சென்ற பதிவில் இரண்டு விடயங்களைப் பற்றி பார்த்து இருந்தோம்.
௧) கிருத்துவ அமைப்புகள் எவ்வாறு அரசியல் அமைப்புகளாக செயல்படுகின்றன என்றும்
௨) வெறும் பணத்திற்காக சமயத்தினை உண்மையாக நேசிப்பவர்கள் மத மாற்றம் செய்ய மாட்டார்கள் என்றும் கண்டு இருந்தோம்.

இப்பொழுது நாம் இந்தியாவில் 'மத மாற்றத்தில்' தொடர்பினை உடைய மற்றுமொரு சமயமான இந்து சமயத்தினைப் பற்றிப் பார்க்க வேண்டும். "என்ன இந்து மதம் 'மத மாற்றத்தில்' தொடர்பினைக் கொண்டு இருக்கின்றதா...இந்துக்கள் எங்கே அடுத்த சமய மக்களை மதம் மாற்ற முயற்சிக்கின்றார்கள்...வீணாக வதந்திகளைப் பரப்பாதீர்கள்" என்று கூற வருகின்றீர்களா...சற்று பொறுங்கள். இது ஒரு வட்டம்... கிருத்துவ அமைப்புகள் மக்களை மதம் மாற்றுகின்றன...இந்து மக்கள் மதம் மாறுகின்றனர்...இந்து மதம் மத மாற்றத் தடைச் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்து மக்கள் அடுத்த மதத்திற்கு போவதை தடுக்க பார்க்கின்றது. எனவே மத மாற்றத்தோடு இந்து சமய மக்களும் சரி இந்து சமய அமைப்புகளும் தொடர்புக் கொண்டுத் தான் இருக்கின்றன. இப்பொழுது நாம் இந்து மக்கள் ஏன் மதம் மாறுகின்றனர் என்றும் இந்து சமயம் ஏன் அவர்கள் மதம் மாறுவதை தடுக்கப் பார்க்கின்றது என்றும் தான் காண வேண்டி இருக்கின்றது.

எந்த ஒரு சமய மக்களும், அவர்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட மற்றொரு சமயத்தினை வெறும் பணத்திற்காக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மேலும் நமது கலாச்சாரம் குடும்பங்கள் கூட்டாக சேர்ந்து வாழும் சமூகத்தினை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட ஒன்றாகும். எனவே ஒருவன் சமயம் மாறுகின்றான் என்றால் அவன் அதுவரை அன்பினால் கட்டுண்டு கிடந்த அந்த குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து செல்லும் நிலையாகவே அது இருக்கும்.எனவே அத்தகைய நிலையில் தனி ஒருவன் வெறும் பணத்திற்காக அனைத்தையும் துறந்து விட்டு செல்ல மாட்டான். அவ்வாறு செல்லவும் அவனது சமுகம் அவனை எளிதில் விடாது.

ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தநிலையிலும் மக்கள் மதம் மாறத்தான் செய்கின்றார்கள். இதன் காரணம் என்னவென்று நாம் இப்பொழுது ஆராய வேண்டி இருக்கின்றது. அட என்னங்க "அப்பாவி படிப்பறிவில்லாத மக்களை அவர்கள் சமயக் கருத்துக்களைப் பரப்பி மூளைச் சலுவை செய்கின்றார்கள். அதன் விளைவாகவே மக்கள் மதம் மாறுகின்றார்கள்...இதைப் போய் இன்னும் ஆராயணும் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க" என்று கூறுகின்றீர்களா...இப்பொழுது ஒருக் கேள்வி, சமயங்களின் தேவை யாது? அவைகளின் கடமை யாது?

வெறுமனவே காசினை வாங்கிக் கொண்டு பூசை செய்வதா? இல்லை வெறும் மந்திரங்களை மட்டுமே ஓதிக் கொண்டு கல்லுக்கு அபிசேகம் செய்வதா? அவ்வாறு செய்தால் தான் இறைவன் மகிழ்ச்சியாக இருப்பார் என்றக் கருத்தினைப் பரப்புவதா?. ஆம் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் இதோ ஏதோ கேள்விகளை சித்தரான சிவவாக்கியார் உங்களுக்காக எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே கேட்டு வைத்து விட்டு சென்று இருக்கின்றார்

"`நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"

நிற்க.

சமயங்கள் என்பன அவைகள் கூறும் முழுமுதற் கடவுளின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக் கூறியும், அம்மக்கள் அக்கருத்துக்களின் வழி அன்பாய் நின்று இறுதியில் அச்சமயங்கள் கூறும் பரம்பொருளை அடைவதற்குரிய வழிகளாக இருக்க வேண்டியவைகளே அன்றி வேறு கொள்கைகளை உடையனவைகளாக இருத்தல் இயலாது. இறைவனை அறியாத நிலையில் இருக்கும் மக்களை, இருட்டில் வழி தெரியாது கடலில் தத்தளிக்கும் படகுகளை எவ்வாறு கலங்கரை விளக்கம் பத்திரமாக ஒளியினைக் காட்டி கரை சேர்க்க உதவுகின்றதோ, அதனைப் போல் அற ஒளிக் காட்டி இறைவனை உணர்ந்து அவனை அடையும் வழியினை காட்டுவதே சமயங்களின் குறிக்கோளாக இருக்க முடியும். இருக்கவும் வேண்டும்.

கிருத்துவ சமயம் என்றால் கிருத்துவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று மக்களை நல்வழி படுத்தி அவர்கள் கிருத்துக் கூறிய நெறிப்படி வாழ செய்ய வேண்டும்.
இசுலாமிய சமயம் என்றால் அல்லாவின் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
சைவம் சிவனை அடைவதற்கான வழிகளை மக்களுக்கு கூற வேண்டும்.
வைணவம் பெருமாளினை அடைவதற்கான வழிகளை மக்களுக்கு கூற வேண்டும்.

அவ்வாறுக் கூறி மக்களின் அறியாமையை போக்க வேண்டும். மக்களிடத்து ஆன்மீக கருத்துக்களைக் கொண்டுச் சென்று அவர்களைத் தெளிவுற செய்ய வேண்டும். அவ்வாறு இருக்க 'எங்கள் சமயத்து மக்கள் அறியாமையில் இருக்கின்றனர்...அதனை மற்ற சமயத்து மக்கள் பயன்படுத்திக் கொண்டு மாற்றி விடுகின்றனர்" என்றுக் கூறுவது உங்கள் சமயத்து கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்று நீங்களே ஒப்புக் கொள்வதைப் போலத் தானே இருக்கின்றது. அப்பொழுது தவறு எங்கே இருக்கின்றது. மதம் மாறுபவன் அறியாமையால் மாறுகின்றான் என்றால் அவனை அந்த அறியாமை இருளில் வைத்தது யார்? அந்த அறியாமை இருளைப் போக்காமல் அதனில் குளிர் காய்ந்தது யார்? என்றாவது ஒரு நாள் அவன் அறியாமை நீங்கித் தான் தீர வேண்டி இருக்கின்றது. அந்நிலையில் அவன் அறியாமையை நீங்கள் விலக்கவில்லை என்றால் இன்னொருவன் நீக்குகின்றான் அதனைக் குறை கூறுவது எங்கனம் நியாயம்.

இப்பொழுது ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே கூற விரும்புகின்றேன். அலுவலகத்தில் எனது இசுலாமிய நண்பர் ஒருவர் தினமும் குர்ஆனில் இருந்து சில வரிகளைப் படித்து விட்டு வந்து அதனை என்னிடம் கூறி அதற்குரிய விளக்கமும் கூறுவார். நானும் ஆர்வமாக கேட்டுக் கொள்வேன். அச் செயலுக்கு அவர் கூறிய காரணம் "இது எங்களுடைய கடமை...அல்லாவின் கருத்துக்களை படித்து அதனை மக்களுக்கு கூற வேண்டும் என்பது எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை". அருமையான ஒரு செயல் தான். இறைவனின் கருத்துக்களாக அவர்கள் நம்பும் கருத்துக்களை மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றே அவர்கள் முயல்கின்றனர். இங்கே தான் நாம் இந்து சமயதினைக் காண வேண்டி இருக்கின்றது...

கிருத்துவர்களின் புனித நூல் விவிலியம் - அக்கருத்துக்களை மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ளலாம். மேலும் விவிலியத்தினை மக்கள் அனைவரும் படிக்கவும் செய்யலாம். தன்னிடம் விவிலியம் அல்லாத அல்லது விவிலியக் கருத்துக்களை அறியாத ஒரு கிருத்துவனை நீங்கள் காண முடியாது.
இசுலாமியர்களின் புனித நூல் குரான் - குரானின் கருத்துகளையும் மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ளலாம்...படிக்கவும் செய்யலாம். அதைப் போன்றே அனைத்து இசுலாமியர்களும் நிச்சயம் குரானை தங்களுடன் வைத்து இருப்பர்.
இப்பொழுது இந்து சமயத்தினைப் பற்றிப் பார்க்கலாம் (சைவ வைணவ சமயங்களுக்கும் சரி இந்து சமயத்திற்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை என்றே நாம் மற்ற பதிவுகளில் கண்டுக் கொண்டு வருகின்றோம்...அந்த விடயங்கள் இங்கே தேவை இல்லை என்பதால் அதனை பற்றிப் பார்க்காமல் இந்து சமயத்தினை பற்றி மட்டுமே காண்போம்).

இந்து சமயத்தின் புனித நூல் என்ன?
இக்கேள்விக்கு பெரும்பாலானோர் வேதங்கள் என்றே விடை தருவர்.
சரிப்பா வேதம் என்றால் என்ன? அவற்றில் என்ன கூறி இருக்கின்றது? என்றால் பெரும்பாலான மக்களுக்கு விடை நிச்சயம் தெரியாது. காரணம் விவிலியம் மற்றும் குரான் ஆகிய நூல்களைப் போன்று அனைத்து மக்களும் வேதங்களைப் படித்து விட முடியாது. இந்து சமயத்தில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு சிலருக்கே அவ்வேதங்களை பயிலும் உரிமையை இந்துச் சமயம் வழங்கி இருக்கின்றது. அதுவும் எந்த அடிப்படையில்...பிறப்பின் அடிப்படையில். அதனால் தான் வேதங்கள் என்று அறிந்த மக்களுக்கு வேதங்கள் என்றால் என்னவென்றும் வேதத்தில் என்ன கருத்துக்கள் கூறி இருக்கின்றன என்றும் தெரியாத நிலை இருக்கின்றது. ஒருவேளை ஒரு சாதாரண மனிதன் வேதங்கள் என்ன தான் சொல்லுகின்றன என்று பக்தி ஆர்வத்தில் வேதங்களைப் படித்து விட்டான் என்றால் அவனை என்ன செய்ய வேண்டும் என்றும் இந்து சமயத்தில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்". - மனுநூல் அத்தியாயம் 12, ஸ்லோகம் 4

அருமையான சட்டம் அல்லவா. இந்த சட்டத்தினை நாம் முழுமையாக அறிய வேண்டும் என்றால் சூத்திரன் என்பவன் யார் என்றே நாம் அறிய வேண்டி இருக்கின்றது. ஏனென்றால் நம்மில் பலர் அந்தச் சட்டம் சூத்திரன் என்ற ஒருவனைத் தானே கூறுகின்றது அச்சட்டம் நமக்கு பொருந்தாது என்றே எண்ணக்கூடும். அந்த எண்ணம் ஒரு வேளை சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம். சரி நாம் ஏன் வீணாக யூகிக்க வேண்டும். சூத்திரன் யார் என்று மனுநூலையே கேட்டுவிடலாமே. அதற்கு முன்னர் இந்து சமயம் மக்களை பிரித்து வைத்து இருக்கும் நான்கு பிரிவுகளை(பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன்) சற்று நினைவில் கொள்வது நல்லதாக இருக்கும். இப்பொழுது மனுநூலைக் காணலாம்..."ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்". - மனு நூல் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம்.

"பிராமணனுக்கு பஞ்சு நூலாலும் சத்திரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது." - மனுநூல் அத்தியாயம் 2 சுலோகம் 44


மேலே உள்ள வாக்கியங்களின் மூலம் சூத்திரன் என்பவன் பிரமனின் காலில் இருந்து பிறந்தவன் என்றும் அவனைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தவரும் பூணூல் பூண்டு இருப்பர் என்றே நாம் அறிந்துக் கொள்ளலாம். எனவே பூணூல் போடாத எவரும் வேதங்களைப் படிக்க கூடாது...படிக்கவும் முடியாது இந்து சமயத்தில். இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் வேதங்களைப் படிக்க இந்து சமயத்தில் அனுமதி இருக்கின்றதா இல்லையா என்று. ஆச்சர்யவசமாக இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையில் தொண்ணூறு சதவீதம் (90%) பேருக்கு இந்து சமயம் அந்த அனுமதியை வழங்கி இருக்கவில்லை. வேதங்களை படிப்பதற்கு மட்டும் என்றில்லை, சூத்திரர்கள் என்ற மக்களுக்கு மேலும் பல அனுமதிகளை இந்து சமயம் வழங்கி இருக்கவில்லை.


"அட என்னங்க வேதங்கள் இறைவன் அருளியவை...எவ்வளவு சிறப்பு மிக்கவை... அவற்றை எவ்வாறு சூத்திரன் படிக்கலாம்...தகுதியானவர் தானே படிக்கலாம்...அடுத்தப் பிறப்பில் அவன் புண்ணியம் செய்து இருந்தான் என்றால் பிராமனாகவோ அல்லது மற்ற வர்ணத்தில் ஒருவனாகவோ பிறந்து வேதங்களைப் படிக்கலாம்" என்று கூறினீர்கள் என்றால், இதோ மீண்டும் சிவவாக்கியார் வருகின்றார் சில கேள்விகளோடு... 
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.


ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில் மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!


இதில் வேதத்தையும் யாகத்தையும் கிழிக்கும் அவர், தகுதியானவர் என்று கூறப்படுபவர்களை

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?


நோக்கி கேள்விகளை வீசுகின்றார்...மேலும் அதோடு நிற்காது மறுபிறப்பையும் ஒரு கை பார்க்கின்றார்,


கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே


எனவே மேலே உள்ள வரிகள் மூலம் வேதங்களின் இறவாத்தன்மையும் அத்தகைய வேதங்களை ஒரு சிலர் தான் படிக்கலாம் என்பது ஒரு சிலரின் சதிதான் என்றும் நாம் அறிய முடிகின்றது. சரி இப்பொழுது நாம் அதனுள் செல்ல வேண்டியதில்லை.


கிருத்துவ சமயமும் இசுலாமியச் சமயமும் அவைகளின் புனித நூல்களை அனைவரும் படிக்கலாம் என்றும் அச் சமயங்களின் ஆலயங்களுக்குள் அச்சமயத்தினர் எவர் வேண்டும் என்றாலும் எவ்வித பாகுபாடுமின்றி வரலாம் என்றுமே கூறுகின்றன. ஆனால் இந்துச் சமயமோ புனித நூல்கள் என்றுக் கூறப்படுபவையை ஒரு சிலர் தான் படிக்க வேண்டும் என்றும் மற்ற மக்கள் எவரும் அதனை படிப்பது ஏன்..அதனைப் பற்றிக் கேட்டாலே பாவம் என்றுக் கூறுகின்றது. இந்நிலையில் அவ்வாறு அவர்களின் புனித நூல்கள் என கூறப்படுபவைகளில் உள்ள இறைவனின் கருத்தினை அறிய முடியாத மக்கள் மற்ற சமயத்தில் இறைவன் கூறி உள்ள கருத்தினை அறிய வாய்ப்பு கிட்டினால் கற்பார்களா மாட்டார்களா? இங்கே மறுக்கப்படும் அனுமதி அங்கே கிட்டினால் அவர்கள் செல்வார்களா மாட்டார்களா? கற்பார்கள் தானே...செல்வார்கள் தானே...அதனை நாம் தவறென்று நாம் எவ்வாறு கூற இயலும்.

சரி இன்னும் வேறு சில விடயங்களையும் நாம் இப்பதிவுத் தொடர்பாக காண வேண்டி இருக்கின்றது....

காண்போம்...!!!

16 கருத்துகள்:

One question - why are we so obsessed about Vedas? In my opinion, they are not necessary for Hinduism to survive. Some how it has been marketed that Vedas are the basis - whether they are the basis or not, it is not of much use in every day Hindu life. Many nayanmars and alwars did not know Vedas. Still their life and works show their devotion and knowledge.

Instead of harping that Vedas should be made available to everybody, we just have to ignore it. We should realize that Hinduism is not about Vedas, but more than that. That's what many stories say. I agree people make politics out of it, but once we ignore it, the politics will also fade. Hinduism has always favoured a personal God and worship at home is given great importance, which I think is more than enough to be a Hindu.

On the point of access to Vedas being denied, I believe, it is chanting of Vedas and hearing the chant is being denied. However, Vedic knowledge etc is not denied to anybody. Thats what I have heard people say, though not sure - Vedic knowledge and reciting Vedas are two different things as per them. In my opinion, even Vedic knowledge is not required, as there is enough philosophy in Devarams and Prabandhams.

//ne question - why are we so obsessed about Vedas?//

No one is Obsessed with the Vedas except the sankaraachaariyaas and others who got the political power based on them...

//they are not necessary for Hinduism to survive.//

obviously... Vedas don't have any relations to both saivam and vainavam...both are totally different. But now since the people who hold vedas in a high position have enslaved those religions it becomes necessary to speak of those vedas... apart from that why would any one waste time on vedas..

//Instead of harping that Vedas should be made available to everybody, we just have to ignore it.//

you got the point wrong... we are not asking for anything to be made common now... what are we going to do with just some black magic stuffs, sacrificial methods with no reference to gods that we honour and worship...!!!

//We should realize that Hinduism is not about Vedas, but more than that//

wrong... we should realize that both saivam and vainavam are totally not about vedas at all.

//On the point of access to Vedas being denied, I believe, it is chanting of Vedas and hearing the chant is being denied. However, Vedic knowledge etc is not denied to anybody.//

vedic knowledge...??? can u please explain that please!!!

//even Vedic knowledge is not required, as there is enough philosophy in Devarams and Prabandhams. //

Vedas have got nothing to do with saivam and vainavam... vedas are infact totally opposite to the personal-god religions...and the vedas have been given the importance that they have here is just because of brahminism to uphold the political conspiracy that they did to take over the politics and religions...!!! and since even now it is Brahmins who hold the power in various sectors and politics... the truth remains hidden...!!!

The Bottomline is,

Vedas are in no way related to the saiva and vainava religions... Vedas uphold the varnasrama conspiracy of the hindutuva brahmins who have kept the saiva and vainva religions enslaved for more than 1000 years now...and only for that reasons vedas are held high by the brahmins... especially the sankaraachariyaas!!!

//எனவே ஒருவன் சமயம் மாறுகின்றான் என்றால் அவன் அதுவரை அன்பினால் கட்டுண்டு கிடந்த அந்த குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து செல்லும் நிலையாகவே அது இருக்கும்.எனவே அத்தகைய நிலையில் தனி ஒருவன் வெறும் பணத்திற்காக அனைத்தையும் துறந்து விட்டு செல்ல மாட்டான்//

ஆங்கிலேயன் நம்மை ஆட்சி செய்த காலத்தில் பதவிக்காக மதம் மாறினான் பிறகு பணத்திற்காக மதம் மாறினான். சில பேர் வியாதிகள் குனமாகியதால் (அவர்கள் குடும்பமே) மதம் மாறுகிறார்கள். இன்னும் சில ஆண்கள் திருமணத்திற்காக (பெண் பிள்ளை கிறிஸ்துவம் என்பதால்) மதம் மாறுகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இந்து மதத்தில் உள்ள விரதங்களை கடைபிடிக்க முடியாமல் மதம் மாறுகின்றனர். இப்படி பல காரணங்களுக்காக மதம் மாறினார்களே தவிர கிறிஸ்துவின் கொள்கைகள் பிடித்துபோய் யாரும் இதுவரை மதம் மாறியதாக எனக்கு தெரியவில்லை...

//எனவே ஒருவன் சமயம் மாறுகின்றான் என்றால் அவன் அதுவரை அன்பினால் கட்டுண்டு கிடந்த அந்த குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து செல்லும் நிலையாகவே அது இருக்கும்.எனவே அத்தகைய நிலையில் தனி ஒருவன் வெறும் பணத்திற்காக அனைத்தையும் துறந்து விட்டு செல்ல மாட்டான்//

ஆங்கிலேயன் நம்மை ஆட்சி செய்த காலத்தில் பதவிக்காக மதம் மாறினான் பிறகு பணத்திற்காக மதம் மாறினான். சில பேர் வியாதிகள் குனமாகியதால் (அவர்கள் குடும்பமே) மதம் மாறுகிறார்கள். இன்னும் சில ஆண்கள் திருமணத்திற்காக (பெண் பிள்ளை கிறிஸ்துவம் என்பதால்) மதம் மாறுகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இந்து மதத்தில் உள்ள விரதங்களை கடைபிடிக்க முடியாமல் மதம் மாறுகின்றனர். இப்படி பல காரணங்களுக்காக மதம் மாறினார்களே தவிர கிறிஸ்துவின் கொள்கைகள் பிடித்துபோய் யாரும் இதுவரை மதம் மாறியதாக எனக்கு தெரியவில்லை...

//ஆனால் இந்துச் சமயமோ புனித நூல்கள் என்றுக் கூறப்படுபவையை ஒரு சிலர் தான் படிக்க வேண்டும் என்றும் மற்ற மக்கள் எவரும் அதனை படிப்பது ஏன்..அதனைப் பற்றிக் கேட்டாலே பாவம் என்றுக் கூறுகின்றது. //

இது கண்டிக்கத்தக்க ஒரு விஷயம்.

துபாய்ல ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8/- ஆனால் இந்தியாவில் ரூ.70/- இதில் யார் பெட்ரோல் மிச்சப்படுத்த பார்ப்பார்கள். யாருக்கு பெட்ரோல் சிக்கனம் தேவைப்படும். யாருக்கு பெட்ரோல் மீது பயம் வரும் இந்தியருக்கு தானே. துபாய்காரருக்கு பெட்ரோல் மீது அலட்சியமே தோன்றும் இந்தியரை போல் சிக்கனம் தேவைபடாது சரிதானே. அது போல தான் கடவுள் என்பவன் உடனே கண்ணுக்கு தெரிந்தால் யாரும் மதிக்க மதிக்கமாட்டார்கள் என்பதும் சரிதானே. பிராத்தனைகள், தவங்கள் மூலமாகவே கடவுளை உணர்ந்ததாக கூறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் அதற்கு ஒரு உதாரணமாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோயில் மட்டுமே. ஒரு முறை கோயிலில் உள்ள சிலையை பார்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 3 மணியிலிருந்து 6 மணி வரையாவது ஆகும். அது போல தான் கடவுளுக்கென்று படைக்கப்பட்ட புனித நூலுக்கும் ஒரு மரியாதை இருக்க வேண்டுமா வேண்டாமா? அதை கண்டபடி எங்கு வேணாலும் வைத்திருப்பது நியாயமா? பரிசுத்தம் என்பது பெயரளவில் மட்டுமே இருந்தால் போதுமா? மனதளவிலும், உடலளவிலும், ஏன் சொல்லப்படும் கருத்துக்களிலும் இருக்க வேண்டுமே... என் நண்பருடைய அம்மா பகவத் கீதையை படிக்க ஆசைப்பட்டார் அதை யாரோ ஒரு பெரியவரிடம் கேட்டுள்ளார். அவர் பகவத் கீதையை படிக்க வேண்டும் என்றால் பொய் பேச கூடாது, அசைவம் உண்ண கூடாது, தப்பு தவறுகள் செய்யக்கூடாது என்று சொன்னதை கேட்டு அவர் அந்த ஆசையையே விட்டுவிட்டார். இதுபோல படிக்க புனித நூல் கிடைத்தும் பல பேர் படிக்க பயப்படுகிறார்கள் புனித நூலுக்கு உள்ள மரியாதை போய்விடுமோ என்று . ஆனால் புனித நூல் இருந்தாலும், இல்லையென்றாலும் அவர்கள் விரதங்களையும், சடங்குகளையும் தவறாமல் கடைபிடிக்கின்றனர் பிறப்பு முதல் இறப்பு வரை.

//இந்நிலையில் அவ்வாறு அவர்களின் புனித நூல்கள் என கூறப்படுபவைகளில் உள்ள இறைவனின் கருத்தினை அறிய முடியாத மக்கள் மற்ற சமயத்தில் இறைவன் கூறி உள்ள கருத்தினை அறிய வாய்ப்பு கிட்டினால் கற்பார்களா மாட்டார்களா? இங்கே மறுக்கப்படும் அனுமதி அங்கே கிட்டினால் அவர்கள் செல்வார்களா மாட்டார்களா? கற்பார்கள் தானே...செல்வார்கள் தானே...அதனை நாம் தவறென்று நாம் எவ்வாறு கூற இயலும்.//
இந்து மதத்தில் இறைவனின் கருத்தாக பொதுவாக கூறப்படும் இரண்டே இரண்டு விடயங்கள் மட்டுமே அவை பாவம் மற்றும் புண்ணியம். பாவம் செய்தால் நரகம் புண்ணியம் செய்தால் சொர்க்கம் அவ்வளவு தான் இது அவர்களுக்கு புனித நூலை படிக்காமலே அறிந்திருக்கும், மனதில் பதிந்திருக்கும் ஒரு இறைவனின் கருத்து.

//மற்ற சமயத்தில் இறைவன் கூறி உள்ள கருத்தினை அறிய வாய்ப்பு கிட்டினால் கற்பார்களா மாட்டார்களா?//
இறைவனின் கருத்து அறிவதற்கு சமயம் மாறி பைபிள் படிக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா? சரி புனித நூலை(பைபிள், குர்ரான்) கற்றுள்ளவருக்கும், புனித நூலை கற்காத இந்து மக்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? புனித நூலை கற்றவர்கள் தவறு செய்வதில்லையா? புனித நூலை கற்றவர்கள் மட்டும் இறைவனை தெரிந்து கொண்டுள்ளனரா? புனித நூலை கல்லாதவர்கள் இறைவனை தெரிந்து கொள்ளவில்லையா? அப்போ நாத்திகர்களின் நிலைமை? இறைவன் என்பவன் அனைவரையும் சமமாக பாவிப்பவன். அனைத்து மக்களுக்கும் சாதி, மத பேதமின்றி இன்பங்களையும், துன்பங்களையும் கொடுப்பவன். அவனை ரூபமாகவும், சிற்பமாகவும், கட்டையாகவும், வசனமாகவும், ரூபமே இல்லாமலும் தொழுதாலும் அனைவரும் சென்றடையும் இடம் ஒன்றே அது...

//ஆங்கிலேயன் நம்மை ஆட்சி செய்த காலத்தில் பதவிக்காக மதம் மாறினான் பிறகு பணத்திற்காக மதம் மாறினான்.//

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து அனைத்து விதமான அரசுப் பணிகளிலும் நிறைந்து இருந்தவர்கள் பார்பனர்களே என்பது வரலாறு. எனவே வேலை வாய்ப்புகளுக்காக மதம் மாறினர் என்பது உண்மையினைத் திரிக்கும் ஒரு முயற்சியே.

//இன்னும் ஒரு சிலர் இந்து மதத்தில் உள்ள விரதங்களை கடைபிடிக்க முடியாமல் மதம் மாறுகின்றனர்.//

அப்படி என்ன விரதம்... தாழ்த்தப்பட்டவன் கோவிலுக்குள் வரக் கூடாது... அவனது கையினால் நீர் அருந்தக் கூடாது... அவனைப் பார்க்கவே கூடாது...ஊருக்குள் அவன் வரவே கூடாது...இன்னும் இதனைப் போன்ற இதர இதர விரதங்களா... ஆம்... இவற்றைக் கடைப் பிடிப்பது கொஞ்சம் கடினம் தான்.

//இப்படி பல காரணங்களுக்காக மதம் மாறினார்களே தவிர கிறிஸ்துவின் கொள்கைகள் பிடித்துபோய் யாரும் இதுவரை மதம் மாறியதாக எனக்கு தெரியவில்லை...//

நானும் கொள்கைக்கு மாறினார்கள் என்றுக் கூற வில்லையே... அடித்த அடி தாங்க முடியாமலும், மானத்தினைக் காப்பாற்றிக் கொள்ளவும் தான் அவர்கள் மாறினார்கள்.ஆனால் அங்கும் அவர்களை சாதி விட வில்லை என்றுத் தான் நான் கூறி இருக்கின்றேன்.

"18ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் திருவனந்த சமஸ்தானம் கொண்டுவந்த சட்டத்தில் பறையர், புலையர், ஈழவர் போன்றவர்கள் இத்தனை அடி தூரத்தில் இருந்து பேச வேண்டும் சானார் போன்றோர்கள் கண்ணில் கூட படக்கூடாது (உலகத்தில் இன்று வரை பார்த்த தீண்டாமைகளின் உச்சகட்டம் இது, பார்க்க கூட கூடாது) இதை மீறினால் தண்டனை என்று வகுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல கீழ் சாதிமக்கள் சம்பளம் இல்லாமல் வேலைபார்க்கவும் வைக்கப்பட்டனர் சட்டத்தின் மூலமாக 1814ம் ஆண்டு."

"17ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆங்கிலேயேன் இந்தியாவிற்குள் வந்துவிட்டான், நாஞ்சில் நாட்டையும் அவர்களின் கிருத்துவ மிஸினரிகள் அடைந்திருந்தனர். இவ்வளவு அடக்குமுறைகளையும் கண்ட மக்கள் தனக்கு இந்து மதமே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு கிருத்துவமததிற்கு மாறினார்கள். அங்கு சென்றாலும் அவர்களுக்கு விமோசனம் இல்லை என்று நீ மதம் மாறினாலும் தாழ்ந்த சாதி தான் என்று மதம் மாறிய பெண்களின் மேலாடை கிழிக்கப்பட்டது அடித்து நொறுக்கப்பட்டனர். பாதிரியார் பிட் அவர்கள் தொடுத்த வழக்கில் பத்மநாபபுரம் நீதிமன்றம் கிருத்துவர்களாக மாறிய நாடார் இன பெண்கள் மார்பில் துணி அணியலாம் என்று உத்தரவிட்டார். இதன் பிறகே பலர் மொத்தமாக கிருத்துவ மதத்திற்கு மாறினார். மானம் முக்கியமா கடவுள் முக்கியமா என்று கேட்டால் இன்று கூட சொல்லலாம் மானம் தான் முக்கியம். சமூகத்தில் அடக்கி ஒடுக்கி வைக்க பட்ட மக்கள் என்ன செய்வார்கள் இதுவரை கடைபிடித்த மதத்தை தூக்கி கடாசிவிட்டு கிருத்துவத்திற்கு மாறினார்கள்."

வரலாற்றை அறிந்துக் கொள்ள முயலுங்கள்

//இந்து மதத்தில் இறைவனின் கருத்தாக பொதுவாக கூறப்படும் இரண்டே இரண்டு விடயங்கள் மட்டுமே அவை பாவம் மற்றும் புண்ணியம். பாவம் செய்தால் நரகம் புண்ணியம் செய்தால் சொர்க்கம் அவ்வளவு தான் இது அவர்களுக்கு புனித நூலை படிக்காமலே அறிந்திருக்கும், மனதில் பதிந்திருக்கும் ஒரு இறைவனின் கருத்து//

இவ்வளவு எளிதான ஒன்றுக்கானே சைவ சித்தாந்தம், துவைதம், அத்வைதம் அப்படின்னு பல கருத்துக்கள் எழுந்ததுங்க? இதுக்கா ஆறு வகை சமயங்கள் தேவை படுது?

இவ்வளவு எளிதான ஒன்றுனா கோவில்களில அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் அப்படின்னு சட்டம் போட்டத எதுக்குனே தடை பண்ணி வச்சி இருக்காங்க?

இவ்வளவு எளிதான ஒன்றுல எங்க வந்துச்சி பிறப்பால ஏற்றத் தாழ்வு?

//நானும் கொள்கைக்கு மாறினார்கள் என்றுக் கூற வில்லையே...//
**"இந்நிலையில் அவ்வாறு அவர்களின் புனித நூல்கள் என கூறப்படுபவைகளில் உள்ள இறைவனின் கருத்தினை அறிய முடியாத மக்கள் மற்ற சமயத்தில் இறைவன் கூறி உள்ள கருத்தினை அறிய வாய்ப்பு கிட்டினால் கற்பார்களா மாட்டார்களா?" **
இதை நான் கூறவில்லை நீங்கள் தான் கூறினீர்கள்... இறைவனின் கருத்தை அறிய மதம் மாறி பைபிள் படித்தார்கள் என்று சொல்கிறீர்களா?

//ஆனால் அங்கும் அவர்களை சாதி விட வில்லை என்றுத் தான் நான் கூறி இருக்கின்றேன்.//
அங்கு சென்றாலும் ஜாதி பிரச்சனை என்றால் பின்னர் எதற்கு மதம் மாறுதல்? அந்த தாழ்த்தப்பட்டவன் வேறு எங்கு செல்வான்? அவனுக்கு மதமே தேவை இல்லையே... உண்மையான கடவுள் ஒருவர் இருந்தால் இவ்வளவு கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா?

//வரலாற்றை அறிந்துக் கொள்ள முயலுங்கள்//
நீங்களும் கொஞ்சம் கிறிஸ்துவர்களின் மத மாற்றும் வரலாறு அறியவில்லையா ஐயா... அம்மணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டிபோட்டு அவர்களுடைய பிறப்புறுப்புகளை எலிகளை விட்டு கடிக்க வைத்ததையும், மத மாற்றத்திற்கு சம்மதிக்காதவர்களை(ஆண்கள் மற்றும் பெண்கள்) கை, கால்களை கட்டிப்போட்டு உயிருடன் அவர்களின் தோல் உரித்ததை மறுக்கிறீர்களா இல்லை மறைக்கறீர்களா? கிறிஸ்துவ மதம் மாறாததால் நீங்கள் வரலாறு என்று கூறிய நிகழ்ச்சியால் எத்தனை சதவீதம் பறையர், புலையர், ஈழவர் இன்று கிறிஸ்துவர்களாக உள்ளனர் என்று கூறினால் நலமாக இருக்கும். இன்று உள்ள தாழ்த்தப்பட்டோர் அனைவரும் கிறிஸ்துவர்களாகவே உள்ளனரா? அவர்கள் இந்துக்களாக இருக்கிறார்கள் என்றால் ஏன் இன்னும் மதம் மாறாமல் உள்ளனர் என்பதற்கு நீங்கள் விளக்கம் கூறினாலும் நலமாக இருக்கும்...

//இவ்வளவு எளிதான ஒன்றுக்கானே சைவ சித்தாந்தம், துவைதம், அத்வைதம் அப்படின்னு பல கருத்துக்கள் எழுந்ததுங்க? இதுக்கா ஆறு வகை சமயங்கள் தேவை படுது?//
ஆறு வகை சமயங்கள் இல்லை ஐயாயிரம் சமயங்கள் உருவானாலும் பாவம் செய்தால் நரகம் புண்ணியம் செய்தால் சொர்க்கம் அவ்வளவு தான் இது அவர்களுக்கு புனித நூலை படிக்காமலே அறிந்திருக்கும், மனதில் பதிந்திருக்கும் இறைவனின் ஒரு பொதுவான கருத்து என்று தானே நான் சொன்னேன்...

ஆனால் கிறிஸ்துவ மதம் அப்படியா சொல்லுங்கள்? மற்ற மதத்தவரை மதிப்பது கூட கிடையாது. அட அத விடுங்க மற்ற மதத்தை மதிக்காமல் போனால் போகட்டும் கிறிஸ்துவ மதத்தில் இருப்பது சில பிரிவுகள் தான் ஆனால் பாருங்கள் கிறிஸ்துவ மதத்தில் மற்ற பிரிவுகளில் இருப்பவர்களையே மதிக்க மாட்டார்கள் கேலி, கிண்டல் செய்வார்கள். இருப்பதே சில பிரிவுகள் அதற்குள் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?ஒற்றுமை என்பது காணப்படவில்லையே ஏன்? இந்து மதத்தை குறை கூறாத கிறிஸ்துவ தேவாலயத்தை பார்க்கவே முடியாது ஏனென்றால் அது தான் அவர்கள் தொழில் அப்படி குறை கூறாவிட்டால் கூட்டம் சேர்க்க முடியாது, பிழைக்க முடியாது. அதே போல தான் பிராமிணர்களும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகி விட்டால் அவர்களால் பிழைக்க முடியாது அவ்வளவு தான்... ஜாதி ஏற்றத்தாழ்வு கடவுளால் உருவாக்கப்படவில்லை மனிதனால் உருவாக்கப்பட்டவையே... பிழைக்க முடியாத கூட்டத்தால் உருவாக்கப்பட்டவையே...

இந்து சமயத்தவர் கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வேறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமயத்தின் சிறப்பியல்பாகும். என்னுடைய பார்வையில் பார்த்தால் இந்து மதம் என்பது வாழ்க்கை முறை (ஜாதி என்ற தீண்டாமையை தவிர்த்து) அவ்வளவு தான்...

//நீங்களும் கொஞ்சம் கிறிஸ்துவர்களின் மத மாற்றும் வரலாறு அறியவில்லையா ஐயா... அம்மணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டிபோட்டு அவர்களுடைய பிறப்புறுப்புகளை எலிகளை விட்டு கடிக்க வைத்ததையும், மத மாற்றத்திற்கு சம்மதிக்காதவர்களை(ஆண்கள் மற்றும் பெண்கள்) கை, கால்களை கட்டிப்போட்டு உயிருடன் அவர்களின் தோல் உரித்ததை மறுக்கிறீர்களா இல்லை மறைக்கறீர்களா?//



நான் மறைக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. இன்றைய காலத்தில் சமயத்தினை வெறும் அரசியல் நோக்கிற்காகவே அனைத்து சமய நிறுவனங்களும் பயன் படுத்துகின்றன என்றே நான் கூறுகின்றேன்... புனித ரோமப் பேரரசு தோன்றியதில் இருந்தே கிருத்துவம் அரசியல் மயமாக்கப்பட்டு விட்டது. இங்கே சைவ வைணவ சமயங்கள் பிராமணர்களின் பிடியில் சிக்கிய கணத்தில் இருந்து அரசியல் மயமாக்கப்பட்டு விட்டன.



//கிறிஸ்துவ மதம் மாறாததால் நீங்கள் வரலாறு என்று கூறிய நிகழ்ச்சியால் எத்தனை சதவீதம் பறையர், புலையர், ஈழவர் இன்று கிறிஸ்துவர்களாக உள்ளனர் என்று கூறினால் நலமாக இருக்கும். இன்று உள்ள தாழ்த்தப்பட்டோர் அனைவரும் கிறிஸ்துவர்களாகவே உள்ளனரா? அவர்கள் இந்துக்களாக இருக்கிறார்கள் என்றால் ஏன் இன்னும் மதம் மாறாமல் உள்ளனர் என்பதற்கு நீங்கள் விளக்கம் கூறினாலும் நலமாக இருக்கும்...//



முதலில் தாழ்த்தப்பட்டோர் என்றால் யார் என்றும் அவர்கள் எதனால் தாழ்த்தப்பட்டவர்களாக ஆனார்கள் என்றும் நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்... மேலும், அவர்கள் மதம் மாறாமைக்கு பல காரணங்களைக் கூறலாம்...

--எந்த ஒரு சமய மக்களும், அவர்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட மற்றொரு சமயத்தினை வெறும் பணத்திற்காக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மேலும் நமது கலாச்சாரம் குடும்பங்கள் கூட்டாக சேர்ந்து வாழும் சமூகத்தினை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட ஒன்றாகும். எனவே ஒருவன் சமயம் மாறுகின்றான் என்றால் அவன் அதுவரை அன்பினால் கட்டுண்டு கிடந்த அந்த குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து செல்லும் நிலையாகவே அது இருக்கும்.எனவே அத்தகைய நிலையில் தனி ஒருவன் வெறும் பணத்திற்காக அனைத்தையும் துறந்து விட்டு செல்ல மாட்டான். அவ்வாறு செல்லவும் அவனது சமுகம் அவனை எளிதில் விடாது.--

மேலும் சைவ வைணவ சமயங்களை தோற்றுவித்து வளர்த்ததே அவர்கள் தாமே... பறையர் குடியைச் சார்ந்த நந்தனார் தான் இறுதி நாயன்மார்... அவரை கொலை செய்து தான் பிராமணர்கள் சிதம்பரம் கோவிலைக் கை பற்றுகின்றனர்... அவ்வாறே திருப்பானாழ்வரை கொன்று வைணவ கோவிலையும் கைப்பற்றுகின்றனர். அவர் பாணர் குலத்தைச் சார்ந்தவர். பிராமணர்களை எதிர்த்தவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப் பெற்றது கிருசுன தேவ ராயரின் ஆட்சிக் காலத்தில்... இதனைப் பற்றி மேலும் படிக்க முயன்றீர்கள் என்றால் உங்களுக்கு விடை கிட்டும் என்றே நினைகின்றேன்.

//**"இந்நிலையில் அவ்வாறு அவர்களின் புனித நூல்கள் என கூறப்படுபவைகளில் உள்ள இறைவனின் கருத்தினை அறிய முடியாத மக்கள் மற்ற சமயத்தில் இறைவன் கூறி உள்ள கருத்தினை அறிய வாய்ப்பு கிட்டினால் கற்பார்களா மாட்டார்களா?" **
இதை நான் கூறவில்லை நீங்கள் தான் கூறினீர்கள்... இறைவனின் கருத்தை அறிய மதம் மாறி பைபிள் படித்தார்கள் என்று சொல்கிறீர்களா?//



அதன் உட்கருத்து ஒரு சமயத்தில் இறைவன் என்று அவர்கள் கூருபவரையே மக்களிடம் இருந்து மறைக்கின்றனர்...மற்றொரு சமயத்தில் இறைவனை மறைக்காது இருக்கின்றனர்...இந்நிலையில் மக்கள் எவ்விடம் செல்வர் என்பதே. இறைவனின் கருத்தினை அறிய யாரும் சமயங்கள் மாறுவதில்லை...சம உரிமைக்காகவே மாறி இருக்கின்றனர்.

தாழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றினைப் படித்து உணர்ந்து இருந்தால் நீங்கள் இதனை புரிந்துக் கொள்ள முடியும்...!!!

//அங்கு சென்றாலும் ஜாதி பிரச்சனை என்றால் பின்னர் எதற்கு மதம் மாறுதல்?//

ஒரு நம்பிக்கை தான்... எல்லா சமயத்திலும் கள்வர்களும் கொள்ளைக்காரர்களுமே இருக்கின்றனர்... ஒருத்தன் நீ அடிமை என்றும் நீ உடையே அணியக் கூடாது என்கின்றான்...மற்றொருவன் நீ அடிமை ஆனால் உடை அணிந்துக் கொள்ளலாம் என்றுக் கூறுகின்றான்.

எங்கே செல்வீர் நீங்கள்?

//அவனுக்கு மதமே தேவை இல்லையே...//

ஆமாம் தேவை இல்லை...!!!

உண்மையான கடவுள் ஒருவர் இருந்தால் இவ்வளவு கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா?

இக்கேள்விக்கான விடையினை அறிய நீங்கள் தான் முயல வேண்டும்...சமயங்கள் என்றால் என்ன? அவை என்ன கருத்துகளைக் கூறுகின்றன?... என்ன தான் நடந்து இருக்கின்றது இவ்வுலகில் என்று நீங்கள் தான் முயல வேண்டும்...கண்மூடித் தனமாக எந்த சமயத்தையும் நம்புவது இத்தேடலில் யாதொரு பயனையும் தாராது.



இறைவனை நம்புவோர் .... தேட வேண்டும்... நான் தேடிக் கொண்டு இருக்கின்றேன்...!!!

நம்பாதோர்... இறைவன் இல்லை என்றுக் கூறி விடுவர்... அவ்வளவே!!!

//எந்த ஒரு சமய மக்களும், அவர்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட மற்றொரு சமயத்தினை வெறும் பணத்திற்காக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மேலும் நமது கலாச்சாரம் குடும்பங்கள் கூட்டாக சேர்ந்து வாழும் சமூகத்தினை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட ஒன்றாகும். எனவே ஒருவன் சமயம் மாறுகின்றான் என்றால் அவன் அதுவரை அன்பினால் கட்டுண்டு கிடந்த அந்த குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து செல்லும் நிலையாகவே அது இருக்கும்.எனவே அத்தகைய நிலையில் தனி ஒருவன் வெறும் பணத்திற்காக அனைத்தையும் துறந்து விட்டு செல்ல மாட்டான். அவ்வாறு செல்லவும் அவனது சமுகம் அவனை எளிதில் விடாது.//

ஆங்கிலேயன் நம்மை ஆட்சி செய்த காலத்தில் பதவிக்காக மதம் மாறினான்(நான் தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் குறிப்பிடவில்லை ஆங்கிலேயனுக்கு ஜால்ரா அடித்த அனைவரையும் தான்) பிறகு பணத்திற்காக மதம் மாறினான்(இது இன்று கூட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடக்கிறது). சில பேர் வியாதிகள் குனமாகியதால் (அவர்கள் குடும்பமே) மதம் மாறுகிறார்கள். இன்னும் சில ஆண்கள் திருமணத்திற்காக (பெண் பிள்ளை கிறிஸ்துவம் என்பதால்) மதம் மாறுகிறார்கள். நீங்கள் சொல்வது போல் தீண்டாமை என்ற ஜாதி வெறியாலும் மதம் மாறி இருக்கிறார்கள். இப்படி பல காரணங்களுக்காக மதம் மாறினார்களே தவிர கிறிஸ்துவின் கொள்கைகள் பிடித்துபோய் யாரும் இதுவரை மதம் மாறியதாக எனக்கு தெரியவில்லை...

//அதன் உட்கருத்து ஒரு சமயத்தில் இறைவன் என்று அவர்கள் கூருபவரையே மக்களிடம் இருந்து மறைக்கின்றனர்...மற்றொரு சமயத்தில் இறைவனை மறைக்காது இருக்கின்றனர்...இந்நிலையில் மக்கள் எவ்விடம் செல்வர் என்பதே. இறைவனின் கருத்தினை அறிய யாரும் சமயங்கள் மாறுவதில்லை...சம உரிமைக்காகவே மாறி இருக்கின்றனர்.//

எந்த இறைவனை மக்களிடம் இருந்து மறைத்தார்கள் (நீங்கள் கண்டிப்பாக இயேசு என்று தானே கூறப்போகிறீர்கள் :)) மற்றொரு சமயத்தில்(நீங்கள் கூறுவது கிறிஸ்துவத்தை என்பது எனக்கு தெரியும்) தான் இறைவனை மறைத்து இருக்கிறார்கள் இயேசு வரலாற்றை போலவே நிறைய வரலாறுகள் அவருக்கு முன்னரே உள்ளன (கன்னி பிறப்பு, 12 சீடர்கள், இறத்தல், உயிர்த்தெழுதல் இன்னும் பல) எனவே அவர்கள் தான் உண்மையான இறைவனை மறைக்கின்றனர். //இந்நிலையில் மக்கள் எவ்விடம் செல்வர் என்பதே.//ஒரு சமயத்தில் இறைவனை மறைப்பதால் தான் மதம் மாறுகிறார்கள் என்று சொல்கிறீர்களா?

//ஒரு நம்பிக்கை தான்... எல்லா சமயத்திலும் கள்வர்களும் கொள்ளைக்காரர்களுமே இருக்கின்றனர்...//
இது கிறிஸ்துவ சமயத்திற்கு சரியாக பொருந்தும்... அவர்கள் தானே தேவாலயம் வரும் மக்களிடம் காணிக்கை, தசமபாகம் என்று பிடுங்குகிறார்கள்.

//ஒருத்தன் நீ அடிமை என்றும் நீ உடையே அணியக் கூடாது என்கின்றான்...மற்றொருவன் நீ அடிமை ஆனால் உடை அணிந்துக் கொள்ளலாம் என்றுக் கூறுகின்றான்.//
ஒருவனுக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டுவிட்டு மரத்துல கட்டிபோட்டு அடிக்கிற கதை தான் இது... அப்போ அடிமையா இருந்த அனைவரும் வேறு சமயத்திருக்கு மாறி இருக்கணுமே ஏன் மாறாமல் இருக்கிறார்கள்...

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு