விவிலியமும் போப்பும்:

இன்று விவிலியம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு மக்களும் அதன் கருத்துக்களை எளிதாக அறிந்துக் கொள்ளும் வண்ணம் திகழ்கின்றது. இவ்வாறு பல்வேறு மொழிகளில் இருப்பதனால் விவிலியத்தின் புனிதத்தன்மை என்று நம்பப்படும் ஒன்று கெட்டுவிடவில்லை என்றே நம்புகின்றேன். நிலை இவ்வாறு இருக்க எதற்காக கிருத்துவ தேவாலயமும் சரி போப்பும் சரி விவிலியத்தினை 'புனித மொழியான இலத்தீனில் இருந்து மற்ற மொழிகளில் மற்ற மக்களுக்கு புரியுமாறு விவிலியத்தினை மொழிப்பெயர்த்தால் அந்நூலின் புனிதத்தன்மை கெட்டு விடும்' என்றுக் கூறி கிட்டத்தட்ட கி.பி பதினாறாம் நூற்றாண்டு வரை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க தடை செய்ய வேண்டும்? அவ்வாறு மொழிபெயர்க்க முயன்றவர்களை 'இவர்கள் இறைவனுக்கு எதிராக செயல்படுகின்றார்கள்' என்றுக் கூறி எதற்காக தீயில் இட்டு எரிக்க வேண்டும்? (அவ்வாறு எரிக்கப்பட்டவர்களுள் சிலர் ஜான் ஹஸ், வில்லியம் டிண்டேல்...)

இயேசு பேசிய மொழி அரமேயம். பழைய ஏற்பாடு முதலில் எழுதப்பட்ட மொழி எபிரேயம். புதிய ஏற்பாடோ கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இம்மொழிகளில் இருந்தே இலத்தீனிற்கு விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது. அவ்வாறு இருக்க இலத்தீன் மட்டுமே புனித மொழியானது எவ்வாறு? எப்பொழுதில் இருந்து?

மேலும் கான்சுடன்டைன் காலத்திற்கு பின்னர் வந்த போப் முதலாம் டமாஸ்கஸ் அவர்களின் ஆணைப்படி விவிலியத்திற்கு அதுவரை இலத்தீனில் இருந்த விளக்கத்திற்கு மாறாக புதிதாய் விளக்க உரை எழுதப்பட்டு உள்ளது (அந்த விவிலிய பதிப்பிற்கு பெயர் வல்கேட்). அந்த விளக்க உரையையும் பழைய இலத்தீன் விளக்க உரையையும் படித்து ஆய்வு செய்த அறிஞரான லினேகர் அவர்கள் பின் வருமாறுக் கூறி இருக்கின்றார்.

"வல்கேட் என்னும் இந்த இலத்தீன் மொழிபெயர்ப்பு தான் விவிலியம் என்றால் இது விவிலியமும் இல்லை...நாம் கிருத்துவர்களும் இல்லை". அவர் ஏன் அவ்வாறு கூற வேண்டும்? ஏன் போப் அவர்கள் விவிலியத்திற்கு தவறான உரையினை எழுத முற்பட வேண்டும்?

பொதுவாக எதற்காக விவிலியத்தினை பொது மக்களிடம் இருந்து பிரித்து வைத்து இருக்க வேண்டும்?

"படைப்புகளுக்கெல்லாம் சென்று நற்செய்தியை தெரிவியுங்கள்" என்ற இயேசுவின் கூற்றுக்கு மாறாக மக்களிடம் இருந்து இயேசுவின் கருத்துக்களை இவர்கள் ஏன் மறைக்க முயல வேண்டும்? ஏன் தவறானக் கருத்துக்களை எழுத வேண்டும்?

'சமசுகிருதம் புனிதமான மொழி அதனை பிராமணர்களைத் தவிர வேறு யாரும் பயிலக் கூடாது, அதேப் போல் சமசுகிருதத்தில் உள்ள வேதங்களையும் பிறர் படிக்க கூடாது...அவ்வாறு படித்தால் அவரைக் கொல்ல வேண்டும்' என்று இந்தியாவில் நிலவிய நிலையைப் போல் அல்லவா போப் இலத்தீனைத் தூக்கிப் பிடித்த நிலையும் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க கூடாது என்றுக் கூறிய நிலையும் உள்ளது. இது சமயங்களைக் கைப்பற்றி மக்களை அதன் மூலமாக அடிமையாக்கி வைத்துள்ள நிலையைத் தானே குறிக்கின்றது. இதில் ஆன்மிகம் எங்கிருந்து வருகின்றது?

இல்லை இலத்தீன் தான் புனிதமான மொழி என்றால் பின்னர் எதற்காக மக்கள் புரட்சியின் காரணமாக உலகின் அனைத்து மொழிகளிலும் விவிலியத்தினை மொழிபெயர்க்க கி.பி பதினாறாம் நூற்றாண்டில் இருந்து அனுமதி வழங்க வேண்டும்? மக்கள் புரட்சி செய்து அதனால் மாறுவது என்கின்ற ஒன்று அரசியலா ஆன்மீகமா?

இவ்வாறு தன் விருப்பத்திற்காக விவிலியத்தின் கருத்துக்களை மாற்றியும் மறைத்தும் தன்னுடைய செல்வாக்கினை வளர்த்துக் கொண்ட போப்பையும் அவர்கள் அதிகாரங்களையும் எவ்வாறு கிருத்துவத்தினையையும் இயேசுவையையும் உண்மையாக இன்று குறிப்பவர்களாக நாம் கருத முடியும்?. அரசியலின் மூலமாக சமயத்தினை கட்டுப்படுத்தி அதன் மூலமாக தங்களது செல்வாக்கினை நிலை நிறுத்திக் கொண்டுள்ள அரசியல்வாதிகளாகத் தானே அவர்களை நாம் காண முடியும்.

இயேசுவின் இரண்டாம் வருகை:

"இயேசு வருகின்றார்...இயேசு வருகின்றார்" என்றுக் கூறி இன்றைய கிருத்துவ சமூகமே கிட்டத்தட்ட 2000 வருடங்களாக காத்துக் கொண்டு இருக்கின்றனர். இயேசு இரண்டாம் முறையாக உலகிற்கு வருகையினைப் புரிவார் என்பதே அவர்களின் நம்பிக்கை. ஆனால் இங்கே தான் நமக்கு கேள்விகள் இருக்கின்றன... விவிலியத்தின் படி,

"அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணும்முன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" - மாற்கு 9:1

" இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." - மத்தேயு 16:28

"இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." - லூக்கா 21:32

இயேசு அவர்கள் அங்குள்ள மக்கள் பலர் இறப்பதற்கு முன்னரே இரண்டாம் வருகை நிகழ்த்து விடும் என்று கூறுவதனைப் போல் இருக்கின்றது. ஆனால் இன்று வரை இயேசு வருவார் இயேசு வருவார் என்றே கிருத்துவர்கள் கூறிக் கொண்டு இருக்கின்றனர். அதாவது அவர்களின் கூற்றின் படி இயேசு இன்னும் இரண்டாம் முறையாக உலகிற்கு வரவில்லை...!!!

2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் யாரும் இன்று உயிருடன் இல்லை... அவ்வாறு இருக்க அன்றுள்ள மக்கள் பலர் மரணிப்பதற்குள் இரண்டாம் வருகை நிகழும் என்று இயேசு கூறியது ஏன்?

இயேசு பொய் கூறி இருக்கின்றாரா அல்லது அவரின் இரண்டாம் வருகை என்பது தவறாக புரிந்துக் கொள்ளப் பட்டு இருக்கின்றதா? தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்டு இருக்கின்றது என்றால் இரண்டாம் வருகை என்றால் என்ன, அது எப்பொழுது நிகழ்ந்தது/நிகழப் போகின்றது என்று எவரேனும் கூற இயலுமா? (இதனைப் பற்றி ஒரு தனிப் பதிவு காத்துக் கொண்டு இருக்கின்றது.)

கிருத்துவமும் சைவமும்:

1) விவிலியத்தில் இயேசு வாழும் கல் என்று அழைக்கப்பட்டு இருப்பது எதனால்?

"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்," - (பேதுரு I - 2 : 4 )

2) மூஒருமைக் கோட்பாடு என்பது கிருத்துவக் கோட்பாடு...அதே கோட்பாடு சைவ வைணவ சமயத்திலும் காணப்படுவது எதனால்?

3) //உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6 - இது சவுலின் கூற்று. இதன் மூலம் சவுல் எதனைக் கூற வருகின்றார்?

இதனையொத்த கருத்தினை திருமூலரும் கூறி இருப்பது எதனால்?

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம்


4) சிவலிங்கத்தின் முன்னே கன்றினை வைத்து வழிபடுவது இன்று சைவத்தில் இருக்கின்றது. ஆனால் அதனையொத்த குறிப்புகள் விவிலியத்தில் காணப்படுவது ஏன்?

எரோபெயாம் என்பவன் மக்கள் வழிபடுவதற்கு இரண்டு கன்றுக் குட்டி சிலைகளை உருவாக்கி ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றினை தானிலும் வைத்தான். அதுவரை கல்லும் பலிபீடமும் மட்டுமே இருந்த இடத்தில இப்பொழுது கன்றுக்குட்டியும் சேர்ந்தது. (இராஜாக்கள் I - 12 : 28 : 32 )

5) இன்று திருநீறு என்பது சைவர்களின் சின்னம்...ஆனால் அதே சின்னம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது எதனால்?


"ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவர் தம் கைவன்மையால் எகிப்திலிருந்து உன்னை வெளியேறச் செய்தார்." - விடுதலைப் பயணம் 13 : 9 (பழைய ஏற்பாடு)

"மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்." - திருவெளிப்பாடு 14 : 1 (புதிய ஏற்பாடு)


தொடர்புடைய இடுகைகள்: (விவிலியமும் சிவலிங்கமும், யாகோவா, கிருத்துவமும் திருநீறும்,  மூவொரு கடவுள் கோட்பாடு)

ஏன் இந்த ஒற்றுமைகள் என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது...மேலும் இன்னும் பல ஒற்றுமைகளை/கேள்விகளை நாம் கூறிக் கொண்டே போகலாம்... ஆனால் இப்போதைக்கு இக்கேள்விகள் போதும் என்றே எண்ணுகின்றேன்... மேலும் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து இப்பொழுது நாம் காண வேண்டி இருப்பதனால் ஒற்றுமைகளுக்கும் கேள்விகளுக்கும் சிறிது விடை கொடுத்து விட்டு இரண்டாம் வருகையை நோக்கிச் செல்ல வேண்டி இருக்கின்றது....

பயணிப்போம்...!!!

15 கருத்துகள்:

கண்ணதாசனும் கிறிஸ்துவும்

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவது
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!

-கவிஞர் கண்ணதாசனின் (1927-1981) "இயேசு காவியம்" நூலிலிருந்து.(Kannadasan - “Yesu Kaviyam”)

திருச்சிராப்பள்ளியில் 1982 ஜனவரி 16-ல் அன்றைய தமிழக முதல்வர் டாக்டர்.எம்.ஜி.இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

கிறிஸ்துவும் விவேகானந்தரும்

இந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.

இவர் இவ்வாறாக சொல்கிறார்.

"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)

""மகனைப் பார்க்காதவர் தந்தையைப் பார்க்காதவராவர்"என்பது விவிலிய வேத வாக்கு. மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவில்லாதத் தத்துவம்; பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டுமானால்,ஏசுவின் உருவிலே விளக்கமுற்று நிற்கும் கடவுளை மிகவும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 270,271)


""தீமையைத் தீமையால் எதிர்க்காதே" என்ற இயேசு நாதரின் போதனையை இந்த உலக்ம் கடைபிடிக்கவில்லை. அதனால் தான் இவ்வுலகம் இவ்வளவு தீமையுள்ளதாக இருக்கிறது".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 119)

"இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)

கிறிஸ்து பற்றி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை (1888-1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”, ”தமிழன் என்றோர் இனமுன்று தனியே அதற்கோர் குணமுண்டு' 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' போன்ற இவரது மேற்கோள்கள் பிரபலமானவை.

இவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பாடிய பாடல்
தூயஞான தேவன்தந்தை பரமன்விட்ட தூதனாய்த்
துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
மாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்
மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
மாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.

நல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
கொல்லவந்த வேங்கைசிங்கம்கூசநின்ற சாந்தனாம்
குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.

ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!

சுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது

பிரபல தமிழ் கவிஞர் சுத்தானந்த பாரதி அவர்கள் (Shuddhanadha Bharati 1897-1990) கிறிஸ்துவைப்பற்றி இவ்வாறு பாடினார்.
Tamil poet Shuddhanadha Bharati wrote about Jesus Christ as follows.

மரணத்தை வென்றவனே! மன்னவனே அன்புருவே!
தரணி உய்யப் பிறந்தவனே! தாவீதரசன் குலக் கொளுந்தே
கருணையுடன் அவதரித்தாய்! காத்திடவே மெய்யறத்தை
அரண் எமக்குன் திருவருளே அறிவெல்லாம் அமர்ந்தவனே!

நலத்தினைப் பழகிக் காட்டி நன்னெறித் தவத்தில் ஓங்கி
நலத்தினை மாந்தர் உய்ய நவின்றனை அன்பினாலே,
நலத்தினை அறியா மாக்கள் நவிலருங் கொடுமை செய்ய.
நலத்தினை அறியக் காட்ட நல்கினை பலியாய் உன்னை.

உன் பெயராலே இந்த உலகினில் உயிர்ப்போம்!நாங்கள்
உன் பெயராலே உண்போம்,உன் அருள் சிறக்க வாழ்வோம்
உன் பெயராலே எங்கும் உத்தமத் தொண்டு செய்வோம்.
உன் பணித் திறத்திற்கெங்கள் உழைப்பெலாம் ஈந்து வாழ்வோம்.

திரு.வி.க-வும் கிறிஸ்துவும்

"மாசு மிகுந்த மனித இருள் போக்க வந்த
இயேசு உனை மறவேன் இன்று"

" உன் குருதி மூழ்கினேன் உய்ந்தேன் திருக்குமரா"

"சிலுவையில் சிந்தை வைத்தால் தீமையெல்லாம் அகலும்"

"கிறிஸ்துவின் இரத்தம் பெரு மருந்து.கேடில் இன்பம் தரு விருந்து"

"தெய்வக் குமர குருபரனே சீவரைத் தாங்கும் செங்கரனே"

-திரு.வி.கல்யாண சுந்தரனார்.(1883-1953)

"கிறிஸ்துவினிடத்தில் எனக்கு அன்பு உண்டு.ஆனால் மதம் மாற என் மனம் ஒருப்படவில்லை" என்றார்.இவர் உலகிலுள்ள சமயங்களின் சாரமெல்லாம் கிறிஸ்து பெருமானின் மலைப்பொழிவில் திகழ்வதாக நம்பினார்.அதனால் தான் தன் மணவிழாவின் போது கிறிஸ்தவ ஜெபத்திற்கும் இடம் கொடுத்தார்."கிறிஸ்துவின் அருள் வேட்டல்" எனும் நூலை எழுதினார்.

பைபிளும் இவர்களும்

நான் ஒரு வேளை சிறைசாலையில் அடைக்கப்படும் போது,என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை மாத்திரம் கொண்டு போகலாம் எனக் கூறினால், நான் பைபிளை (வேதாகமத்தை) மாத்திரமே தெரிந்தெடுப்பேன் - கோதே (Goethe)

வேதாகமம் ஒரு பழமையான புத்தகமோ, அல்லது புதுமையான புத்தகமோ அல்ல. அது நித்திய நித்திய காலமாக உள்ள ஓர் அழிவற்ற நூலாகும்- மார்ட்டின் லுத்தர் (Martin Luther)

ஒரு சிறு பிள்ளையின் கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு இவ்வுலக ஞானிகளின் அறிவைப் பரிகாசம் செய்யும் ஓர் புத்தகமே வேதாகமம்.- பேராசிரியர் பீட்டெக்ஸ்

நூறு முறை வேதாகமத்தை வாசித்து முடித்த பின் ஸ்பர்ஜன் (Charles Haddon Spurgeon) கூறினார், "நான் நூறாவது முறை வேதத்தை வாசித்தபோது, முதல்முறை வாசித்ததை விட அதை மிகவும் அழகுள்ளதாகக் கண்டேன்."

உலக புகழ்பெற்ற நூல்கள் பலவற்றை எழுதிய ஆங்கில எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) தனது மரணப்படுக்கையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுது தனது மூத்த மகனிடம், "அந்தப் புத்தகத்தை எனக்குத் தா" என்றாராம்.மகன் அவரிடம், "எந்தப் புத்தகத்தை அப்பா கேட்கிறீர்கள்?"என்று கேட்டார். அப்பொழுது ஸ்காட் பதிலுரைத்தார், "இவ்வுலகில் 'புத்தகம்'என அழைக்கப்படக்கூடிய ஒன்று உண்டானால் அது வேதாகமம் மாத்திரமே".

பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin) இவ்வாறாக கூறினார்."A Bible and a newspaper in every house, a good school in every district--all studied and appreciated as they merit--are the principal support of virtue, morality and civil liberty."

சரி தோழரே... இவைகள் இருக்கட்டும்...!!!

ஆனால் இவைகள் நான் கேட்ட கேள்விகளுக்கு விடைகள் அல்லவே? அக்கேள்விகளுக்கு விடையினைக் கூறாது மற்றக் கருத்துக்களைப் பற்றிக் கூறிக் கொண்டே செல்வது என்பது ஏதேனும் பயனைத் தருமா என்பது சந்தேகமே.

எனவே நீங்கள் இங்கே கேட்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு விடையினைத் தருவீர்கள் என்றே எண்ணுகின்றேன். மேலும் உங்களின் பார்வைக்கு,

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/09/blog-post.html


முதல் முறையாக இப்பதிவுகளைக் கண்டேன். நல்ல பதிவுகள் ... கேள்விகள். தொடர்ந்து மற்றவைகளையும் படிக்கிறேன். நன்றி

//4) சிவலிங்கத்தின் முன்னே கன்றினை வைத்து வழிபடுவது இன்று சைவத்தில் இருக்கின்றது. ஆனால் அதனையொத்த குறிப்புகள் விவிலியத்தில் காணப்படுவது ஏன்?

எரோபெயாம் என்பவன் மக்கள் வழிபடுவதற்கு இரண்டு கன்றுக் குட்டி சிலைகளை உருவாக்கி ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றினை தானிலும் வைத்தான். அதுவரை கல்லும் பலிபீடமும் மட்டுமே இருந்த இடத்தில இப்பொழுது கன்றுக்குட்டியும் சேர்ந்தது. (இராஜாக்கள் I - 12 : 28 : 32 )//

I இராஜாக்கள் 12 அதிகாரம்

27. இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.

28. ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,

29. ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.

30. இந்தக் காரியம் பாவமாயிற்று;//

கன்றை வழிபடுவது அன்றைய பாகன் மதத்தின் வழக்கம். விவிலியத்தில் கன்றை வழிபடுவது தவறு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் கொடுத்துள்ள வசனத்தின் மேலும் கீழும் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள்.

இதைப்போல ஒரு சம்பவம் மோசே காலத்திலும் நடைப்பெற்றது. அதையும் தவறு என்றே விவிலியம் குறிப்பிடுகிறது.

இந்து மதம் பாகனிசத்தின் இந்திய வடிவம். எனவே இந்து மதத்திலும் கன்றுக்குட்டி வழிபாடு இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

@ Robin

//இந்து மதம் பாகனிசத்தின் இந்திய வடிவம்.//

இதனை எதன் அடிப்படையில் நீங்கள் கூறுகின்றீர்? இந்து சமயத்தின் கருத்துகளையும் நூல்களையும் நீங்கள் படித்து இருக்கின்றீர்களா? இல்லை என்றால் எதன் அடிப்படையில் நீங்கள் கூறுகின்றீர் என்று நான் அறிந்துக் கொள்ளலாமா?

//இதைப்போல ஒரு சம்பவம் மோசே காலத்திலும் நடைப்பெற்றது. அதையும் தவறு என்றே விவிலியம் குறிப்பிடுகிறது.//

கன்றினை வழிபடுவது சரி என்றோ தவறென்றோ நான் குறிப்பிடவில்லையே தோழரே...தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் இருந்து எழுந்தது தான் யூத சமயம் என்றும் அவ்வளர்ச்சியினை விவிலியத்தில் காணுகின்றோம் என்பதே எனது கருத்து ஆகும். கல் வழிபாட்டு கன்று சேர்ந்த முறையை விவிலியத்தின் அந்தப் பகுதி கூறுகின்றது அவ்வளவே.

இதில் தங்களுக்கு கேள்விகள் ஏதேனும் இருந்தால் கூறுங்கள்...விவாதிப்போம்!!!

இந்து மதத்திற்கும் கிரேக்க, பெர்சிய பாகன் மதங்களுக்கும் ஒற்றுமைகள் உண்டு.

//கல் வழிபாட்டு கன்று சேர்ந்த முறையை விவிலியத்தின் அந்தப் பகுதி கூறுகின்றது அவ்வளவே.// கன்று வழிபாடு பாகனிசத்தில் இருந்ததாகத்தான் விவிலியம் கூறுகிறது.

@ Robin,

//இந்து மதத்திற்கும் கிரேக்க, பெர்சிய பாகன் மதங்களுக்கும் ஒற்றுமைகள் உண்டு.//

ஒற்றுமைகள் உண்டு என்றுக் கூறுகின்றீர். அவை எந்த ஒற்றுமைகள் என்று தாங்கள் கூற முடியுமா?

ஒரு இறைவன் மூன்று நிலைகளில் விளங்குகின்றான் என்பது இந்து சமயத்தின் கோட்பாடு.

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு
தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே. - திருமங்கை ஆழ்வார் (3-1-10).

அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே. - சிவஞானசித்தியார்(1:38)

மேலே கண்ட வரிகள் மூலம் இறைவன் ஒருவன் தான் ஆனால் மூன்று நிலையில் விளங்குகின்றான் என்ற அவர்களின் கருத்து விளங்குகின்றது. இக்கருத்துக்கள் தாங்கள் கூறிய பெர்சிய, கிரேக்க, பாகன் வழிப்பாட்டு முறைகளில் இருந்தனவா? அவ்வாறு இல்லை என்றால் பின்னர் தாங்கள் எவ்வாறு இந்து சமயத்தினைப் பற்றி முழுதும் அறியாது கருத்தினைக் கூற முடியும் நண்பரே?

//கன்று வழிபாடு பாகனிசத்தில் இருந்ததாகத்தான் விவிலியம் கூறுகிறது.//

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/04/21.html

இந்தப் பதிவினை தாங்கள் படிப்பது நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன் தோழரே...!!!

Triads of complementary gods were a common theme in pre-Christian mythology. One such example is Zeus, Poseidon and Hades in Greek mythology. The Romans had the additional concept of Jupiter, Juno, and Minerva which they developed from Tinia, Uni, and Menerva, part of the pantheon of ancient Babylon

http://rationalwiki.org/wiki/Trinity

@Robin,

Trinity stands for a Single god in three different forms... not three different gods. Zeus, Poseidon, Hades were three different gods...and they were not the only gods...those are mythical stories.

in hinduism it is a single god in three different forms...Father mother and the son. and they are the one and the same. and this is totally different from all those triads that u are speaking abt.

If u can go thru my other posts u can find out what i'm saying...please take time to go thru all the posts in this series!!!

@ Robin,

U can find the index for the series below,

http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/blog-post.html

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி