கடந்த இரு பதிவுகளில் வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் பற்றியும் விவிலியத்தில் உள்ள பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவற்றினுள் உள்ள வேறுபாடுகளைப் பற்றியும் சிறிதளவு பார்த்தாயிற்று. நாம் சென்ற பதிவினில் எச்.தி. கிரிசுவோல்த் (H.D.Griswold) அவர்கள் வேதத்திற்கும் எபிரேயச் சமயத்திற்கும் சரி ஒற்றுமைகள் இருப்பதாக கூறி இருக்கின்றார் என்றுக் கண்டோம். மேலும் பழைய ஏற்பாடு என்பது எபிரேய மதத்தினைச் சார்ந்தது என்றும் கண்டோம். அத்தகைய பழைய ஏற்பாட்டுக்கும் வேதங்களுக்கும் தான் தொடர்புகள் பல இருப்பதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இங்கே ஆச்சர்யப்படத்தக்க ஒரு விடயம் என்னவென்றால் வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளுக்கும் சரி பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவற்றுள் காணப்படும் வேறுபாடுகளும் சரி கிட்டத்தட்ட ஒன்றைப் போலவே இருக்கின்றன. அதாவது,

வேதத்திலும் சரி பழைய ஏற்பாட்டிலும் சரி பலி இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. இறைவனிடம் நாம் ஏதாவது வேண்டினோம் என்றால் அதற்கு பலி நிச்சயம் தேவை என்ற நிலையே அவ்விரண்டு நூல்களிலும் காணப்படுகின்றது.

வேதங்களில் யசுர் வேதம் பலி செய்யப்பட வேண்டிய முறைகளைக் குறிப்பதாக உள்ளது. பழைய எற்பாட்டினிலும் லேவியாகமம் என்னும் பகுதி முழுக்கவே பலி எவ்வாறு செய்ய வேண்டும் என்றுக் குறிப்பதனைப் போலவே விளங்குகின்றது. இவ்விரண்டு முறைகளிலுமே நெருப்பு இன்றியமையாத ஒன்றாக அமைந்து இருக்கின்றது.

ஆனால் வேதாந்தங்களோ அல்லது புதிய ஏற்பாடோ பலியினை மறுப்பது போன்றே அமைந்து உள்ளன.

மேலும் வேதங்களிலும் சரி பழைய எற்பாட்டினிலும் சரி பல கடவுளர் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் வேதாந்தங்களோ அல்லது புதிய ஏற்பாடோ தலைக் கடவுள் அதாவது முழுமுதற் கடவுள் ஒருவரே என்றக் கொள்கையினை உடையவையாக இருக்கின்றன.

மேலும் உலகப்படைப்பினைப் பற்றிய கருத்துக்கள் வேதங்களிலும் சரி பழைய ஏற்பாட்டில் உள்ள ஆதியாகமத்திலும் சரி கிட்டத்தட்ட ஒன்றைப் போலவே இருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"வேதங்களிலும் ஆதியாகமத்திலும் உலகப் படைப்புப் பற்றிய கருத்துக்கள் ஒத்துக் காணப்படுவதற்கு அவை இக்கருத்தை மூலச் சமயத்தினை அடியொட்டிப் பெற்று இருத்தல் காரணமாயிருக்கலாம்" என்று கே.சு.மாக்டொனால்ஸ் அவர்கள் குறிப்பிடுவதும் இங்கே சிந்தித்துப் பார்பதற்கு உரிய ஒன்றாக இருக்கின்றது.

மேலும் வேதங்களிலும் சரி பழைய ஏற்பாட்டிலிலும் சரி கடவுளர் தங்களின் மக்களுக்காக மற்றவரோடு போர் புரிவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

"யாவே, இந்திரனைப் போல் ஒரு நாட்டுக்குரிய போர் கடவுளாக, சேனைகளின் தலைவராகக் காட்டப்படுகின்றார். பகைவருக்கு எதிராக போர் புரிபவராகக் காட்டப்படுகின்றார். தம்முடைய மக்களுக்காகக் கடலையும் நதியையும் வெள்ளத்தையும் அடக்கி, தம்முடைய மக்களைப் பகைவரினின்று காப்பவராகக் காட்டப்படுவதும் ஒப்பிடற்குரியன" என்றே
எச்.தி. கிரிசுவோல்த் கூறுகின்றார்.

ம்ம்ம்....இந்த ஒற்றுமைகள் தற்செயலாய் அமைந்தவைகளாக இருக்கலாம் அல்லது இந்த ஒற்றுமைகளுள் அர்த்தங்களும் ஏதாவது மறைந்து இருக்கலாம். அதனைக் காண வேண்டும் என்றால் நாம் வேதங்களைச் சற்று உன்னிப்பாக காண வேண்டி இருக்கின்றது. காண்போம்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் வேதங்கள் தொகுக்கப்பட்ட பாடல்கள் தாம் என்று. அதில் பல கடவுளர் சிறப்பினைப் பல்வேறு காலங்களில் சிறப்பினைப் பெற்று விளங்குவதுப் போல் இருக்கின்றது. உதாரணத்துக்கு,

"இருக்கு வேதத்தின் இரண்டாம் மண்டலம் - முதல் பாடல் அக்கினியை அண்டத்தையே ஆள்பவன், மனிதர் அனைவருக்கும் தலைவன் என்றெல்லாம் கூறுகின்றது. அதே வேதத்தின் பத்தாவது மண்டலம் இந்திரனே, அனைத்திற்கும் மேலான தலைவன் என்றுக் கூறுகின்றது." என்றே சுசுமிதா பாண்டே அவர்கள் அவர்களது 'Birth Of Bhakthi in Indian Religions and art' என்னும் நூலினில் குறிப்பிடுகின்றார். நிற்க.

இப்பொழுது நாம் மேலே கண்ட சில செய்திகள் வாயிலாக வேதங்களுக்கும் சரி பழைய ஏற்பாட்டுக்கும் சரி சில ஒற்றுமைகள் இருக்கின்றன என்று நாம் காண்கின்றோம். ஆனால் இப்பொழுது சில கேள்விகள் எழலாம்... நிச்சயம் எழும்.

௧) பழைய ஏற்பாட்டுக்கும் சரி வேதங்களுக்கும் சரி சில ஒற்றுமைகள் இருக்கின்றன சரி... ஆனால் வேறுபாடுகளும் இருக்கின்றனவே...அதற்கு என்ன பொருள்?
௨) ஒற்றுமைகள் இருக்கின்றன சரி... ஒருவேளை வேதங்களில் இருந்து பழைய ஏற்பாட்டின் கருத்துக்கள் தோன்றி இருக்குமல்லவா?
௩) பழைய ஏற்பாட்டில் உள்ள கடவுளரின் பெயர்களும் சரி வேதத்தில் உள்ள கடவுளரின் பெயர்களும் சரி முற்றிலும் வேறாக இருக்கின்றனவே...அவ்வாறு இருக்க அவை எப்படி ஒற்றுமைகளாக கருதப்படக் கூடும்?

நியாயமானக் கேள்விகள். நிச்சயம் இவற்றிற்கு நாம் விடையினைக் காணத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் இருக்கு வேதத்தின் பத்தாவது மண்டலத்தின் சில பாடல்களையும் சமசுகிருத மொழியினையும் காண வேண்டி இருக்கின்றது. முதலில் இருக்கு வேதத்தின் பத்தாவது மண்டலத்தினைக் கண்டு விடலாம். காரணம் அங்கே ஒரு இறைவன் பலியாகி இருக்கின்றார்...நமக்காக. அவரை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

வேதங்களில் விலங்குகளை பலி இடும் நிலை மிகவும் தெளிவாக காணப்படுகின்றது. ஆனால் வேதங்களின் பிற்பகுதியிலோ தெய்வமே பலியாகும் நிலைக் காணப்படுகின்றது. வேதத்தின் முற்பகுதியில் காணப்படாத இக்கருத்து பிற்பகுதியில் காணப்படுவது ஆழ்ந்து நோக்கற்குரியது.

வேதங்களில் உலகைப் படைத்த இறைவன் விசுவகர்மா, பிரசாபதி, புருசா எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றார். இப்பொழுது இருக்கு வேதத்தின் பத்தாவது மண்டலத்தின் சில பாடல்களின் கருத்துக்களைக் கண்டு விடலாம்...

"பூமியையும் வானத்தையும் பிறவற்றையும் படைத்த 'விசுவகர்மன்' பூமியில் மனிதர் நடுவில் வந்தார்" - இருக்கு வேதம் X - 81

"இறைவன் மற்றவர்களுக்காக தாமே இறப்பைத் தெரிந்துக் கொண்டார். ஆனால் 'யாமா (Yama)' அவரது உடலினை விடுவித்து விடுகின்றான்" (அதாவது பலியான கடவுள் உயிர்த்து எழுகின்றார்) - இருக்கு வேதம் X - 13:4,5

"புருசா உருவெடுத்து வந்து பலியாவதற்காகத் தன்னையே கொடுத்தார்." - இருக்கு வேதம் X - 90:6

"அடியவர்களால் பலியிடப்படும் பலியாக, பிரசாபதி இருக்கின்றார். தன்னையே பலியாக்க விருப்பம் கொண்டார்." - பிருகத் ஆரணியகா உபநிடம் 1:4:1

"புருசா பலியாகி இருக்கின்றார்." - சாந்தோக்கிய உபநிடம் - 3:16:1

"பிரசாபதி பலியாகி இருக்கின்றார்." - சதபத பிரம்மணம் 1:13, 4:15

மேலே உள்ள பாடல்கள் இருக்கு வேதத்தின் இறுதியிலேயே காணப்படுகின்றன. பலியில் ஆரம்பிக்கும் வேதம் இறைவன் பலியாகும் நிலையில் முடிவடைகின்றது. அதுவும் இறைவன் மனித உருவமெடுத்து உலகினில் வந்து பலியாவதற்காக தன்னையே கொடுத்தார் என்றும் இருக்கின்றது. இப்பொழுது நமது கேள்வி ஏன் இறைவன் பலியாவது போன்ற பகுதி வேதத்தில் காணப்படுகின்றது?... அது கிருத்துவக் கொள்கையல்லவா?

இதற்கு பதிலாய் ஆய்வாளர் கூறுவது  என்னவென்றால், "இறைவன் உலகினில் வந்து பலியானார் என்ற கருத்தினைத் மக்களுக்கு தெரிவிக்கவே தமிழர்களால் வேதங்கள் தொகுக்கப்பட்டன...அன்று கடவுள் நம்பிக்கை உடைய மக்கள் அனைவரும் பலி வழிபாட்டினை உடையவர்களாகவே இருந்தனர்...அவர்களுக்கு பலி நிறைவேறி விட்டது என்ற கருத்தினைத் தெரிவிக்கவே, அன்று மக்கள் மத்தியில் நடைமுறையில் இருந்த பலியில் இருந்து ஆரம்பித்த வேதங்கள்..இறைவன் மக்களுக்காக பலியான செய்தியோடு முடிகின்றன. வேதங்கள் அவ்வளவே...!!! பின்னர் இறைவனின் கருத்துக்களைச் சுமந்துக் கொண்டு ஓர் இறைக் கோட்பாடோடும் பலி இல்லா வழிபாட்டு முறைகளோடும் உபநிடங்கள் தொகுக்கப்பட்டன. அவை வேதங்களை முற்று பெறச் செய்வதனால் வேதாந்தங்கள் என்றுப் பொருள் கொள்கின்றன". இதுவே ஆய்வாளர்களின் கருத்துக்களாகும்.

இதனால் தான் வேதங்களில் பலி இருக்கின்றது, பல கடவுளர் இருக்கின்றனர்... ஆனால் வேதாந்தங்களிலோ பலி கிடையாது...இறைவன் ஒருவனே என்றக் கருத்துக்களும் இருக்கின்றது. இம்மாற்றங்களுக்கு காரணமாய் இறைவன் பலியாவது என்கின்ற விடயம் இருக்கின்றது.

இப்பொழுது மேலும் சில கேள்விகள் எழலாம்...

௧) வேதங்களில் பல கடவுளர் பலியாவது போல் வருகின்றதே... மேலும் இயேசு என்ற பெயரே வரவில்லையே பின்னர் எவ்வாறு இயேசுவைத் தான் வேதங்கள் குறிப்பிடுகின்றன என்று நீங்கள் கூறலாம்?

௨) வேதங்களை தொகுத்தவர் தமிழர்கள் என்று நீங்கள் எவ்வாறு கூறுகின்றீர்கள்?

௩) தோமா இந்தியா வந்தார் என்பதனை நாங்கள் நம்பவில்லை பின்னர் எவ்வாறு கிருத்துவின் கருத்துக்கள் இந்தியா வந்தது என்று நீங்கள் கூறுகின்றீர்கள்?

௪) பலி மறுப்பு புத்த சமண சமயங்களின் தாக்கத்தில் இருந்தும் தோன்றி இருக்கலாம் அல்லவா?

இக்கேள்விகளுக்கும் சரி மேலே ஏற்கனவே நாம் கண்ட மற்ற கேள்விகள் சிலவற்றுக்கும் விடையினைக் காண நாம் சமசுகிருதத்தினைக் காண வேண்டி இருக்கின்றது. காணலாம், ஆனால் தோமாவைப் பற்றியும் இந்தியாவில் கிருத்துவர்கள் வந்தது பற்றியும் இருவர் நம்மிடமும் ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைகின்றனர். அவர்களுள் ஒருவர் மிகப் பெரியவர் அவரை காக்க வைப்பது அவ்வளவு சரியானதொன்றாக இருக்காது...இந்தியாவின் முதல் பிரதமருக்கு நாம் நிச்சயம் முக்கியத்துவம் தரத் தான் வேண்டி இருக்கின்றது. இதோ இந்தியாவில் கிருத்துவர்களைப் பற்றி அவர் கூறுகின்றார்...

"கிருத்துவ மதம் இங்கிலாந்துக்கும் மேற்கு ஐரோப்பியாவுக்கும் செல்வதற்கு நெடுங்காலம் முன்னரே இந்தியாவுக்கு வந்து விட்டதென்பதை அறிய நீ ஆச்சரியப்படுவாய். அது இந்தியாவுக்கு வந்த காலத்தில் ரோமாபுரியில் கூடக் கிருத்துவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். இயேசு கிருத்து இறந்த நூறு ஆண்டுகளுக்குள் கிருத்துவ பாதரிமார்கள் கடல் வழியாகத் தென் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்கள்." என்றே ஜவகர்லால் நேரு அவர்கள் அவரது 'உலக வரலாறு' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

மேலும் தோமாவைப் பற்றி "பார்டனோன் என்ற ஊரைச் சேர்ந்த துறவியான ஒடோரிக் என்பவர் 1321இல் இந்தியாவுக்கு வந்தார். அவர் இந்தியாவின் மேற்குக் கடற்கரை நாடுகளில் பயணம் செய்து இலங்கைக்குப் போய்விட்டு, அதன் பின்னர் மயிலாப்பூர் வந்து, செயின்ட் தாமஸ் மாதக் கோவிலைப் பார்த்தார். இந்தியப் பழக்க வழக்கங்களைப் அவர் நேரில் பார்த்து எழுதி இருக்கின்றார் என்பதை அவருடைய குறிப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன.” எனவும் “பிரான்சை சேர்ந்த மரிகொன்லி ஜான் என்பவர், நமது கவனத்தைச் சிறிது கவரும் இன்னொரு துறவி. அவர் போப் ஆண்டவரின் பிரதிநிதியாக குப்லாக்கான் அரசவைக்குப் போனார். அவரும் மார்கோ போலோவைப் போல் தரைவழியாகவே சீனாவுக்குச் சென்றவர்.1346 இல் அவர் புகழ் பெற்ற சீனத் துறைமுகமான ஜெயிடன் துறைமுகத்தில் கப்பலேறி கொல்லத்திற்கு வந்து சேர்ந்தார். அங்குச் சிறிது காலம் தங்கியப் பின் செயின்ட் தாமஸ் மாதாக் கோவிலைத் தரிசிப்பதற்காக சோழ மண்டலக் கடற்கரைக்கு வந்தார்” என்று கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவரது தென்னிந்திய வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்.

எனவே கிருத்துவர்களும் சரி தோமாவும் சரி இந்தியாவுக்கு கி.பி முதல் நூற்றாண்டிலேயே வந்து இருப்பதற்கு சான்றுகள் இருக்கின்றன என்றே நாம் அறிய முடிகின்றது. சரி இப்பொழுது நாம் மற்றக் கேள்விகளுக்கு விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது...

சமசுகிருதம் காத்து இருக்கின்றது நமக்காக...கி.பி காலத்தினில்....!!!

பயணிப்போம்...!!!

பின்குறிப்பு:ஆய்வாளர் தேவகலா அவர்களின் 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இருந்து நான் அறிந்தவனவற்றை எனக்கு புரிந்த வகையிலேயே இங்கே பதிவிட்டு உள்ளேன்.

10 கருத்துகள்:Church History of Travancore by C.M.Agur, (released by the Church in commemoration of Centenary Celebrations of the Church in 1903) reprint 1990, refers to the Merchant Thomas of Cana who came in 745 AD and clearly affirms-

"Long after his Death the people Canonised him and the Subsequent Generation confused St.Thomas the Armenian Merchant with St.Thomas the Apostle, who never came to Malabar. This Confusion becomes more potent when we look in to the names of the Churches said to have been founded by the Merchant Thomas are Identical with the names of the Churches attributed to St.Thomas. "Page-12
ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ ( Holy see's Publisher -Burn Oares & Wash Boune Ltd has Published Multi Volume -Butler's Lives of Saints- Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance says- ) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.
What does Church know about Thomas. Let us get from a Christian Scholar-

The VERY NAME of the Apostle who is known as Thomas remains obscure. Thomas is the Greek form of the Aramaic Teoma whose Greek Translation is Didymas, meaning Twin, most probably his original name was Judas, and the Parentheses and the versional variants could have been Scribal clarification. How could an Apostle be known by an epithet or an adjective such as TWIN -" Person And Faith of Apostle Thomas in the Gospels"- Dr.George Kaniarakath,CMI

What is the Opinion about Acts of Thomas, in Catholic Church-
"Acta Thomae was composed in the Ist half of the 3rd Century AD in Gnostic Manichean circle with Encrastic tendencies." Page-411, Vol-3, New Catholic Encyclopedia
Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-
“.. the Syrian Greek who was probably the fabricator of the Story would have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.
The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-
“ It is likely enough that the Malabar Coast was evangelized from Edessa at a later date, and . that in the course of time a confused tradition.”
“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர்Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.
இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.

இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?

பெரும்பாலான இந்துக்கள் இயேசுவையும் தெய்வமாக கருதுபவர்கள் என்றால் மிகையில்லை.

இது வெறுமே பரந்த மனப்பான்மை எனக்கு இருக்கிறது என்று காட்டிக்கொள்ள விரும்பும் இந்துக்கள் மட்டுமல்ல. பொதுவாக கிராமத்தில் உள்ளவர்கள், நகரத்தில் உள்ளவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா இந்துக்களுமே ஏராளமான தெய்வங்கள் இருக்கமுடியும் என்ற இந்து கருத்தின் காரணமாக இயேசுவையும் அல்லாவையும் தெய்வங்களாக கருதுபவர்கள். கிறிஸ்துவத்தின் உள்ளே இயேசுவுக்கு எந்த மாதிரியான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு அறிந்து ஆராயும் தேவையோ அவசியமோ இருப்பதில்லை. தமிழ் மக்களில் ஒரு சாரார் இயேசுவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே அவர்களுக்கு போதுமானது. அதே போல அல்லாவுக்கு எந்த விதமான இடத்தை இஸ்லாம் அளித்துள்ளது என்பதோ, இஸ்லாமியர்கள் அல்லாவை எப்படி கருதுகிறார்கள் என்பதோ, குரான் எப்படி அல்லாவை உருவகிக்கிறது என்பதோ பெரும்பாலான இந்துக்களுக்கு தேவையும் இல்லாதது. தமிழ் பேசுபவர்களில் ஒரு சாரார் அல்லாவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே பெரும்பாலான இந்துக்களுக்கு போதுமானது.

ஆகவே, பெரும்பாலான இந்துக்கள் நாகூர் தர்காவுக்கு செல்வதையும், வேளாங்கண்ணி கோவிலுக்கு போவதையும் வித்தியாசமாக கருதுவதில்லை. அருகே இருக்கும் மசூதியிலிருந்தோ அல்லது சர்ச்சிலிருந்தோ யாரேனும் வந்து நன்கொடை கேட்டாலும், மாரியம்மன் விழாவுக்கு கொடுப்பதைப் போலவே கொடுப்பார்கள்.

வேளாங்கண்ணி கோவிலுக்கு இந்துக்கள் செல்கிறார்கள். வேளாங்கண்ணி கோவில் ரோமன் கத்தோலிக்க சர்ச். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள புராடஸ்டண்ட் கிறிஸ்துவர்கள், பெந்த கொஸ்தே கிறிஸ்துவர்கள், பாப்டிஸ்டு கிறிஸ்துவர்கள் செல்ல மாட்டார்கள். கத்தோலிக்கரல்லாத கிறிஸ்துவர்கள் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை சாத்தானின் மதம் என்று கருதுகிறார்கள். ஆனால், எல்லா கிறிஸ்துவர்களுமே இந்து கோவில்களை சாத்தானின் கோவில்கள் என்றே கருதுகிறார்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போதிக்கப்படுகிறார்கள் என்பது நம்மில் பலர் அறியாதது.

இதுவரை படித்ததிலிருந்தே பெரும்பாலான இந்துக்கள் எல்லா கோவில்களிலும் தெய்வங்களை பார்க்கிறார்கள் என்பதையும், கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் தங்களது கோவில் அல்லாத மற்ற கோவில்களில் சாத்தானை பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டிருக்கலாம்.

இந்துக்கள் சைவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வைணவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுக்கு கோவில்களில் வித்தியாசம் இருப்பதில்லை. பல வைணவ பிராம்மணர்களுக்கு மாரியம்மன் குலதெய்வம், பல வன்னியர்களுக்கு கண்ணபிரான் குலதெய்வம், பல யாதவ குலத்தவர்களுக்கு சிவனோ, முருகனோ, ஐயனாரோ குலதெய்வம் இப்படியெல்லாம் இருப்பதை நாம் சகஜமாகப் பார்க்கலாம்.

சைவ சித்தாந்தத்தின் ஆதார சுருதியாக போற்றப்படும் திருமூலரின் திருமந்திரம், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று பறைசாற்றுகிறது. ஆகையால் பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும் வழிபடப்படுவது பரம்பொருளே என்பது இந்துக்களின் கருத்து. ஆகையால், இயேசுவின் வடிவில் வழிபட்டாலும், கிருஷ்ணனின் வடிவில் வழிபட்டாலும் வழிபடப்படுவது பரம்பொருளே என்பது உண்மையே.


ஆனால், மனித மனம் என்பதன் மூலமே பரம்பொருளை நாம் வழிபடுகிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மனித மனத்தின் வழியே நாம் வழிபடுவதால், மனித மனம் உருவாக்கும் பிம்பங்களின் மூலமாகவே இறைவனை நாம் பார்க்கிறோம். உதாரணமாக அமமையும் அப்பனும் அழகாக உடை தரித்து, அழகான நந்தியின் அருகே, மங்களகரமான கோலத்தில் முருகனும் விநாயகனும் அருகருகே அமர்ந்திருக்கும் சந்தோஷமான காட்சியை நாம் பார்க்கிறோம். இதே போல, ராமனும் சீதையும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க உற்றார் உறவினர் புடைசூழ இருக்கும் பட்டாபிஷேக காட்சியைப் பார்க்கிறோம். இது நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. இது போல நாமும் குடும்பசகிதமாக நன்றாக வாழவேண்டும் என்ற கருத்தை ஆழ்மனத்தில் விதைக்கிறது. நம் செயல்களில் வெளிப்படுகிறது. நம் சொந்தத்தினரை கருணையுடனும் பாசத்துடனும் அணுகவும் நம்மை தூண்டுகிறது.

ஒரு பயங்கர திரைப்படம் பார்க்கிறோம் என்று வைத்துகொள்வோம். ரத்தமும் சேறுமாக கொலை செய்யப்படும் காட்சிகள், வன்முறையும் காம வேட்கையும் கொலைவெறியும் அடிக்கடி காணப்படும் திரைப்படக் காட்சிகள் நம் மனதை பாதிக்கின்றன. சிறு குழந்தைகள் இரவில் திடுக்கிட்டு எழுகின்றன. உங்களுக்கும் பயங்கரமான கனவுகள் தோன்றுகின்றன. மனதில் அழுத்தம் உண்டாகிறது. ஆழ்மனத்தில் பயம் உருவாகிறது. மனைவி, குழந்தைகளிடம் சிடுசிடுவென்று எரிந்து விழுகிறீர்கள். அப்படி எரிந்து விழவில்லை என்றாலும் துயரமும், வெறுப்பும், சலிப்பும் மனதை அப்பிக்கொள்கிறது. இத்தனைக்கும் இது ஒரு சிலர் நடித்து உருவான படம். அது நிஜமில்லை. வெறும் கதை. திரையில் ஓடிய பிம்பம். அவ்வளவுதான். பார்க்கும் உங்களுக்கும் நன்றாக தெரியும். இருந்தும் உங்களை ஆழமாக பாதித்திருக்கிறது அல்லவா?

இதே போலத்தான் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்களை பார்ப்பதும் வணங்குவதும். அவை நம் மனதில் பயத்தையும், அசூசையையும், துயரத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றன. அதனால் தான், அகால மரணமடைந்தவர்களது ஆன்மா சாந்தியடைய தமிழ்நாட்டிலும், இன்னும் பல புராதன கலாச்சாரங்களிலும் அவர்களை நடுகல்லாக அமைத்து நினைவுத்தூண் எழுப்பும் பழக்கம் உண்டு. தவறு செய்யாதிருந்தும், தவறாக தண்டனை அடைந்து இறந்தவன் (உதாரணமாக கோவலன் போன்று), பசி காரணமாகவோ அனாதையானதாலோ இறந்த பெண்கள் குழந்தைகள் ஆகியோர் ஐந்நூறு ஆண்டுகளாக ஆவியாக சுற்றுவார்கள் என்பது பழங்கால ஐதீகம். ஆகவே அவர்கள் தங்களது துன்பத்தின் காரணமாக மற்றவர்களுக்கு துன்பம் அளிப்பார்கள் என்று கருதி அவர்களை திருப்திப் படுத்த அவர்களுக்கு சிறு கோவில் கட்டி அவர்களுக்கு உணவு போன்றவற்றை அளிப்பது மரபு. ஆனால், இவர்களை வீட்டில் வைக்கமாட்டார்கள். வெளியே காட்டில், அல்லது அனாமத்தான இடங்களில்தான் அமைப்பார்கள். இவர்களை மட்டுமல்ல, நற்சாவு அடைந்தவர்களாக இருந்தாலும், இறந்து போன நிலையில் புகைப்படம் எடுத்ததை வீட்டில் வைக்கமாட்டார்கள். ஏன், கண்ணை மூடி தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கூட புகைப்படம் எடுக்க மாட்டார்கள். அப்படி வரைந்திருந்தாலும் வீட்டில் வைத்து வணங்கமாட்டார்கள். சந்தோஷமான நிலையில் இருக்கும் புகைப்படங்களையே வீட்டில் வைத்து மூத்தார் வழிபாடு செய்யவேண்டும்.

தெய்வமாகவே இருந்தாலும், உக்கிர ரூபத்தில் இருக்கும் காளியை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. காளி, உக்கிர நரசிம்மர் போன்ற தெய்வங்களின் சக்தியைத் தாங்கும் மன வலிமை கொண்டவர்களே அந்த தெய்வங்களை உபாசிக்க வேண்டும். இந்த உக்கிர மூர்த்திகள் போருக்கு புறப்படும் முன்னால் வணங்க வேண்டிய தெய்வங்கள். போர் முடிந்தபின்னால் கோபம் தணிய சிவனை வணங்க வேண்டும். அதனால் தான் போர் முடிந்ததும் ராமன் ராமேஸ்வரத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்குகிறார். தைரியத்திற்காகவும், பயமின்மைக்காகவும் துர்க்கா தேவியை வணங்கும் போது கூட, அழிக்கப் பட்ட தீமையின் உருவமான எருமைத் தலை காலடியில் கிடக்க, புன்முறுவல் பூத்த முகத்துடன் அருள் வழங்கும் கரங்களுடன் கூடிய துர்க்கை திருவுருவமே எல்லா கோயில்களிலும் உள்ளது. அந்த தெய்வ வடிவத்தைத் தான் பெண்கள் ராகு கால பூஜை செய்கிறார்கள்.

எனவே, அமைதியான, சாந்த வாழ்க்கைக்கு கல்யாண கோலத்தில், மங்கலகரமாக உள்ள பரம்பொருளையே வணங்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான சர்ச்சுகளில் மூலஸ்தானத்தில் இருக்கும் உருவம் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து போன இயேசுவின் உருவம். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று சொல்வார்கள். அது வணங்கப்படுவதில்லை. இறப்பதற்கு முன்னால் அவர் அழுவார். அது வணங்கப்படுவதில்லை. அவர் இறந்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் உருவமே வழிபடப்படுகிறது. அதுவே பலர் கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவையிலும் இருக்கிறது. பெந்தகொஸ்தே, பாப்டிஸ்ட் சர்ச் போன்றவைகளில் சில உருவ வழிபாடு கூடாது என்று சொன்னாலும், அவர்கள் முக்கியமாக கருதுவது இயேசு கொலை செய்யப்பட்டதே. அவர்களின் பேச்சுகளில், உபதேசங்களில் எல்லாமே ஏசு அநியாயமாக கொலை செய்யப்பட்டதே திரும்பத்திரும்ப சொல்லப்படும். இதே போல இஸ்லாமில் ஷியா பிரிவினரும் முகம்மதின் மருமகனான அலி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு இப்போதும் அழுவார்கள். தங்கள் துயரத்தை வெளிக்காட்ட நெஞ்சில் அடித்துகொண்டும், சவுக்கில் அடித்துக்கொண்டும் ஊர்வலமாக செல்வார்கள்.

இவை எல்லாமே மன அழுத்தத்தை உருவாக்கக்கூடியவை. அடி மனதில் பயம், அழிவு, துயரம் ஆகியவற்றை உருவாக்கி வெளியே வன்முறையாகவும் கோபமாகவும் வெளிப்படக்கூடியவை. ஒரு வருடத்துக்கு மேல் சாவுக்கு வருந்தக்கூடாது என்பது இந்து வழிமுறை. ஒரு வருடத்துக்குப் பிறகு கல்யாணம், திருவிழா, பண்டிகை போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளை வீட்டில் செய்தும் துயரத்தை மாற்ற வேண்டும் என்பது இந்து வழிமுறை. ஆனால் இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்துகொண்டே இருந்து அமங்கள வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள். இது அவர்களின் குடும்பத்துக்கு மட்டும் தீமை அல்ல. அவர்கள் சார்ந்த ஊருக்கும், சமூகத்துக்குமே தீமை. இயேசு அடிவாங்கிக் கொண்டு செல்லும் ஊர்வலம், ஷியா பிரிவினர் நடத்தும் அமங்கள ஊர்வலம் ஆகியவற்றில் கலந்துகொள்வதோ அல்லது அவற்றை பார்ப்பதோ இந்துக்களுக்கும் இந்து குடும்பங்களுக்கும் அமங்களமானது. தவறானது. இவற்றைப் பார்ப்பதை தவிருங்கள்.

பல இந்துக்களின் வீடுகளில் இந்த சிலுவைப் படத்தை வைத்திருப்பார்கள். என் நண்பரது வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்தது. பட்ட காலிலேயே படும் என்பது போல தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அவரது வீட்டுக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது, அவரது வீட்டில் இருந்த இந்த சிலுவைப் படத்தை பார்த்து அவரிடம் ஏன் இந்த சிலுவைப்படத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். நண்பர் ஒருவர் கொடுத்தார் என்று சொன்னார். எப்போதிருந்து என்று கேட்டேன். அவர் சொன்ன தேதி, அவரது வீட்டில் அகாலமாக துயர சம்பவங்கள் நடைபெற ஆரம்பிப்பதற்கு முந்தைய தேதி. இந்த படத்தை யாரிடமாவது கொடுத்து விடுங்கள். படம் இருந்த அந்த இடத்தில் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி இருக்கும் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அல்லது கல்யாண கோலத்தில் இருக்கும் எம்பெருமான் சிவனின் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அவர் மறு பேச்சு பேசாமல் அன்றே செய்துவிட்டார். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது அவரது வாழ்க்கை. சென்ற முறை என்னை பார்த்தபோது, கண்ணீர் மல்க, உங்கள் அறிவுரைக்கு நன்றி என்று தழுதழுத்தார்.

இது ஒரு முறை அல்ல, பல முறை நடந்திருக்கிறது. ஏதோ நண்பர்கள் கொடுத்தார்கள், பரந்த மனம் ஆகிய காரணங்களுக்காக சிலுவை படத்தை வைத்துக்கொண்டுவிட்டு பிறகு துயர சம்பவங்கள் நடந்து, மன நிம்மதி இழந்து, மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டவர்களை நான் அறிவேன். மன அழுத்தத்தில் சிக்கிய பின்னால், கிறிஸ்துவர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து, இவ்வாறு மன அழுதத்தில் சிக்கியதற்கு காரணம் இந்து கடவுள்களை நீ வணங்குவதுதான் காரணம் என்று பொய் சொல்லி முழு கிறிஸ்துவராக மாற்றி, பெயர் எல்லாம் மாற்றி கிறிஸ்துவ போதகராக ஆனவரும் ஒருவர் இருக்கிறார். அவரை பார்த்தபோது நான் இதே விஷயத்தை அவரிடம் தெளிவு படுத்த முயற்சித்தேன். அவர் காதிலேயே விழவில்லை. என்னை ஏதோ கொல்லப்பட வேண்டியவன் என்பது போல பார்த்தார். மூளைச்சலவை முற்றிவிட்டது என்று விலகிவிட்டேன். பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்று அறிந்து மனம் வருந்தினேன். அப்படி நான் விலகியிருக்கக்கூடாது, என்னை என்ன திட்டினாலும் அவரை அங்கிருந்து விலக்கி கொண்டுவந்திருக்க வேண்டும் என்று வருந்தினேன்.

@Arun Pravin,

நண்பரே....
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...ஆனால் நீங்கள் இவ்வளவு பெரிய கருத்தினை பதிவிட்டதற்கு பதிலாக தமிழ் இந்து இணையத்தின் சுட்டியையையே தந்து இருக்கலாம். சரி பரவாஇல்லை.

ஆனால் எனக்கு ஒன்று தான் புரியவில்லை... இந்த பதிவில் நான் வேதங்களைப் பற்றியும் சமசுகிருதத்தினைப் பற்றியுமே பேசி இருக்கின்றேன். வேதத்தில் பலி இருக்கின்றது...பின்னர் இறைவன் பலியான செய்தி இருக்கின்றது...பின்னர் வேதாந்தங்களில் பலியற்ற வழிப்பாட்டு முறை காணப்படுகின்றது... ஏன் இது இவ்வாறு இருக்கின்றது என்பதே எனதுக் கேள்வி? இந்தக் கேள்விக்கு பதிலினை தராது கிருத்துவ மதத்தினையும் சிலுவையையையும் பற்றி பேசுவது ஏன் என்று தான் எனக்கு விளங்கவில்லை?... சிலுவை கிருத்துவர்களின் சின்னம் கிடையாது...இன்றைய கிருத்துவ மதம் பல்வேறு இந்து மத அமைப்புகளைப் போல மக்களை ஏமாற்றி அதிகாரத்தினைக் கையில் வைத்து இருக்கும் மற்றுமொரு அரசியல் அமைப்பே என்று நான் பல்வேறு முறை கூறிய பின்னும் இன்னும் அவற்றைப் பற்றியே பேசுவது ஏன் என்றும் விளங்கவில்லை?

வாயாலேயே சொல்லப்பட்டு வந்தவை என்றுக் கூறப்படும் வேதங்களைக் குறித்து சான்றுகள் ஏன் கி.மு காலத்தில் கிடைக்கப்பெற மாட்டேன்கின்றன?... அவ்வாறு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சொல்லப்பட்டே வந்தவை எனப்படும் வேதங்களை திடீர் என்று எழுதப்படக் காரணம்?... கி.மு வில் இல்லாத சிவன், பிள்ளையார், விஷ்ணு, பெருமாள், அம்மன் போன்ற கடவுளர் புதிதாக கி.பியில் தோன்றக் காரணம் யாது?

இறைவன் உலகில் பிறந்து மக்களுக்காக பலியானார் என்ற செய்தி வேதங்களில் வரவேண்டிய காரணம் யாது? இக்கேள்விகளையே இந்த பதிவில் நான் கேட்டு இருக்கின்றேன்...

அதற்கு நீங்கள் விடை அளித்தால் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்...!!!

மேலும் இந்து சமயம் என்று நீங்கள் கூறுகின்றீர்கள் அது யாது என்று கூறினாலும் மிக்க பயன் உள்ளதாக இருக்கும். சைவ வைணவத்தில் சாதி பிரிவுகளோ அல்லது சாதி ஏற்றத் தாழ்வு கருத்துக்களோ காணப்படாத நிலையில் எங்கனம் சாதி பிரிவுகள் அச் சமயங்களுள் வந்தன என்று உங்களால் கூற இயலுமா?

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?

//"கிருத்துவ மதம் இங்கிலாந்துக்கும் மேற்கு ஐரோப்பியாவுக்கும் செல்வதற்கு நெடுங்காலம் முன்னரே இந்தியாவுக்கு வந்து விட்டதென்பதை அறிய நீ ஆச்சரியப்படுவாய். அது இந்தியாவுக்கு வந்த காலத்தில் ரோமாபுரியில் கூடக் கிருத்துவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். இயேசு கிருத்து இறந்த நூறு ஆண்டுகளுக்குள் கிருத்துவ பாதரிமார்கள் கடல் வழியாகத் தென் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்கள்." என்றே ஜவகர்லால் நேரு அவர்கள் அவரது 'உலக வரலாறு' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.//ஐயா அவர் சொல்வது இருக்கட்டும் நம் செந்தமிழ் நாட்டில் எவ்வளவோ கவிஞர்களும் புலவர்களும் எல்லா காலங்களிலும்(கி.மு-கி.பி) பல நூல்களை இயற்றி உள்ளனர் அவர்கள் எங்கேயாவது தோமாவை பற்றியோ அல்லது கிறிஸ்துவம் பற்றியோ யாதேனும் குறிப்பிட்டு இருந்தால் கூறுங்கள்...

நண்பருக்கு வணக்கங்கள்...

தோமாவும் கிருத்துவும் இருக்கட்டும்...

கி.மு. வில் உள்ள பாடல்களில் சிவன், பெருமாள், அம்மன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன், நடராசன் போன்ற பெயர்கள் கானப்படுகின்றவா என்றும்... இன்று நம்மிடையே புழங்கும் பெயர்களும் புராணக் கதைகளும் அக்காலத்தில் இருந்தனவா என்றும் தாங்கள் கூற முடியுமா?

மேலும் ஈசன் என்ற பெயர் எவரைக் குறிக்கின்றது என்றும் தாங்கள் கூறினால் நலமாக இருக்கும். ஏனெனில் நமது பாரதி,

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரிய மக்தலேனா
நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்;
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;” – என்று இயேசுவினைப் பற்றிய தனது கவிதையில் குறிப்பிடுகின்றார்.

இதற்கு என்ன அர்த்தம் என்றும் தாங்கள் கூறினீர்கள் என்றாலும் நலமாக இருக்கும். நான் அறிந்தவரை அப்பெயருக்கான காரணம்,

எபிரேயம் – ஜோசுவா
ஆங்கிலம் – ஜீசஸ்
அரபி – ஈசா
தமிழ் – ஈசன்/இயேசு

என்று மொழி மருவியதே ஆகும். ஈசன் என்றச் சொல் கி.மு காலத்தில் எங்காவது பயன்படுத்தப்பட்டு இருக்கின்றதா என்றுத் தாங்கள் கூறினாலும் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

பாரதியார் ஒரு ஹிந்து . அவரின் கோட்பாடு படி கடவுள் எம்பெருமான் மஹா தேவன் சிவனே ... ஏசுவையும் அவ்வாறே கண்டு உள்ளார் ... அல்லா இயேசு அனைவரும் இறைவனின் நெற்றி கண்ணில் அடக்கம் ..


தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி