியவில்லை என்றாலும் அறிந்துக் கொள்ள முயற்சியாவது செய்யுங்கள் காரணம் உங்களின் மரணத்தில் சுப்பிரமணிய சாமியை விசாரிக்க விசாரணை கமிசன் பரிந்துரைத்தும் இன்னும் விசாரிக்கப்படாமலே நாட்டினுள் உலா வந்து கொண்டு இருக்கும் ஒரு மாபெரும் தலைவர் அவர்.

மேலும் நீங்கள் மரணித்த ஒரு மாதத்திற்குப் பின்னர் காஞ்சிபுரத்தில் பிரம்மஹத்தி தோஷ யாகம் நடத்தியவர் அவர். பிரம்மஹத்தி தோஷ யாகம் என்றால் என்னவென்று சாமானியனான எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். ஒரு பிராமணனைக் கொன்றால் அதை விட பெரிய பாவம் இல்லை என்றும் அப்பாவத்தை தீர்க்க யாகம் செய்ய வேண்டும் என்றும் அதுவே பிரம்மஹத்தி யாகம் என்பதும் நிச்சயம் உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஏன் என்றால் நீங்களும் ஒரு பிராமணர் தானே. உங்கள் ஆட்கள் தானே இந்த கதைகளை எல்லாம் நாட்டினுள் கட்டி வைத்து இருக்கின்றனர். ;ஆகையால் நிச்சயம் உங்களுக்கு அந்த யாகத்தைப் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.

பண்டிட் ஜவர்ஹலால் நேரு...உங்களின் தாத்தாவின் பெயர். இதில் பண்டிட் எனப்படுவது அவர் படித்து வாங்கியப் பட்டம் இல்லை...அது காஷ்மீரத்து பிராமணர் என்பதைக் குறிக்கும் சொல். அதாவது நீங்கள் காஷ்மீரத்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

நீங்கள் ஒரு பிராமணர். நீங்கள் மரணித்து இருக்கின்றீர். இல்லை கொலை செய்யப்பட்டு இருக்கின்றீர். அக்கொலையினில் சந்தேகத்துக்கு உரிய ஒருவர் பிராமணரை கொன்றால் செய்ய வேண்டிய யாகத்தை செய்கின்றார். அதுவும் நீங்கள் இறந்த ஒரு மாத காலத்திற்குள். இந்நிலையில் அவர் யாரைக் கொலை செய்தார்...எந்த பிராமணனைக் கொலை செய்தார்...என்ற கேள்விகள் சாதாரண மனிதனின் மனதிலேயே எழக்கூடும் தான் அல்லவா....ஆனால் ஏன் இந்தக் கேள்விகள் விசாரணை அதிகாரிகளின் மனதிலும் ஊடகங்களின் மனதிலும் எழவே இல்லை?

ஏன் சுப்பிரமணிய சாமி விசாரிக்கப்படவே இல்லை?

அவர் பிராமணர் என்பதாலா? இல்லை ஊடகங்கள் அனைத்தும் பிராமணர்களின் கையிலேயே இருக்கின்றன என்பதாலா...அல்லது இந்திய அரசியல் இன்றும் பிராமணர்களின் கைகளிலேயே தான் மறைமுகமாக இருக்கின்றது என்றக் காரணத்தினாலா?

இடஒதுக்கீடு வந்து இருக்கின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி கலைக்கப்படுகின்றது. பின்னர் உங்களை கொலை செய்வதன் வாயிலாக அமெரிக்கா உள்ளே அழைத்து வரப்படுகின்றது...தனியார்மயம் அமெரிக்காவின் துணையுடன் ஊட்டி வளர்க்கப்படுகின்றது...அரசு இயந்திரம் பழுதடைய செய்யப்படுகின்றது.

இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை என்றே எனக்குத் தோன்றுகின்றது. நிச்சயம் உங்களுக்கும் அவ்வாறே தோன்ற வேண்டும் என்றே நான் கருதுகின்றேன்...இல்லையெனில் உங்களின் மரணத்தை காரணமாக வைத்து ஆட்சியைப் பிடித்த உங்களின் கட்சியே உங்களின் மரணத்தைக் குறித்து உண்மையான அக்கறைக் காட்டாமலும் அதனைக் குறித்த விசாரணையை மழுங்கடிக்கச் செய்ததும் உங்களின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டதும் ஏன் என்ற கேள்விகளுக்கு உங்களால் விடை அளிக்க முடியுமா ஐயா?

மேலும் தங்களுக்கு சாதகம் என்றால் எதையும் பிராமணர்கள் செய்வர் என்பது நாம் அறிந்த ஒன்று தானே...ஆங்கிலேயன் இங்கே முதலில் வந்த பொழுது அவனுக்கு வால் பிடித்தது யார்? அவர்கள் தானே. காரணம் அவர்களும் அன்னியர்கள் தானே. சரி இருக்கட்டும் வரலாறு பெரியது. உங்களுக்கு அவ்வளவு பெரிய வரலாறு தெரிந்து இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே...இருந்தும் அவற்றை நாம் பார்க்க வேண்டிய நேரத்தில் பார்க்க முயலலாம்.

இப்பொழுது உங்களின் மரணத்தினால் ஆதாயம் அடைந்தவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் இந்தியாவில் வாழும் பிராமணர்களும் உயர் சாதியினருமே ஆவர் என்றே நாம் கண்டு  இருக்கின்றோம். இதனை குறித்து எந்த ஒரு ஊடகமும் பேசாது இருப்பதற்கு காரணம் ஊடகங்கள் அனைத்தும் ஒன்று அமெரிக்கா சார்ந்து இருக்கின்றன அல்லது பிராமணர்கள் சார்ந்து இருக்கின்றன என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது மேலும் சில விடயங்களைக் குறித்து நான் உங்களிடம் பேச வேண்டி இருக்கின்றது.

உங்களின் மரணத்திற்கு காரணமாக தமிழர்கள் அடையாளப்படுத்தப் பட்டு உள்ளனர். அது உண்மையா...உண்மை இல்லாவிடில் ஏன் தமிழர்கள் குறி வைத்து பழி வாங்கப்பட்டனர் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

கடிதம் தொடரும்....!!!

பி.கு:
1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!
2) தொடர்புடைய புத்தகங்கள்/பதிவுகள் சில
 - ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி
 - http://greatgameindia.wordpress.com/2013/03/07/subramanian-swamy-the-mossad-stooge-the-assassination-of-rajiv-gandhi/
 - http://realkillersofrajiv.blogspot.in/
- http://www.outlookindia.com/article.aspx?205868
- http://www.nytimes.com/1991/01/30/world/india-in-an-uproar-over-refueling-of-us-aircraft.html

12 கருத்துகள்:

சராசரி மனிதர்களான நமக்கே இந்த விடயம் புலனாகின்றது...


மற்றவர்களுக்கு...

நீண்ட நாட்களாக மனதில் எழும் கேள்விகல். ராஜிவ் கொலையில் எவர் எவர் ஆதாயம் அடைந்தார்கள் , அவர்களே உண்மையான குற்றவாளிகள்ுலக வங்கியில் இருந்த ஒருவர் “நிதி அமைச்சரானார்”, நம் நாட்டை நாசம் செய்யும் “புதிய பொருளாதாரக் கொள்கையினை அமுல் படுத்திவரும் அவரே. அரசியலில் ஒதுங்கியிருந்த ஒருவர் பிரதமரானர். யார் கொன்றார்கள என கேட்டவருக்கெல்லாம் பதவி கிடைத்தது. வென்றிருக்க வேண்டிய ஜனதா கட்சி இன்று முகவரி இல்லாமல் இருக்கிறது. இது ஒர் சர்வதேச கூட்டுச் சதி. மாட்டிக்கொண்டவன் தமிழன்.

1. உலகவங்கியில் பணியில் இருந்தவர், நிதி அமைச்சரகிரார், புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் பன்னாட்டு நிருவங்கள் (பெப்சி/கோலா) இந்தியாவில் நழைகின்றன. 2. கால் காசு சம்பாரித்தாலும் அது அரசு வேலையாக இருக்க வேண்டும் என சொல்லப்பட்ட காலத்தில், அரசு வேலை இழிவானது என பிராச்சாரம் செய்யப்படுகிற்து. 3. அரசியலில் ஒதுங்கி இருந்தவர் பிரதமானர். 4. வென்றிருக்கவேண்டிய ஜனதா கட்சி , இன்று முகவரி இல்லாமல் கிடக்கிறது. 5. திரிகோணமலை சீனாவின் ஆதிக்கத்தில் சென்றது. 6. ஆயத வியாபாரம் அமெரிக்க/இசுரேல்/பிரான்சு நாடுகளுக்கும் விரிவடைகிறது. ஆக, மொத்தமாக சொல்ல வேண்டுமெனில் “ இது ஒரு பன்னாட்டுச் சதி” .

நண்பரே,
ஹாலிவுட் த்ரில்லர் பாணியில் ராஜீவ் கொலையின் பின்னே திரைமறைவு ரகசியங்கள் இருப்பதாக ஒரு பிம்பம் கிடைக்கிறது. ஆனால் இதை வெறும் கற்பனை என்றும் ஒதுக்கிவிட முடியாத அளவுக்கும் லாஜிக் ஒத்துப்போகிறது. துணிவான கட்டுரைக்கு பாராட்டுக்கள்.


// அரசு வேலைகள் என்று ஒன்று இல்லாது போனால்........ இதில் உள்ள உண்மையை நீங்கள் அறிவீர்கள் தானே...!!! //

உலக மயமக்கல், இதன் மூலமான காட் ஒப்பந்தம் நிறைவேற்றபட்ட ஆண்டு 1984. இதன் தொடர்ச்சியே இந்திய தாரளமயமாக்கம்.

இதற்கும் இட ஒதுக்கிட்டுக்கும் சம்பந்தம் இருப்பதாக தோன்றவில்லை.

ஆனால் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கும், 90களில் தாராளமயம் உலக அளவில் பரவியதற்கும் நேரடி சம்பந்தம் உண்டு.



pls see
http://kannimaralibrary.co.in/?p=1223

http://kannimaralibrary.co.in/?p=1257

nalla pathivu anna...

orae oru santhegam... appa intha case la nalini mathiri eela poraligal eppadi sikkinarkal? athai patriyum elutha mudiyuma?

அழகாக திசை திருப்புகிறீர்.
நடக்கட்டும்.
பிரபாகரன் இறந்தபின்னும் உயிரோடு இருக்கிறார் என்று கொஞ்ச காலம் ஓட்டியது போல இதுவும் கொஞ்ச காலம் ஓடும்.
ஏனய்யா இந்த நோக்கினை ராம் ஜெத் மெலானியிடம் சமர்ப்பித்திருந்தால் பராக் ஓபாமாவை குற்றவாளியாக்கியிருப்பாரே..!!
புலனாய்வுத்துறையிடம் சொல்லியிருக்கலாமே.
இப்போது கூட என்ன உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்.
இத்தனை கிரிமினல் மூளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவனுக்கு கிடையாதய்யா.
உம் கூட்டத்தை கோயபெல் கூட்டம் என்று யாரோ சொன்னது உன்மைதான்.

மயக்கும். மயங்குவார் இருக்கிறார்களா பார்ப்போம்.

காட் ஒப்பந்தம் நரசிம்மராவ் பிரதமரான பின்னர் 1994 கொண்டு வரப்பட்டது .

வினோத் குமார் சொல்வது போல் அது 1984 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட வில்லை .

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு ,நரசிம்மராவ் பிரதமரானவுடன் அவசர அவசரமாக தாரளமயமாகல் , திறந்த பொருளாதராம் என மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதன் பின்ன்ணியில் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு சதி இருந்திருக்கிறதென்பதை என்னால் முன்பே ஊகிக்க முடிந்தது .

ஆனால் இந்தியளவில் , உயர் சாதி பிராமணர்கள் மற்றும் மலையாளிகள் எந்த அளவு பங்கு வகித்தனர் என்ற கோணத்தில் நான் சிந்தித்திருக்கவில்லை .
இந்தக்கட்டுரை அந்த கோணத்தில் அலசி ஆராய்வது மட்டுமல்ல , மறுக்க முடியாத வகையில் தர்க்க ரீதியாக நியாயங்களையும் , ஆதரங்களையும் முன் வைக்கிறது.
ஏனைய பாகங்களயும் ஆவலாக எதிர்பார்க்கிறேன்.

அய்யா காசி விசுவனாதா ,

ஜெயின் கமிஷன் கூட சுப்ரமணிய சுவாமியை விசாரிக்க சொல்லியிருக்கிறது .

விசாரிக்கப்பட்டாரா ?

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என சொன்னவர்களா ஜெயின் கமிஷனின் நீதிபதிகளாக இருந்தார்கள் ?

http://www.wto.org/english/thewto_e/minist_e/min96_e/chrono.htm

http://www.wto.org/english/thewto_e/gattmem_e.htm

http://en.wikipedia.org/wiki/General_Agreement_on_Tariffs_and_Trade

காட் 1994ல் செய்யப்பட்டதல்ல.. என்பதை பார்க்கவும்

@Vinoth Kumar,

What we are speaking here is about the new policies that were being introduced in 1994.

GATT was changed to WTO.

//On 1 January 1995, the WTO replaced GATT, which had been in existence since 1947, as the organization overseeing the multilateral trading system. The governments that had signed GATT were officially known as “GATT contracting parties”. Upon signing the new WTO agreements (which include the updated GATT, known as GATT 1994), they officially became known as “WTO members”.//

And India is a Member in that only from 1994.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு