"சில நேரங்களில் ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகின்றது தோழரே...அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு விட்ட இந்தச் சமூகத்தில் நாம் என்ன மாற்றத்தினை எதிர் பார்த்து விட முடியும்? நாம் யாருக்காக போராடுகின்றோமோ அவர்களே நம்முடைய போராட்டங்களுக்கு உரிய ஆதரவினை தருவதில்லையே...இந்நிலையில் நாம் ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் சில நேரம் வந்து தான் விடுகின்றது தோழரே..."

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது அவர் என்னிடம் கூறிய வார்த்தைகள் இவை. உண்மை தான்... இன்றைய நிலையில் நம்மை சூழ்ந்து இருக்கும் பிரச்சனைகளைப் பார்த்தால் மலைப்பாகத் தான் இருக்கின்றது. அவற்றின் எண்ணிக்கையும் சரி தாக்கமும் சரி அளவிடப்பட முடியாத வண்ணம் நாள்தோறும் வளர்ந்துக் கொண்டே இருக்கின்றன. சரி பிரச்சனைகள் ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் அப்பிரச்சனைகளையோ அல்லது அவற்றின் தாக்கங்களையோ பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்க்காத மக்களின் எண்ணிக்கையும் சிந்தனை ஓட்டமும் மேலும் மலைக்கத் தான் வைக்கின்றன.

அந்நிலையில் 'எதற்காக போராட வேண்டும்...அவர்களுக்கே அக்கறை இல்லாத பொழுது நாம் மட்டும் எதற்காக குரல் கொடுக்க வேண்டும்...நமக்கும் ஒரு சராசரியாக இருக்கத் தெரியாதா என்ன...?' என்ற எண்ணங்கள் இயல்பாகவே நம்முள் மெல்ல நுழைந்து விடத்தான் செய்கின்றன. ஆனால் அத்தகைய எண்ணங்கள் என்னதான் நம்முடைய சிந்தனையுள் நுழைந்தாலும் அவை அனைத்தையும் ஏதோ ஒரு விடயம் எப்பொழுதும் துரத்தி விட ஏதுவாக நிகழ்ந்துக் கொண்டே தான் இருக்கின்றது....நாம் போராட வேண்டியக் காரணத்தினை அது உரத்துக் கூறிக் கொண்டே தான் இருக்கின்றது.

அப்படிப்பட்ட விடயங்கள் பலவற்றுள் இந்தக் கட்டுரையும் ஒன்றாக அமையும் என்ற எண்ணத்திலேயே இதனை பகிர்ந்துக் கொள்கின்றேன். இதோ அச்சிறுமி எழுதியக் கட்டுரை. (படங்களை விரிவாகப் பார்க்க படத்தின் மீது ஒரு முறை அழுத்தவும்)

பல கனவுகளோடு தான் இன்னும் இந்த மண்ணினில் பூக்கள் பூத்துக் கொண்டு இருக்கின்றன...அவைகளுக்கான உலகினை அமைத்துத் தர நாம் போராடத் தான் வேண்டி இருக்கின்றது....என்ன சொல்லுகின்றீர்!!!

3 கருத்துகள்:

இந்த சமூக சிந்தனை இதுபோன்று பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் அனைவரும் படிக்கும் வரையில் அனைவருக்கும் இருக்கின்றது. அவர்கள் பொருள் சம்பாதிக்க துவங்கிய உடன் பெரும்பான்மை மக்கள் நேரம் குறைகின்றது நான் என் பிள்ளை என் மனைவி என் குடும்பம் என்று சுருங்கி விடுகிறது போராடும் மனதும் மழுங்கடிக்கப் பட்டுவிடுகின்றது இதுவே ஆட்சியாளர்களின் வெற்றியாகும். சிந்தனை முழுவதும் உங்கள் பிளைப்பிற்ககாக மட்டுமே செய்யவேண்டும் அதை விடுத்து மற்ற சிந்தனை வரக் கூடாது என்பதில் தெளிவான ஆட்சியை நடத்துவார்கள் இது வெள்ளைக்காரன் பாணி அடிமை அரசியல் ஆட்சிமுறை இதை நம் அரசியல் வாதிகள் தெளிவாக செய்கிறார்கள் எப்படி என்று அறிய இந்த இணைப்பை பாருங்கள்

இந்த சமூக சிந்தனை இதுபோன்று பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் அனைவரும் படிக்கும் வரையில் அனைவருக்கும் இருக்கின்றது. அவர்கள் பொருள் சம்பாதிக்க துவங்கிய உடன் பெரும்பான்மை மக்கள் நேரம் குறைகின்றது நான் என் பிள்ளை என் மனைவி என் குடும்பம் என்று சுருங்கி விடுகிறது போராடும் மனதும் மழுங்கடிக்கப் பட்டுவிடுகின்றது இதுவே ஆட்சியாளர்களின் வெற்றியாகும். சிந்தனை முழுவதும் உங்கள் பிளைப்பிற்ககாக மட்டுமே செய்யவேண்டும் அதை விடுத்து மற்ற சிந்தனை வரக் கூடாது என்பதில் தெளிவான ஆட்சியை நடத்துவார்கள் இது வெள்ளைக்காரன் பாணி அடிமை அரசியல் ஆட்சிமுறை இதை நம் அரசியல் வாதிகள் தெளிவாக செய்கிறார்கள் எப்படி என்று அறிய இந்த இணைப்பை பாருங்கள் http://vitrustu.blogspot.in/2013/03/1.html

கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.com/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி